வெளிநாட்டில்
உள்ள
கூட்டுமுயற்சிகள்(JV)/
முழுதும்
சொந்தமான கிளை
நிருவனங்களின்
(WOS) ஆகியவற்றில்
இந்தியாவில்
வாழ்வோர்
செய்யும்
நேரடி
முதலீடுகள்
கே.1.
வெளிநாட்டில்
முதலீடு
செய்வது
பற்றிய
வழிகாட்டு
நெறிகள் எங்கே
கிடைக்கும்?
வழிகாட்டு
நெறிகளுக்கு
இந்திய
ரிசர்வ்
வங்கியினால்
வெளியிடப்பட்ட
ஜூலை 7, 2004
நாளிட்ட
அறிக்கை எண் FEMA 120
(காலத்துக்குக்
காலம்
திருத்தப்பட்டது)
காண்க. இதனை www.fema.rbi.org.in
என்னும்
ரிசர்வ்
வங்கியின்
இணைய தளத்தில்
காணலாம்.
இன்றுவரை
நிகழ்ந்த
வளர்ச்சியை
உள்ளடக்கிய
அனைத்து
அறிக்கைகள்/சுற்றறிக்கைகளின்
சுருக்கத்
தொகுதியினை
ஜூலை 1, 2004
நாளிட்ட ‘வெளிநாட்டில்
உள்ள WOS இல்
கூட்டு
முயற்சியில்
இந்திய நேரடி
முதலீடு’
என்னும்
பெயரிட்ட
தலைமைச்
சுற்றறிக்கையும்
www.rbi.org.in
என்னும்
இணையதளத்தில்
கிடைக்கும்.
கே.2.
வெளிநாட்டில்
முதலீடுகள்
செய்வது
பற்றிய
வழிகாட்டுநெறிகள்
குறித்துத்
தெளிவுபடுத்தும்
செய்திகளை
எங்கே பெறலாம்?
கேள்வி 1க்கு
உரிய பதிலை
மேலே காணவும்.
அவற்றில்
உள்ள
அறிவுறுத்தல்களில்
சொல்லப்படாத
செய்திகளைப்
பற்றிய
தெளிவான
விளக்கங்களை,
தேவைப்படும்
முழு
விவரங்களைக்
குறிப்பிட்டு
ரிசர்வ்
வங்கியின்
மத்திய
அலுவலகத்தில்
பின்வரும்
முகவரியில்
பெறலாம்.
இந்திய
ரிசர்வ் வங்கி
அன்னியச்
செலாவணித்துறை
வெளிநாட்டு
முதலீட்டுப்
பிரிவு
மத்திய
அலுவலகம்
“அமர்”
கட்டிடம்,
மூன்றாவது
மாடி
மும்பை-400 001
அல்லது
மின் அஞ்சல்: oid@rbi.org.in
கே.3.
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
என்பது என்ன?
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
என்பது
நீண்டகால
ஈடுபாட்டினைக்
குறிக்கும்
வகையில் (கூட்டு
நிறுவனத்தைத்
தோற்றுவிப்பதாகவோ
அல்லது
முழுதும்
சொந்தமுடைய
துணை
நிறுவனங்களை
நிறுவுவதாகவோ)
(JV/WOS)
மூலதனத்துக்குச்
செய்யப்படும்
பங்களிப்பு
அல்லது
வெளிநாட்டு
அமைப்புச்
சங்கத்தின்
விவரக்குறிப்புக்கு
ஒப்புதல்
தந்து பணம்
வழங்குதல்
ஆகும்;
இவ்வாறாக
பட்டியல் வகை
முதலீடு இதில்
உட்படுவதில்லை.
கே.4.
தற்போது ஒரு
நிறுவனத்தினை
முழுமையாகவோ
அல்லது
பகுதியாகவவோ
பெறமுடியாது
என்பதுதான்
கேள்வி 3ல்
கொடுக்கப்பட்டுள்ள
விளக்கத்தின்
பொருளாகுமா?
இல்லை.
மதிப்பீடு,
விதிக்கப்பட்டுள்ள
நெறிமுறைகளின்படி
அமைந்திருக்கும்
எனில்
தகுதிபெற்ற
ஒரு அமைப்பு
ஒரு பகுதிப்
பங்கினையோ (JV)
அல்லது
மொத்தப்
பங்காகவோ (WOS)
பெறுவதற்குத்
தடையில்லை. (கேள்வி.16க்குரிய
பதிலை தயவு
செய்து
காணவும்).
கே.5.
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
செய்யத்
தகுதியுடையோர்
யாவர்?
இந்தியாவின்
ஒருங்கிணைந்த
நிறுவனங்கள்,
இந்திய
பங்குதாரர்
சட்டம் 1932 (இந்தியநபர்கள்)
சட்டத்தின்படி
பதிவு
செய்யப்பட்ட
பங்குதாரர்
கம்பெனிகள்
வெளிநாட்டில்
JV யிலும் WOS இலும்
முதலீடு
செய்வதற்குத்
தகுதியுடையவை.
கே.6.
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
என்பது
எந்தவொரு
நடவடிக்கையிலும்
செய்யப்படலாமா?
ஒரு
இந்திய நபர்
நல்லெண்ணம்
கொண்ட எந்தச்
நடவடிக்கையிலும்
வெளிநாட்டில்
நேரடி
முதலீட்டைச்
செய்யலாம் (குறிப்பாகத்
தடை
செய்யப்பட்ட
செயல்களைத்
தவிர);
இருப்பினும்
நிதி
தொடர்பான
செயல்களில்
பங்குபெறுவதற்கு
விதிமுறை 7இல்
குறிப்பிடப்பட்டுள்ள
சில
குறிப்பிட்ட
கூடுதல்
நிபந்தனைகள்
பின்பற்றப்பட
வேண்டும். (கேள்வி
26க்குரிய
பதிலைத் தயவு
செய்து
நோக்கவும்).
கே.7.
