தேதியிட்ட
அரசாங்கப்
பத்திரங்களின்
போட்டியில்லாத
ஏலமிடும் வசதி
சந்தையிலிருந்து
பணம்
பெறுவதற்காக
இந்திய
அரசாங்கம்
பத்திரங்களை
வெளியிடுகிறது.
பத்திரங்கள்
முதலீட்டாளர்களுக்கு
ஏலம் மூலமாக
அளிக்கப்
படுகின்றன.
ஏலம் மூலமாக
கடன் வாங்கும்
தொகையையும்,
தேதியையும்
அரசு
அறிவிக்கும்.
முதலீட்டாளர்கள்
புதுப்பத்திரங்களுக்கு
வட்டி
விகிதத்தின்மேல்
அல்லது
இருக்கின்ற
பத்திரங்களின்
மறுவெளியீட்டில்,
விலையை
அறிவித்து,
ஏலத்தில்
பங்கேற்பர்.
ஏலமிடுமுறை
சற்றே
நுணுக்கம்
வாய்ந்ததாயிருப்பதால்.
பெரிய மற்றும்
தகவலறிந்த
முதலீட்டாளர்களான
வங்கிகள்,
முதல்நிலை
வியாபாரிகள்,
நிதி
நிறுவனங்கள்,
பரஸ்பர நிதி
நிறுவனங்கள்,
காப்பீட்டு
ஸ்தாபனங்க்ள்
போன்றவையே
அதிக அளவில்
ஏலங்களில்
பங்கேற்கின்றன.
இது
அபாயமற்றதும்,
சந்தையிலுள்ள
வட்டிவிகிதத்தைத்
தரக்
கூடியதுமான
முதலீடு
என்றாலும்
சிறு
முதலீட்டாளர்கள்
இச்சந்தையில்
பங்கேற்க
முடியாமல்
இருக்கின்றனர்.
சிறு
முதலீட்டாளர்களுக்காக,
2001ஆம் வருடம்
டிசம்பர்
மாதம் 7ஆம் தேதி,
இந்திய
ரிசர்வ் வங்கி,
தேதியிட்ட
அரசாங்கப்
பத்திரங்களின்
போட்டியில்லாத
ஏலமிடும்
வசதியை
அறிவித்துள்ளது.
இத்திட்டத்தினால்
பயன்பெறுபவர்
எவர் ?
1.
இத்திட்டத்தில்
யார்
பங்குபெற
முடியும் ?
போட்டியில்லாத
ஏலமிடும்
திட்டத்தில்
தனிநபர்கள்,
இந்துக்கூட்டுக்
குடும்பங்கள்,
கம்பெனிகள்,
நிறுவனங்கள்,
சேமநலநிதிகள்,
அறக்கட்டளைகள்
மற்றும்
இந்திய
ரிசர்வ்
வங்கியால்
நியமிக்கப்பட்ட
அமைப்புகள்
பங்கு பெறலாம்.
சந்தை
நுணக்கப்
புலமையில்லாத
சிறு
முதலீட்டாளர்களின்
நண்_மையைக்
கருதி மேல்
மையப்
படுத்தப்ட்டுள்ள
இத்திட்டம்
கீழ்கண்ட
நபர்களுக்கு
வாய்ப்பளிக்கும்
வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
அ. இந்திய
ரிசர்வ்
வங்கியில்
நடப்புக்
கணக்கோ, துணை
பொதுப்பதிவேட்டுக்
கணக்கோ
இல்லாதவர்கள்
ஆ. ஒரு
ஏலத்தில் ஒரு
கோடி
ரூபாய்க்கு
மேலான
முகமதிப்புள்ள
பத்திரங்களை
வாங்காதவர்கள்
விதி
விலக்காக,
வட்டார
கிராமிய
வங்கிகள், நகர
கூட்டுறவு
வங்கிகள்,
வங்கிசாரா
நிதி
நிறுவனங்கள்
இத்திட்டத்தின்கீழ்
அவைகளின்
சட்டபூர்வ
கடமைகளின்
பொருட்டு
விண்ணப்பிக்கலாம்.
