Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 18/01/2002

பேசித் தீர்வுகாணும் வணிக முறை (Negotiated Dealing System)

பேசித் தீர்வுகாணும் வணிக முறை

(Negotiated Dealing System) (NDS)

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

இந்தப் பகுதியில் பேசித் தீர்வுகாணும் வணிக முறை (NDS) பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உள்ளன. இது முழு அளவிலானது அல்ல.

 

1. பேசித் தீர்வுகாணும் வணிக முறை (NDS) என்றால் என்ன ?

அரசுப் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை உபகரணங்கள் குறித்த வணிகம் பேசுவதற்கான மின்னணுத்தளம் பேசித் தீர்வு காணும் வணிக முறை எனப்படுகிறது. ஏலங்கள் (Auction) மற்றும் திறந்த நிலை (Floatation) மூலமாக இந்திய ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரங்களை வெளியிடும்போது உறுப்பினர்கள் விலைகேட்டல் / விண்ணப்பங்கள் ஆகியவற்றை மின்னணுத்தளம் மூலமாகக் கொடுப்பதற்கு இம்முறை வழி செய்கிறது. உறுப்பினர்களுக்கு இடையே துணைப் பொதுப்பதிவேடு மாற்றங்களைச் செய்யும் வகையில் உரிய படிவங்களைச் சமர்ப்பிக்கும் பழக்கம் பேசித் தீர்வுகாணும் வணிக முறை அமலுக்கு வரும்பொழுது நிறுத்தப்படும். பொதுக்கடன் அலுவலகத்தின் பத்திரங்கள் கடனடைப்பு முறைக்கும் இப்புதியமுறை (NDS) வசதி செய்து தரும். முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறை மூலமாக கருவூல உறுதிச்சீட்டுகள் உட்பட்ட அரசுப் பத்திரங்கள் விற்பனைக்கும் இம்முறை வழி செய்யும்.

 

2. பேசித் தீர்வுகாணும் வணிக முறையில் (NDS) யார் உறுப்பினர் ஆகலாம்?

பேசித் தீர்வுகாணும் வணிக முறை, INFINET என்ற குழு உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இணையதளத்தை பயன்படுத்தும். எனவே INFINET உறுப்பினர்கள் மட்டுமே இந்தப் புதியமுறை(NDS)யில் உறுப்பினர்களாக முடியும். INFINET உறுப்பினர்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் துணைப் பொதுப் பதிவேட்டுக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு வைத்திருப்பார்கள்.

 

3. பேசித் தீர்வுகாணும் வணிக முறை (NDS) நடைமுறைக்கு வந்த பிறகும் துணைப் பொதுப் பதிவேட்டுப் படிவங்கள் பயன்படுத்தபடுமா?

ஆமாம், ஒரு உறுப்பினருக்கும் உறுப்பினர் அல்லாதவருக்கும் இடையே ஏற்படும் வணிக ஒப்பந்தங்களைத் தெரிவிக்க துணைப் பொதுப் பதிவேட்டு படிவங்கள் பயன்படுத்தபடும். இப்புதிய முறை (NDS) முழுமையாக நடைமுறைக்கு வரும் காலத்தில் துணைப் பொதுப்பதிவேட்டுக் கணக்குகளில் மாற்றங்களுக்கான உரிய படிவஙகளைப் பயன்படுத்தும் நடைமுறையை நிறுத்தலாமா என்பது பற்றி இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும்.

 

4. கணிணியில் பதிவு செய்யப்பட்ட வணிக நடவடிக்கையை திரும்பப் பெற முடியுமா ?

வணிக நடவடிக்கை தீர்வு செய்பவரின் ஒப்புதல் பெற்றபிறகு அந்த முடிந்து விட்ட நடவடிக்கையை கணிணியிலிருந்து திரும்பப் பெற முடியாது. ஆனால் தீர்வு செய்பவரின் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் வணிக நடவடிக்கை முன் வைப்பவரோ அல்லது அவருக்காகத் தீர்வு செய்பவரோ அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறலாம்.

 

5. ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதற்கு உறுப்பினர்களுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?

