வங்கி
அல்லாத நிதி
நிறுவனங்கள் (NBFC)
1934 ஆம்
ஆண்டின்
இந்திய
ரிசர்வ வங்கி
சட்டத்தின் 111B
அத்தியாயத்தின்படி
வங்கி சாராத
நிதி
நிறுவனங்களை
மேற்பார்வையிடும்
மற்றும்
வழிநடத்தும்
பொறுப்பு
இந்திய
ரிசர்வ்
வங்கியிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்
நோக்கங்கள்
நோக்கங்கள்
பின் வருமாறு:
(அ) நிதி
நிறுவனங்களின
ஆரோக்கியமான
வளர்ச்சியை
உருவாக்குதல்
(ஆ)
நாட்டின்
நிதி
அமைப்பின்
கொள்கைகுட்பட்டு
இந்
நிறுவனங்கள்
செயல்படவும்,
அமைப்பிலிருந்து
இவை விலகிச்
செல்லாமல்
செயல்படுவதை
உறுதி
செய்தல்
(இ) NBFC மீதான
ரிசர்வ்
வங்கியின்
மேற்பார்வை
மற்றும்
கண்கானிப்பு
நிதியமைப்பு
துறையில்
ஏற்படும்
வளர்ச்சிக்கு
ஏற்றபடி
இருக்கச்செய்தல்.
பொதுமக்கள்
மற்றும் தர
நிர்ணய
ஒழுங்குமுறை
கோட்பாடுகளை
நன்கு அறிந்து
கொள்ள
அமைப்புகள்,
கணிக்கையாளர்களின்
நன்மைக்காக
இந்த
வழிகாட்டுதல்களின்
அடிப்படைகோட்பாடுகள்
மற்றும்
நடவடிக்கைகளை
விளக்க
வேண்டியது
அவசியம் எனக்
கருதப்படுகிறது.
இந்த கேள்வி
பதில்
வடிவத்தை,
இந்திய
ரிசர்வ் வங்கி
(வங்கில்லாத
மேற்பார்வைத்துறை)
தொகுத்துள்ளது.
டெப்பாசிட்தாரர்கள்
/ பொது மக்கள்
பயன்பாட்டிற்காக,
இந்த அடிக்கடி
கேட்கப்படும்
கேள்விகள் (அகேகே)
தரப்பட்டுள்ளதே
தவிர,
வங்கியின்
மூலம் NBFCக்களுக்குத்
தரப்பட்டுள்ள
நடைமுறையிலுள்ள
கட்டளைகள் /
குறிப்புகள்
ஆகியவற்றிற்கு
மாற்றாகக்
கொள்ளக்
கூடாது.
கையொப்பம்
(டி.எஸ்.நெகி)
தலைமைப்
பொதுமேலாளர்
ஜூலை 5, 2005.
--------------------------------------------------------------
NBFCக்கள்
குறித்த அகேகே
(அடிக்கடி
கேட்கப்படும்
கேள்விகள்)
கே 1:
என்பிஎஃப்சி (NBFC)
என்பது என்ன?
ப. 1: 1956 ஆம்
ஆண்டின்
கம்பெனி
சட்டத்தின்படி
பதிவுசெயயப்பட்ட
நிறுவனம்.
குத்தகைக்கு
விடுதல் /
வாடகைக்கு
எடுத்தல் /
காப்பீட்டுத்
தொழில் /
சீட்டுத்
தொழில்
மற்றும் அரசு
அல்லது
உள்ளாட்சிகளால்
வெளியிடப்படும்
பங்குகள் /
பங்குத்
தொகுப்புகள் /
பத்திரங்கள் /
கடன்
பத்திரங்கள் /
பிணையங்கள்
போன்ற
விற்பனைக்குரியவற்றை
வாங்குதல்,
கடன் மற்றும்
முன் பணம்
வழங்குதல்
ஆகியவைகளில்
ஈடுபடும்
நிறுவனம் NBFC
எனப்படும்.
வேளாண்தொழில்,
தொழில்துறை
அசையாச்
சொத்துக்களை
உருவாக்குதல்,
வாங்குதல்
விற்றல்
ஆகியவை இதில்
அடங்காது.
ஏதாவது
திட்டம்
அல்லது
ஏற்பாட்டின்படி
வைப்புகளைப்
பெற்றுக்கொள்ளும்
வங்கியல்லாத
நிதி
நிறுவனமும்
ஏதாவது ஒரு
வகையில் கடன்
கொடுக்கும்
நிறுவனமும்
கூட NBFC (மிச்சமுள்ள
வங்கியல்லாத
நிதி நிறுவனம்)
ஆகும்.
கே 2: NBFCகள்
வங்கிகள்
போலவே
செயல்படுகின்றன.
வங்கிகளுக்கும்
NBFCகளுக்கும்
உள்ள
வேறுபாடுகள்
என்ன?
ப 2: NBFCக்கள்
வங்கிகள்
போலவே
செயல்பட்டாலும்
சில
வேறுபாடுகள்
உள்ளன. அவை:
(1) NBFCக்கள்
வரைவு
வைப்புக்களை
ஏற்க
முடியாது.
(2) அவை பணம்
கொடுப்பு
மற்றும்
தீர்வுக்கான
அமைப்பில்
சாராதவை; எனவே
அவை
வாடிக்கையாளர்களுக்கு
காசோலைகளை
வழங்க
முடியாது.
(3)
வங்கிகளைப்
போல NBFC
வைப்புதாரர்களுக்கு
DICGCஇன் வைப்புக்
காப்பீடு
வசதி இல்லை.
கே 3 :
ஒவ்வொரு NBFCயும்
ரிசர்வ
வங்கியிடம்
பதிவு செய்து
கொள்ளவேண்டுமா?
ப 3: 1934 ஆம்
ஆண்டின்
இந்திய
ரிசர்வ் வங்கி
சட்டத்தின்
பிரிவு 45-IA இன்
உட்பிரிவு (a)
படி ஒவ்வொரு NBFC
யும் இந்திய
ரிசர்வ்
வங்கியிடம்
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.
இருந்தாலும்
இரட்டை
நடைமுறைகளை
அகற்றுவதற்காக
NBFCயின் சில
பிரிவுகளுக்கு
ரிசர்வ
வங்கியிடம்
பதிவு
செய்துகொள்ளப்படுவதிலிருந்து
விலக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது.
இவை, மூலதன
நிரிக்
கம்பெனிகள் /
வியாபார வங்கி
நிறுவனங்கள் /
இந்திய பங்கு
பரிவர்த்தனை
குழுமத்தில்
பதிவு
செய்துள்ள
பங்குத் தரகர்
நிறுவனங்கள்
IRDA சான்றிதல்
வழங்கியுள்ள
காப்பீட்டு
நிறுவனங்கள்,
1956ஆம் ஆண்டின்
கம்பெனி
சட்டத்தின் 620-A
பிரிவின்படி
அறிவிக்கப்பட்டுள்ள
நிதி
நிறுவனங்கள்
அல்லது தேசிய
வீட்டு வசதி
வங்கியால்
வழிநடத்தப்படும்
வீட்டு வசதி
நிதி
நிறுவனங்கள்
போன்றவையாகும்.
கே 4:
இந்திய
ரிசர்வ்
வங்கியிடம்
பதிவு
செய்துள்ள
பலவகைப்பட்ட
NBFCக்கள் யாவை?
ப 4: கீழ்க்
கண்ட NBFCக்கள்
ரிசர்வ
வங்கியிடம்
பதிவு செய்து
கொண்டுள்ளன:-
(1) கருவிகளை
வாடகைக்கு
கொடுக்கும்
நிறுவனங்கள்
(2) தவணைமுறை
வாங்கல் நிதி
நிறுவனங்கள்
(3) கடன்
வழங்கும்
நிறுவனங்கள்
(4)
முதலீட்டு
நிறுவனங்கள்
மேற்குறிப்பிட்டவற்றை
வைப்பு
ஏற்றுக்கொள்பவை
அல்லது
ஏற்றுக்கொள்ளதவை
எனவும்
பிரிக்கலாம்.
(5)
எஞ்சியுள்ள
வங்கியல்லாத
நிறுவனங்கள்
கே 5:
ரிசர்வ
வங்கியிடம்
பதிவு செய்து
கொள்வதற்கான
தேவை என்ன?
ப 5: 1956 ஆம்
ஆண்டின்
கம்பெனிச்
சட்டப்படி
உருவாக்கப்பட்ட
நிறுவனம், 1934 ஆம்
ஆண்டின்
ரிசர்வ வங்கி
சட்டத்தின் 45-I(a)
பிரிவில்
கூறப்பட்டுள்ள
வங்கியல்லாத
நிதி
நிறுவனமாக
பணியாற்ற
விரும்பினால்,
அவை குறைந்த
பட்சம் ரூபாய்
25 லட்சம் நிகர
சொந்த
நிதியாக (1999,
ஏப்ரல் 21 தேதி
முதல் ரூபாய்
200 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது)
வைத்திருக்க
வேண்டும்.