வெளிநாட்டில்
செய்யப்படும்
நேரடி
முதலீட்டில்
தடை
செய்யப்பட்ட
நடவடிக்கைகள்
எவை?
ரியல்
எஸ்டேட்,
வங்கித்
தொழில்கள்
ஆகியன
வெளிநாட்டில்
நேரடி
முதலீட்டில்
தடை
செய்யப்பட்ட
நடவடிக்கைகள்
ஆகும்.
இருப்பினும்
வங்கித்
தொழில்
நெறிமுறைச்
சட்டம் 1949இன்படி
இந்திய
ரிசர்வ் வங்கி,
மத்திய
அலுவலக DBOD
யிலிருந்து
சான்றிதழ்
பெற்றிருந்தால்,
இந்தியாவில்
செயல்படும்
இந்திய
வங்கிகள் JV/WOS
ஆகியவற்றை
அமைக்கலாம்.
கே.8.
ரியல் எஸ்டேட்
வணிகம்
என்பதில்
குறிக்கப்படும்
தொழில்கள் எவை?
ரியல்
எஸ்டேட்
தொழில் என்பது
ரியல்
எஸ்டேட்டினை
வாங்குதலும்
விற்றலும்
அல்லது
மாற்றத்
தகுந்த
மேம்பாட்டு
உரிமைகளில்
வணிகம்
செய்தல் (TDR)
ஆகும். ஆனால்
இது நகராட்சி
மேம்பாடு,
குடியிருப்பு/வணிகக்
கட்டிடங்கள்
கட்டுதல்
சாலைகள்
மற்றும்
பாலங்கள்
அமைத்தல்
ஆகியவற்றை
உள்ளடக்கியது
அன்று.
கே.9. ஒரு
தகுதியுள்ள
நிறுவனம்
எந்தத்
திட்டங்களின்
கீழ்
வெளிநாட்டில்
JV/WOS ஆகியவற்றை
அமைக்கலாம்?
பொதுவாக
ஒரு இந்திய
நபர்
வெளிநாட்டில்
JV/WOS ஆகியவற்றை
அமைக்க இரண்டு
திட்டங்கள்: 1)
தானியங்கு
முறைவழி 2)
சாதாரண
முறைவழி
ஆகியவை உள்ளன.
கே.10.
தானியங்கு
முறைவழி
என்பது என்ன?
தானியங்கு
முறை வழியின்
கீழ் ஒரு
இந்திய நபர்
வெளிநாட்டில்
JV/WOS அமைக்க
ரிசர்வ்
வங்கியின்,
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டியதில்லை
(இருப்பினும்
நிதிசார்
பிரிவுகளில்
முதலீடு
செய்வதற்கு,
தொடர்புடைய
நெறிப்படுத்தும்
நிறுவனத்திடம்
இந்தியாவிலும்
வெளிநாட்டிலும்
முன்
ஒப்புதலைப்
பெறுதல்
வேண்டும்).
கே.11.
தானியங்கு
முறைவழியில்
நேரடி முதலீடு
செய்வதற்குரிய
தகுதிகள் எவை?
தானியங்கு
முறைவழியில்
நேரடி முதலீடு
செய்வதற்கான
தகுதிகள்:
i. நேபாளம்,
பூட்டான்,
பாகிஸ்தான்
ஆகிய
நாடுகளைத்
தவிர வேறு
எந்த
நாட்டிலும்
ஒரு இந்திய
குழு JV/WOS
அமைக்க, அதன்
நிகரமதிப்பில்
100% வரை மட்டுமே
நிதிப்
பொறுப்பு
இருக்கவேண்டும்.
மேலும் அந்த
முதலீடு
அந்த
நாட்டில்
சட்டப்படி
அனுமதிக்கப்பட்ட
செயலாக
இருக்க
வேண்டும்.
ii. அந்த
இந்திய குழு
ரிசர்வ்
வங்கியின்
ஏற்றுமதியாளர்
எச்சரிக்கைப்பட்டியல்/இந்திய
கடன் தகவல்
செயலகம்/இந்திய
ரிசர்வ்
வங்கி
இவற்றால்
வெளியிடப்பட்ட/சுற்றறிக்கையாக
விடப்பட்ட
வங்கி
அமைப்பில்
பெற்ற கடனை
கட்டத்தவறுவோர்
பட்டியல்
போன்றவற்றில்
இல்லாதிருத்தல்,
அல்லது
அமலாக்கச்
செயலகம்,
துப்பு
துலக்கும்
அமைப்பு,
நெறிப்படுத்தும்
நிறுவனம்
போன்றவற்றின்
விசாரணையில்
இல்லாமல்
இருத்தல்.
iii. இந்திய
குழு JV/WOS இல்
செலுத்தும்
முதலீடு
தொடர்பான
எல்லா
பரிமாற்றங்களையும்
அதனால்
நியமிக்கப்படும்
அங்கீகரிக்கப்பட்ட
முகவரின் ஒரே
ஒரு கிளை
வழியாக
மட்டுமே
செய்ய
வேண்டும்.
கே.12.
நிதி பொறுப்பு
என்பது என்ன?
நிதி
பொறுப்பு
என்பது ஒரு
இந்திய குழு
பங்கு மூலதனம்,
கடன்கள்
மற்றும்
இந்திய
குழுவினாலோ
அல்லது அதன்
வெளிநாட்டு JV/WOS
சார்பாகவோ
அளிக்கப்பட்ட
உத்திரவாதத்
தொகையில் 50%
ஆகியவற்றின்
மூலம்
அளிக்கும்
வெளிநாட்டு
நேரடி
முதலீட்டின்
தொகை ஆகும்.
கே.13.
நேபாளத்திலும்
பூட்டானிலும்
தானியங்கு
முறை வழியில்
நேரடி முதலீடு
செய்வதற்குரிய
வரம்பு என்ன?