இன்றைய நிலையில் தீர்வு செய்பவர் ஒப்புதல் அளித்த வணிக நடவடிக்கையை நிராகரிக்க முடியாது. அடுத்த கட்டத்தில் பத்திரங்கள் கடனடைப்பு முறையோடு புதியமுறை (NDS) இணைக்கப்படும்போது, ஒப்பந்தத் தேதிக்கு முன் இரண்டு தரப்பினரும் (விற்பவர்/வாங்குபவர்) ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நடவடிக்கையை ரத்து செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத் தேதிக்கு முன்னர், அதாவது குறிப்பிட்டகாலக் கெடுவுக்குள் இது செய்யப்பட வேண்டும். ஒப்பந்தத் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நீக்கமுடியாது.

 

6. பணியாளர் தவறு போன்ற தொழில் சார்ந்த காரணங்களால் இப்போது துணைப் பொதுப்பதிவேட்டு விண்ணப்பங்கள் மறுக்கப்படுகின்றன. எத்தகைய நிலைமைகள் புதியமுறை(NDS)யில் ஒப்புக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட அமையும் ?

புதியமுறை (NDS)யில் உள்ளகச் சோதனைகள் ஏற்கனவே உள்ளன. எனவே மேலே குறிப்பிட்ட காரணங்களால் வணிக நடவடிக்கைகள் மறுக்கப்பட வாய்ப்பு இல்லை. இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வணிக நடவடிக்கை மேற்கொள்வோருக்கு போதிய இருப்பு இல்லாமை அல்லது பத்திரங்கள் இல்லாமை ஆகிய காரணங்களால் வணிக நடவடிக்கைகள் மறுக்கப்படலாம். (முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறையிலும்) கருவூலச் சீட்டுகள், அரசுப் பத்திரங்கள் தொடர்பான வணிக நடவடிக்கை மேற்கொள்ளப் படும்போது ஒப்பந்தத்திற்கான உத்தரவாதத்தை CCIL அளிக்கும்.

 

7. இந்திய ரிசர்வ் வங்கியின் ஏடுகளில் உள்ள தனது துணைப் பொதுப் பதிவேட்டுக் கணக்கை தன்னுடைய பின் அலுவலகத்தை (Back Office System) இணைத்து காணமுடியுமா ? அதில் மாற்றங்கள் செய்ய முடியுமா?

உறுப்பினர்கள் தங்களுடைய பின் அலுவலகத்திலிருந்து புதியமுறைக்கு நேரடியாகத் தகவல் அனுப்புவது பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் உறுப்பினர்கள் விருப்பத்திற்கேற்ப ‘Oracle’, ‘Flat File’ முறைகளை பயன்படுத்தி, தங்களின் பின் அலுவலகத்தில் APIகளை உருவாக்கலாம். இதைக்கொண்டு உறுப்பினர்கள் தங்களுடைய பின் அலுவலகத்தின் தகவல் தொகுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம். முதல் கட்டத்தில் துணைப் பொதுப்பதிவேட்டு கணக்குத் தொடர்பான தகவல்கள் புதியமுறையில் வைக்கப்படவில்லை.

 

8. புதியமுறையில் முடிவு செய்யப்படும் வணிக நடவடிக்கைகள் எவை?

பத்திரங்கள் கடனடைப்பு முறைக்குத் தேவையான வசதிகளை புதியமுறை செய்து தருகிறது. முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பத்திரங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் தொடர்பான வணிக நடவடிக்கைகளை புதியமுறையில் மேற்கொள்ளலாம்.

 

9. பணச்சந்தை உபகரணங்களான எளிதில் பணம்கோரும் அழைப்புப் பணம் (Call Money) /அறிவிக்கப்பட்ட பணம் (Notice Money), வணிகத்தாள் போன்றவைகளுக்கு புதியமுறை பயன்படுமா ?

முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறையில் அரசுப் பத்திரங்கள் மற்றும் கருவூல உறுதிச் சீட்டுகள் தொடர்பான வணிக நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுக்கடன் அலுவலகம் மூலம் புதியமுறை தீர்வுக்கு வழி செய்கிறது. மற்ற பணச் சந்தை ஆவணங்களுக்கான தீர்வுகள் அவைகளுக்கு இப்போதுள்ள நடைமுறைப்படியே தொடரும்.

 

10. தொழில் நிறுவனங்களின் பத்திரங்களை புதியமுறை மூலம் விற்பனை செய்யமுடியுமா ?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரத்திற்கு உட்பட்ட ஆவணங்களே தற்போது புதியமுறை மூலம் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. அழைப்புப் பணம், அறிவிக்கப்பட்ட பணம் / நீண்ட காலப்பணம் (Term Money), வணிகத்தாள் மற்றும் அரசுப் பத்திரங்கள் தொடர்பான திரும்பவும் விலக்குப்பெறும் ஒப்பந்தங்கள் ஆகியவை இந்த ஆவணங்களாகும். எனவே தொழில் நிறுவனங்களின் பத்திரங்களை புதியமுறை மூலம் வணிக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

 

11. பங்குச் சந்தைத் தரகர்கள் மூலம் செய்யப்பட்ட வணிக நடவடிக்கைகள் புதியமுறை மூலம் முடிவு செய்யப்படலாமா?

தேசிய பங்குச் சந்தை / மும்பை பங்குச் சந்தைத் தரகர்கள் மூலம் நடத்தப்பட்ட வணிக நடவடிக்கைகளை புதியமுறையில் பதிவு செய்யத்தடை இல்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் புதியமுறை உறுப்பினர்களால் மட்டும் தெரிவிக்கப்பட வேண்டும்; இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுக் கடன் அலுவலகத்தில் புதியமுறை மூலம் இவை முடிவு செய்யப்படும்.

 

12. தரகர்கள் புதியமுறையில் உறுப்பினர்களாக முடியுமா ?

புதியமுறையில் உறுப்பினராவதற்கு அடிப்படைத் தகுதி INFINETல் உறுப்பினராக இருப்பதுதான். இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளியிடப்படும் குறிப்புகளுக்கு ஏற்றவரோ அல்லது ரிசர்வ் வங்கியில் துணைப் பொதுப்பதிவேட்டு கணக்கு மற்றும் / அல்லது நடப்புக்கணக்கு வைத்திருப்போற் மட்டுமே உறுப்பினராக முடியும். எனவே தரகர்களுக்கு புதியமுறையில் உறுப்பினராக இயலாது.

 

13. புதியமுறை உறுப்பினர் ஒருவரின் முன் மற்றும் பின் அலுவலகங்கள் ஒரே நகரத்தின் இரண்டு பகுதிகளில் இருந்தால் அல்லது வெவ்வேறு நகரங்களில் இருந்தால் புதியமுறை பயன்பாட்டு மென்பொருளை (Application Software) உபயோகிக்க முடியுமா ?

உறுப்பினர்களும் அவர்களுடையே வாடிக்கையாளருக்கும் உள்ள குறும்பரப்பு வலையமைப்பைக்கருத்தில் கொண்டு (LAN) புதியமுறையில் பயன்பாட்டு மென்பொருளின் முதல் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. மறுக்க் இயலாத்தன்மை உடைய மின்னணு டிஜிட்டல் கையொப்பம், மறையாக்கம், மறைவிலக்கம், ரகசியத்தன்மை ஆகிய சிறப்பு அம்சங்கள் உறுப்பினர் சேவகத்தில் (Member Server) இருக்கின்றன. எனவே இரண்டு இடங்களில் முன் அலுவலகம் மற்றும் பின் அலுவலகம் இருக்கும் நிலையை புதியமுறையின் இந்த வடிவம் ஏற்றுக் கொள்ளாது. இருந்தாலும் புதியமுறையில் அடுத்த வடிவம் பெரும்பரப்பு வலையமைப்பாக உருவாகும்போது இதற்கான ஏற்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

 

14. இரண்டு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் நிலையான விலைப் புள்ளியைப் பெற முடியுமா ?

