வங்கி
முகப்புகளில்
நோட்டுகளை எண்ணும்
இயந்திரங்கள்
DCM
(Plg)No.874/10.36.00/2003-04 ஜனவரி 29, 2004
தலைவர்
& நிர்வாக
இயக்குநர்
ஸ்டேட்
வங்கி / அதனுடன்
சேர்ந்த
வங்கிகள்
நாட்டுடமையாக்கப்பட்ட
/ தனியார் /
அயல்நாட்டு
பிராந்தியக்
கிராமப்புற /
உள்ளூர்
வங்கிகள்
அன்புடையீர்,
வங்கி
முகப்புகளில்
நோட்டுகளை எண்ணும்
இயந்திரங்கள்
1949
வங்கி
ஒழுங்குமுறைச்
சட்டம் பிரிவு
35A யின் கீழ் 2001 நவம்பர்
7 ஆம்
தேதியிட்ட DBOD.No.Dir. BC
43/13.03.00/2001-02 கட்டளைப்படி
அனைத்து வங்கிக்
கிளைகளும் ‘பின்’
அடிக்காத
நோட்டுகளை
வாங்க/கொடுக்க
வேண்டும். இரண்டு
பக்கமும் எண்கள்
தெரிவது போல்
உள்ள நோட்டுக்கள்
எண்ணும் இயந்திரங்களைத்
தேவையான அளவு
வாங்கி
கிளைகளின் முகப்புகளில்
வைக்க
வேண்டும் என்று
அவ்வப்போது
அறிவித்து வருகிறோம்.
மக்களுக்குக்
கொடுக்கப்படும்
நோட்டுக்களின்
எண்ணிக்கையை, முகப்புகளின்முன்
நின்று
வாங்கும்போது
அவர்களே பார்த்துக்
கொள்ள, இரண்டுப்பக்கமும்
எண்கள்
தெரிவதுபோல்
உள்ள நோட்டுக்கள்
எண்ணும்இயந்திரங்கள்
பயன்படும்.
2.
பல கிளைகளில்
இவ்வாறான இயந்திரங்கள்
இல்லாமல் இருப்பது
பற்றி பல
புகார்கள் வருகின்றன.
எனவே, மக்கள்
மனதில் நம்பிக்கையை
வளர்க்கும் வகையில்,
நோட்டு
எண்ணும் இயந்திரங்களை
தேவையான
அளவில் கிளைகளில்
வைக்க
வேண்டும். அவைகளில்
நோட்டுகளின்
எண்ணிக்கை காசாளருக்கும்
வாடிக்கையாளருக்கும்
தெரியும்
வகையில்
அமைந்திருத்தலும்
வேண்டும்.
3. கிடைத்தமைக்கு
ஒப்புதல் அளிக்க
அன்புடன்
V.R.
கெய்த்வாடு
தலைமைப்
பொது மேலாளர்
|