இருந்தபோதிலும்,
ஒரு ஏலத்தில்
ஒரு
முதலீட்டாளரால்
அதிக
பட்சத்தொகையாகிய
ஒரு கோடி
ரூபாய்
என்னும் தடை
செல்லுபடியாகும்.
2. தேதியிட்ட
அரசாங்கப்
பத்திரங்களின்
போட்டியில்லாத
ஏலமுறை என்பது
என்ன ?
போட்டியில்லாத
ஏலமுறை என்பது,
வட்டி
விகிதத்தையோ
அல்லது
விலையையோ
குறிப்பிடாது
தேதியிட்ட
அரசாங்கப்
பத்திரங்களின்
ஏலத்தில்
பங்குபெறுதல்
ஆகும். தான்
குறிப்பிட்ட
தொகை,
குறியீட்டிற்கு
உள்ளேயோ
அல்லது
வெளியிலோ
என்று ஒருவர் கவலைப்பட
வேண்டியதில்லை.
இத்திட்டத்திற்கிணங்க
பத்திரங்கள்
முழுமைக்குமோ
அல்லது
பகுதியாகவோ
அவருக்கு
அளிக்கப்படும்.
3. போட்டியில்லாத
ஏலமுறை
வசதியின்
நன்மைகள் யாவை
?
1)
போட்டியில்லாத
ஏலமுறை வசதி,
பரவலான
பங்கேற்ப்பையும்
அரசாங்கப்
பத்திரங்களின்
சில்லறை
வியாபாரத்தையும்
ஊக்குவிக்கும்
2). சந்தை
அனுபவமில்லாத,
தனிநபர்கள்,
ஸ்தாபனங்கள்
மற்றும்
இடைநிலை
முதலீட்டாளர்கள்
ஏலத்தில்
சரியான ஏலம்
கேட்க இம்முறை
உதவும்
3). இது போன்ற
முதலீட்டாளர்கள்,
ஏலத்தில்
முடிவான
வட்டிவிகிதத்தில்
பத்திரங்களைப்
பெற அதிக
வாய்ப்புள்ளவர்கள்.
இத்திட்டத்தின்
நோக்கங்கள்
4.
போட்டியில்லாத
ஏலமுறைக்கு
அளிக்கப்படும்
தொகை யாது ?
தேதியிட்டப்
பத்திரங்களின்
குறிப்பிட்ட
சில ஏலங்களில்
பட்டியலிடப்பட்ட
தொகையில்
ஐந்து
சதவிகிதம்
வரையில்
போட்டியில்லாத
ஏலமுறை
அனுமதிக்கப்படுகிறது.
5.
போட்டியில்லாத
ஏலமுறைக்கு
ஒதுக்கப்பட்ட
தொகை,
பட்டியலிடப்பட்ட
தொகையில்
அடங்குமா ?
ஆம்.
ஒதுக்கப்பட்ட
தொகை
பட்டியலிடப்பட்ட
தொகையில்
அடங்கும்.
6.
போட்டியில்லாத
ஏலமுறை
அனைத்து
தேதியிட்ட
பத்திரங்களின்
ஏலங்களிலும்
அனுமதிக்கப்படுகிறதா
?
வெளியிடுவதற்கு
உத்தேசிக்கப்பட்டு
அறிவிக்கப்
பட்ட சில
தேதியிட்ட
அரசாங்கப்
பத்திரங்களின்
குறிப்பிட்ட
சில ஏலங்களில்
மட்டுமே
போட்டியில்லாத
ஏலமுறை
அனுமதிக்கப்படுகிறது
7. கருவூல
உறுதிச்
சீட்டுகளின்
ஏலங்களுக்கு
இத்திட்டம்
பொருந்துமா ?
இல்லை.
கருவூல
உறுதிச்
சீட்டுகளின்
ஏலங்களுக்கு
இத்திட்டம்
பொருந்தாது.
ஏலத்தில்
பங்குபெறுவது
எப்படி ?
8.
தகுதி
வாய்ந்த
முதலீட்டாளர்கள்
ஏலங்களில்
எப்படி
பங்குபெறுவது
?
தகுதி
வாய்ந்த
முதலீட்டாளர்கள்
நேரடியாக
ஏலங்களில்
பங்குபெற
முடியாது.