ஒரே நேரத்தில் இரு உறுப்பினர்கள் நிலையான விலைப் புள்ளியைப் பெறுவது சாத்தியமில்லை. தன்னிடம் வரும் சேதிகளின் வரிசைப்படி மத்திய் உரிமை சோகம் நிலையான விலைப் புள்ளியோடு தொடர்பு ஏற்படுத்தித் தருகிறது. ஒரு உறுப்பினர் நிலையான விலைப்புள்ளிக்கு பதில் தெரிவித்த பிறகு நிலையான விலைப்புள்ளியில் கழிவு செய்தல் போன்ற சில நடவடிக்கைகள் செய்யப்படும். அதுவரை இரண்டாவது உறுப்பினர் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

 

15. மற்றொரு உறுப்பினர் தொடர்பில் இருக்கும்போது ஒரு உறுப்பினர் தன்னுடைய விலைப்புள்ளியை மாற்ற முடியுமா ?

ஒருவர் பதில் அளிக்கும் பொழுது மற்றொருவரின் விலைப்புள்ளிஅய் மத்திய சேவகம் பூட்டிவிடும். அதேபோல, ஒரு உறுப்பினர் விலைப்புள்ளியை மாற்றுவதற்காகத் திரும்ப பெற்றுக்கொண்டால் அந்த விலைப்புள்ளியோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ள இயலாது.

 

16. துணைப் பொதுப்பதிவேட்டு கணக்கு வைத்திருப்போர் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறதா ?

ஆமாம். துணைப் பொதுப்பதிவேட்டு புதியமுறை கணக்கு வைத்திருப்போர் சார்பாக அரசுப்பத்திரங்களில் புதியமுறை மூலம் உறுப்பினர் வணிக நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறைக்கு மட்டுமே பொருந்தும். திரும்பவும் பத்திரங்களை வாங்கும் முறைக்கு பொருந்தாது.

 

17. தொலைபேசி மூலம் முடிவு செய்யப்பட்ட வணிக நடவடிக்கைகளை புதியமுறை மூலம் தெரிவிக்க வேண்டியது அவசியமா ?

புதியமுறையின் முக்கிய குறிக்கோள் கணிணித் தொடர்பு மூலம் விலை குறித்த தகவல்களைப் பரப்புவது, பணச்சந்தை ஆவணங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பது ஆகும். இந்த குறிக்கோளை அடைவதற்கு புதியமுறை மூலம் முடிவு செய்யப்படாத பேரங்களை தெரிவிப்பது அவசியமாகும்.

 

18. வணிக நடவடிக்கை மேற்கொள்பவர் (வாங்குபவர் மற்றும் விற்பவர்) பெயர்கள் சந்தையில் தெரிவிக்கப்படுமா ?

இல்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் சந்தையில் தெரிவிக்கப்படுவதில்லை. ISIN பத்திரப்பெயர் விலை/விகிதம் பத்திரம் ஈட்டுப்பயன் போன்ற முக்கியதகவல்கள் சந்தை மற்றும் வணிகக்கணிப்பு மூலம் தெரிவிக்கப்படும்.

 

19. இந்திய பரிவர்த்தனைக் கழகத்திற்கும் புதியமுறைக்கும் உள்ள உறவு என்ன ?

பத்திரங்கள் கடனடைப்பு முறைக்குத் தேவையான மின்தளத்தை புதியமுறை அடைந்துள்ளது. முன்வந்துதவுதல் (Novation) மூலமாக முற்றிலுமான மற்றும் பத்திரங்களை வாங்கும் முறையிலும் கருவூல உறுதிச் சீட்டுகள் உள்ளிட்ட அரசுப் பத்திரங்கள் புதியமுறை மூலம் நடத்தப்படும்போது கழகம் முடிவுக்கான உறுதியை அளிக்கிறது.

 

20. முன்வந்துதவுதல் (Novation) என்பது என்ன ? கழகம் மூலமாக முடிவு செய்வதில் உள்ள நன்மைகள் என்ன ?