குறிப்பிட்ட
படிவத்தில்
இந்த நிறுவனம்
ஆவணங்களோடு
ரிசர்வ
வங்கியிடம்
விண்ணப்பத்தை
அளிக்க
வேண்டும்.
1934 ஆம்
ஆண்டின்
இந்திய
ரிசர்வ் வங்கி
சட்டத்தின் 45-IA
பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள
நிபந்தனைகளுக்கு
ஏற்றபடி
உள்ளதா என்பதை
தெரிந்து
கொண்ட பிறகு
ரிசர்வ வங்கி
பதிவுச்
சான்றிதழ்
கொடுக்கும்.
கே 6:
பதிவு
செய்துகொண்டுள்ள
NBFCக்களின்
பட்டியல்
மற்றும் NBFCகளுக்குத்
தரப்பட்டுள்ள
அறிவுரைகளை
எப்படி அறிவது?
ப 6: இந்திய
ரிசர்வ்
வங்கியின்
இணையதளத்தில்
(www..rbi.org.in) பதிவு
செயப்பட்டுள்ள
NBFCக்களின்
பட்டியல்
உள்ளது.
அவ்வப்போது NBFCக்களுக்கு
தரப்படும்
அறிவுறைகளையும்
அங்கே காணலாம்.
தவிர
அரசாணைகள்
மூலமாகவும்
அறிவுறைகள்
தரப்படுகின்றன.
பொதுமக்கள் / NBFCயின்
கவனத்தை
கவருவதற்காக
பத்திரிக்கைகளின்
குறிப்புகளும்
வெளியிடப்படுகின்றன.
கே 7:
அனைத்து NBFCக்களும்
வைப்புக்களை
பெற்றுக்கொள்ளலாமா?
பொதுமக்களிடமிருந்து
வைப்புக்களை
பெற்றுக்
கொள்வதற்கான
நிபந்தனைகள்
என்ன?
ப 7: அனைத்து
NBFCக்களும்
பொதுமக்களிடமிருந்து
வைப்பு
பெற்றுக்
கொள்ள அனுமதி
தரப்படுவதில்லை.
அங்கீகாரமும்
பதிவுச்
சான்றிதழும்
பெற்றுள்ள NBFCக்கள்
மட்டுமே
பொதுமக்களிடமிருந்து
வைப்புக்களை
பெற்றுக்
கொள்ளவோ,
வைத்துக்கொள்ளவோ
முடியும்.
வைப்பு
பெற்றுக்
கொள்ளும் NBFCக்கள்
சட்டப்படி
இருக்கவேண்டிய
நிகர சொந்த
நிதி (NOF)
வைத்திருக்க
வேண்டும்;
ரிசர்வ்
வங்கியின்
வழிகாட்டுதலுக்கு
உடன்பட
வேண்டும்.
கே 8:
பொதுமக்களிடமிருந்து
வைப்பை
பெற்றுக்
கொள்வதற்கு
ஏதாவது உச்ச
வரம்பு உள்ளதா?
NBFC பெற்றுக்
கொள்ளும்
வைப்புகளுக்கான
கால வரம்பு /
வட்டி வீதம்
ஆகியவை என்ன?
ப 8: ஆமாம்.
வைப்பை
பெற்றுக்கொள்வதில்
உச்ச வரம்பு
உள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட
அளவில் NOF/CRAR
வைத்துள்ள
முறையான
நிர்வாகம்
உள்ள NBFCக்கள்
கீழ் கண்டபடி
பொதுமக்களிடமிருந்து
வைப்புக்களை
பெற்றுக்
கொள்ளலாம்.
NBFCயின்
வகை |
பொதுமக்களிடமிருந்து
பெறப்படும்
வைப்புகளுகான
உச்ச
வரம்பு |
க்ரெடிட்
ரேடிங்
இல்லாத 15% CRAR
வைத்துள்ள
கருவிகளை
வாடகைக்கு
விடும்/தவணை
முறை
வாங்கல்
நிதி
அளிக்கும்
நிறுவனங்கள் |
நிகர
சொந்த நிதி (NOF)ன்
1½ மடங்கு
அல்லது ரூ.10
கோடி இதில்
எது
குறைவானதோ |
குறைந்த
பட்ச
முதலீடு
க்ரெடிட்
ரேடிங்
உள்ள 12% CRAR
வைத்துள்ள
கருவிகளை
வாடகைக்கு
விடும்/தவணை
முறை
வாங்கல்
நிதி
அளிக்கும்
நிறுவனங்கள் |
நிகர
சொந்த நிதி (NOF)ன்
4 மடங்கு |
குறைந்த
பட்ச
முதலீடு
க்ரெடிட்
ரேடிங்
உள்ள 15% CRAR
வைத்துள்ள
கருவிகளை
வாடகைக்கு
விடும்/தவணை
முறை
வாங்கல்
நிதி
அளிக்கும்
நிறுவனங்கள் |
நிகர
சொந்த நிதி (NOF)ன்
1½ மடங்கு |
இப்போது NBFC
தரக்கூடிய
அதிக பட்ச
வட்டி 11% ஆகும்.
இந்த வட்டி
மதாந்தர
அளவுக்குக்
குறையாத
நிலையில்
கூட்டுவட்டியாகக்
கணக்கிடப்பட்டும்
வழங்கலாம்.
குறைந்த
பட்சம் 12
மாதங்களுக்கும்
அதிக பட்சம் 60
மாதங்களுக்கும்
பொதுமக்களிடமிருந்து
வைப்புகளை
பெற்றுக்கொள்ள
/ புதிப்பிக்க
NBFCக்களுக்கு
அனுமதி
தரப்பட்டுள்ளது.
RNBCக்களை
பெறுத்தவரை
வைப்புகளுக்கான
நடைமுறைகள்
வேறானவை; அவை
இதே ஏட்டில்
மற்றொரு
இடத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
கே 9:
டெப்பாசிட் (வைப்பு)தாரர்கள்
முதலீடு
செய்யும்போது
கவனிக்கவேண்டிய
NBFC பற்றிய
ஒழுங்குமுறைகளின்
முக்கிய
அம்சங்கள்
யாவை?
வைப்புகளை
ஏற்றுக்கொள்ளுதல்
தொடர்பான
என்பிஎஃப்சி
நடைமுறைகள்
கீழ்கண்டவாறு
:
-
குறைந்த
பட்சம் 12
மாதங்களுக்கும்
அதிகபட்சம் 60
மாதங்களுக்கும்
பொதுமக்களிடமிருந்து
வைப்புகளைப்
பெற்றுக்
கொள்ள/புதுபிக்க
NBFCக்களுக்கு
அனுமதி
தரப்பட்டுள்ளது.
காலவரையரை
ஏதுமின்றி
கேட்டவுடன்
கொடுக்கப்படும்
வரைவுவைப்புகளை
பொது
மக்களிடமிருந்து
ஏற்றுக்கொள்ள
முடியாது.
-
ரிசர்வ்
வங்கியால்
அவ்வப்போது
அறிவிக்கப்படும்
உச்ச
வரம்புக்கு
மேல் NBFCக்கள்
வட்டி
விகிதத்தை
அறிவிக்கக்கூடாது.
-
வைப்பாளர்களுக்கு
NBFCக்கள்
பரிசுகள்,
ஊக்கத்தொகைகள்
போன்றவற்றை
அறிவிக்கக்கூடாது.
-
பொருட்களை
வாடகைக்கு
விடுபவை/தவணைமுறை
வாங்கள் நிதி
நிறுவனங்கள்
தவிர மற்ற NBFCக்கள்
முதலீட்டிற்கான
குறைந்த
பட்ச
க்ரெடிட்
ரேடிங்
வைத்திருக்கவேண்டும்.
-
NBFCவசம்
உள்ள
வைப்புகள்
காப்பீடு
பெற்றவை
அல்ல.
-
NBFCக்கள்
வைப்புகளைத்
திருப்பிச்செலுத்துவதற்கு
ரிசர்வ்
வங்கி
உறுதியளிக்காது.
-
வைப்புகளைக்கோரும்
நிறுவனம்
விண்ணப்ப
படிவத்தில்
நிறுவனத்தைப்
பற்றிய சில
விவரங்களைத்
தெரிவிக்க
வேண்டியது
சட்டபூர்வமான
கடமையாகும்.
கே. 10.
வைப்பு என்பது
என்ன ?
பொதுவைப்பு ?
இது எங்காவது
விளக்கப்பட்டுள்ளதா
?
1934 ஆம்
ஆண்டின்
இந்திய
ரிசர்வ வங்கி
சட்டத்தின் 45 I (bb)
பிரிவில்
வைப்பு என்பது
வரையறுக்கப்பட்டுள்ளது.