அவர்கள்
ஏலங்களுக்கு,
ஒரு வங்கியின்
மூலமாகவோ
அல்லது முதல்
நிலை வியாபாரி
மூலமாகவோ
வரவேண்டியது
அவசியம்.
9.
குறைந்தபட்ச
ஏலத்தொகை யாது
?
குறைந்தபட்ச
ஏலத்தொகை
ரூபாய்
பத்தாயிரம்(முகமதிப்பு)
மற்றும்
பத்தாயிரத்தின்
மடங்குகள்
ஆகும்
10.
இத்திட்டத்தின்கீழ்
ஒரு
முதலீட்டாளர்
எத்தனை
ஏலங்கள்
கேட்க
முடியும் ?
இத்திட்டத்தின்கீழ்
ஒரு
முதலீட்டாளர்
குறிப்பிடப்பட்ட
ஒவ்வொரு
ஏலத்திலும்
ஒரு முறை
மட்டுமே ஏலம்
கேட்க
முடியும்
11. இது
எவ்வாறு
உறுதிபடுத்தப்படும்
?
வங்கியோ
அல்லது முதல்
நிலை
வியாபாரியோ,
தன்மூலமாக
ஏலம் கேட்கும்
முதலீட்டாளரிடமிருந்து
ஒரேஒரு
ஏலத்தில்
மட்டும்
பங்குபெறுவதைக்குறித்த
உறுதிமொழியைப்
பெற்று, தனது
ஆவணங்களில்
வைத்து
கொள்வார்.
ஏலத்தின்
நடைமுறை
12.
போட்டியில்லாத
ஏலதாரர்களின்
சார்பாக
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
எவ்வாறு ஏலம்
கேட்பர் ?
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
ஏலநாளில்
தன்னிடமுள்ள
உறுதிசெய்யப்பட்ட
ஆணைகளுக்கேற்ப
போட்டியில்லாத
ஏலங்களின்
கூட்டுத்தொகையை
ஓர் ஏலத்தில்
சமர்பிப்பர்.
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
தனித்தனி
வாடிக்கையாளர்
குறித்த பெயர்,
தொகை முதலான
விபரங்களை
மனுவுடன்
அளிப்பர்.
13. மனுப்படிவம்
உள்ளதா ?
இது,
போட்டியில்லாத
ஏலம்
வரவேற்கப்படும்
குறிப்பிட்ட
ஏலத்தின்
அறிவிப்பின்போது
வெளியிடப்படும்.
14.
ஏலத்தின்
நடைமுறை
எவ்வாறு
செயல்படுகிறது
?
இந்திய
அரசாங்கம்,
அரசாங்கப்
பத்திரங்களின்
ஏலம் பற்றி
அறிவிக்கும்.
அவ்வறிவிப்பு
இது
புதுக்கடனா
அல்லது பழைய
கடனின்
மறுவெளியீடா
என்பது
பற்றியும்
அறிவிக்கும்.
ஏலதாரர்கள்,
விலையின்மீது
அல்லது
கூப்பன் வட்டி
விகிதத்தின்
மீது ஏலம்
கேட்பது
குறித்தும்அறிவிப்புவெளியிடப்படும்.
போட்டியிடும்
ஏலதாரர்கள்
விலையின்மீது
அல்லது
கூப்பன் மீது
தம்முடைய
போட்டிக்கான
ஏலத்தை
அளிப்பார்கள்.
பெறப்பட்ட
ஏலங்களின்
அடிப்படையில்,
இந்திய
ரிசர்வ் வங்கி,
விலையில்
அல்லது
கூப்பனில்
குறிப்பிட்ட
அளவுநிலையை
அறிவிக்கும்.
எல்லா வெற்றி
பெற்ற
ஏலதாரர்களும்
ஏலமிடப்பட்டப்
பத்திரங்களை,
முழுமையாகவோ
அல்லது
பகுதியாகவோ
அடைவர்.
எடுத்துக்காட்டாக:
சமீபத்தில்
இந்திய
அரசாங்கத்தின்,
11 வருட
அரசாங்க
பத்திரத்தின்
ஏலம்
நடைபெற்றபொழுது,
அறிவிக்கப்பட்ட
தொகை ரூபாய் 5000
கோடி ஆக
இருந்தது.
