Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (105.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/11/2015
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 – வட்டி விகிதம்

RBI/2015-16/220
DBR.IBD.BC 53/23.67.003/2015-16

நவம்பர் 03, 2015

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(ஊரக வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 – வட்டி விகிதம்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி அளித்த முக்கியவழிகாட்டுதல் அக்டோபர் 22, 2015 தேதியிட்ட DBR. IBD. NO. 45/23.67.003/2015-16-ஐப் பார்க்கவும்.

2. இது தொடர்பாக, மேற்குறிப்பிட்ட முக்கிய வழிகாட்டுதலின் பிரிவு எண் 2.2.2 (iv)-ன்படி மத்திய அரசு தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் உள்ள நடுத்தர மற்றும் நீண்டகால அரசு வைப்பு (MLTGD) மீதான வட்டியைப் பின்வருமாறு நிர்ணயம் செய்துள்ளது.

  1. நடுத்தர கால வைப்பு - 2.25% P.a.

  2. நீண்டகால வைப்பு - 2.50% P.a.

3. இந்திய அரசு அறிவித்துள்ள சேகரிப்பு மற்றும் தூய்மை பரிசோதனை மையங்களாக செயல்பட தகுதியுடைய நிறுவனங்கள் (CPTCs) மற்றும் தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் பங்கேற்கும் சுத்திகரிப்பாளர்களின் பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

(ராஜேந்திர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்