நேபாளத்திலும்
பூட்டானிலும்
நேரடி
முதலீட்டைப்
பொருத்தவரை,
மொத்த நிதி
பொறுப்பு
என்பது அந்த
இந்திய
குழுவின்
நிகர மதிப்பு
வரை இந்தியா
ரூபாயில்
உள்ள
தொகையாகும்.
கே.14.
நிகர
மதிப்புவரை
உள்ள தொகையை
நேரடி
முதலீட்டில்
ஆண்டுக்கு
ஒருமுறை என்ற
முறையில்
செலுத்த
முடியுமா?
முடியாது.
நிகர மதிப்பு
என்பது நேரடி
முதலீட்டுக்குரிய
ஒட்டுமொத்த
உச்சவரம்பாகும்.
எந்தப் புதிய
வெளிநாட்டு
முதலீடும்
நிகர
மதிப்பில்
ஏற்படும்
கூடுதல் என்ற
அடிப்படையிலேயே
செய்யப்பட
வேண்டும்.
கே.15. ஒரு
தகுதியுள்ளவர்
தானியங்கு
முறைவழியில்
JV/WOS இல் நேரடி
முதலீடு
செய்வதற்குரிய
வழிமுறை என்ன?
தகுதியுள்ள
இந்திய குழு
தானியங்கு
வழிமுறையில்
நேரடி முதலீடு
செய்ய
விரும்பினால்
அவர் ODA
படிவத்தை
நிறைவு செய்து
அதில்
பட்டியலிடப்படும்
பின்வரும்
ஆவணங்களை
ஆதாரமாக
வைக்க
வேண்டும்.
மன்றக்குழுத்
தீர்மானத்தின்
சான்றளிக்கப்பட்ட
நகல்,
சட்டமுறைத்
தணிக்கையாளரின்
சான்றிதழ், கே.16
இன் பதிலில்
குறிப்பிட்டுள்ள
மதிப்பீட்டு
விதிகளின்
படியான
மதிப்பீட்டு
அறிக்கை (ஏற்கனவே
இருக்கும்
நிறுவனத்தை
வாங்குவதாக
இருந்தால்)
ஆகியவை.
இவற்றுடன்
முதலீட்டுக்கும்
பணம்
செலுத்துதலுக்கும்
ஒரு
அங்கீகரிக்கப்பட்ட
(நியமிக்கப்பட்ட)
முகவரை அணுக
வேண்டும்.
கே.16. கே.4, 15
ஆகியவற்றில்
குறிப்பிடப்படும்
மதிப்பீட்டு
விதிகள் எவை?
முதலீடு 5
மில்லியன்
அமெரிக்க
டாலருக்கு
மேலிருந்தால்
அதற்குரிய
மதிப்பீடு
செபி (SEBI) யால்
பதிவு
செய்யப்பட்ட
வகை ஒன்று
வணிக
வங்கியாளர்
அல்லது அந்த
நாட்டிலிருக்கும்
உரிய
அங்கீகரிக்கப்பட்ட
முகமையால்
பதிவு
செய்யப்பட்ட
வெளிநாட்டில்
உள்ள
முதலீட்டு
வங்கியாளர்/வணிக
வங்கியாளர்
ஆகியோரால்
செய்யப்பட
வேண்டும்.
மற்ற எல்லா
வகையிலும்
பட்டயக்
கணக்காளரால்/பொதுக்
கணக்காளரால்
மதிப்பீடு
செய்யப்படவேண்டும்.
இருப்பினும்
அந்த முதலீடு
பங்குகளைப்
பெறுவதற்காக
செய்யப்பட்டிருக்குமெனில்,
முதலீட்டிற்கான
தொகை
பகுதியாகவோ
முழுமையாகவோ
இந்திய
குழுவின்
பங்குகளை
அளிப்பதன் (SWAP)
மூலம்
கொடுக்கப்படுவதெனில்
எல்லா
வகையிலும்
அந்த
மதிப்பீடு
செபி (SEBI) யில்
பதிவு
செய்துள்ள வகை
1 வணிக
வங்கியாளர்
அல்லது
இந்தியாவுக்கு
வெளியில்,
வெளிநாட்டில்
உரிய அதிகார
அலுவலரிடம்
பதிவு பெற்ற
முதலீட்டு
வங்கியாளர்
அல்லது வணிக
வங்கியாளர்
ஆகியோரால்
மதிப்பீடு
செய்யப்படவேண்டும்.
கே.17. ODA
படிவம்
எங்குக்
கிடைக்கும்?
ODA படிவமும்,
வெளிநாட்டில்
நேரடி
முதலீட்டு
தொடர்புடைய
படிவங்களும்
‘படிவங்கள்’ (Forms)
என்னும்
தலைப்பில் http://fema.rbi.org.in
என்னும் இணைய
தள முகவரியில்
கிடைக்கும்.
கே.18.
நியமிக்கப்பட்டு
அங்கீகரிக்கப்பட்ட
முகவர்
என்னும்
கருத்து
கூறுவது யாது?
JV/WOS க்கு
ஒன்றுக்கு
மேற்பட்ட
இந்திய
நிறுவனர்
இருப்பின்
அந்த JV/WOS க்கு
ஒன்றுக்கு
மேற்பட்ட
நியமிக்கப்பட்ட
அங்கீகரிக்கப்பட்ட
முகவர்கள்
இருக்க
முடியுமா?
இந்திய
நபர் ஒரு
குறிப்பிட்ட
வெளிநாட்டு JV/WOS
தொடர்பான
எல்லா
பரிமாற்றங்களையும்
ஒரே ஒரு
அங்கீகரிக்கப்பட்ட
முகவரின் கிளை
வழியாகவே
செய்யவேண்டும்.
அந்த JV/WOS
தொடர்பாக
இந்தக் கிளையே
நியமிக்கப்பட்ட
அங்கீகரிக்கப்பட்ட
முகவராகும்.
அந்தக்
குறிப்பிட்ட
JV/WOS இல் முதலீடு
செய்வது
தொடர்பான
எல்லா
பரிமாற்றங்களும்
இந்த
நியமிக்கப்பட்ட
கிளையின்
அங்கீகரிக்கப்பட்ட
முகவர்
வழியாகவே
அறிவிக்கப்பட
வேண்டும்.
