Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 09/02/2004

சேமிப்பு பத்திரங்கள்

சேமிப்பு பத்திரங்கள்

 

1. 2003ஆம் வருடத்திய (வரிவிலக்குள்ள) 6.5% சேமிப்பு பத்திரங்களுக்கும் 2003ஆம் வருடத்திய (வரிவிதிப்புள்ள) 8% சேமிப்பு பத்திரங்களுக்கும் இடையே முக்கிய அம்சங்களில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?

முக்கிய அம்சங்களைக் குறித்த ஒப்பீட்டு பட்டி

முக்கிய அம்சம்

2003ஆம் வருடத்திய 6.5% (வரி விலக்குள்ள) சேமிப்பு பத்திரங்கள்

2003ஆம் வருடத்திய 8% (வரி விதிப்புள்ள) சேமிப்பு பத்திரங்கள்

விண்ணப்பதாரர்களின் வகை

தனிநபர், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம், குடியிருப்போர் அல்லாத இந்தியர்கள் நீங்கலாக

தனிநபர், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம், குடியிருப்போர் அல்லாத இந்தியர்கள் நீங்கலாக தொண்டு / கருணை நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள்

காலம்

ஐந்து வருடங்கள்

ஆறு வருடங்கள்

வட்டி சதவிகிதம்

ஜனவரி ஒன்றாம் தேதி / ஜூலை ஒன்றாம் தேதி அரையாண்டிற்கொருமுறை வழங்கும் 6.5% வருட வட்டி

பிப்ரவரி ஒன்றாம் தேதி / ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அரையாண்டிற்கொருமுறை வழங்கும் 8% வருட வட்டி

முதிர்வுக் காலத்திற்கு முன்னரே பணம் பெறுதல்

உண்டு – மூன்று வருட பிணைகாலத்திற்குப்பின் பணம் பெறலாம்

இல்லை.

விற்பனை செய்யும் அலுவலகங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அதன் முகவர்கள்

முகவர் வங்கிகள் மட்டும், இந்திய பங்குக் கழகம் லிமிடெட்

வரிச் சலுகை

வரி விலக்களிக்கப் பெற்றது

வரி விதிப்புள்ளது. ஆனால் வரி வழங்கும்போது கழிக்கக் கூடியதல்ல

பத்திர வடிவம்

(I) இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் இருப்புச் சான்றிதழ்கள்

(II) இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அதன் முகவர்களிடமுள்ள பத்திரபேரேட்டு கணக்கு

முகவர்களிடமுள்ள பத்திரபேரேட்டுக் கணக்கு

முதலீடடிற்கான உச்சவரம்பு

முதலீட்டிற்கான உச்ச வரம்பு இல்லை

முதலீட்டிற்கான உச்சவரம்பு இல்லை

வெளியிடும் விலை

அசல் விலைக்கு

அசல்விலைக்கு

வகைகள்

முதிர்வு காலத்தில் அசலோடு சேர்த்து வழங்கல் குறிப்பிட்ட காலவரையில் வட்டி மட்டும் வழங்கல்

முதிர்வு காலத்தில் அசலோடு சேர்த்து வழங்கல் குறிப்பிட்ட காலவரையில் வட்டி மட்டும் வழங்கல்

கடன் பெற வாய்ப்பு

இல்லை. இப்பத்திரங்கள் வங்கியிடமிருந்து எந்த ஒரு கடனையும் பெற பிணயமாக தரக் கூடியவை அல்ல

இல்லை. இப்பத்திரங்கள் வங்கியிடமிருந்து எந்த ஒரு கடனையும் பெற பிணயமாக தரக் கூடியவை அல்ல

வாரிசுதாரர் நியமன வசதி

தனி நபருக்கு உண்டு. குடியிருப்போர் அல்லாத இந்தியரையும் நியமிக்கலாம்

தனி நபருக்கு உண்டு. குடியிருப்போர் அல்லாத இந்தியரையும் நியமிக்கலாம்

வட்டியை அளிக்கும் விதம்

(i) அரையாண்டிற்கொரு முறை வட்டிவழங்காணை அல்லது மின்னணுப் பரிவர்த்தனை மூலமாக

(ii) முதிர்வின்போது முதலுடன் சேர்த்து வட்டியும் அளிக்கப்படும்

(i) அரையாண்டிற்கொரு முறை வட்டிவழங்காணை அல்லது மின்னணுப் பரிவர்த்தனை மூலமாக

(ii) முதிர்வின்போது முதலுடன் சேர்த்து வட்டியும் அளிக்கப்படும்

தரகுக் கூலி

முகவர் வங்கிகளிலுள்ள பத்திர பேரேட்டுக் கணக்குகளில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் வீதம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிலுள்ள பத்திர பேரேட்டுக் கணக்குகளில் நூறு ரூபாய்க்கு 50 பைசா வீதம்.