பலனுக்குறிய
கூப்பன் (வட்டிவிகித)
அளவு(cut-off yield) 9.40%. இந்த
அளவிற்கு மேலோ
அல்லது கீழோ
ஏலம் கேட்ட
பல்வேறு
வெற்றி பெற்ற
ஏலதாரர்களுக்கும்
பத்திரங்கள்
பன்முக விலை
ஏலத்திட்டத்தில்
அளிக்கப்பட்ட
காரணத்தால்
சமமான சராசரி
விகிதம் 9.36 ஆக
இருந்தது.
15. போட்டியில்லாத
ஏலதாரர்களுக்கு
எந்த
வட்டிவிகிதத்தில்
அளிக்கப்படும்?
போட்டிக்குரிய
ஏலத்தின்
விளைவாக எழும்
சமமான சராசரி
விகிதத்தின்
அடிப்படையில்,
போட்டியில்லாத
ஏலப்பகுதி
பகிர்ந்து
அளிக்கப்படும்.
(கேள்வி 14
மற்றும்
கேள்வி 17க்கான
பதில்களைப்
பார்க்கவும்)
பகிர்ந்தளித்தல்
எவ்வாறு
நடைபெறுகிறது
?
16.
இந்திய
ரிசர்வ் வங்கி
போட்டியிடாத
ஏலதாரர்களுக்கு
எவ்வாறு
பகிர்ந்தளிக்கிறது
?
இந்திய
ரிசர்வ் வங்கி
போட்டியில்லாத
பகுதியில்,
வங்கிக்கோ
அல்லது
முதல்நிலை
வியாபாரிக்கோ
அளிக்கும்.
அவர்கள்
ஏலதாரர்களுக்குப்
பகிர்ந்தளிப்பார்கள்.
17. போட்டியிடாத
ஏலத்தொகை,
ஒதுக்கப்பட்ட
தொகையைக்
காட்டிலும்
அதிகமாக
இருந்தால்
இந்திய
ரிசர்வ் வங்கி
போட்டியில்லாத
ஏலத்திற்கு
எவ்வாறு
அளிக்கும் ?
ஏலத்தின்
மொத்தக்
கூட்டுத்தொகை,
போட்டியில்லாத
ஏலத்திற்கு
ஒதுக்கப்பட்ட
தொகையைவிட
அதிகமாக
இருப்பின்
விகிதாசாரப்படி
பகிர்ந்து
அளிக்கும்.
எ.கா: போட்டியில்லாத
அடிப்படைக்கு
ஒதுக்கப்பட்ட
தொகை 10 கோடி
எனக் கொள்வோம்.
போட்டியில்லாத
வகையில்
கேட்கப்பட்ட
ஏலத்தின்
மொத்தக்
கூட்டுத்தொகை
12 கோடி
பகுதி
பகிர்ந்தளிப்புச்
சகவிகிதம் = 10/12 = 83.33%
ஏலதாரர் |
ஏலத்தொகை |
பகிர்ந்தளிப்பு |
வங்கி 1 |
2 கோடி |
1,66,70,000 |
வங்கி 2 |
3 கோடி |
2,50,00,000 |
மு. வி 1 |
1 கோடி |
83,30,000 |
மு.வி. 2 |
1 கோடி |
83,30,000 |
வங்கி 3 |
5 கோடி |
4,16,70,000 |
உண்மையான
பகிர்ந்தளிக்கும்
தொகை,
பத்தாயிரத்தின்
மடங்குகளில்
முழுமையாக்கப்படுவதால்
பகுதி
பகிர்ந்தளிப்பு
விகிதத்திலிருந்து
மாறுபடுவதைக்
கவனத்தில்
கொள்ளவும்.
18.
ஒதுக்கப்பட்ட
தொகையைவிட
போட்டியில்லாத
ஏலமிடல் மூலம்
பெற்ற தொகை
குறைவாயிருந்தால்
?
ஒதுக்கப்பட்ட
தொகையைவிட
போட்டியில்லாத
ஏலமிடல் மூலம்
பெற்ற தொகை
குறைவாயிருந்தால்,
எல்லா
மனுதாரர்களுக்கும்
முழுமையான
அளவில்
ஒதுக்கப்படும்.
