பாரத
ரிசர்வ் வங்கி
அந்நியச்
செலாவணி
கட்டுப்பாட்டுத்துறை
மைய
அலுவலகம்
மும்பை 400 023
செப்டம்பர்
17, 2002
A.P. (DIR Series)
சுற்றறிக்கை
எண் 17
அங்கீகரிக்கப்பட்ட
அந்நியச்
செலாவணி
வணிகர்கள்
அனைவருக்கும்
அன்புடையீர்,
மருத்துவச்
சிகிச்சைக்காக
வெளிநாட்டுப்
பயணம்
அந்நியச்
செலாவணி
வழங்குதலில்
தாராளமயம்
வெளிநாட்டிலுள்ள
மருத்துவர்
அல்லது
இந்தியாவிலுள்ள
மருத்துவர்
அல்லது
மருத்துவமனையின்
மதிப்பீட்டின்படி
இந்தியக்
குடியிருப்பாளர்
ஒருவருக்குத்
தனது
மருத்துவச்
சிகிச்சைக்கான
செலவுகளுக்குத்
தேவையான
அந்நியச்
செலாவணியை
வழங்கிடும்
அதிகாரம் G.S.R.381(E) 3
மே 2000
தேதியிட்ட
அட்டவணை III ல்
குறிப்பெண் 9ன்
படி
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்களுக்கு
வழங்கப்படுகிறது
என்பதனை
அவர்கள்
கவனத்திற்குக்
கொண்டு
வருகிறோம்.
2.
மருத்துவச்
சிகிச்சைக்கான
செலவுத்தொகையை
இந்தியக்
குடியிருப்பாளர்
அந்நியச்
செலாவணியில்
பெறுவதில்
காலவிரயம்,
இடர்பாடுகள்
தவிர்க்கும்
பொருட்டு
அமெரிக்க
டாலர் 50000 அல்லது
அதன்
மதிப்புள்ள
தொகை வரை
மருத்துவரின்
மதிப்பீடு
இன்றியே
அங்கீகரிக்கப்பட்டவணிகர்கள்
வழங்கிடலாம்
என்று
தீர்மானிக்கப்
பட்டுள்ளது.
3.
மருத்துவச்
சிகிச்சைக்காக
வெளிநாட்டில்
செய்யப்படும்
செலவுக்கான
தொகையை,
அயல்நாட்டு
நாணயத்தில்
பெறத்
தேவையான
தொகையை
காசோலையாகவோ,
கேட்பு
வரையோலையாகவோ
தன் கணக்கில்
பெறும்படி
செய்து அந்தப்
பணம்
மருத்துவச்
சிகிச்சைக்காகவே
செலவழிக்கப்படுகிறது
என்கிற
விண்ணப்பதாரின்
உறுதிமொழியின்பேரில்
அவருக்கு
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள், 2000
அமெரிக்க
டாலர் வரை
அயல்நாட்டு
நாணயத்தை
வழங்கலாம்.
4.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
இந்த
சுற்றறிக்கையின்
கருத்துக்களைத்
தத்தம்
குழுவைச்
சார்ந்த
முகவர்கள்
கவனத்திற்குக்
கொண்டு
செல்வாராக.
5. இந்தச்
சுற்றறிக்கையில்
அடங்கியுள்ள
கட்டளைகள்
யாவும் FEMA 1999 (42 of 1999) ன்
சட்டப்பிரிவு
எண் 10(4) மற்றும்
சட்டப்பிரிவு
எண் 11(1)ன் கீழ்
வெளியிடப்படுகிறது.
தங்கள்
உண்மையுள்ள
கிரேஸ்
கோஷி
தலைமைப்
பொது மேலாளர் |