குடியிருப்போர்
அயல்நாட்டு
நாணய (உள்நாட்டுக்)
கணக்கு
குடியிருப்போர்
தனிநபருக்கான
நன்மைகள்
இந்திய
ரிசர்வ்
வங்கி
அந்நியச்
செலாவணி
கட்டுப்பாட்டுத்துறை
மைய
அலுவலகம்
மும்பை 400 001
நவம்பர் 24, 2002
A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 37
அங்கீகரிக்கப்பட்ட
அந்நியச்
செலாவணி
வர்த்தகர்
அனைவருக்கும்
அன்புடையீர்,
குடியிருப்போர்
அயல்நாட்டு
நாணய (உள்நாட்டுக்)
கணக்கு
குடியிருப்போர்
தனிநபருக்கான
நன்மைகள்
ரிசர்வ் வங்கியால் FEMA.11/2000 RB
மே 3, 2000 தேதியிடப்பட்ட அறிவிப்பின்படி வரையறுக்கப்பட்ட விதி எண் 3(iii)ல் வகுத்துள்ளபடி, இந்தியக் குடியிருப்பாளர் ரூபாய் நோட்டுகளாகவோ வங்கி நோட்டுகளாகவோ பயணக்காசோலைகளாகவோ இவையனைத்தின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகையாக அமெரிக்க டாலர் 2000 மதிப்பு வரை
தம்வசம்
வைத்திருக்க
அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது அந்நியச்
செலாவணி வணிகர்கள்
அறிந்த ஒன்றே.
ஆயின் இது
கீழ்க்கண்ட
நிபந்தனைகளுக்கு
உட்பட்டது.
a.
இந்தியக்
குடியிருப்பாளர் தம்
வெளிநாட்டுப்
பயணத்தின்போது
அவரின்
சேவைக்காய்
(இந்தியாவில்
செய்யப்படும்
வாணிபம் அல்லது
வேறெந்த
வகையையும்
சாராததாய்)
மட்டுமே அந்தப்
பணத்தைப்
பெற்றிருக்க
வேண்டும்.
அல்லது
b.
இந்தியாவிற்கு
பயணமாக வந்த
குடியிருப்பாளரல்லாத
ஒருவர்
தமக்கு
செய்யப்பட்ட
சேவைக்காக
அளித்த
மதிப்பூதியம்
அல்லது
வெகுமதி அல்லது
சட்டப்படி
செய்யவேண்டிய
கடமைக்கான தீர்வுப்பணமாக
அது
இருக்கலாம்.
b.
அல்லது
c.
இந்தியாவுக்கு
வெளியே
சென்றிடும்போது
அவருக்கு
கிடைத்த
வெகுமதி/நன்கொடைத்
தொகையாக
இருக்கலாம்.
c.
d.
அங்கீகரிக்கப்பட்ட
வர்த்தகர்
ஒருவரிடமிருந்து
வெளிநாட்டு
பயணத்திற்காகப்
பெற்ற தொகையில்
செலவழிக்காமல்
மிஞ்சிய
பணமாக அது இருக்கலாம்.
2.
மேலும்
தாராளமயமாக்கும்
முகமாக
அடுத்த கட்டமாய்
இந்தியக்
குடியிருப்பாளர்
ஒருவர்
மேற்குறிப்பிட்ட
வழிகளில்
பெற்ற (ரூபாய்
நோட்டு, வங்கி
நோட்டு மற்றும்
பயணக்காசோலை)
அந்நியச்
செலாவணி உதவியுடன்
அயல்நாட்டு
நாணய
கணக்கினைத்
துவக்கி
நிலைப்படுத்தி
இயக்கி
வரலாம்.
அந்தக் கணக்கு
குடியிருப்போர்
அந்நியச்
செலாவணி
(உள்நாட்டுக்)
கணக்கு என்று
வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட
விதிமுறைகளின்படி
அந்த கணக்கு
செயல்படுத்தப்படும்.
நடப்புக்கணக்கு/
முதலீட்டுக் கணக்கு
சார்ந்த பட்டுவாடா
மற்றும்
பற்றுகள்
அதில் செய்யலாம். அது
நடப்புக்கணக்காகவே
வட்டி ஏதுமின்றி
வைத்துப்
பேணப்படும்.
அதில் காசோலை
வசதியுமுண்டு.
அந்தக்
கணக்கில்
வைக்கப்படும்
இருப்புத்
தொகைக்கு
உச்ச வரம்பு
ஏதுமில்லை.
3. FEMA.10/2000 RB மே 3, 2000 தேதியிடப்பட்ட அறிவிப்பின்படி வரையறுக்கப்பட்ட விதி எண் 3(iii) கீழ் ரூபாய் நோட்டு, வங்கி நோட்டு மற்றும் பயணக்காசோலைகள் என்று ஒட்டுமொத்தமாக அமெரிக்க டாலர் 2000 பணம் வைத்திருத்தல் மற்றும் FEMA.10/2000 RB
மே 3, 2000
தேதியிடப்பட்ட
அறிவிப்பு
எண்ணின்கீழ்
வரையறுக்கப்பட்ட
விதி எண் 5ன்
கீழ் குடியிருப்போர்
அந்நியச்
செலாவணி
(உள்நாட்டுக்)
கணக்கு
வசதிகளோடு
மேற்குறிப்பிட்ட
வங்கிக்
கணக்கு
ஆரம்பித்து
வசதியும்
சேர்ந்தே
அளிக்கப்படுகிறது
என்பதைத்
தெளிவு படுத்துகிறோம்.
4. அந்நியச் செலாவணி சட்டம் மே 3, 2000 தேதியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/ RB 2000 கீழுள்ள
தொடர்புடைய
கட்டுப்பாட்டு
விதிகள் திருத்தியமைக்கப்பட்டு
ஒரு அறிப்பாக
தனியே
வெளியிடப்படவுள்ளது.
5. இந்திய அரசால் வெளியிடப்படும் இந்த அறிவிப்பு வெளிவரும் காலம் வரை
அங்கீகரிக்கப்பட்ட
அந்நிய
செலாவணி வணிகர்கள்
(குடியிருப்பாளர்
அயல்நாட்டு
நாணய (உள்நாட்டுக்)
கணக்கு)
துவக்குவதற்கான
வேண்டுகோள்கள்
அனைத்தையும்
பரிந்துரைகளுடன்
தத்தம்
சார்புடைய ரிசர்வ்
வங்கியின் பிராந்திய
அலுவலகங்களுக்கு
அனுப்பிவைக்கலாம்.
இந்த
கணக்குகளை
ஆரம்பிக்கும்
சமயம்
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
உள்நாட்டு
வங்கிக்
கணக்குகள்
ஆரம்பிக்கும்போது
கடைப்பிடிக்கும்
அனைத்து
வழிமுறைகளையும்
“உங்கள்
வாடிக்கையாளரை
அறிவீர்” என்ற
கோட்பாட்டின்
கீழுள்ள
நெறிமுறைகளையும்
பின்பற்றுதல்
அவசியம்.
6.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
இந்த சுற்றறிக்கையின்
கருத்துக்களை
தத்தம்
குழுவைச்
சார்ந்த
முகவர்கள்
கவனத்திற்குக்
கொண்டு செல்லாம்.
7.
இந்தச்
சுற்றறிக்கையில்
அடங்கியுள்ள
கட்டளைகள் யாவும்
FEMA
1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1)ன் கீழ்
வெளியிடப்படுகிறது.
தங்கள்
உண்மையுள்ள
கிரேஸ்
கோஷி
தலைமைப்
பொது மேலாளர்