Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 25/11/2008

நவம்பர் 25, 2008 - வைப்புக் காப்பீடு

வைப்புக் காப்பீடு

வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்திற்கான வழிகாட்டி முறைமையின் சுருக்கம் மற்றும் கேள்வி பதில்  

  1. எந்தெந்த வங்கிகள் வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தால் (Deposit Insurance and Credit Guarantee Corporation –DICGC) காப்பீடு செய்யப்பட்டுள்ளன?

வணிக வங்கிகள்:  இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், வட்டார வங்கிகள் மற்றும் பிராந்திய கிராம வங்கிகள் ஆகியவை DICGCயால் காப்பீடு செய்யப் பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகள்: மாநிலங்களிலும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும் செயல்படும் அனைத்து மாநில, மத்திய மற்றும் முதன்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், வட்டார கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தைத் திருத்தி மாநில, மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கட்டளையிட்டு ரிசர்வ் வங்கியின் முன்அனுமதியின்றி ஒரு கூட்டுறவு வங்கியை மூடவோ, ஒன்றுசேர்க்கவோ அல்லது மறுசீரமைக்கவோ கூடாது என்று ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது வைப்புக்காப்பீடு முறைமையின்கீழ் வருகிறது.  தற்பொழுது மேகாலயா மாநிலம் மற்றும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளான சண்டிகர், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவைகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் DICGCயின் வைப்புக் காப்பீடுத்திட்டம் அமலில் உள்ளது.

தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள் DICGCயால் காப்பீடு செய்யப்   படவில்லை.

  1. DICGC எதை காப்பீடு செய்கிறது?

ஒரு வங்கி தோல்வியுறும்போது DICGC இந்தியாவில் அளிக்கக்கூடிய வங்கி வைப்புகளைப் பாதுகாக்கிறது.

சேமிப்பு, நிரந்தர, நடப்பும் தொடர் மற்றும் அனைத்து வைப்புகளையும் DICGC காப்பீடு செய்கிறது.

    1. அந்நிய அரசுகளின் வைப்புகள்
    2. மத்திய/மாநில அரசுகளின் வைப்புகள்
    3. வங்கிகளுக்கிடையேயான வைப்புகள்
    4. மாநில நிலவள வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் வைப்புகள்
    5. இந்தியாவிற்கு வெளியே பெறப்பட்ட வைப்புகளுக்காக பெறப்பட்ட தொகை
    6. ரிசர்வ் வங்கியின் முன்அனுமதியோடு கழகத்தால் குறிப்பாக விலக்கு அளிக்கப்பட்ட தொகை
  1. DICGC காப்பீடு செய்யும் அதிகபட்ச தொகை என்ன?

ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு வைப்புதாரரின் வைப்புகளில் அதிகபட்சமாக ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) வரை காப்பீடு செய்யப்படுகிறது. இது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்ந்தது.  ஒரு வங்கியின் உரிமம் நீக்குவது/கலைப்பு தேதியில் அல்லது ஒன்று சேர்ப்பது/இணைப்பு/மறுசீரமைப்பு ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரும் தேதிகளில் அந்த வங்கியின் வைப்புதாரர் எந்த உரிமை மற்றும் தகுதியோடு தனது வைப்பின் அசல் மற்றும் வட்டியை வைத்திருந்தாரோ அதே உரிமை மற்றும் தகுதியோடு அவர் காப்பீடு செய்யப்படுவார்.

  1. எனது வங்கி DICGCயால் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதனை எப்படி தெரிந்து கொள்வது?

DICGC, வங்கிகளை காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளாக பதிவு செய்யும்பொழுது அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளுக்கும் அதில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கும் அளிக்கிறது.  இவ்விஷயத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் வைப்புதாரர் கிளை அலுவலரிடம் பிரத்தியேக விசாரணை மேற்கொள்ளலாம்.