வெளிநாட்டில்
JV/WOS இரண்டு
அல்லது
இரண்டுக்கு
மேற்பட்ட
இந்திய
நிறுவனர்களால்
அமைக்கப்பட்டிருந்தால்,
அந்த எல்லா
இந்திய
நிறுவனர்களும்
சேர்த்து
இந்திய குழு
என
அழைக்கப்படுவர்.
அவர்கள் அந்த
JV/WOS தொடர்பான
எல்லா
பரிமாற்றங்களையும்
அந்த
நியமிக்கப்பட்ட
அங்கீகரிக்கப்பட்ட
முகவர்
வாயிலாகவே
அறிவிக்க
வேண்டும்.
கே.19. ஒரு
இந்திய
நிறுவனர் ஒரே
நாட்டில்
அல்லது
வெவ்வேறு
நாடுகளில்
ஒன்றுக்கு
மேற்பட்ட JV
வைத்திருந்தால்
என்ன செய்வது?
இந்திய
நிறுவனர்கள்
தங்களுடைய JV/WOS
ஒவ்வொன்றுக்கும்
அதே
அங்கீகரிக்கப்பட்ட
முகவரின்
பல்வேறு
கிளைகளையோ
அல்லது
பல்வேறு
அங்கீகரிக்கப்பட்ட
முகவரின்
பல்வேறு
கிளைகளையோ
நியமித்துக்
கொள்ள அனுமதி
உண்டு. ஒரே தேவை
என்னவெனில்
எத்தனை
நிறுவனர்கள்
என்பதைக்
கணக்கில்
கொள்ளாமல் ஒரு
JV/WOS க்கு ஒரு
நியமன
அங்கீகரிக்கப்பட்ட
முகவர்
மட்டுமே அதன்
பரிமாற்றங்களை
அறிவிப்பதற்கு
இருக்க
வேண்டும்.
கே.20.
நியமன
அங்கீகரிக்கப்பட்ட
முகவரை மாற்ற
முடியுமா?
முடியும்.
தொடர்புடைய,
ரிசர்வ்
வங்கியின்
வட்டார
அலுவலகத்துக்கு
கடிதம் மூலம்
ஒரு
விண்ணப்பம்
அனுப்பி
இதனைச்
செய்யலாம்.
கே.21.
தானியங்கு
முறைவழியின்
வாயிலாக நேரடி
முதலீட்டுக்கு
ரிசர்வ்
வங்கியிடம்
முன்பதிவு
ஏதேனும்
அவசியமா?
தானியங்குமுறை
வழியின் மூலம்
செய்யப்படும்
நேரடி
முதலீட்டுக்கு
ரிசர்வ்
வங்கியிடம்
முன்பதிவு
அவசியமில்லை.
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடமிருந்து
ரிசர்வ் வங்கி
ODA படிவத்தில்
பணம்
செலுத்துதல்/முதலீடு
ஆகியவற்றைப்
பற்றிய
அறிக்கையைப்
பெற்ற பின்னர்
இந்த அடையாளக்
குறியீட்டு
எண்
வெளிநாட்டு
முதலீட்டைக்
பதிவு செய்து
வெளிநாட்டு
நிறுவனத்தின
வெளிச்
செல்லும்/உள்வரும்
பணவரவுகளை
கண்காணிக்க
உதவும் தகவல்
தளத்தை
பராமரிக்கும்
பொருட்டு
அந்தக்
குறிப்பிட்ட
JV/WOS க்கு ஒரு
அடையாளக்
குறியீட்டு
எண்
வழங்கப்படும்.
அதே
திட்டத்தில்
தொடர்ந்து
முதலீடு
செய்தல்
வழங்கப்பட்ட
பின்னரே
இயலும்.
கே.22.
ரிசர்வ் வங்கி
தானியங்கு
முறை வழியில்
நேரடி
முதலீட்டுக்கு
ஒதுக்குவது
என்பது,
ரிசர்வ்
வங்கியின்
ஒப்புதலைக்
குறிக்கும்
என கொள்ளலாமா?
ரிசர்வ்
வங்கி
தானியங்கு
முறை வழியில்
நேரடி
முதலீட்டுக்கு
ஒரு அடையாளக்
குறியீட்டு
எண்ணை
ஒதுக்குவது JV/WOS
இல்
முதலீட்டைச்
செய்ததற்கோ/செய்வதற்கோ
உரிய ஒப்புதல்
ஆகாது.
அடையாளக்
குறியீட்டு
எண் வழங்குதல்
என்பது தகவல்
தளத்தினைப்
பராமரிப்பதற்காக
அந்த முதலீடு
பதிவுக்கு
எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது
என்பதை
மட்டுமே
குறிப்பிடுவதாகும்.
கே.23.
தானியங்கு
முறைவழியின்
கீழ் நேரடி
முதலீட்டுக்குத்
தடை ஏதேனும்
உண்டா?
உண்டு.
அமலாக்க
இயக்குநரகம்/மற்ற
துப்புதுலக்கும்
முகமைகள்/
நெறிப்படுத்தும்
அதிகார
அலுவலர்கள்
ஆகியோரின்
புலனாய்வுக்குக்
கீழ்
உள்ளவர்கள்
அல்லது
ரிசர்வ்
வங்கியின்
ஏற்றுமதியாளர்
எச்சரிக்கைப்
பட்டியல் CIBIL/RBI
ஆகியவற்றால்,
பதிப்பித்து
சுற்றுக்கு
விடப்படும்,
வங்கி
அமைப்பில்
பணம்
செலுத்தத்
தவறியோர்
பட்டியலில்
உள்ள இந்திய
நபர்கள்
ஆகியோர்
தானியங்கு
முறைவழியின்
மூலம் நேரடி
முதலீடு
செய்வதற்குத்
தகுதியில்லாதவர்கள்.