வைப்பாகவோ
அல்லது
கடனாகவோ
அல்லது வேறு
வடிவத்திலோ
பெறப்படும்
பணத்தை இது
குறிப்பிடும்.
கீழ்க்கண்டவற்றை
குறிப்பிடாது.
-
ஒரு
நிறுவனத்தின்
பங்குதாரர்களால்
பங்கு
முதலீடாக
தரப்பட்ட
தொகை
-
பட்டியலில்
உள்ள வங்கி,
கூட்டுறவு
வங்கி, ஒரு
வங்கிக்
கம்பெனி
மாநில
நிதிகழகம்,
இந்திய
தொழில்
வளர்ச்சி
வங்கி அல்லது
ரிசர்வ
வங்கியால்
குறிப்பிடப்படும்
மற்ற
அமைப்புகள்
-
பிணைய
வைப்பு,
உரிமையாளர்
வைப்பு,
உறுதிப் பணம்
பொருட்களுக்கான
முன்பணம்
போன்ற வணிகம்
தொடர்பான
வைப்புகள்
-
தொழில்
நிறுவனம்
அல்லாத பதிவு
செய்யப்பட்ட
கடன்
கொடுப்பவரிடமிருந்து
பெறப்பட்ட
பணம்
-
சீட்டுக்குரிய
பங்குத்
தொகையாகப்
பெறப்பட்ட
பணம்
1998ஆம்
ஆண்டின்
வங்கிசாராத
நிதி
நிறுவனங்கள்
பொதுவைப்புகளை
ஏற்றுக்கொள்வதற்கான
(ரிசர்வ் வங்கி)
நிபந்தனைகள்
‘வைப்பு’
என்பதை 1934ஆம்
ஆண்டின்
இந்திய
ரிசர்வ் வங்கி
சட்டத்தின் 45I(bb)
பிரிவில்
கூறியபடி
வரையறை
செய்துள்ளது.
கீழ்கண்டவை
அதிலிருந்து
விலக்கப்பட்டுள்ளன.
-
மத்திய/மாநில
அரசுகளால்
உறுதி
செய்யப்பட்டு
மத்திய/மாநில
அரசுகளிடமிருந்தோ
வேறு
ஆதாரங்களில்
இருந்தோ
பெறப்பட்ட
நிதி அல்லது
வெளிநாட்டவர்/வெளிநாட்டு
அமைப்பு
அல்லது
வெளிநாட்டு
அரசு அல்லது
உள்ளாட்சியிடமிருந்து
பெறப்பட்ட
நிதி
-
நிதி
அமைப்புகளிடமிருந்து
பெறப்பட்ட
நிதி
-
நிறுவனங்களுக்கு
இடையேயான
வைப்பாகப்
பெறப்பட்ட
நிதி
-
நிறுவனத்தின்
அமைப்புச்
சட்டத்தின்படி
உறுப்பினர்களுக்குத்
திருப்பித்தர
வேண்டிய
அவசியம்
இல்லாத
வகையில்
பெறப்பட்ட
முன்பணம்,
பங்குகள்,
பங்குத்தொகுப்புகள்,
பத்திரங்கள்
கடன்
பத்திரங்களுக்கான
முன்பணம்.
-
தனி
நிறுவனத்தின்
பங்குதாரர்களிடமிருந்து
பெறப்பட்ட
தொகை.
-
NBFC
இயக்குநர்களிடமிருந்தோ
அல்லது
இயக்குநர்களின்
உறவினர்களிடமிருந்து
பெறபட்ட தொகை
-
நிபந்தனைகளுக்கு
உட்பட்டு
நிறுவனத்தின்
அசையாச்
சொத்துக்களை
அடமானம்
வைப்பதின்
மூலமோ அல்லது
பத்திரங்கள்
அல்லது கடன்
பத்திரங்களை
வெளியிடுவதின்
மூலமோ
பெறப்படும்
தொகை
-
பிணையற்ற
கடனாக
முன்னுரிமையாளர்களால்
தரப்படும்
தொகை
-
பரஸ்பர
நிதியிலிருந்து
பெறப்படும்
தொகை
- வணிகத்தாளைக்
கொடுப்பதின்மூலம்
பெறப்படும்
தொகை
கே. 11.
உறுதி
செய்யப்பட்ட
கடனீட்டுப்
பத்திரம் பொது
வைப்புகளாக
கருதப்படுகின்றனவா?
இல்லையென்றால்
அவற்றை முறைப்
படுத்துவது
யார் ?
குறிப்பிட்ட
சொத்தின சந்தை
விலைக்கு
மிகைப்படாத
வகையில்
அடமானம்
வைக்கப்பட்டுக்
கிடைக்கும்
கடனீட்டுப்பத்திரங்கள்
1998 ஆம் ஆண்டின்
வங்கிசாரா
நிதி
நிறுவனங்கள்
பொது
வைப்புகளைப்
பெற்றுக்
கொள்வதற்கான (ரிசர்வ்
வங்கி)
விதிகள்படி
பொதுவைப்பாக
கருதப்படுவதில்லை.
கடனீட்டுப்
பத்திரங்கள்
கடன் ஆவணங்கள்
என்பதால் அவை
இந்திய பங்கு
பரிவர்த்தனை
வாரியத்தால்
நடைமுறைப்படுத்தப்
படுகின்றன.
கே. 12.
குடியிருப்போரல்லாத
இந்தியரிடமிருந்து
NBFCக்சிக்கள்
வைப்புகளைப்
பெற்றுக்
கொள்ளலாமா ?
ப.12. 2004 ஏப்ரல்
24 முதல்
குடியிருப்போரல்லாத
இந்தியர்களிடமிருந்து
NBFCக்கள் வைப்பு
பெறுவது
தடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் NRE/FCNR(B)
கணக்கிலிருந்து
மாற்றுவது/செலுத்துவது
அல்லாத NRI (குடியிருப்போரல்லாத
இந்தியர்)
கணக்கிலிருந்து
பற்றாக வருm
வைப்பிற்கு
விலக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக
இப்போதுள்ள NRI
வைப்புகளைப்
புதுப்பித்துக்
கொள்ளலாம்.
கே.13. NBFC
வைப்பாளர்களுக்கு
வாரிசு நியமன
உரிமை உள்ளதா ?
ப. 13. ஆமாம். NBFC
வைப்பாளர்களுக்கு
வாரிசு நியமன
உரிமை உண்டு.
இதற்கான
வழிமுறைகள் 1934
ஆம் ஆண்டின்
இந்திய
ரிசர்வ் வங்கி
சட்டம் 45 QB
பிரிவில்
கூறப்பட்டுள்ளன.
1949 ஆம் ஆண்டின்
வங்கியியல்
ஒழுங்குமுறை
சட்டத்தின் 45 ZB
பிரிவின்படி
ஏற்பட்ட 1985 ஆம்
ஆண்டின்
வங்கியல்லாத
நிறுவனங்கள் (நியமனம்)
விதிகள்
செயல்படுத்தும்படி
வங்கியல்லாத
நிதி
நிறுவனங்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி
வைப்பாளர்/கள்
இறக்கும்
பட்சத்தில்
அவர்களின்
வைப்பை NBFC
ஒப்படைப்பதற்காக
வைப்பாளர்/கள்
ஒரு
வாரிசுதாரரை
நியமிக்கலாம்.
நியமனத்திற்கு
படிவம் DA-1, ரத்து
செய்ய படிவம்
DA-2, மாறுதல்
செய்ய படிவம்
DA-3 ஆகிய
படிவங்களை
பெற்றுக்கொள்ளும்
படி NBFCக்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கே.14. NBFCக்களிடம்
பணத்தை
வைப்பாகத்தரும்
பொழுது
வைப்பாளர்கள்
கவனத்தில்
கொள்ள
வேண்டியவை
என்ன ?
ப.14. NBFCக்களிடம்
வைப்பாக
அளிக்கும்போது
வைப்பாளர்கள்
கீழ்க்கண்டவற்றை
கவனத்தில்
கொள்ள
வேண்டும்.
1.
பொதுவைப்புகள்
உறுதியல்லாதவை
2. வைப்பாளர்/கள்
பெயர்,
வைப்பின் தேதி,
வைப்பின் அளவு
எண்ணிலும்
எழுத்திலும்,
தரவேண்டிய
வட்டி விகிதம்,
முதிர்ச்சி
அடையும் தேதி
ஆகியவை வைப்பு
ரசீதில்
இருக்க
வேண்டும்.
நிறுவனத்தால்
அங்கீகரிக்கப்பட்ட
அதிகாரியின்
கையொப்பம்
ரசீதில்
இருக்க
வேண்டும். 3.