  1. ஒரு வங்கியின் பல்வேறு கிளைகளிலும் காப்பீடு செய்யப்பட்ட வைப்புகளை வைத்துக்கொள்வதில் ஒரு நபருக்கு ஏதேனும் உச்ச வரம்பு இருக்கிறதா?

ஒரு வங்கியின் பல்வேறு கிளைகளில் வைக்கப்பட்ட வைப்புகள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒன்றிணைக்கப்பட்டு அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை அளிக்கப்படும்.

  1. DICGC கணக்கில் உள்ள அசலை மட்டும் காப்பீடு செய்கிறதா அல்லது அசல் மற்றும் சேர்ந்த வட்டி இரண்டையும் சேர்த்து காப்பீடு செய்கிறதா?

DICGC அசல் மற்றும் வட்டியை அதிகபட்ச உச்ச வரம்பான ரூபாய் ஒரு லட்சம் வரை காப்பீடு செய்கிறது.  உதாரணத்திற்கு தனிப்பட்ட ஒருவர் ரூ.95,000/- அசலாகவும் சேர்ந்த வட்டி ரூ.4000 ஆகவும் இருந்தால், DICGCயால் காப்பீடு செய்யப்படும் மொத்த தொகை ரூ.99000/- எனினும் அந்த கணக்கில் அசல் தொகை ரூபாய் ஒரு லட்சமாக இருந்தால் சேர்ந்த வட்டி காப்பீடு செய்யமுடியாது.  அது வட்டி என்பதால் அல்ல ஆனால் காப்பீட்டு வரம்புக்குமேல் உள்ள தொகை என்பதால் ஆகும்.

  1. அதே வங்கியின் பல்வேறு கணக்குகளில் நிதிகளை வைப்பாக வைத்திருப்பது அதிகரிக்கப்பட்டால் வைப்புக்காப்பீடு அதிகரிக்கப்படுமா?

அதே வங்கியில் ஒரே வகையான உரிமையின்கீழ் உள்ள அனைத்து நிதிகளையும், ஒன்றிணைப்பது வைப்பு காப்பீட்டிற்குமுன் தீர்மானிக்கப் படுகிறது.  பல்வேறு விதமான உரிமையாளர்களின் நிதிகள் இருக்கும் பட்சத்தில் அல்லது பல்வேறு வங்கிகளில் வைப்புகளாக இருந்தாலோ அவை தனித்தனியாக காப்பீடு செய்யப்படும்.

  1. தனி உரிமையாளர் கணக்கு என்றால் என்ன?

ஒரு தனி (அல்லது தனிப்பட்ட) உரிமையாளர் கணக்கு என்பது தனிப்பட்ட நபருக்குச் சொந்தமான கணக்கு ஆகும்.  உரிமையாளரின் பெயரில் உள்ளவை, உரிமையளர்களுக்காக அவர்களது முகவர்களால் ஏற்படுத்தப் பட்டவை, நியமிக்கப்பட்டவர்கள், பொறுப்பாளர்கள், பாதுகாப்பாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் மற்றும் தனிப்பட்ட உரிமையாளரின்கீழ் ஏற்படுத்தப்படும் தொழில்

  1. பல்வேறு வங்கிகளில் உள்ள வைப்புகள் தனித்தனியாக காப்பீடு செய்யப் பட்டுள்ளதா?

ஆமாம்.  ஒரு வங்கிக்கு மேல் வைப்புகள் இருந்தால், வைப்பு காப்பீடு பரப்பெல்லை வரம்பு தனித்தனியாக ஒவ்வொரு வங்கியிலும் உள்ள வைப்பிற்கு பொருந்துகிறது.

  1. இரண்டு வெவ்வேறு வங்கிகளில் என்னுடைய பணத்தை டெபாசிட் செய்திருந்து அந்த இரண்டு வங்கிகளும் ஒரே நாளில் மூடப்பட்டால் என்னுடைய டெபாசிட் பணம் ஒன்றாகச் சேர்க்கப்பட்டா அல்லது தனித்தனியாக காப்பீடு செய்யப்படுமா?