இருப்புப் பத்திரங்களுக்குத் தரகுக் கூலி இல்லை

முகவர் வங்கிகளிலுள்ள பத்திர பேரேட்டுக் கணக்குகளில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் வீதம்.

பிறருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய தன்மை

வைத்திருப்பவர் இறந்தால் வாரிசுதாரராக நியமிக்கப்பட்டவருக்கும், 1956 இந்திய கம்பெனிச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் விவரிக்கப்படுள்ள உறவினருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பு என்னும் வகையைத் தவிர பிறருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய தன்மை உள்ளவை அல்ல

வைத்திருப்பவர் இறந்தால் வாரிசுதாரராக நியமிக்கப்பட்டவருக்குத் தவிர மற்ற வகைகளில் மாற்றித் தரக் கூடிய தன்மை உள்ளவை அல்ல

முதிர்ச்சிக்குப் பிறகு வட்டி

அளிக்க இயலாது

அளிக்க இயலாது

வர்த்தகத் தன்மை

வர்த்தகத் தன்மை கிடையாது

வர்த்தகத் தன்மை கிடையாது

சேமிப்புப் பத்திரங்களின் வரி தொடர்புடைய விபரங்கள்

1. 2003ஆம் வருடத்திய 6.5% சேமிப்பு பத்திரங்கள் (வரி விலக்குள்ளவை) மற்றும் 2003ஆம் வருடத்திய 8% சேமிப்புப (வரி விதிப்புள்ளவை) பத்திரங்களின் வட்டி வழங்கும் போதே கழிக்கக் கூடிய (TDS) வரி குறித்த கொள்கை யாது?

(அ) 2003ஆம் வருடத்திய 6.5% சேமிப்பு பத்திரங்களுக்கு அளிக்கப்படும் வட்டி 1961ஆம் வருடத்திய வருமானவரிச் சட்டத்தின் கீழ் வருமானவரி விலக்குள்ளவை ஆகும்.

(ஆ) சேமிப்புப் பத்திரம் வைத்திருப்பவரால் 2003ஆம் வருடத்திய 8% சேமிப்பு பத்திரங்களின் மூலமாக கிடைத்த வட்டி வருமானத்திற்கு 1961ஆம் வருடத்திய வருமானவரிச் சட்டப்படி வரி செலுத்தப்படவேண்டும்.

ஆனால், வரி அழங்கப்படும்போது கழிக்கப்படமாட்டாது. 2004 வருடம் ஜனவரி மாதம் 13ஆம் தேதியிட்ட அறிவிக்கை எண்.F4(10)W&M/2003 மூலமாக இந்திய அரசாங்கத்தாரால் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2. இப்பத்திரங்கள் மூலமாகப் பெற்ற வட்டிக்கு எவ்வகை வரிச்சலுகைகள் உள்ளன?

வருமான வரிச்சட்டத்தின் 80L பிரிவின்படி, அரசாங்கப் பத்திரங்களின் மூலமாகக் கிடைத்த வட்டிக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் 15000 வரை வரிச்சலுகை உண்டு. இப்பத்திரங்கள் 1957 ஆம் வருடத்திய சொத்து சட்டத்தின் கீழ் சொத்து வரி விலக்குள்ளவையும். ஆகும்.

 

வாரிசுதாரர் நியமனம் மற்றும் கூட்டமாக

சேமிப்புப் பத்திரங்களை வைத்திருத்தல்

1. சேமிப்பு பத்திரங்கள் வாரிசுதாரரை நியமிக்கும் வாய்ப்புள்ளவையா? குடியிருப்போர் அல்லாத இந்தியரை வாரிசுதாரராக நியமிக்க முடியுமா?

ஆம். வாரிசுதாரராக நியமிக்கும் வாய்ப்பு உள்ளது. பத்திரத்தை வைத்திருக்கும் ஒரு தனி நபர் அல்லது பத்திரத்தை வைத்திருப்பவர்களில் உயிருடன் உள்ளவர், தனிநபரென்ற உரிமையில், ஒருவரையோ, பலரையோ, அவருடைய மரணத்திச்குப்பின், பத்திரத்திற்கும் அதனால் பெறும் தொகைக்கும் உரிமை உள்ளவராக நியமிக்கலாம்.

குடியிருப்போர் அல்லாத இந்தியர்கள், இவ்வகைப் பத்திரங்களில் முதலீடு செய்யத் தடை செய்யப்பட்ட போதிலும், பத்திரத்தை வைத்திருக்கும் தனி நபர் குடியிருப்போர் அல்லாத இந்தியரை இப்பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வட்டிக்கும், முதிர்வுக் காலத்தின்போது கிடைக்கும் தொகைக்கும் வாரிசுதாரராக நியமிக்கலாம். குடியிருப்போர் அல்லாத இந்தியருக்கு அனுப்படும் பணம் சம்பந்தப்பட்ட, அவ்வவ்பொழுது அறிவிக்கப்படும் வழக்கமான விதிகள் இத்தகைய நிகழ்ச்சிகளையும் கட்டுப்பதுத்தும்.