நிறுவனத்தின்
தற்போதைய
நிதிநிலமை,
நிறுவனத்தின்
பிரதிநிதிகளால்
தரப்படும்
அறிக்கைகள்
பற்றிய உண்மை
நிலை,
வைப்புகளை
திருப்பிக்கொடுத்தல்
அல்லது
கடன்களை
அடைத்தல்
ஆகியவற்றில்
இந்திய
ரிசர்வ்
வங்கிக்கு
எந்தப்பொறுப்பும்
இல்லை; இது
தொடர்பாக
ரிசர்வ் வங்கி
எந்த
உறுதியும்
அளிக்காது.
கே.15.
வைப்புகளைப்
பெற்றுக்கொள்வதற்கு
முன்னர் NBFC
க்கள்
ரேட்டிங் பெற
வேண்டும்
என்பது
அவசியமா?
ரேட்டிங்
செய்வது யார்?.
ப. 15.
கருவிகளை
வாடகைக்குத்தரும்/தவணை
முறையில்
வாங்கல் நிதி
நிறுவனங்களைத்
(EL/HP) தவிர மற்றபடி
ரேட்டிங்
பெறாத NBFCக்கள்
பொதுவைப்புக்களைப்
பெற இயலாது. 15% CRAR
உள்ள (EL/HP)
நிறுவனங்கள்
ரூ.10 கோடி
அல்லது நிகர
சொந்த நிதி (NOF)இன்
1½ மடங்கு
ஆகியவற்றில்
எது குறைவோ
அந்த அளவு பொது
வைப்புகளைப்
பெற்றுக்கொள்ளலாம்.
CRISIL, CARE, ICRA and FITECH Ratings India Pvt. Ltd.
ஆகிய நான்கில்
ஏதாவது
ஒன்றிடம் NBFC
ரேட்டிங்
பெற்றுக்கொள்ளலாம்.
கே.16.
பல்வேறு
நிறுவனங்களில்
முதலீடு
குறைந்தபட்சம்
செய்ய கிரேடு
ரேடிங்
தொடர்பான
குறியீடுகள்
எவை ?
ப. 16. முதலீடு
குறைந்த
பட்சம் செய்ய
கிரேடு ரேடிங்
தொடர்பான
குறியீடுகள்
இவை : -
ரேடிங்
ஏஜென்சியின்
பெயர் |
முதலீடு
குறைந்தபட்சம்
செய்ய
கிரேடு
கிரெடிட்
ரேடிங் (MICR)
அளவு |
CRISIL |
FA- |
ICRA |
MA- |
CARE |
CARE NNN (FB) |
FITCH |
AA –(ind)(FD) |
A- என்பது Aக்கு
சமம் அல்ல, AA–
என்பது AAக்கு
சமம் அல்ல
AA மற்றும் AAA-
என்பது AAAக்கு
சமம் அல்ல
என்பதைக்
குறிப்பிடவேண்டும்.
கே.17.
ரேட்டிங்
பெறாத NBFC பொது
வைப்பைப்
பெற்றுக்
கொள்ளலாமா ?
ப. 17. கூடாது. 15%
CRAR வைத்துள்ள
விவேக
நெறிமுறைகளுக்கு
உட்படுகின்ற
EL/HP நிறுவனங்கள்
ரூ.10 கோடி
அல்லது NOF இன் 1½
மடங்கு இதில்
எது குறைவானதோ
அந்த அளவில்
பொதுவைப்பு
பெறலாம். இதர NBFCக்கள்
வைப்புகளைப்
பெற இயலாது.
கே.18. ஒரு
நிறுவனத்தின்
ரேட்டிங்
குறைக்கப்படும்
பொழுது
அதனுடைய
பொதுவைப்புகளையும்
உடனடியாகக்
குறைத்துக்
கொள்ள
வேண்டுமா ?
அல்லது கால
அவகாசம் உண்டா
?
ப. 18.
முதலீட்டிற்கான
குறைந்தபட்ச
கிரேட்
ரேடிங்கிற்குக்
கீழே ஒரு NBFCயின்
ரேட்டிங்
குறைக்கப்பட்டால்
அது பொது
வைப்புகளைப்
பெற்றுக்
கொள்வதை
நிறுத்த
வேண்டும்;
பதினைந்து
வேலை
நாட்களுக்குள்
ரிசர்வ்
வங்கியிடம்
நிலமையைத்
தெரிவிக்கவேண்டும்;
1998ஆம் ஆண்டு
வங்கிசாராத
நிதிநிறுவனங்கள்
பொது வைப்பு
ஏற்றுக்கொள்வதற்கான
(ரிசர்வ் வங்கி)
குறிப்புகளின்
பத்தி 4(4)
குறிப்பிட்ட
அளவிற்கோ
அல்லது
ஒன்றுமில்லாத
அளவிற்கோ,
கிரேடிட்
ரேட்டிங்
குறைக்கப்பட்ட
நாளிலிருந்து
மூன்று
வருடங்களுக்குள்,
வைப்பு
நிதியின்
கூடுதலான
பகுதியை
குறைத்துக்கொள்ள
வேண்டும். மேலே
குறிப்பிட்டுள்ள
சட்டங்களின்படி
முதிர்ச்சியடைந்த
பொது
வைப்புகளை
அந்த NBFCக்கள்
புதுபித்துக்கொள்ளலாம்;
வைப்பு
பெறுவதற்கான
மற்ற
நிபந்தனைகளை
நிறைவேற்ற
வேண்டும்.
கே.19. ஒரு
NBFC பணம் தர
மறுத்தால்
வைப்பாளர்
என்ன
செய்யலாம் ?
ப. 19. ஒரு NBFC பணம்
தர மறுத்தால்
வைப்பாளர்
கம்பெனி சட்ட
குழுமம்,
நுகர்வோர்
மன்றம் அல்லது
உரிமையியல்
நீதிமன்றம்
இவற்றை
அணுகலாம்.
கே.20.
வைப்பாளர்களின்
நலன்களைப்
பாதுகாப்பதில்
கம்பெனி சட்ட
குழுமம் பணி
என்ன ? அதை
எப்படி
அணுகுவது ?
ப. 20. ஒரு
வங்கியில்லாத
நிதி நிறுவனம்,
வைப்புத்தொகைக்குரிய
நிபந்தனைகளுக்கு
இணங்க,
தொகையையோ
அல்லது அதன்
பகுதியையோ,
திருப்பிதராத
பொழுது,
கம்பெனி சட்ட
குழுமம்
சுயமாகவோ
அல்லது
வைப்பாளரின்
மனுமீதோ,
வங்கிசாராத
நிதி
நிறுவனத்திற்க்கு,
அத்தகைய
வைப்புத்தொகையையோ
அல்லது அதன்
பகுதியையோ,
உடனடியாகவோ
அல்லது
குறிப்பிட்ட
காலத்திற்குள்ளோ,
ஆணையிடப்பட்ட
நிபந்தனைகளுக்குட்பட்டு
திருப்பித்தர
உத்தரவிடுகிறது.
மேற்கூறியவாறு
கம்பெனி
சட்டக்
குழுமத்தை
அணுக,
வைப்பாளர்
அதிகார
எல்லைகுட்பட்ட
கம்பெனிச்சட்ட
குழுமத்தின்
கிளைக்கு
பரிந்துரைக்கப்பட்ட
கட்டணத்துடன்
தகுந்த
படிவத்தில்
மனுவை
அனுப்பவேண்டும்.
கே.21.
கம்பெனி சட்ட
குழுமத்தின்
பல்வேறு
கிளைகளின்
முகவரியையும்
அவற்றின்
அதிகார
எல்லைகளைக்குறித்த
விபரங்களையும்
தர இயலுமா ?
ப. 21.
கம்பெனிச்
சட்ட
குழுமத்தின்
பல்வேறு கிளை
அலுவர்களின்
ளின்
முகவரியும்,
அவர்களது
அதிகார வரம்பு
எல்லைகளும்
பின்வருமாறு :
வரிசை
எண் |
முகவரி |
நிர்வாக
அமைப்புக்குட்
பட்ட
அதிகார
வரம்பு |
1. |
அலுவலர்,
கம்பெனிச்
சட்ட
குழுமம்,
வடக்கு
வட்டாரமன்றம்,
சாஸ்த்ரிபவன்
`A’ பகுதி,
ஐந்தாவது
மாடி,
டாக்டர்
ராஜேந்திர
பிரசாத்
சாலை,
புதுதில்லி
– 110 001. |
உத்திரபிரதேசம்,
ஜம்மு மற்றும்
காஷ்மீர்,
பஞ்சாப்,
ஹிமாச்சல
பிரதேசம்,
ராஜஸ்தான்,
ஹரியானா,
யூனியன்
பிரதேசங்களாகிய
சண்டிகரும்,
தில்லியும்.