மூடும் தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல், ஒவ்வொரு வங்கியிலும் உள்ள உங்களது பணம் தனித்தனியாக காப்பீடு செய்யப்படும்.

  1. ஒரே தகுதியில் ஒரே உரிமை அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் வைப்புகளுக்கும் மற்றும் வைப்புகள் வெவ்வேறு தகுதியில் வெவ்வேறு உரிமை அடிப்படையில் உள்ளவைகளுக்கும் பொருள் என்ன?

வங்கியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளில் ஒருவர் டெபாசிட் கணக்கு தொடங்கும்பொழுது, உதாரணமாக திரு. S.K. பண்டிட் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட சேமிப்பு/நடப்பு கணக்கு மற்றும் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட நிரந்தர/தொடர் டெபாசிட் கணக்குகளை துவக்குகிறார்.  இவை அனைத்தும் ஒரே தகுதியில் ஒரே உரிமை அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் கணக்குகள்.  எனவே இக்கணக்குகள் அனைத்திலும் உள்ள நிலுவைகள் ஒன்றிணைக்கப்பட்டு அதிகபட்ச காப்பீடு ரூ; ஒரு லட்சமாக உள்ளது.

ஒருவேளை  திரு. S.K. பண்டிட் அவர்கள் வெவ்வேறு டெபாசிட் கணக்குகளை ஒரு நிறுவனத்தின் கூட்டாண்மையாளராக அல்லது வயதுக்கு வராதவரின் காப்பாளராக அல்லது ஒரு நிறுவனத்தின் இயக்குநராக அல்லது தனது மனைவியுடன் இணைந்த கணக்காக இப்படி வெவ்வேறு தகுதியில் இயங்கும்போது, அத்தகைய டெபாசிட் கணக்குகள் வெவ்வேறாகவும் வெவ்வேறு தகுதி மற்றும் உரிமை அடிப்படையிலும் உள்ளன. அதனால் ஒவ்வொரு டெபாசிட் கணக்கிற்கும் தனித்தனியாக ரூபாய் ஒரு லட்சம் தனித்தனியாக காப்பீடு உள்ளது.

மேலும் தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால் ஒருவர் தனது சொந்த நிறுவனத்தின் பெயரில் கொண்டுள்ள வைப்புகளும் மற்றும் தனது தனிப்பட்ட தகுதியில் கொண்டுள்ள வைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டு அதிக பட்சமாக காப்பீட்டுத்தொகை ஒரு லட்சமாக இருக்கும்.

உதாரணமாக

வெவ்வேறு தகுதிகளில் வைக்கப்பட்ட வைப்புகள்

 

சேமிப்பு கணக்கு

நடப்பு கணக்கு

நிரந்தர வைப்பு கணக்கு

மொத்த வைப்புகள்

காப்பீடு செய்யப்பட்ட வைப்புகள்

திரு. S.K. பண்டிட் (தனிப்பட்டவர்)

17,200

22,000

80,000

1,19,200

1,00,000

திரு. S.K. பண்டிட் (ஏபிசி & கோவில் கூட்டாளியாக)

 

75,000

50,000

1,25,000

1,00,000

திரு. S.K. பண்டிட் (மாஸ்டர் அஜித்திற்கு காப்பாளராக)

7,800

 

80,000

87,000

87,000

திரு. S.K. பண்டிட் (ஜே.கே. உத்யோக் லிட்ன் இயக்குநராக)

 

2,30,000

45,000

2,75,000

1,00,000

திரு. S.K. பண்டிட் (திருமதி. S.K. பண்டிட்டுடன் இணைந்த கணக்கு)