மீதமுள்ள தொகை
போட்டியிடும்
பகுதிக்கு
எடுத்துச்
செல்லப்படும்.
19. வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
எவ்வாறு பகுதி
ஒதுக்கீட்டைச்
செய்வர் ?
ஒளிவுமறைவின்றி
வாடிக்கையாளர்களுக்குத்
தகுந்த
பத்திர
ஒதுக்கீட்டைச்
செய்வது
வங்கியினுடைய
அல்லது
முதல்நிலை
வியாபாரியினுடைய
கடமை ஆகும்
கணக்கை
முடித்தல்
எப்படி
நடைபெறும் ?
20. ரூபாய்
பத்தாயிரம்
முகமதிப்புள்ள
பத்திரத்தைப்
பெற
முதலீட்டாளர்
எவ்வளவு
கொடுப்பார்?
மேலே 14வது
கேள்விக்குத்
தந்த
உதாரணத்தில்
வட்டிவிகித
அடிப்படையிலான
ஏலத்தில்,
விகித அளவு(Cut off) 9.40%.
சமமான சராசரி
விகிதமோ 9.36%.
பத்திரத்தின்
விலை, விகித
அளவான (Cut off) 9.36
சதவிகிதத்தில்
ரூ.100.27 ஆகும்.
ஆகையால்
இத்திட்டத்தின்கீழ்
முதலீட்டாளர்
பத்திரத்தினை
ரூ.100.27க்குப்
பெறுவார்.
இதனால் ரூ.100
முகமதிப்பிற்கான
பத்திர珫த்தின்விலை ரூ.100.27.
ஆகையால், ரூ.10,000
மதிப்புள்ள
பத்திரங்களுக்கு
அவர் (விலைXமுகமதிப்பு/100)=100.27X10000/100
= ரூ.10270 தருவார்.
21.
பத்திரங்களை
வெளியிட்ட
தேதிக்குப்பிறகு,
பத்திரங்களுக்கான
தொகை,
வங்கிக்கோ
அல்லது
முதல்நிலை
வியாபாரிக்கோ
அளிக்கப்பட்டால்
என்ன ஆகும் ?
பத்திரங்கள்
வெளியிடப்பட்ட
அன்றே, வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
அதற்கான
தொகையை
செலுத்த
வேண்டியிருப்பதால்,
வாடிக்கையாளர்
பத்திரங்கள்
வெளியிடப்பட்ட
தேதிக்குப்
பிறகு தொகை
செலுத்தினால்,
வங்கிக்கோ
அல்லது
முதல்நிலை
வியாபாரிக்கோ
தரப்பட
வேண்டிய
தொகையில்,
கொடுக்கப்பட
வேண்டிய
வட்டியும் (accrued
interest) அடங்கும். (எ.கா.)
இந்திய
அரசாங்கத்தின்
2015 வருடத்திய 9.40%
பத்திரத்திற்கு,
வெளியிட்ட
தேதியிலிருந்து
மூன்றாம் நாள்
தொகை
செலுத்தப்பட்டால்,
கொடுக்கப்பட
வேண்டிய
வட்டித்தொகை
9.40/100 X 3/360 X 10000 =ரூ.7.83 ஆகும்.
பத்திரத்தின்
விலை ரூ.100.27 ஆனால்
மூன்று
நாட்களுக்குப்
பிறகு,
முதலீட்டாளரால்
செலுத்தப்பட்டால்,
செலுத்தப்பட
வேண்டிய
மொத்த தொகை ரூ.10.270
+ ரூ.7.83 = ரூ.10,277.83 (முழுமையாக்கப்படாவிட்டால்)
ஆகும்.
22.
விலையின்
அடிப்படையிலான
ஏலங்களில்
என்ன நிலை
ஏற்படும் ?
போட்டியில்லாத
ஏலதாரர்கள்,
ஏலத்தில்
வெளிவரும்,
சமமான சராசரி
விலையைத்
தருவார்கள்.
(எ.கா.)
