Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (243.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 11/06/2015
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை (பதிவேடுகள் பராமரிப்பு) விதிகள் , 2005 –இல் திருத்தம்செய்துள்ளது. முகவரிச் சான்றுக்காக கூடுதல் ஆவணங்கள்

RBI/2014-15/633
DBR.AML.BC.No.104/14.01.001/2014-15

ஜூன் 11, 2015

தலைமை அதிகாரிகள் / பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் / பிராந்திய கிராம வங்கிகள் / வட்டார வங்கிகள் / அனைத்திந்திய நிதி நிறுவனங்கள் / அனைத்துத் தொடக்க (நகர) கூட்டுறவு வங்கிகள் / மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் (St. CBs/ CCBs) / அனைத்து பணம் வழங்கு முறைமைப் பங்கேற்பாளர்கள் இவற்றின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முன்னரே பணம் செலுத்தப்பட்ட கொடுப்பு உபகரண வெளியீட்டாளர்கள் / பண பரிமாற்ற சேவை திட்டத்தின் கீழ் முகவர்களாக உள்ளவர்கள்.

அன்புடையீர்

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை (பதிவேடுகள் பராமரிப்பு) விதிகள் , 2005 –இல் திருத்தம்செய்துள்ளது. முகவரிச் சான்றுக்காக கூடுதல் ஆவணங்கள்.

அதிகார பூர்வ ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், சாதாரண வாடிக்கையாளரிடம் ஆவணச் சான்றை சரிபார்த்திட எளிய நடைமுறைகளின் பொருந்தும் தன்மை,.தயவுசெய்து விதி 14 (i) proviso to Rule 2(d) at Sr.No.4 of Annex to our Circular DBOD.AML>BC.No.26/ 14.01.001/ 2014-15 dated July 17, 2014-ஐப் பார்க்கவும்.

2. அரசாங்கம் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை (பதிவேடுகள் பராமரிப்பு) விதிகள் , 2005 –இல் திருத்தம்செய்துள்ளது. PML விதிகளில் பத்தி 2(d)-யில் குறிப்பிட்டுள்ளபடி “எளிமையாக்கப்பட்ட நடைமுறைகள்” என்பவற்றின் கீழ், அடையாளச் சான்றாவணங்கள் குறித்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டது போலவே, முகவரிச் சான்று நோக்கத்திற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே கீழ்க்கண்ட கூடுதல் ஆவணங்கள் அதிகாரபூர்வ மதிப்பு ஆவணங்களாகக் (Officially Valid Documents – OVDs) கருதப்படுகின்றன..

  1. எந்த ஒரு சேவை அளிப்பவரிடமிருந்தும், இரண்டு மாதங்களுக்கு மிகாத பயன்பாட்டு ரசீது (மின்சாரம், தொலைபேசி, பயன்பாட்டுக்குப் பிந்தைய செல்லிடப்பேசி, எரிவாயு, குடிநீர்);

  2. சொத்து வரி அல்லது நகராட்சி வரி ரசீது;

  3. வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு அறிக்கை;

  4. அரசுத்துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய அல்லது குடும்ப ஓய்வூதிய கொடுப்பாணைகள், அவைகளில் முகவரி இருக்கும்பட்சத்தில்;

  5. மாநில அல்லது மத்திய அரசுத்துறைகள், அதிகாரப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகிய இவற்றின் பணியாளர்களுக்கு, குடியிருப்பிற்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டுக் கடிதம், இதே போன்று அத்தகைய பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான குத்தகை ஒப்பந்தங்கள்;

  6. அயல்நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறைகள் அளித்த ஆவணங்கள் மற்றும் அயல்நாட்டுத் தூதரகம் அல்லது அவர்களது அலுவலகம் மூலம் அளிக்கப்பட்டவை. ;

3. மேலே குறிப்பிடப்பட்ட கூடுதல் ஆவணங்கள், “எளிமையாக்கப்பட்ட நடைமுறைகளின்” கீழ், குறைவான நேரிடர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் வேறு எந்த OVD ஆவணமும் அளிக்க முடியாத நிலையில், குறைந்தபட்சமாக, அதிகாரப்பூர்வ மதிப்பு ஆவணங்களாகக் (Officially Valid Documents – OVDs) கருதப்படும்.

4. அரசாணை அறிவிப்பின் நகல் G.S.R.288 (E) dated April 15, 2015, PML விதிகள் திருத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

5. மேற்கண்டவைகளை உள்ளடக்கி, உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) கொள்கையில் மாற்றங்களை செய்து கொள்ளவேண்டுகிறோம்.

இங்ஙணம்

(லிலி வடேரா)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே உள்ளதுபோல

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்