7,500

1,50,000

50,000

2,07,500

1,00,000

இணைந்த கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் வைப்புகள் (2009 ஏப்ரல் 26 லிருந்து திருத்தியமைக்கப்பட்டது)

ஒன்றுக்கு மேற்பட்ட வைப்புக்கணக்குகள் (சேமிப்பு, நடப்பு, தொடர் அல்லது நிரந்தர வைப்பு) தனிப்பட்டவர்கள் இணைந்து ஒரு வங்கியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளில் வைத்திருப்பது உதாரணமாக A,B &C என்ற தனிப்பட்ட மூன்றுபேர் ஒன்றிற்கும் மேற்பட்ட வைப்புக்கணக்குகளை அதே வரிசையில், அதே தகுதியில், அதே உரிமையில் இருக்கும்போது அந்த கணக்குகளில் உள்ள இருப்புத்தொகைகள் ஒன்றிணைக்கப்பட்டு காப்பீட்டுத் தொகையான ரூபாய் ஒரு லட்சம் நிர்ணயிக்கப்படும்.

எனினும் தனிப்பட்டவர்கள் இணைந்த கணக்குகளைத் தொடங்கி அவர்களது பெயர்கள் அதே வரிசையில் இல்லாமல் உதாரணமாக  A, B  மற்றும் C; C, B  மற்றும் A; C,A மற்றும் B  A, C மற்றும் B ; அல்லது தனித்தனிக் குழுக்களாக உதாரணமாக A,B மற்றும் C&A மற்றும் B&D மற்றவை, இப்படி வைப்புகள் இணைந்த கணக்குகளில் வெவ்வேறு தகுதிகள் மற்றும் வெவ்வேறு உரிமைகள் அடிப்படையில் இருந்தால், அதற்கேற்றவாறு காப்பீடு தனித்தனியாக ஒவ்வொரு லட்சமாக நிர்ணயிக்கப்படும்.

உதாரணங்கள்

இணைந்த கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புகள்

கணக்கு (i) சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு

முதல் கணக்குதாரர் – ‘A’ இரண்டாம் கணக்குதாரர் –‘B’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

கணக்கு (ii)

முதல் கணக்குதாரர் – ‘A’
இரண்டாம் கணக்குதாரர் – ‘C’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

கணக்கு (iii)

முதல் கணக்குதாரர் – ‘B’
இரண்டாம் கணக்குதாரர் – ‘A’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

கணக்கு (iv) வங்கியின் கிளை  X

முதல் கணக்குதாரர் – ‘A’
இரண்டாம் கணக்குதாரர் –‘B’
மூன்றாம் கணக்குதாரர் – ‘C’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

கணக்கு  (v)

முதல் கணக்குதாரர் – ‘B’
இரண்டாம் கணக்குதாரர் –‘C’
மூன்றாம் கணக்குதாரர் – ‘A’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

கணக்கு  (vi) தொடர் அல்லது நிரந்தர வைப்பு

முதல் கணக்குதாரர் – ‘A’
இரண்டாம் கணக்குதாரர் –‘B’

இந்த கணக்கு (i)ல் உள்ள கணக்குடன் சேர்க்கப்படும்

வங்கியின் Yகிளையில் உள்ள கணக்கு (vii)

முதல் கணக்குதாரர் – ‘A’
இரண்டாம் கணக்குதாரர் –‘B’
மூன்றாம் கணக்குதாரர் – ‘C’

இந்த கணக்கு (iv)ல் உள்ள கணக்குடன் சேர்க்கப்படும்

கணக்கு (viii)

முதல் கணக்குதாரர் – ‘A’
இரண்டாம் கணக்குதாரர் –‘B’
மூன்றாம் கணக்குதாரர் – ‘C’

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம்

  1. ஒரு வைப்புதாரர் கொடுக்கவேண்டிய தொகைகளை வங்கி கழித்துக் கொள்ளலாமா?