இந்திய
ரிசர்வ் வங்கி
2016 வருடம்
ஏப்ரல் மாதம்
19ம் தேதி
முதிர்ச்சியடைவதும்
புழக்கத்திலுள்ளதுமான
10.71% GOI 2016 பத்திரத்தை
2001, டிசம்பர்
மாதம் ஐந்தாம்
தேதி
ஏலமிட்டது.
இந்த ஏலத்தில்
வெளிவந்த
விலையளவு ரூ.121.92
ஆக இருந்தது.
சமமான சராசரி
விலை ரூ.121.99.
போட்டியில்லாத
ஏலதாரர்கள்
சமமான சராசரி
விலையான ரூ.121.99ஐ
தருவர்.
இத்துடன்
கொடுக்கப்பட
வேண்டிய
வட்டியையும்
தருவர்.
23. மேலே
கொடுக்கப்ட்டதில்,
போட்டியில்லாத
ஏலதாரர் ரூ.10000
மதிப்புள்ள
பத்திரங்களைப்
பெற எவ்வளவு
கொடுக்கவேண்டும்
?
ரூ.100 (முகமதிப்பு)க்கான
விலை ரூ.121.99.
ஆகையால் ரூ.10000
மதிப்புள்ள
பத்திரங்களுக்கு
அவர் (விலை X
முகமதிப்பு/100) =
121.99 X10000/100 = ரூ.12.199
கொடுப்பார்.
தேதியிட்ட
இந்திய
அரசாங்கத்தின்
பத்திரங்களுக்கு
அரையாண்டிற்கு
ஒருமுறை வட்டி
தரப்படுவதால்
பத்திரங்களுக்கான
வட்டி தரும்
தேதி ஏப்ரல் 19உம்
அக்டோபர் 19மாக
இருக்கும்.
2001 டிசம்பர்
6 ஆம் தேதி
பத்திரத்திற்கான
தொகை
செலுத்தப்பட்டால்,
கடந்த வட்டி
தேதியிலிருந்து
தொகைச்
செலுத்தப்படும்
தேதி
வரையிலான
அதாவது, 2001
அக்டோபர் 19லிருந்து
2001 டிசம்பர் 6
வரையிலான 47
நாட்களுக்கான
கொடுக்கப்பட
வேண்டிய வட்டி
10.71/10x47/360 x10000 = 139.83 ஆகும்.முதலீட்டாளரால்
தரப்படவேண்டிய
தொகை என்பது
விலை +
கொடுக்கப்பட
வேண்டிய வட்டி.
அதாவது 12199+139.83=12338.83 (முழுமையாக்கப்
படாவிட்டால்)
தொகை
செலுத்துதல்,
2001 டிசம்பர் 6க்கு
பதில் 2001
டிசம்பர் 9ஆம்
தேதியானால்
கொடுக்கப்பட
வேண்டிய
வட்டிப்பங்கு,
47
நாட்களுக்குப்
பதில் 50
நாட்களுக்கு (அதாவது
3 நாட்கள்
கூடுதல்) 10.71/100 X 50/360 X10000 =
ரூ.148.75 ஆகும்.
முதலீட்டாளர்
செலுத்த
வேண்டிய
மொத்தத் தொகை
12,199+148.75 = 12,347.75 (முழுமையாக்கப்
படாவிட்டால்)
ஆகும்.
24.
முதலீட்டாளர்
எவ்வளவு
நாட்களுக்குள்
பத்திரத்தைப்
பெறுவர்?
ஏலநாளிலிருந்து
ஐந்து வேலை
நாட்களுக்குள்,
வாடிக்கையாளருக்கான பத்திரமாற்றம்
செய்து
முடிக்கப்பட
வேண்டும்.
ஒப்படைத்தலும்
வைத்துக்கொள்ளும்
வடிவமும்
25.
பத்திரங்கள்
எவ்விதம்
தரப்படுகின்றன
?
இந்திய
ரிசர்வ்
வங்கியில்
துணைப் பொதுப்
பதிவேட்டுக்
கணக்கில் வரவு
வைக்கப்பட்டு
பத்திரவடிவம்
ஏதுமில்லா
வகையில் (உருவ
வடிவமில்லாகணக்கு)
(Demate) மட்டுமே
வழங்கப்படும்.