கே.24.
சாதாரண
முறைவழி எது?
சாதாரண
முறைவழியின்
கீழ் முதலீடு
செய்வதற்கு
உத்தேசித்திருந்தால்
அதற்குரிய
செயல்முறை
யாது?
தானியங்கு
முறை வழியின்
கீழ் வராத
புதுத்திட்டங்களுக்கு
ரிசர்வ்
வங்கியின்
முன் அனுமதி
தேவைப்படுகிறது.
அதற்கென்று
சிறப்பாக
உள்ள
விண்ணப்பத்தில்
குறிக்கப்பட்டுள்ள
ஆவணங்களுடன்
பின்வரும்
முகவரிக்கு
விண்ணப்பிக்க
வேண்டும்.
இந்திய
ரிசர்வ் வங்கி
அன்னியச்
செலாவணித்
துறை
வெளிநாட்டு
முதலீட்டுப்
பிரிவு
மத்திய
அலுவலகம்
அமர்
கட்டிடம், 3வது
மாடி
மும்பை-400 001.
கே.25.
சாதாரண
முறைவழியின்
கீழ்
புதுத்திட்டங்கள்
கருதப்
படுவதற்குரிய
அளவுகோல்கள்
எவை?
மற்றவற்றைக்
கருதுவதுடன்
முதலில்
அந்தப் புதிய
திட்டத்தின்
சாத்தியத்தன்மை,
நிறுவனர்களின்
வணிகச்
செயல்முறைப்பாடுகள்,
நிறுவனர்களின்
அனுபவமும்
நிபுணத்துவமும்,
நாட்டுக்கு
அதனால்
விளையும்
பயன்கள்
ஆகியவற்றைக்
கணக்கில்
கொண்டு
சாதாரண
முறையின் கீழ்
அவர்களது
வேண்டுகோள்
பரிசீலிக்கப்படும்.
கே.26. ஒரு
இந்தியக்
குழுமம்
வெளிநாட்டில்
JV/WOS இல் நிதிச்
சேவைப்
பிரிவில்
முதலீடு
செய்ய
முடியுமா?
நிதிப்
பிரிவுச்
செயல்பாடுகளில்
ஈடுபட்டுள்ள
ஒரு இந்தியக்
குழுமம்
மட்டுமே,
கீழ்வரும்
கூடுதலான
விதிகளை
நிறைவு
செய்தால்,
நிதிச் சேவைப்
பிரிவில்
முதலீடு
செய்ய
முடியும்.
i) கடந்த
மூன்று நிதி
ஆண்டுகளில்
நிதிச்
சேவைகளில்
நிகர இலாபம்
ஈட்டியிருந்தால்;
ii)
நிதிச்சேவைச்
செயல்களில்
ஈடுபடுவதற்கு
உரிய
நெறிப்படுத்தும்
அதிகார
ஆணையத்திடம்
பதிவு
செய்திருந்தால்;
iii)
இந்தியாவிலும்
வெளிநாட்டிலும்
உள்ள உரிய
நெறிப்படுத்தும்
அதிகார
ஆணையங்களிடம்
அத்தகைய
செயல்பாட்டுக்கு
உரிய
அனுமதியைப்
பெற்றிருந்தால்;
iv)
அதற்குரிய
நெறிப்படுத்தும்
அதிகார
ஆணையம்
விதித்துள்ள
முன்கவன
விதிகளுக்கு
ஏற்ப
இருந்தால்.
கே.27.
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
செய்வதில்
அனுமதிக்கப்படும்
நிதி
ஆதாரங்கள் எவை?
வெளிநாட்டில்
நேரடி
முதலீட்டினை
கீழ்க்காணும்
நிதி
ஆதாரங்கள்
மூலம்
செய்யலாம்.
1. இந்திய
நபர்
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடம்
பராமரித்து
வரும்
அன்னியச்
செலாவணி
ஈட்டுபவரின்
அன்னியப்
பணக்கணக்கில்
(EEFC) இருப்பு
உள்ள பணம்;
2. ADR/GDR போன்ற
இனங்களில்
விற்றுவரும்
பணம்;
3.
சந்தையில்
வாங்கப்பட்ட
அன்னியச்
செலாவணி;
4. பங்கு
மாற்று (வெளிநாட்டு
நிறுவனம்
இந்திய
நிறுவனத்துடன்
பங்குகளை
மாற்றிக்கொள்வதால்
பெறப்படுவதைக்
குறிக்கிறது);
5.
ஏற்றுமதிகள்,
ஆதாயப்பங்குகள்
போன்றவற்றை
மூலதனமாக்கல்.
6.
வெளிநாட்டில்
ECB/FCCB போன்றவற்றை
மேற்கொள்வதால்
கிடைக்கும்
பணங்கள்.
ஒரு
இந்திய
குழுவின்
நிகரமதிப்பைக்
கணக்கிடுவதற்கு
அதனை
வைத்துள்ள
இந்தியக்
குழுமத்தின்
நிகரமதிப்பு (இந்திய
குழுவின்
பங்கில்
குறைந்த
பட்சம் 51%
பங்கினை
வைத்துள்ளவர்)
அல்லது அதன்
கிளைக்
குழுமங்கள் (இந்திய
குழு
குறைந்தபட்சம்
51% பங்கினை
வைத்துள்ளவை)
கிளைக்குழுமமோ,
வைத்துள்ள
குழுமமோ,
தனியாக
பயன்படுத்தாத
அளவு மட்டும்,
மேலும்
இந்திய
குழுவிற்கு
சாதகமாக ஒரு
பொறுப்பேற்கா
கடிதத்தைக்
கொடுத்துள்ள
நிலையிலும்,
கணக்கில்
எடுத்துக்
கொள்ளப்படவேண்டும்.
எனினும் இந்த
வசதி
பங்குதாரர்
நிறுவனங்களுக்குக்
கிடையாது.