2. கூட்டாக சேமிப்பு பத்திரங்களை வைத்திருத்தல் அனுமதிக்கப்பட்டுள்ளதா? இப்படி கூட்டாக சேமிப்பு பத்திரங்களை வைத்திருப்பவர்கள் மற்றவரை வாரிசுதாரராக நியமிக்க முடியுமா?

கூட்டாக சேமிப்புப் பத்திரத்தை வைத்திருத்தல், “ஒருவருக்கோ அல்லது உரிருடனுள்ள ஒருவருக்கோ” என்றமுறையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கூட்டமாக சேமிப்பு பத்திரத்தை வைத்திருத்தலில், வாரிசுதாரரை நியமிக்கும் உரிமை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

3. வாரிசுதாரர் நியமனமில்லாத பட்சத்தில் பத்திரத்தை வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பின் சட்டபூர்வமான வாரிசு எவ்விதம் வட்டியையோ அல்லது முதிர்வுத் தொகையையோ பெறுவார்?

வாரிசுதாரர் நியமனமில்லாத பட்சத்தில், பத்திரத்தை வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பின், சட்டபூர்வமான வாரிசு மரபுரிமைச் சான்றிதழைச் சமர்பிக்க வேண்டும்.

 

சேமிப்பு பத்திரங்களை அளிக்கும் முகவர் வங்கிகள்

1. இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை விற்கிறதா?

2003ஆம் வருடத்திய 6.5% சேமிப்பு பத்திரங்கள் திட்டத்தை மட்டும், இந்திய ரிசர்வ் வங்கி தனது பொதுக்கடன் அலுவலகத்தின் மூலம் இயக்குகிறது. முகவர் வங்கிகள் 6.5% மற்றும் 8% சேமிப்பு பத்திர திட்டங்களை இயக்குகின்றன.

2. சேமிப்பு பத்திரங்களை விற்கும் முகவர்கள் யார்?

6.5% மற்றும் 8% சேமிப்பு பத்திர திட்டங்களை இயக்கும் முகவர்கள்:

(அ) பாரத ஸ்டேட் வங்கி(ஆ) பாரத ஸ்டேட் வங்கியின் ஏழு இணை வங்கிகளான

திருவனந்தபுர ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஹைதராப்பத் ஸ்டேட் வங்கி, செளராஷ்டிரா ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி. இந்தோர் ஸ்டேட் வங்கி

(இ) நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளான சென்ட்ரல் வங்கி, மகாராஷ்டிர வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, அலஹாபாத் வங்கி, யுனைடெட் இந்திய வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் இந்தியா

(ஈ) நான்கு தனியார்துறை வங்கிகளான

ஐசிஐசிஐ வங்கி லி., எச்டிஎப்சி வங்கி லி., ஐடிபிஐ வங்கி லி., யுடிஐ வங்கி லி.

(உ) இந்தியப் பங்கு கழகம் லிமிடெட்

 

முதிர்ச்சிக்கு முன் பணம் பெறும் வசதி

1. இப்பத்திரங்களில் முதிர்ச்சிக்கு முன், பணம் பெறும் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளதா?

2003ஆம் வருடத்திய 6.5% (வரி விலக்குள்ள) சேமிப்பு பத்திரங்களின் பிணைக்காலமான மூன்று வருடங்களுக்கு பின் முதிர்ச்சிக்குமுன் பணப் பெறும் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. பத்திரதாரர் ஆறாவது அரையாண்டிற்குப் பிறகு, எப்பொழுதாகிலும் சமர்ப்பிக்கலாம். ஆனால் மீட்புத் தொகை அடுத்து வரும் வட்டி தரும் நாளில் தரப்படும். ஆகையால், முதிர்ச்சிக்கு முன் பணம் தரும் தேதி ஜூலை ஒன்றாகவோ அல்லது ஜனவரி ஒன்றாகவோ இருக்கும். மேலும், குறிப்பிட்ட காலவரையரையில் வட்டி வழங்கும் அல்லது முதிர்வின் போது முதலோடு வழங்கப்படும் அனைத்தும் ஆறுமாதங்களுக்கு தரக்கூடிய வட்டியில் 50% பிடித்தம் செய்யப்படும். 2003ஆம் வருடத்திய 8% (வரி விதிப்புள்ள) சேமிப்பு பத்திரங்களுக்கு முதிர்ச்சிக்கு முன் பிப்ரவரி 9, 2004.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்