அது
வங்கியினுடைய
அல்லது
முதல்நிலை
வியாபாரியின்
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப்
பொதுபபதிவேட்டில்(CSGL)
பத்திரங்கள்
வரவு
வைக்கப்படும்.
26.
துணைப்
பொதுப்பதிவேட்டுக்
கணக்கு(SGL),
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப் பொதுப்
பதிவேட்டுக்
கணக்கு(CSGL)
என்பது என்ன ?
துணைப்
பொதுப்
பதிவேட்டுக்
கணக்கு(SGL)
என்றாலும்
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப் பொதுப்
பதிவேட்டுக்
கணக்கு(CSGL) என்றாலும்,
இரண்டுமே
பத்திர
வடிவமில்லாமல்
இந்திய
ரிசர்வ்
வங்கியில்
கணக்கேடுகளில்
வரவு
வைக்கப்படும்
கணக்கே. ஒரு
முதலீட்டாளர்,
பங்குகளை
உருவமில்லா
கணக்கு
வடிவத்தில்
வைத்துக்
கொள்வதைப்
போலவே, அவர்
அரசாங்கப்
பத்திரங்களை,
ஒரு
வங்கியினிடமோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியிடமோ
உள்ள கணக்கில்
வைத்துக்கொள்ளலாம்.
வங்கியினாலோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியினாலோ
வாடிக்கையாளரின்
சார்பாக
வைத்துக்
கொள்ளப்படும்
பத்திரங்கள்
இந்திய
ரிசர்வ்
வங்கியிலுள்ள
தனித்தனி
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப்
பொதுப்பதிவேட்டுக்
கணக்கில்
வைக்கப்படும்.
எனவே வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
தனது
வாடிக்கையாளர்களுக்காக
பத்திரத்தை
வாங்கும்பொழுது
அது இந்திய
ரிசர்வ்
வங்கியிலுள்ள
வங்கியினுடைய
அல்லது
முதல்நிலை
வியாபாரியினுடைய
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப்
பொதுபபதிவேட்டுக்
கணக்கில் வரவு
செய்யப்படும்.
27. சிறு
முதலீட்டாளர்,
துணைப் பொதுப்
பதிவேட்டுக்
கணக்கு அல்லது
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப்
பொதுபபதிவேட்டுக்
கணக்கு எது
வைத்திருக்க
வேண்டும்?
இல்லை.
வங்கியின்
அல்லது
முதல்நிலை
வியாபாரியின்
மூலமாக
ஏலத்தில்
பங்குபெற
விழையும் சிறு
முதலீட்டாளர்
வங்கியினிடமோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியிடமோ
சார்புடை
நிறுவனங்களுக்கான
துணைப்
பொதுபபதிவேட்டுக்
கணக்கை
வைத்திருப்பது
கட்டாயமில்லை.
ஆனால்,
அவ்வாறான
கணக்கை
வைத்திருப்பது
முதலீட்டாளருக்கு
வசதியாக
இருக்கும்.
28. சிறு
முதலீட்டாளர்,
முதல்நிலை
வியாபாரியிடம்
ஏற்கனவே உள்ள
தன்னுடைய
உருவ
வடிவமில்லாகணக்கில்
(Demate) பத்திரங்களை
வரவு செய்ய
வைக்க
முடியுமா ?
ஆமாம்.
முதல்நிலை
வியாபாரியோ
அல்லது
வங்கியோ எவர்
மூலமாக
மனுதரப்படுகிறதோ,
அவர்
பத்திரங்களின்
வரவுசெய்யும்
முறையைப்
பற்றியும்
தெளிவாகக்
குறிப்பிட
வேண்டும்.
29.
முதலீட்டாளர்
பத்திரவடிவமில்லா
பத்திரங்களை
எழுத்து
வடிவலான
பத்திரமாகக்
கேட்க
முடியுமா ?
ஆம்.
முதலீட்டாளரின்
கோரிக்கையின்பேரில்
எழுத்து
வடிவலான
பத்திரமாக
மாற்றியமைக்க
அனுமதிக்கப்
படுகிறது.
30.
பட்டுவாடா
செயல்முறை
யாது ?