|
2. |
அலுவலர்,
கம்பெனிச்
சட்ட
குழுமம்,
சாஸ்த்ரி
பவன்,`A’ பகுதி,
ஐந்தாவது
மாடி, வரிசை 8,
27, ஹாடோஸ் சாலை,
சென்னை-600 006. |
தமிழ்நாடு,
ஆந்திர
பிரதேசம்,
கேரளா,
கர்நாடகா,
பயூனியன்
பிரதேசங்களாகிய
அமிந்திவி,
மினிகாய்
மற்றும்
லக்ஷ்த்தீவுகள்
மற்றும்
பாண்டிச்சேரி
|
3. |
அலுவலர்,
கம்பெனிச்
சட்ட குழுமம்,
மேற்கு
வட்டார மன்றம்,
இரண்டாவது
மாடி, என்டிசி
இல்லம், 15,
நரோத்தம்
மொரர்ஜி சாலை,
பல்லார்ட்
எஸ்டேட்,
மும்பை-400038.
|
மஹாராஷ்டிரம்,
குஜராத்,
மத்தியப்பிரதேசம்,
கோவா, யூனியன்
பிரதேசங்களாகிய
தாத்நா
மற்றும் நகர்
ஹவேலி, தாமன்
மற்றும் டையு.
|
4. |
அலுவலர்,
கம்பெனிச்
சட்ட குழுமம்,
கிழக்கு
வட்டார மன்றம்,
9, பழைய
அஞ்சலத்தெரு,
ஆறாவது மாடி,
கோல்கத்தா-700 001.
|
மேற்கு
வங்காளம்,
ஒரிஸா, பீகார்,
அஸ்ஸாம்,
திரிபுரா,
மணிப்பூர்,
நாகாலாந்து,
மேகாலயா,
அருணாச்சலப்
பிரதேசம்,
மிஸோராம்,
யூனியன்
பிரதேசங்களாகிய
அந்தமான்
மற்றும்
நிகோபார்
தீவுகள்.
|
5. |
அலுவலர்,
கம்பெனிச்
சட்ட குழுமம்,
முதன்மை
அமர்வு மன்றம்,
சாஸ்த்ரி பவன்,
`A’ பகுதி,
ஐந்தாவது மாடி,
டாக்டர்
ராஜேந்திரப்பிரசாத்
சாலை, புது
தில்லி – 110 001.
|
இந்தியாவிலுள்ள
முதன்மை
அமர்வு மன்ற
விஷயங்கள்.
|
கே. 22
தவறுசெய்யும்
வங்கிசாராத
நிதி
நிறுவனங்களுக்கு
(NBFC)
அதிகாரபூர்வ
கடன்
தீர்ப்பாளர்கள்
நியமிக்கப்படுவதாகக்
கேள்விப்
படுகிறோம்.
அவர்களின்
பங்கு என்ன
மற்றும்
ஒருவர்
அவர்களை
எவ்வாறு
அணுகலாம் ?
ப. 22
நிறுவனத்தை
மூடக் கோரிய
மனுமீது,
நீதிமன்றம்
கம்பெனிக்கு,
தன்னிலை
விளக்கமளிக்க
தகுந்த
வாய்ப்புக்கள்
அளித்தபிறகு,
நீதிமன்றத்தால்,
அதிகாரபூர்வ
கடன்
தீர்ப்பாளரை
நியமிக்கின்றது.
அவர்
முடித்துவைத்தல்
சம்பந்தமான
அனைத்து
பணிகளையும்,
நீதிமன்றத்தால்,
அதற்கு
உறுதுணையாக
விதிக்கப்பட்ட
கடமைகளையும்
ஆற்றுவார்.
நீதிமன்றம்,
அதிகாரபூர்வ
கடன்
தீர்ப்பாளரையோ
அல்லது
இடைக்காலக்
கடன்
தீர்ப்பாளரையோ,
நியமிக்கும்
பொழுது, அவர்,
கம்பெனியின்
சொத்துக்களுக்குப்
பாதுகாவலராகவும்,
கம்பெனியின்
தினசரி
அலுவல்களை
நடத்துபவராகவும்
ஆகிறார். அவர்,
கம்பெனியின்
சொத்துக்கள்
பற்றிய
விபரங்களையும்
அதன் கடன்கள்,
கடன்
கொடுத்தவர்களின்
பெயர்கள்,
முகவரிகள்,
தொழில்கள்
பற்றிய
விபரங்களையும்,
கம்பெனிக்கு
வரவேண்டிய
கடன்கள்
பற்றிய
விபரங்களையும்,
மேலும்
உத்தரவிடப்பட்ட
மற்ற
விபரங்களையும்
உள்ளடக்கிய
தகுந்த
படிவத்திலுள்ள
அலுவல்
பட்டியலை
சமர்பிப்பார்.
கடன்
தீர்ப்பாளரால்
திட்டம்
வரையப்பட்டு
அது
நீதிமன்றத்தின்
ஒப்புதலுக்கு
வைக்கப்படும்.
நீதிமன்ற
ஒப்புதலுக்கு
ஏற்ப, கடன்
தீர்ப்பாளர்,
கம்பெனியின்
சொத்துக்களை
காசாக்கி
கடன்தாரர்களுக்கு
அளிப்பார்.
கடன்
தீர்ப்பாளர்,
நீதிமன்ற
ஆணைக்கேற்ப,
வைப்பாளர்கள்
மற்றும்
முதலீட்டாளர்களிடமிருந்து
அவர்களது
கேட்புமனுவைத்
தாக்கல்
செய்வது
சம்பந்தமான
விளம்பரத்தைச்
செய்திதாளகளில்
வெளியிடுவார்.
ஆகையால்,
கடன்தீர்ப்பாளரின்
அத்தகைய
அறிவிப்புக்களின்
படி, உரிய
காலத்திற்குள்,
கடன்தீர்ப்பாளரின்
முதிலீட்டாளர்களும்,
வைப்பாளர்களும்
கேட்பு
மனுவைத்
தாக்கல்
சேய்ய
வேண்டும்.
இந்திய
ரிசர்வ் வங்கி,
அதிகாரபூர்வ
கடன்
தீர்ப்பாளரின்
முகவரியைத்
தருவதன் மூலம்,
வைப்பாளர்களுக்கு
உதவி செயகிறது.
கே. 23.
வைப்பாளர்களின்
பிரச்சனைகளில்
கவனம்
செலுத்துவதில்
நுகர்வோர்
மன்றம் பெரும்
பங்கு
வகிக்கிறது.
ஒருவர், ஒரே
நேரத்தில்,
நுகர்வோர்
மன்றத்தையும்,
சிவில்
நீதிமன்றத்தையும்,
கம்பெனிச்
சட்ட
குழுமத்தையும்
அணுகலாமா ?.
ப. 23. ஆம்.
வைப்பாளர்
ஏதேனுமொரு
அல்லது எல்லா
குறைதீர்க்கும்
அமைப்புகளையும்,
அதாவது,
நுகர்வோர்
மன்றம்,
நீதிமன்றம்
அல்லது
கம்பெனிச்
சட்ட
குழுமத்தை
அணுகலாம்.
கே.24. NBFCக்களுக்கு
எதிரான
புகார்களை
விசாரிக்க
குறை
தீர்ப்பாநையம்
(ஆம்புட்ஸ்மேன்)
உள்ளதா ?.
ப. 24 இல்லை. NBFCக்களுக்கு
எதிரான
புகார்களை
விசாரிக்க
குறை
தீர்ப்பாணையம்
இல்லை.
கே. 25. NBFCக்களுக்குரிய
முன்னெச்சரிக்கையுடன்
கூடிய பல்வேறு
விதிமுறைகள்
யாவை ?
ப. 25. இந்திய
ரிசர்வ வங்கி,
முன்னெச்சரிக்கையுடன்
கூடிய
தரக்கட்டுப்பாடுகளை,
1998 வருடத்திய
வங்கிசாராத
நிதிநிறுவனங்களின்
முன்னெச்சரிக்கையுடன்
கூடிய (இந்திய
ரிசர்வ் வங்கி)
தரவழிக்காட்டுதல்கள்
மூலமாக
வெளியிட்டுள்ளது.
அவ்வழிகாட்டுதல்கள்,
வரவை
அங்கீகரிப்பதற்கான
முன்னேற்பாடுகள்,
சொத்துக்களை
வகைப்படுத்துதல்,
NBFCக்களுக்குரிய
தேவைகளுக்கான
முன்னேற்பாடுகள்,
விரிவுத்தரக்கட்டுப்பாடுகள்,
தணிக்கைக்குழு
அமைத்தல்,
இருப்புநிலைக்குறிப்பில்
வெளிப்படுத்துதல்,
போதிய முதல்
தேவைகள்,
நிலத்திலும்
கட்டிடங்களிலும்
முதலீடு
செய்வதில்
கட்டுபாடுகள்
மற்றும்
தெரிவிக்காத
பங்குகள்
முதலியவை
குறித்து
நடைமுறை
வழிக்காட்டுகின்றன.
