RBI/2015-16/245
IDMD.CDD.No.1157/14.04.050/2015-16
நவம்பர் 24, 2015
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(ஊரக வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
தங்கப் பத்திரங்கள் 2015 – 16
தங்கப்பத்திரங்கள் திட்டம் குறித்த அக்டோபர் 30, 2015 தேதியிட்ட IDMD. CDD. No. 939/14.04.050/2015-16 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.
2. தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும் தேதி நவம்பர் 26, 2015-லிருந்து நவம்பர் 30, 2015க்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 04, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை IDMD. CDD. No. 968/14.04.050/2015-16-ஐப் பார்க்கவும். முதலீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத் தொகை அளிக்கப்பட்ட தேதியிலிருந்து, பத்திரங்கள் வழங்கப்படும் தேதி வரையுள்ள (பணம் விண்ணப்பதாரரிடமிருந்து எடுக்கப்பட்ட காலத்திற்கு) காலத்திற்கு நடப்பிலுள்ள சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பத்திரம் வழங்கப்படும் தீர்வுத் தேதி நவம்பர் 30, 2015-க்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதால், விண்ணப்பத் தொகை மீதான வட்டி, பணம் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து நவம்பர் 30, 2015 வரையுள்ள காலத்திற்கு கொடுக்கப்படும்.
3. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையிலுள்ள கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி தொடரும்.
(P.K. பதி)
பொதுமேலாளர் |