மேலும்
பங்குதாரர்
நிறுவனங்களின்
நிகரமதிப்பை
ஒரு
ஒன்றிணைந்த
நிறுவனம்
கணக்கில்
எடுத்துக்
கொள்ளக்கூடாது.
கே.28 ஒரு
இந்திய நபர்
தனது
அயல்நாட்டு
வணிக JV/WOS க்கு
ஏற்றுமதியால்
கிடைத்த முதலை
மூலதனமாக்க
முடியுமா?
முடியும்.
ஒரு இந்திய
நபர் தனது
அயல்நாட்டு
வணிக JV/WOS க்கு
ஏற்றுமதியால்
கிடைத்த முதலை
மூலதனமாக்குதல்,
அந்த
ஏற்றுமதியால்
பெற்ற முதல்
ஏற்றுமதி
செய்யப்பட்ட
நாளிலிருந்து
ஆறுமாதங்களுக்குமேல்
தீர்வாகாமல்
வைக்கப்படவில்லையெனில்
அப்போது
தானாகவே
இயங்கும்
வழிமுறைப்படி
அனுமதிக்கப்படுகிறது.
அத்தகைய
முதல்கள்
ரிசர்வ்
வங்கியின்
முன்
அனுமதியின்றி
முதலீடாக்க
இயலாது.
கே.29. ஒரு
இந்திய குழு
ஒரு
வெளிநாட்டு
அமைப்பிற்கு
அந்த
அமைப்பின்
பங்கு
முதலீட்டுப்
பங்கேற்பு
இல்லாமல்
கடனையோ அல்லது
பொறுப்புறுதியையோ
வழங்க
முடியுமா?
முடியாது.
நேரடி
முதலீட்டின்
மூலம் பங்கு
முதலீட்டுப்
பங்கேற்பு
ஏற்கெனவே
இருந்தால்
மட்டுமே
கடனையோ,
பொறுப்புறுதியையோ
ஒரு
வெளிநாட்டு
உரிமையகத்துக்கு
வழங்க
முடியும்.
கே.30. ஒரு
இந்திய
நிறுவனம்
பங்கு மாற்று
(SWAP) வழியாக ஒரு
வெளிநாட்டு
நிறுவனத்தில்
நேரடி முதலீடு
செய்ய
முடியுமா?
முடியும்.
இந்தியாவுக்கு
வெளியே JV/WOS இல்
பங்குமாற்று
ஏற்பாடு
மூலமாக நேரடி
முதலீட்டுக்குரிய
வேண்டுகோளை
தானியங்கி வழி
மூலம்
விடுக்க
முடியும்.
அதற்குரிய
வரையறுக்கப்பட்ட
மதிப்பீட்டு
விதிகளுக்கு
ஒத்திருந்தால்
அதாவது
பங்குகளின்
மதிப்பு
பத்திரங்கள்
மற்றும்
செலாவணி
வாரியத்தில் (SEBI)
வகை 1 இன் கீழ்
பதிவு
செய்யப்பட்டுள்ள
வணிக
வங்கியாளரால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும்,
அல்லது அந்த
வெளிநாட்டிலுள்ள
அதற்குரிய
ஒழுங்குமுறை
அதிகார
நிறுவனத்தில்
பதிவுபெற்ற
மூலதன
வங்கியாளர்/வணிக
வங்கியாளரால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும்.
இந்த
விதிகளுக்கு
உட்பட்ட
நிலையில்
உள்வரும்
முதலீட்டிற்கு
வளர்ச்சி
வாரியத்தின் (FIPB)
முன்
அனுமதியைப்
பெற்ற பின்னரே
பங்கு மாற்று
வகை முதலீடு
செய்ய இயலும்
என்பதை
முதலீட்டாளர்கள்
கவனத்தில்
கொள்ளவேண்டும்.
கே.31.
கூட்டாண்மை
நிறுவனங்கள்
வெளிநாட்டில்
நேரடி முதலீடு
செய்வதற்கு
உள்ள
செயல்முறைகள்
எவை?
நிறுவனங்களுக்குப்
பொருந்தக்கூடிய
அதே
விதிமுறைகளுக்கேற்ப,
இந்திய
கூட்டாண்மை
நிறுவனங்கள்
சட்டம் 1932இன்
கீழ் பதிவு
செய்து
கொண்டுள்ள
நிறுவனங்கள்
வெளிநாடுகளில்
நேரடி முதலீடு
செய்யலாம்.
கே.32.
நிறுவனத்துக்காகவும்,
நிறுவனத்தின்
சார்பாகவும்
பங்குதாரர்கள்
வெளிநாட்டு
நிறுவனங்களில்
பங்குகள்
வைத்துக்கொள்ள
முடியுமா?
அந்த
வெளிநாட்டின்
ஒழுங்குமுறை
விதிகளும்,
செயல்முறைத்
தேவைகளும்
அத்தகைய
முதலீட்டுப்
பங்குகளுக்கு
அதிகாரம்
வழங்கும்
பட்சத்தில்
தனிப்பட்ட
பங்குதாரர்கள்
நிறுவனத்துக்காகவும்
நிறுவனத்தின்
சார்பாகவும்
பங்குகள்
வைத்துக்கொள்வது
விதிமுறைகளுக்கு
ஏற்புடையதே.
ஆனால்
வெளிநாட்டு JV/WOS
க்கான நிதியை
அந்நிறுவனமே
அளிக்கவேண்டும்.
கே.33. ஒரு
இரண்டாம்
தலைமுறை
நிறுவனத்தை
அமைக்க
ஏதேனும்
தடைகள்
உள்ளனவா?
தானியங்கி
வழிமுறைகளின்கீழ்
அத்தகைய
கீழ்நிலை
சார்பு
நிறுவனங்களை
அமைக்க
முடியுமா?