கே. 26. NBFC
சம்பந்தப்பட்ட
‘சொந்த நிதி’
மற்ரும் ‘நிகரச்சொந்த
நிதி’ ஆகிய
சொற்றொடர்களை
விளக்குக.
ப. 26. கடந்த
இருப்பு
நிலைக்குறிப்பில்
வெளியிடப்பட்ட,
சேர்ந்த
நட்டத்தையும்,
ஒத்திபோட்ட
செலவுகளையும்,
உணராச்
சொத்துக்களையும்
செலுத்தப்பட்ட
மூலதளம்+ஒதுக்குத்
தொகையளவிற்கு
கழித்து வரும்
தொகை ‘சொந்த
நிதி’
எனப்படும்.
துணைக்கம்பெனிகளில்,
ஒரே
குழுமத்திலுள்ள
கம்பெனிகளில்,
மற்ற NBFCக்களுடைய
பங்குகளில்
செய்யப்பட்ட
முதலீடுகள்,
கடனீட்டுப்
பத்திரங்கள்,
பத்திரங்கள்
ஆகியவற்றின்
புத்தக
மதிப்பீடுகள்,
துணைக்கம்பெனிகள்
மற்றும் ஒரே
குழுமத்தைச்சேர்ந்த
கம்பெனிகளுக்கு
அளிக்கப்பட்ட
கடன்கள்
மற்றும்
முன்தொகைகள்,
அவற்றில்
வைத்துள்ள
வைப்புத்தொகைகள்
ஆகியவற்றின்
கூட்டுத்தொகை
கணக்கிடப்படுகிறது.
அவ்வாறு
கணக்கிடப்பட்டத்
தொகை, சொந்த
நிதியின்
பத்து
சதவிகிதத்தை
விட எவ்வளவு
அதிகம் உள்ளதோ,
அது, சொந்த
நிதியிலிருந்து
கழிக்கப்பட்டு
நிகரச்சொந்த
நிதி
அறியப்படுகிறது.
கே.27.
பொதுமக்களிடமிருந்து
வைப்புத்தொகைகளை
ஏற்றுக்கொள்ளும்/வைத்துக்கொள்ளும்
NBFCகளுடைய,
இந்திய
ரிசர்வ்
வங்கிக்கு
சமர்பிக்கவேண்டிய
அறிக்கைகள்
மற்றும்
தகவல்கள் யாவை
?
ப. 27.
பொதுமக்களிடமிருந்து
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளும்
NBFCக்கள்
இந்திய
ரிசர்வ்
வங்கிக்கு
சமர்ப்பிக்க
வேண்டியவை -
i)
பொதுக்குழுவினால்
அங்கீகரிக்கப்பட்ட
ஒவ்வொரு நிதி
ஆண்டிற்கான
தணிக்கை
செய்யப்பட்ட
இருப்பு
நிலைக்குறிப்பும்,
அவ்வருடத்திய
லாப நஷ்ட
கணக்கும்,
இயக்குனரவையின்
அறிக்கையின்
நகலும்,
தணிக்கையாளர்களால்
அளிக்கப்பட்ட
கணக்குக்
குறித்த
அறிக்கை
மற்றும்
குறிப்புகளின்
நகலும்;
ii)
வைப்புத்தொகைகளின்
சட்டபூர்வமான
ஆண்டறிக்கை –
NBS-1. ;
iii)
கோரப்படும்போது
வைப்புத்தொகைகளை
திருப்பித்தரக்கூடிய
நிலையில்
உள்ளதாக,
கம்பெனிகுறித்த,
தணிக்கையாளர்களால்
தரப்பட்ட
சான்றிதழ்;
iv)
ரொக்கச்சொத்துக்கள்
குறித்த
காலாண்டு
அறிக்கை ;
v)
முன்னெச்சரிக்கைத்
தரக்கட்டுபாடுகள்
குறித்த
அரையாண்டு
அறிக்கை ;
vi) ரூபாய்.20
கோடியோ அல்லது
அதற்கு மேலேயோ
வைப்புத்
தொகைகளை
வைத்துள்ள
கம்பெனிகள்
அல்லது
வைப்புத்
தொகைகளின்
அளவைக்
கருத்தில்
கொள்ளாது
ரூபாய் 100
கோடியோ அல்லது
அதற்கு மேலேயோ
சொத்துக்களை
உடைய
கம்பெனிகளால்
சமர்ப்பிக்கப்படவேண்டிய
ALM அரையாண்டு
அறிக்கை;
vii) ரூபாய் 50
கோடியோ அல்லது
அதற்கு மேலேயோ,
பொதுமக்களின்
வைப்புத்தொகையை
வைத்துள்ள
கம்பெனிகளின்
பங்குச்சந்தை
வெளிப்பாடுகள்
குறித்த மாத
அறிக்கை
மற்றும் ;
viii) மேலே (v)
வதில்
குறிக்கப்பெற்ற
முன்னெச்சரிக்கை
தரக்கட்டுப்பாடுகள்
குறித்த
அரையாண்டு
அறிக்கையுடன்,
ஆண்டிற்கொருமுறை
பெறப்பட்ட
கடன்
மதிப்பீட்டின்
நகல் (Credit Rating Copy).
கே. 28.
பொதுமக்களிடமிருந்து
வைப்புத்
தொகையை
ஏற்றுக்கொள்ளாத
NBFC, இந்திய
ரிசர்வ்
வங்கிக்கு
சமர்ப்பிக்க
வேண்டிய
ஆவணங்கள் யாவை
?
ப. 28. ரூபாய் 500
கோடியோ அல்லது
அதற்கு மேலேயோ,
சொத்து
மதிப்புள்ள
ஆனால் பொது
மக்களிடமிருந்து
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளாத
NBFC தமது
முக்கிய நிதி
அளவுகள்
குறித்த மாத
அறிக்கையை
சமர்பிக்க
வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளாத
அனைத்துக்
கம்பெனிகளும்,
அதுவரை
பொதுமக்களிடமிருந்து
வைப்புத்
தொகையை
ஏற்றுக்
கொள்ளாததற்கும்,
நடப்பு
ஆண்டில்,
மேலும்
ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்குமான
பொதுக்குழு
தீர்மானத்தை
நிறை வேற்ற
வேண்டும்.
மேலும், எல்லா
NBFCகளும் (விலக்கு
அளிக்கப்பட்டவை
தவிர) இந்திய
ரிசர்வ்
வங்கியிடம்
பதிவு செய்ய
பெற்றிருத்தலும்,
அவ்வாறான
பதிவிற்குரிய
தகுதி தக்க
வைத்துள்ளவையாகவும்
இருத்தல்
வேண்டும்.
இந்திய
ரிசர்வ் வங்கி,
எந்த ஒரு
கம்பெனியின்
கணக்குப்புத்தகங்களை
ஆய்வு
செய்யவும்,
மற்றெந்தவொரு,
வியாபார
நடவடிக்கைகள்
குறித்த
தகவலையும்
பெற அதிகாரம்
உடையது. இதன்
காரணமாக, NBFC, தனது
இயக்குனரவை
அமைப்பிலும்,
முகவரியிலும்,
இயக்குனர்களின்
முகவரியிலும்,
முதன்மை
அதிகாரிகளின்
பெயர்களிலும்
மற்றும்
அலுவலகப்
பதவிகளிலும்,
தணிக்கையாளர்களின்
பெயரிலும்
மற்றும்
முகவரியிலும்
நேர்ந்த
எந்தவொரு
மாற்றத்தையும்
சமர்பிக்க
வேண்டியவை
ஆகும்.
கே. 29.
வைப்பாளரிடமிருந்து
கோரிக்கை
பெறப்பட்டு
கம்பெனியால்,
திருப்பித்தரப்படாத,
முதிர்ச்சியடைந்த
பொதுவைப்புத்தொகைகளுக்கு,
NBFC வட்டியைத்
தர
கடமைப்பட்டுள்ளன.
தயவுசெய்து
இது குறித்து
விளக்கவும்.
ப. 29. இந்திய
ரிசர்வ்
வங்கியின்
உத்தரவுபடி,
முதிர்ச்சியடைந்த,
வைப்புத்தொகையை
திருப்பித்தருவதில்
தாமதம் செய்த
கம்பெனி,
வைப்பாளருக்கு
தவணை
கடந்தவட்டி
அளிக்கப்பட்ட
வேண்டும்.
மேலும்,
இவ்வட்டி,
கோரிக்கைப்பெறப்பட்ட
நாளோ, அல்லது
வைப்புத்தொகையின்
முதிர்ச்சி
நாளோ, எது
பின்னதோ,
அதிலிருந்து
தொகைத்தரப்பட்ட
நாள் வரையில்
தரப்பட
வேண்டும்,
வைப்பாளர்,
முதிர்ச்சி
நாளுக்குப்
பிறகு,
கோரிக்கையைத்
தந்திருந்தால்,
கம்பெனி
கோரிக்கை
நாளிலிருந்து
தொகைதரப்படும்
நாள்
வரையிலானக்
காலத்திற்கு
வட்டியைத்
தரக்
கடமைப்பட்டுள்ளது.
