RBI/2015-16/194
DBR.No.Ret.BC.42/12.01.001/2015-16
செப்டம்பர் 29, 2015
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரிகள் -அனைத்து வணிக வங்கிகள் / பிராந்திய கிராம வங்கிகள் / ஊரக வங்கிகள் / அனைத்து தொடக்க (நகர) கூட்டுறவு வங்கிகள் / மாநில மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்,
வங்கி விகிதத்தில் மாற்றம்
ஜுன் 2, 2015 தேதியிட்ட DBR. No. Ret. BC. 99/12.01.001/2014-15 மற்றும் ஜுன் 2, 2015 தேதியிட்ட DCBR. BPD. (PCB / RCB). Cir. No. 37/16.11.00/2014-15 எங்களின் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்.
2. செப்டம்பர் 29, 2015 தேதியிட்ட நான்காவது (மாதமிருமுறை அளிக்கப்படும்) பணக்கொள்கை அறிவிப்பு 2015-16-ல் தெரிவித்துள்ளபடி, செப்டம்பர் 29, 2015 முதல் வங்கிவிகிதம் 8.25 சதவிகிதத்திலிருந்து 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.75 சதவிகிதமாக நிறுத்தப்படுகிறது.
3. வங்கிகளின் ‘வைப்பு இருப்பு’ குறிப்பிடப்பட்ட தேவைகளுக்குக் குறைவாக இருப்பின், அதன்மீது விதிக்கப்படும் அபராத வட்டி விகிதங்கள் ( வங்கி விகிதத்துடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்வை) , இதையொட்டி மாற்றியமைக்கப்படும். (இவை இணைப்பில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன).
இங்ஙனம்
(லில்லி வடேரா)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு: மேலே உள்ளபடி
இணைப்பு
வங்கி விகிதத்துடன் இணைக்கப்பட்ட அபராத வட்டி விகிதங்கள்
பொருள் |
நடப்பு விகிதம் |
திருத்தியமைக்கப்பட்ட விகிதம் (செப்டம்பர் 29, 2015 முதல்) |
இருப்புத் தேவைகளில் குறையும் அளவின் மீதான அபராத வட்டி (குறைபாடு நிலவும் கால கட்டத்தைப் பொறுத்து) |
வங்கி விகிதம் + 3% (11.25%) அல்லது வங்கி விகிதம் +5% (13.25%) |
வங்கி விகிதம் + 3% (10.75%) அல்லது வங்கி விகிதம் +5% (12.75%) |
|