தானியங்கி
வழிமுறைகளின்கீழ்
முதலீடுகளுக்கென
உள்ள மொத்த
வரம்பிற்குள்
வெளிநாட்டில்
JV/WOS
வைத்திருக்கும்
நிறுவனங்கள்
இரண்டாம்
தலைமுறை
நிறுவனங்களை (கீழ்நிலை
சார்பு
நிறுவனங்களை)
அமைப்பதற்குத்
தடைகள் இல்லை.
இருந்த
போதிலும்
நிதிப்பிரிவுச்
செயல்பாடுகளை
மேற்கொள்வதற்காக
கீழ்நிலை
சார்பு
நிறுவனங்களை
அமைக்க
விரும்பும்
நிறுவனங்கள்
நிதிப்பிரிவில்
நேரடி முதலீடு
செய்வதற்குரிய
கூடுதல்
விதிகளுக்கிணங்க
செய்யவேண்டும்.
கே.34.
தானியங்கி
வழிமுறையின்
கீழ்
தனிச்சிறப்பு
நோக்கச் சாதன (SPV)
அடிப்படையில்
ஒரு இந்திய
வணிக நபர் JV/WOS களை
வைத்துக்
கொள்ளலாமா?
ஆம்.
தனிச்சிறப்பு
நோக்குச்
சாதன (SPV) ஏற்பாட்டின்
மூலம்
வணிகநபர்
நேரடி முதலீடு
செய்வதை
தானியங்கி
வழிமுறை
அனுமதிக்கிறது.
கே.35. ஒரு
இந்திய குழு
அத்தகைய
சார்பு
நிறுவனங்களில்
நேரடியாக
முதலீடு
செய்தல்
இயலுமா?
தனிச்சிறப்பு
நோக்குச்
சாதன
அடிப்படையில்
JV/WOS ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பின்
அதன்மூலம்
இயங்கிக்கொண்டிருக்கும்
சார்பு
நிறுவனங்களின்
மூலமே முதலீடு
செய்ய
வேண்டும்.
ஆனால்
கீழ்நிலை
சார்பு
நிறுவனங்களுக்கு
பொறுப்புறுதி
அளிக்கும்போது
அதை அத்தகைய
வெளிப்படுநிலை
அனுமதிக்கப்பட்ட
நிதி
ஒப்படைப்பிற்குள்
இருக்குமெனில்
இந்திய
குழுவால்
நேரடியாக
தரலாம்.
கே.36.
வெளிநாட்டிலுள்ள
JV/WOS இன் பங்குகளை
நிதி
உதவிக்காக
குழு
அடகுவைக்கலாமா?
தொடர்புடைய
அந்த
நிறுவனத்துக்காகவோ
அல்லது JV/WOSக்காகவோ
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரிடமிருந்து
நிதிசார்ந்த
அல்லது
நிதிசாராத
வசதிகளைப்
பெறுவதற்காக
JV/WOS இன் பங்குகளை
அடகு
வைக்கலாம்.
கே.37.
இந்தியாக்கு
வெளியில்
நேரடி முதலீடு
செய்துள்ள
இந்திய
குழுவின்
கடமைப்
பொறுப்புகள்
எவை?
ஒரு
இந்திய குழு
பின்வருவனவற்றுக்கு
இணங்க
வேண்டும்.
-
ரிசர்வ்
வங்கி
ஏற்குமளவுக்கு
அந்த
வெளிநாட்டு
அமைப்பில்
பங்கு
மூலதனச்
சான்றிதழ்களையோ
அல்லது வேறு
ஆவணச்
சான்றுகளையோ
ஆறுமாத
காலத்துக்குள்
அவர்
பெறவேண்டும் .
தவறினால்
அவ்வாறு
பெறாததற்கு
உரிய
காரணங்களைக்
குறிப்பிட்டு,
பெறுவதற்குக்
கால
நீட்டிப்பு
கேட்டு
ரிசர்வ்
வங்கிக்கு
விண்ணப்பிக்க
வேண்டும்.
உரிய 60
நாட்கள்
தவணைக்
காலத்துக்குள்
அல்லது
ரிசர்வ் வங்கி
அனுமதிக்கும்
காலத்துக்குள்
வெளிநாட்டு
அமைப்பிலிருந்து
பெறவேண்டிய
ஆதாயப்பங்கு,
உரிமைத்தொகை,
தொழில்நுட்பக்கட்டணம்
போன்ற எல்லா
தொகைகளையும்
இந்தியவுக்குக்
கொண்டு
வரவேண்டும்.
இந்திய
குழுவால்
அமைக்கப்பட்ட
அல்லது
பெறப்பட்ட
வெளிநாட்டிலுள்ள
ஒவ்வொரு JV/WOS
தொடர்பாகவும்,
அந்த
வெளிநாட்டின்
JV/WOS
பற்றிய,
தணிக்கை
செய்யப்பட்ட
கணக்குகளை
இறுதி
செய்வதற்காக
விதிக்கப்பட்ட
சட்டங்களின்படி
APR
வடிவத்தில்
ஆண்டுச் செயல்
நிறைவேற்ற
அறிக்கையினை
கெடுக்காலம்
முடிந்த 60
நாள்களுக்குள்
ஒவ்வொரு
ஆண்டும்
ரிசர்வ்
வங்கிக்குச்
சமர்ப்பிக்க
வேண்டும்.
இந்த APR
யில்
கண்டிப்பாக
பின்வருவன
இணைக்கப்பட்டிருக்க
வேண்டும்.
-
ஆதாயப்
பங்கு,
உரிமைத் தொகை
போன்றவற்றை
உள்முகப்பணம்
செலுத்துதல்
வழி
செலுத்தியமைக்கான
FIRC யின்
நகல்கள்.
-
வெளிநாட்டு
நிறுவனத்தின்
தணிக்கை
செய்யப்பட்ட
நிதி அறிக்கை.
-
ஏற்றுமதிப்
பொருளைப்
பணமாக்கியதற்கான
சான்றாதாரமாக
பட்டயக்
கணக்காளரின்
சான்றிதழ்.