    ஆமாம். வங்கிகள் தங்களுக்குச் சேரவேண்டிய தொகைகளை வைப்புகளிலிருந்து கழித்து எடுத்துக்கொள்வதற்கான உரிமை உண்டு.
  1. வைப்புக் காப்பீட்டுத் தொகைக்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது? வைப்புக்காப்பீட்டுத் தொகைக்கான தவணைக்கட்டணம் முழுவதும் காப்பீடு செய்த வங்கியாலேயே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  2.  எப்பொழுது DICGC கொடுக்கவேண்டிய நிலை உருவாகிறது?

    ஒரு வங்கி திவாலாகும்போது கலைப்பு அதிகாரிமூலமாக ஒவ்வொரு வைப்புதாரருக்கும் DICGC கொடுக்கவேண்டிய பொறுப்பு உள்ளது.  கலைப்பு அதிகாரி கேட்போர் பட்டியலை கொடுத்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ஒரு லட்சம் வரையிலான வைப்புகளுக்கு உடனே கொடுக்க வேண்டும்.

ஒரு வங்கி மறுசீரமைக்கப்பட்டு அல்லது இன்னொரு வங்கியோடு இணைக்கப்பட்டு/சேர்க்கப்பட்டு இருந்தால், காப்பீடு செய்யப்பட்ட வங்கி விஷயத்தில் ஒரு இணக்கத்தீர்வு அல்லது ஏற்பாடு அல்லது மறுசீரமைப்பு அல்லது ஒன்றிணைப்பு, முறையான அதிகாரம் படைத்தோரால் வழங்கப்பட்டு மற்றும் அத்தகைய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வைப்புதாரருக்கும் அந்த திட்டம் வந்த பகுதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டு அல்லது வரவு வைக்கப் படும்.  உண்மையான தொகை அல்லது குறிப்பிட்ட தொகைக்கு குறைவாக இருந்தால் DICGC சட்டத்தின் பிரிவு 18ன் ஷரத்துக்களின்படி உண்மையான தொகைக்கும் கொடுக்கப்பட்ட அல்லது வரவு கொடுக்கப்பட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசம் அல்லது கொடுக்கப்பட்ட அல்லது வரவு கொடுக்கப்பட்ட தொகைக்கும் உண்மையான தொகைக்கும் உள்ள வேறுபாடு இதில் எது குறைவோ அது கொடுக்கப்பட வேண்டும்.

இதற்குமுன் வேறு எந்த திட்டம் அமலில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட திட்டம் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அத்திட்டமே அமல் படுத்தப்படும்.

  1. தவறிய வங்கிகளின் வைப்புதாரர்களை DICGC நேரடியாக தொடர்பு கொள்ளுமா?

    இல்லை.  ஒரு வங்கி திவாலாகும்பொழுது கலைப்பு அதிகாரி வைப்புதாரர் வாரியாக கேட்பு பட்டியலை தயார்செய்து DICGC க்கு அனுப்புகிறார்.  நன்கு பரிசீலித்தபிறகு DICGC கலைப்பு அதிகாரிக்கு பணம் கொடுத்து, அவர் வைப்புதாரர்களுக்கு பணத்தை பிரித்து அளிப்பார்.  வங்கிகளின் ஒருங்கிணைப்பு/சேர்ப்பு விஷயத்தில் ஒவ்வொரு வைப்புதாரருக்கும் தரவேண்டிய பணம் மாற்றுதலுக்குரிய வங்கியிடம் அளிக்கப்படும்.

  2. ஏதேனும் ஒரு காப்பீடு செய்யப்பட்ட வங்கி, DICGCயின் பாதுகாப்பிலிருந்து விலகிக்கொள்ளமுடியுமா?

    இல்லை.  வைப்பு காப்பீட்டு திட்டம் கட்டாயமானது.  எந்த ஒரு வங்கியும் இதிலிருந்து விலகிக்கொள்ள முடியாது.