முதிர்ச்சி
நாளிலிருந்து
கோரிக்கைப்
பெற்ற நாள்
வரையிலான
காலத்திற்கு
வட்டி தருவது
கம்பெனியின்
விருப்பத்தின்
பாற்பட்டதாகும்.
கே. 30. NBFC
முதிர்ச்சி
அடையும் முன்
வைப்புத்தொகையை
திருப்பித்
தர முடியுமா?
NBFC
வைப்பாளரிடமிருந்து
பரஸ்பர
ஒப்பந்தத்தின்கீழ்
வைப்புக்தொகையை
ஏற்றுக்கொள்கிறது.
ஒரு வைப்பாளர்
முதிர்ச்சிக்குமுன்
தொகையை
திருப்பிதரவேண்டுகோள்
விடுத்தால்,
இந்திய
ரிசர்வ் வங்கி
அத்தகைய
நிகழ்ச்சிகள்
குறித்த 1998
வருடத்திய
வங்கிசாரா
நிதி
நிறுவனங்கள்
பொது
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளுதல்
(இந்திய
ரிசர்வ் வங்கி)
வழிகாட்டுதலில்
குறிப்பிட்டுள்ளது.
இதன்படி NBFCகள்
பொது
வைப்புத்தொகைக்கு
ஈடாக கடன்
அளிக்க
முடியாது
அல்லது பொது
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்றுமாத (பிணைக்காலம்)
காலத்திற்குள்
முன்முதிர்ச்சி
திருப்பிதருதல்
செய்ய
முடியாது.
ஆனால்
வைப்பாளர்
இறந்தால்
கம்பெனி
பிணைக்
காலத்திற்குள்ளும்
உயிருடனிருப்பவர்/நியமிக்கப்பட்டவர்/சட்டப்பூர்வ
வாரிசுதாரர்
உட்பிரிவுகளின்கீழ்
சரியான
பிரமாணங்களைத்
தந்து
விடுத்த
வேண்டுகோளின்படி
கம்பெனியின்
கடன்
மொத்தமாக
தீரும்
வகையில்,
வைப்புத்தொகையைத்
திருப்பித்தரலாம்.
பிணைக்காலத்திற்குப்
பிறகு
பிரச்சினை
ஏதுமில்லா NBFC
தன்னுடைய
விருப்பத்திற்கேற்ப
இந்திய
ரிசர்வ்
வங்கியினால்
பரிந்துரைக்கப்பட்ட
வட்டி
விகிதத்தில்
பொது
வைப்புத்தொகையைத்
திருப்பித்தரலாம்.
பிரச்சினையுள்ள
ஒரு NBFC
வைப்புத்தொகைகளை
முதிர்ச்சிக்கு
முன்
திருப்பித்
தருதலும் பொது
வைப்புத்தொகைகள்/
வைப்புத்தொகைகளுக்கு
ஈடாக கடன்
அளித்தலும்
தடை செய்யப்
பட்டுள்ளது.
ஆனால் இத்தடை
வைப்பாளர்
இறந்தாலோ,
அல்லது
பிணைக்காலமான
மூன்று
மாதங்களுக்குப்பிறகு
ரூ.10,000 வரையிலான
சிறு
வைப்புத்தொகைகளைத்
திருப்பித்தருவதிலோ
செல்லாது.
கே. 31.
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளும்
கம்பெனிகளின்
ரொக்கச்சொத்து
இருப்பு யாது ?
அச்சொத்துக்கள்
எங்கு வைக்கப்
பட்டிருக்கும்
?
வைப்பாளர்களுக்கு
அவற்றின் அது
உரிமை உண்டா?
1934
வருடத்திய
இந்திய
ரிசர்வ்
வங்கிச்
சட்டத்தின் 45-IBபிரிவின்படி
NBFCயால்
வைத்திருக்க
வேண்டிய
குறைந்தபட்ச
ரொக்கச்சொத்து,
கடந்த
இராண்டாம்
காலாண்டின்
கடைசி வேலை
நாளில்
நிலுவையிலுள்ள
பொது
வைப்புத்தொகைகளின்
15% ஆகும். இந்த 15
சதவிகிதத்தொகையை,
NBFCகள், பத்து
சதவிகிதத்திற்க்குக்
குறையாமல்,
அங்கீகரிக்கப்பட்ட
பத்திரங்களில்
முதலீடு
செய்ய
வேண்டும்
மற்றும்
மிகுதியுள்ள
ஐந்து
சதவிகிதத்தை,
ஏதேனுமொரு
பட்டியிலிடப்பட்ட
வணிக
வங்கியில்,
வில்லங்கமில்லாத,
காலக்கெடுவுள்ள,
வைப்புத்தொகையாக
முதலீடு
செய்யலாம். ஆக,
ரொக்கச்
சொத்துக்கள்,
அரசாங்கக்
கடன்
பத்திரங்கள்,
அரசாங்க
உத்தரவாதமுள்ள
பத்திரங்கள்
மற்றும் ஒரு
பட்டியலிடப்பட்ட
வணிக
வங்கியில்
காலக்கெடுவுள்ள
வைப்புத்தொகைகளாக
இருக்கும்.
அரசாங்க கடன்
பத்திரங்களில்
செய்த முதலீடு,
ஸ்தூலமில்லா
வடிவில்
பட்டியிலிடப்பட்ட
வணிக
வங்கியின்
துணைப்பொது
பேரேட்டுக்
கணக்கில்
அல்லது
இந்திய பங்கு
விற்பனைக்
கழகம் (வரையறுக்கப்பட்டது)
(SHCIL) கணக்கில்
வைக்கப்படும்.
அரசாங்க
உத்தரவாதமுள்ள
பத்திரங்களோ
இந்திய பங்கு
மற்றும்
பரிவர்த்தனை
வாரியத்திடம்
(SEBI) பதிவுசெய்து
கொண்ட
களஞ்சிய
பங்காளர்
மூலமாக,
ஸ்தூலமில்லா
வடிவில், வங்கி
அல்லது SHCILஇல்,
அல்லது
களஞ்சியங்களான
தேசீய
பங்குக்களஞ்சியம்
NDSL/இந்திய
மத்திய
களஞ்சியச்
சேவைகள் இல்
வைக்கப்படலாம்.
ஸ்தூலவடிவிலுள்ள
அரசாங்கக்
கடன்
பத்திரங்கள்
வங்கி அல்லது
SHCIL உடைய
பாதுகாப்பில்
வைக்கப்படலாம்.
NBFC,
ஆணையிடப்பட்ட
ரொக்கச்சொத்துப்
பங்குகளை,
ஸ்தூல வடிவில்,
தமது பதிவு
அலுவலகம்
இருக்கும்
இடத்திலுள்ள
மேலே சொன்ன
நிறுவனங்களில்
வைத்திருக்க
உத்தரவிடப்படுகிறது.
ஒரு NBFC, தனது
பதிவு
அலுவலகம்
இருக்குமிடமில்லாத
ஓர் இடத்தில்
பங்குகளை
வைத்திருக்க
விரும்பினால்,
இந்திய
ரிசர்வ்
வங்கியிடமிருந்து,
எழுத்து
பூர்வமான
அனுமதியைப்பெற்ற
பிறகு, அவ்வாறு
செய்யலாம்.
அங்கீகரிக்கப்பட்ட
பங்குகளான
ரொக்கச்
சொத்துக்கள்,
கட்டாயமாக,
ஸ்தூலமில்லா
வடிவிலேயே
வைத்திருக்கப்பட
வேண்டும்
என்பது
குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவாறு
வைக்கப்பட்ட
ரொக்கச்சொத்துக்கள்,
வைப்பாளர்களின்
கோரிக்கைக்கேற்ப,
தொகையைத்
திருப்பிதர,
உபயோகப்படுத்தப்பட
வேண்டும்.
ஆனால்,
வைப்புத்தொகைகள்,
பாதுகாப்பில்லா
தன்மையை
உடையவை
ஆகையினால்,
வைப்பாளர்கள்,
ரொக்கச்சொத்துக்களின்
மீது நேரடி
கோரிக்கை
உடையவர்கள்
அல்ல.
கே. 32.
பதிவிலிருந்து
விலக்களிக்கப்பட்ட,
NBFC கம்பெனிகள்
குறித்து, தயவு
செய்து
எமக்குக்
கூறுக.
