Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (357.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/10/2015
தங்க ஆபரணங்கள்/ நகைகள் அடமானத்தின்பேரில் கடன்

RBI/2015-16/207
DCBR.BPD.(PCB/RCB).Cir.No.3/13.05.001/2015-16

அக்டோபர் 15, 2015

தலைமை நிர்வாக அதிகாரிகள்
அனைத்து தொடக்க (நகர) கூட்டுறவு வங்கிகள் /
மாநில / மத்திய கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

தங்க ஆபரணங்கள்/ நகைகள் அடமானத்தின்பேரில் கடன்

மே 9, 2014 தேதியிட்ட UBD.CO.BPD.PCB.Cir.No.60/13.05.001/2013-14 மற்றும் ஜூலை 01, 2014 தேதியிட்ட RPCD.RRB.RCB.B.C. No. 8/03.05.33/2014-15 சுற்றறிக்கைகளைப் பார்க்கவும். தங்கத்தை மதிப்பீடு செய்யும் முறையை சீர்ப்படுத்தவும், கடனாளிக்கு அதை மேலும் வெளிப்படையாகத் தெரியும்படியாகச் செய்திடவும், அடமானத் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முறை பின்வருமாறு தீர்மானிக்கப்படவேண்டும். இந்தியன் புல்லியன் அன்ட் ஜுவல்லர்ஸ் அஸோஸியேஷன் லிமிடெட் (பாம்பே புல்லியன் அஸோஸியேஷன் லிமிடெட் {BBA} என்று முன்னாளில் அறியப்பட்ட) கடந்த 30 நாட்களில் அறிவித்த 22 காரட் தங்கத்தின் முடிவு விலையின் சராசரி விலையில் அடமானத் தங்கத்தின் விலை நிரிணயிக்கப்படும்.

2. மறுபரிசீலனையின் பேரில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை SEBI-யால் நெறிப்பத்தப்படும் கமாடிட்டி எக்சேஞ்ச் வெளியிடும் கடந்த 30 நாட்களின் உடனடி பரிவர்த்தனை விலையின் சராசரி விலையை அடமானத்த தங்கத்தின் விலையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இங்ஙணம்

(சுமா வர்மா)
முதன்மை தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்