போட்டியில்லாத
ஏலதாரர்களின்
சார்பாக ஏலம்
கேட்டு பணம்
செலுத்திய
வங்கிக்கோ
அல்லது
முதல்நிலை
வியாபாரிக்கோ
ஏலத்தன்றே
இந்திய
ரிசர்வ் வங்கி
பத்திரங்களை
அளிக்கும்.
போட்டியில்லாத
ஏலதாரர், எந்த
வங்கி அல்லது
முதல்நிலை
வியாபாரி
மூலமாக ஏலம்
எடுத்தரோ
அவருக்குப்
பணம் செலுத்தி
பத்திரங்களை
அவரிடமிருந்து
பெறுவர்.
வேறு
வார்த்தைகளில்சொல்வதானால்,
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ,
தங்களது
வாடிக்கையாளரிடமிருந்து
தொகையைப்
பெற்றமைகுறித்து
கருதாது,
இந்திய
ரிசர்வ் வங்கி,
ஏலநாளில்
வங்கியிடமிருந்தோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியிடமிருந்தோ
பெற்ற
தொகைக்கு
ஏற்ப
வங்கிக்கோ
அல்லது
முதல்நிலை
வியாபாரிக்கோ
பத்திரங்களை
அளிக்கும்.
31.
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
இந்த
சேவைக்காக
கட்டணம்
வசூலிக்குமா ?
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ,
வாடிக்கையாளர்களுக்கு
இந்த சேவையை
செய்வதற்கு
ரூ.100க்கு 6 பைசா
வரை தரகாக
வசூலிக்கலாம்.
32.
கட்டணம்
எவ்வாறு
வசூலிக்கப்படும்
?
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
வாடிக்கையாளரிடமிருந்து
இச்சேவை
விலையில்
கூட்டியோ
அல்லது
தனியாகவோ
வசூலிக்கலாம்.
33. போட்டியில்லாத
ஏலதாரர் தொகை
செலுத்தும்
விதங்களை
எவ்வாறு
அறிவார் ?
பத்திரங்களின்
விலை, உரிய
சந்தர்பங்களில்
கொடுக்கப்பட
வேண்டிய வட்டி,
கட்டணம்
முதலியவையும்
அவற்றை பெறும்
வழியும்
வங்கியினாலோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியாலோ
கணக்கிடப்பட்டு
வாடிக்கையாளருடன்
இதற்கென
செய்து
கொள்ளும்
ஒப்பந்தத்தில்
தெளிவுற
எடுத்துரைக்கப்பட
வேண்டும்.
34.
இதில் ஏதேனும்
மறைமுகவிலை
உள்ளதா ?
இல்லை.
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ
எந்தவிதமான
விலையையும்
சேர்க்க
அனுமதிக்கபடவில்லை.
வேறு
வார்த்தைகளில்சொல்வதானால்
வங்கியோ
அல்லது
முதல்நிலை
வியாபாரியோ,
கேள்வி 21 மற்றும்
கேள்வி 23
ன்கீழ்
தரப்பட்ட
கொடுக்கப்பட
வேண்டிய
வட்டியையும்,
கேள்வி 31 ன் தரகுக்
கூலியையும்
தவிர வேறு
எந்த ஒரு
விலையையும்
வாடிக்கையாளரிடமிருந்து
வசூலிக்கக்கூடாது.
35.
இத்திட்டம்
இந்திய
ரிசர்வ்
வங்கியால்
கண்காணிக்கப்படுமா
மற்றும்
மறுபரிசீலனை
செய்யப்படுமா
?
முதல்நிலை
வியாபாரிகளும்
வங்கிகளும்
இந்திய
ரிசர்வ் வங்கி
கேட்கும்போது
கேட்கும்
தகவலை அளிக்கவேண்டும்.
விதிமுறைகளை
ரிசர்வ் வங்கி
மறுபரிசீலனை
செய்யலாம்.
வழிகாட்டும்
விதிமுறைகள்
எப்பொழுதெல்லாம்
மாற்றப்படுகிறதோ
இந்திய
ரிசர்வ் வங்கி
மாற்றிய
வழிகாட்டும்
விதிமுறைகளை
அறிவிக்கும்.
டிசம்பர்
5, 2001
|