  3. வைப்பு காப்பீடு பாதுகாப்பை, எந்த ஒரு வங்கியிடமிருந்தும் DICGC விலக்கிக் கொள்ளலாமா?

    காப்பீடு செய்யப்பட்ட எந்த ஒரு வங்கியாவது தொடர்ந்து மூன்று அரையாண்டு காலங்களுக்கு தவணைக்கட்டணம் கட்டத் தவறினால், DICGC அவ்வங்கியின் பதிவை ரத்து செய்யலாம். இவ்வாறு தவணைக் கட்டணம் கட்டத்தவறிய வங்கிகளுக்கு, DICGC தனது பாதுகாப்பை விலக்கி கொள்ளும் பொழுது அத்தகவலை பொதுமக்களுக்கு செய்தித்தாள்கள் மூலம் அறிவிக்கும்.

    காப்பீடு செய்யப்பட்ட ஒரு வங்கியின் பதிவு பின்வரும் நிகழ்வுகளில் ரத்து செய்யப்படும்.  வங்கி புதியதாக வைப்புகள் பெறுவது தடைசெய்யப் படும்போது (அல்லது) வங்கி ஒன்றின் உரிமம் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்படும்போது (அல்லது) வங்கியின் உரிமம் ரிசர்வ் வங்கியால் மறுக்கப் படும்போது (அல்லது) தானாகவோ/கட்டாயத்தின்பேரிலோ வங்கி மூடப்படும் போது (அல்லது) வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் பிரிவு 36(2)ன் கருத்துப்படி வங்கியாகவோ/கூட்டுறவு வங்கியாகவோ அதன் செயல்பாட்டை ஒரு வங்கி நிறுத்திக்கொள்ளும்போது (அல்லது) தனது வைப்புப் பொறுப்புகளை வேறோர் நிறுவனத்திற்கு மாற்றிவிடும்போது அல்லது வேறொரு வங்கியுடன் ஒருங்கிணைக்கப்படும்போது அல்லது தகுதியுடைய அதிகாரி ஒருவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சமரசம்/ஏற்பாடு/மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அந்த  திட்டத்தின்கீழ் புதியதாக வைப்புகள் பெறுவது மறுக்கப்பதும்போது. இவ்வாறு வங்கியின் பதிவு ரத்தாகும்போது அன்றைய தேதிவரை வங்கியிலுள்ள வைப்புகளுக்குக் காப்பீடு பாதுகாப்பு உண்டு.

  4. வங்கிகள் பதிவிலிருந்து விலக்கப்படும் நிலையில், கழகத்தின் பொறுப்பு என்ன?

    காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளின் கலைப்பிற்கு உண்டான வைப்புக்காப்பீடு பொறுப்பு கழகத்திற்கு உண்டு.  கீழ்க்கண்ட காரணங்களுக்காக வங்கிகள் பதிவிலிருந்து விலக்கப்பட்டால், (a) புதிதாக வைப்புகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலை (b)  உரிமம் ரத்து செய்யப்படுமானால் அல்லது உரிமம் அளிக்கப்பட முடியாத நிலை.  இம்மாதிரி சந்தர்ப்பங்களில் காப்பீடு செய்யப்பட்ட வங்கி என்ற முறையில் செய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டால், அந்த நாளில் வங்கியில் இருந்த வைப்புத் தொகை அளவிற்கு மட்டுமே கழகத்தின் பொறுப்பு இருக்கும்.

    வேறு காரணங்களுக்காக பதிவில் இருந்து விலக்கப்பட்ட வங்கி [(உ.ம்) பிரிமியம் தொகை செலுத்தாத காரணத்தால் அல்லது DICGC சட்டம் 1961ன் சட்டப்பிரிவு 2(g8)ன் கீழ் கூட்டுறவு வங்கி என்ற தகுதியை இழந்துவிடுகின்றபோது] திவாலானால் கழகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது.
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்