ப. 32. வீட்டு
வசதி
நிதிநிறுவனங்கள்,
வியாபார
வங்கியக்
கம்பெனிகள்,
பங்குச்
சந்தைகள்,
பங்குத் தரகு
மற்றும்
இடைத்தரகு
வியாபாரத்தில்
ஈடுபட்டுள்ள
கம்பெனிகள்,
துணிகரமுதல்
நிதிக்கம்பெனிகள்,
நிதிநிறுவனங்கள்
(Fund Companies),
காப்பீட்டு
நிறுவனங்கள்
மற்றும்
சீட்டு நிதி
நிறுவனங்கள்
ஆகியவை, 1934
வருடத்திய
இந்திய
ரிசர்வ்
வங்கிச்சட்டத்தின்
45-IA
பிரிவின்கீழ்,
சில
நிபந்தனைகளுக்குட்பட்டு
பதிவு
செய்வதிலிருந்து
விலக்களிக்கப்பட்டுள்ளன.
வீட்டு வசதி
நிதி
நிறுவனங்கள்,
தேசீய
விட்டுவசதி
வங்கியினாலும்,
வியாபார
வங்கிய
நிறுவனங்கள்,
துணிகரமுதல்
நிதிநிறுவனங்கள்,
பங்குச்சந்தைகள்,
பங்குத்தரகர்கள்,
இடைத்தரகர்கள்
ஆகியோர்
இந்திய பங்கு
மற்றும்
பரிவர்த்தனை
குழுமத்தாலும்,
காப்பீட்டு
நிறுவனங்கள்,
காப்பீடு
ஒழுங்கு
மற்றும்
வளர்ச்சி
குழுமத்தாலும்
ஒழுங்குப்படுத்தப்படுகின்றன.
இதுபோலவே,
சீட்டு
நிறுவனங்கள்
அந்தந்த
மாநில
அரசாங்கங்களாலும்,
நிதிநிறுவனங்கள்,
இந்திய
அரசாங்கத்தின்,
நிறுவன அலுவல்
இலாகாவினாலும்
ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
கே.33. NBFCக்களுடையதைப்
போன்ற
செயல்பாடுகளைக்
கொண்ட சில
அமைப்புகள்
இருக்கின்றன.
அவர்கள்
வைப்புத்தொகையைப்
பெற
அனுமதிக்கப்பட்டுள்ளாரா?அவர்களை
யார்
ஒழுங்குபடுத்துவார்
?
ப. 33. எந்த ஒரு
தனி நபரோ,
ஸ்தாபனமோ,
தனிநபர்களின்
சங்கமோ,
உறவினர்களிடமிருந்து
கடன் பெறுவது,
அதன்/அவரின்
வியாபாரம்
முழுமையாகவோ,
பகுதியாகவோ,
கடன், முதலீடு,
தவணைத்திட்டம்,
குத்தகை
ஆகியவற்றை
தனது
வியாபாரத்தில்
உள்ளடக்கியது
அல்லது
முதன்மை
வியாபாரம்
ஏதாவது ஒரு
திட்டத்தின்
அல்லது
ஏற்பாட்டின்
அல்லது ஏதாவது
ஒரு வகையின்
கீழ்
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்வது
அல்லது கடன்
தருவது ஆகிய
வழிகளில்
தவிர,
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ள
முடியாது.
கே. 34.
எஞ்சியுள்ள
வங்கியல்லாத
நிறுவனம் (RNBC)
யாது ? அது
வங்கியசாரா
நிதி
நிறுவனத்திலிருந்து
எவ்வாறு
மாறுபடுகிறது
?
ப. 34. முதலீடு,
குத்தகை,
தவணைத்திட்டம்,
கடன் என்ற வகை
நிறுவனமல்லாத,
ஏதாவது ஒரு
திட்டத்தின்
அல்லது
ஏற்பாட்டின்
அல்லது ஏதாவது
ஒருவகையின்
கீழ்
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்வதை
தனது முதன்மை
வியாபாரமாகவுடைய,
ஒருவகை
வங்கிசாரா
நிதி நிறுவனம்
(NBFC), எஞ்சியுள்ள
வங்கிசாரா
நிதி நிறுவனம்
ஆகும். இந்த
நிறுவனங்கள்,
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
உத்தரவின் படி,
ரொக்கச்
சொத்துக்களைத்
தவிர
முதலீடுகளையும்
வைத்திருக்க
வேண்டும்.
இந்த வகை
நிறுவனங்களின்,
முதலீட்டை
பெறும்
வழிமுறைகள்,
முதலீட்டாளர்களின்
தொகையை
பயன்படுத்துவது
குறித்த
விதிமுறைகள்
ஆகிய
செயல்பாடுகள்,
NBFCக்களுடையதிலிருந்து
மாறுபடுகின்றன.
ஆனால்,
நிர்வாகத் தர
உத்தரவுகள்
இந்த
நிறுவனங்களுக்கும்
பொருந்தும்.
கே.35. RNBCக்கள்
உச்ச
வரம்பில்லாமல்
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளலாம்
என்பது தெரிய
வருகிறது.
அப்படியானால்,
அவற்றிடமுள்ள
வைப்புத்தொகை
எவ்வளவு
பாதுகாப்பானது
?
ப. 35. RNBCக்கள்,
உச்ச
வரம்பில்லாமல்
வைப்புத்
தொகையை
ஏற்றுக்கொள்ளலாம்
என்பது
உண்மையே. ஆனால்,
ஒவ்வொரு RNBCயும்
தன்னால்
ஏற்படுத்தப்பட்ட
வைப்புத்தொகை
மற்றும்
செய்யப்பட்ட
முதலீடுகளின்
தொகை,
வைப்பாளர்களுக்குத்தர
வேண்டிய
மொத்த கடன்
தொகைகளை விட
குறைவாய்
இல்லாததை,
நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வைப்பாளர்களின்
நலனை
பாதுகாக்க,
இந்த
நிறுவனங்கள்,
பாதுகாப்பானவையும்,
ரொக்கத்தன்மையுள்ளவையுமான
கடன்
பத்திரங்களை
உள்ளடக்கிய,
மத்திய / மாநில
அரசாங்கக்கடன்
பத்திரங்கள்,
பட்டியலிடப்பட்ட
வணிக
வங்கியில் (SCB)
நிலை
வைப்புத்தொகைகள்,
SCB/FDகளுடைய
வைப்புத்தொகைச்
சான்றிதழ்கள்,
பரஸ்பர நிதி
நிறுவனங்களின்
பங்குகள்
ஆகியவற்றில்
முதலீடு
செய்ய
வேண்டும்.
கே. 36. RNBC
வைப்புத்தொகை
தவணைகள்
முறையாக
செலுத்தப்படாவிட்டாலோ
அல்லது
கைவிடப்பட்டாலோ,
வைப்புத்தொகையைப்
பறிமுதல்
செய்யலாமா ?
ப. 36.
முடியாது.
எந்த ஒரு
எஞ்சியுள்ள
வங்கிசாரா
நிறுவனமும்,
வைப்பாளரின்
எந்த ஒரு
வைப்புத்தொகையையும்,
வட்டி,
பிரிமியம்,
போனஸ் அல்லது
எந்த
நன்மைகளையும்
பறிமுதல்
செய்ய
முடியாது.
கே.37. RNBCக்களால்
தரப்படவேண்டிய
வைப்புத்
தொகைக்கான
வட்டி விகிதம்
மற்றும்
வைப்புத்தொகைகளின்
முதிர்ச்சிக்காலம்
குறித்து,
தயவுசெய்து
எங்களுக்கு
கூறுக.
ப. 37. வட்டி,
பிரிமியம்,
போனஸ் அல்லது
மற்ற நன்மை
என்று எந்த
பெயரில்
அழைக்கப்பட்டாலும்,
ஒரு
எஞ்சியுள்ள
வங்கிசாரா
நிறுவனத்தால்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட
வைப்புத்
தொகைகளுக்குத்
தரவேண்டிய
தொகை,
மொத்தமாகவோ,
மாதம் தோறுமோ,
நீண்ட
இடைவெளிகளிலோ
செலுத்தப்பட்ட
தொகைகளுக்கு,
ஐந்து
சதவிகிதத்தில்
(ஆண்டுதோறும்
கூட்டுச்சேர்க்கவேண்டிய)
கணக்கிடப்பட்ட
தொகையை விட
குறைவாயிருக்கக்
கூடாது, மேலும்,
தினம்தோறும்
செலுத்தப்பட்ட
தொகைகளுக்கு,
3.5
சதவிகிதத்தில்
(ஆண்டுதோறும்
கூட்டுச்
சேர்க்கவேண்டிய)
கணக்கிடப்படவேண்டும்.
ஒரு RNBC தொகை
செலுத்தப்பட்ட
நாளிலிருந்து,
குறைந்தபட்சம்
12
மாதங்களுக்கும்
அதிக பட்சம் 84
மாதங்களுக்கும்
வைப்புத்தொகையை
ஏற்றுக்கொள்ளலாம்.
அவை, காலக்கெடு
ஏதுமில்லாமல்
கேட்டவுடன்
கொடுபட
வேண்டிய வரைவு
வைப்புகளை
ஏற்றுக்கொள்ள
முடியாது.
|