கழகம் அரசுப் பத்திர வணிகத்தை முடிவு செய்யும் முறை முன்வந்துதவுதல் எனப்படுகிறது. பத்திரங்களை விற்பவரிடம் வாங்குபவராகவும், வாங்குபவரிடம் விற்பவராகவும் கழகம் செயல்படுகிறது. இதனால் உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய கடன் இழப்பு வாய்ப்பு அகற்றப்படுகிறது. அபாய நேர்வுகளைக் கையாளும் தேர்ச்சியை கழகம் அளிக்கிறது. இழப்பீட்டிற்காக உறுப்பினர்களிடமிருந்து அன்றாடம் பெறப்படும் தொகை, துணைக்கடன் சந்தை மற்றும் உத்தரவாத நிதி மூலம் கழகம் செயல்படுகிறது.

21. சிசிஐஎல் மூலம் பேரங்கள் முடிவு செய்யப்படுவது எப்படி ?

புதியமுறையில் தெரிவிக்கப்படும் பேரம் கழகம் மூலமாகவோ அல்லது நேரடியாக ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுப் பதிவேடு மூலமாகவோ முடிவு செய்யப்படலாம். கழகம் மூலமாக முடிவு செய்யப்படுவது வழங்குவதும் கொடுப்பதும் II (Delivery Versus Payment II) முறையிலாகும். பத்திரங்கள் மொத்த அடிப்படையிலும் நிதிகள் நிகர அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகின்றன. பத்திரங்கள் மற்றும் நிதிகளை மொத்த அடிப்படையில் கணக்கிடும் வழங்குவதும் கொடுப்பதும் I (DVP I) முறை செயல் திட்டத்தின்படி ரிசர்வ் வங்கிதுணைப் பொதுப் பதிவேடு மூலமான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும்.

 

22. கழகம் மூலமாக ஒப்பந்தங்களை செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயமா ? எந்த வகையான வணிக நடவடிக்கைகள் கழகம் மூலமாக முடிவு செய்யப்படுகின்றன ?

பத்திரங்களை வாங்கும் முறை (Repo) விற்பனையை விரிவுபடுத்தவும், அபாய நேர்வுகளைக் கையாளும் தேர்ச்சியை கொடுப்பதற்காகவும், புதியமுறை மூலம் நடைபெறும் அனைத்து அரசுப்பத்திரங்கள் தொடர்பான பத்திரங்களை வாங்கும் முறை ஒப்பந்தங்கள் கழகம் மூலமாக முடிவு செய்யப்படவேண்டும் என்று கருதப்படுகிறது. ரூ. 20 கோடிக்கு மேல் முகப்பு மதிப்பு உடைய அரசுப்பத்திரங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கி துணைப் பொதுப் பதிவேடு அல்லது கழகம் மூலமாக வணிகம் மேற்கொள்ளலாம். புதியமுறை உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்குள் நடக்கும் வணிக நடவடிக்கைகள் கழகம் மூலம் முடிவு செய்து கொள்ளலாம்.

 

23. பெரும்பரப்பு வலையமைப்பு (WAN) சூழலில் இணையான சட்டத்தின் போது உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் உதவி என்ன ?

புதியமுறை உறுப்பினர்களின் தொழிலிடங்களில் பயன்பாட்டு மென்பொருள் நிறுவப்படும் பொழுது புதியமுறை செயல்முறைகள் (2 நாட்களுக்கு) விளக்கப்படும். (WAN) சூழலில் உறுப்பினர்கள் இணையாகச் செயல்பட இது உதவும். பயன்படுத்துவோருக்குத் தேவையான கையேடுகள் அவர்களுடைய கணிணியில் கிடைக்கும்படிச் செய்யப்படும். தவிர, ரிசர்வ் வங்கியில் உள்ள குழு தொலைபேசி. மின்னஞ்சல்/நகலனுப்பி மூலம் துணையாக இருக்கும். அவசரத்தேவைகளுக்கு மும்பை வட்டார அலுவலகத்தில் உள்ள ஐபிஎம் (IBM) ஆர்டிஜிஎஸ் (RTGS) அறையோடு 022-2634271 எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்