-
பணம்
தொடர்பான
செயல்களில்
கடந்த ஆண்டு
அந்த JV/WOS
ன்
முன்னேற்றம்,
பின்னடைவு,
செயல்
நிறைவேற்றமின்மைக்கான
காரணங்கள்
போன்றவற்றைத்
தெரிவிக்கும்
குறிப்பு ஒரு
வேளை அந்த
வணிக ஆக்க
முனைவோர்
குறித்த
காலத்தில் APR
சமர்ப்பிக்க
முடியவில்லை
எனில், அந்தத்
தவணை நாளில்,
உரிய
காரணங்களைத்
தெரிவித்து
கால
நீட்டிப்பு
வேண்டி
ரிசர்வ்
வங்கிக்கு
விண்ணப்பிக்க
வேண்டும்.
கே.38. APR
சமர்ப்பிக்காததற்கு
உரிய
தண்டனைகள் எவை?
அத்தகைய
அறிக்கைகளை
கால தாமதமாகச்
சமர்ப்பித்தல்/
சமர்ப்பிக்காமை
ஆகியவற்றை
ரிசர்வ் வங்கி
கருத்தூன்றிக்
கவனித்து,
அத்தகைய கடமை
தவறுவோர் மீது
FEMA, 1999இல்
விதித்துள்ளபடி
உரிய
நடவடிக்கை
எடுக்கும்.
கே.39. ஒரு
JV/WOS இல் உள்ள
முதலீடுகளைத்
திரும்பப்
பெறுவதற்கு
ரிசர்வ்
வங்கியின்,
முன் அனுமதி
தேவையா?
மற்றொரு
இந்தியருக்கு
விற்பதன்
மூலமோ (அத்தகைய
முதலீடுகளை
தானியங்கு
முறை வழியின்
கீழ் செய்ய
தகுதியானது)
அல்லது
வெளிநாட்டில்
வாழும்
ஒருவருக்கு
விற்பதன்
மூலமோ
கீழ்க்காணும்
நிபந்தனைகளுக்குட்பட்டு
செய்வதற்கு
ரிசர்வ்
வங்கியின்,
முன் அனுமதி
தேவையில்லை.
அ) அவ்வாறு
முதலீடுகளைத்
திரும்பப்
பெறுதல்
மூலதன
இழப்பில்
முடியாமல்
இருக்குமானால்
(இருப்பினும்
பட்டியலில்
வரும்
இந்தியக்
குழுமங்கள்
கடந்த
ஆண்டின்
ஏற்றுமதி
மூலம்
பெறப்பட்ட
தொகையில் 10% வரை
மூலதன இழப்பு
அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆ) அந்த
வெளிநாட்டு
அமைப்பு தனது
அனைத்து கடன்
நிலுவைகளையும்
திரும்ப
செலுத்தியிருக்கவேண்டும்.
இ) அந்த
வெளிநாட்டு
அமைப்பு
குறைந்தபட்சம்
ஓராண்டுக்கு
இயங்கி தனது
இந்நாள்
வரையுள்ள் APR ஐ
உரிய
ஆவணங்களுடன்
சமர்ப்பித்திருந்தால்
ஈ) அந்த
இந்திய குழு
எந்த ஒரு
புலனாய்வு/நெறிப்படுத்தும்
அமைப்பின்
விசாரணையின்
கீழ்
இல்லாமல்
இருந்தால்,
உ) அந்தப் JV/WOS
இன் பங்குகள்
எந்தப்பங்கு
மாற்றக்குழுவின்
கீழ்
பட்டியலிடப்பட்டுள்ளதோ
அதன் வழியாக
அந்த விற்பனை
செயல்படுத்தப்பட
வேண்டும்.
ஊ) அந்தப்
பங்குகள்
பங்கு
மாற்றக்குழுவில்
பட்டியலிடப்பட
வில்லையெனில்,
முதலீடுகளைத்
திரும்பப்பெறுவது
தனியார்
ஏற்பாட்டின்
மூலம்
செய்யப்பட்டால்,
அந்த விற்பனை
விலை பட்டயக்
கணக்காளர் /
சான்று
பெற்ற
பொதுக்கணக்காளர்/
பிரிவு 1 /SEBIயில்
பதிவு
செய்துள்ள
வணிக
வங்கியாளர்
ஆகியோருள்
ஒருவரால்
சான்றளிக்கப்பட்ட
மதிப்புக்குக்
குறையாமல்
இருந்தால்
மேலே
கூறப்பட்ட
நிபந்தனைகள்
ஒரு இந்திய
குழு
தன்னுடைய
இப்போதுள்ள JV/WOS
ஐ இறுதி செய்ய
/ மூடிவிட
நினைத்தாலும்
அதற்கும்
பொருந்தும்.
கே.40. அது
போன்று முதலீடுகளைத்
திரும்பப்
பெறுதல்
தொடர்பாக
பின்பற்ற
வேண்டிய
நடைமுறைகள்
எவை? JV/WOS இல்
இப்போதுள்ள
முதலீட்டுப்
பங்கினைத்
திரும்பப்
பெறுவதற்கு
என்னென்ன
ஆவணங்களைச்
சமர்ப்பிக்க
வேண்டும்.
அந்த
இந்திய நபர்
நியமிக்கப்பட்டு
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடம் /
ரிசர்வ்
வங்கியிடம் (அத்தீர்மானம்
அங்கீகரிக்கப்பட்ட
முகவரால்
ஏற்க
தகுதியற்றவை
எனில்)
கீழ்க்காணும்
ஆவணங்களைச்
சேர்த்து
விண்ணப்பிக்கலாம்.
1.
முதலீட்டைத்
திரும்பப்
பெறக்
காரணங்களைக்
குறிப்பிடும்
கடிதம்.
2. JV/WOS இன்
செயல்பாடுகள்
பற்றிய
அண்மைக்கால
ஆண்டுச்
செயல்
நிறைவேற்ற
அறிக்கை (ADR)
3.
முதலீடுகளைத்
திரும்பப்பெறும்
தீர்மானத்திற்கு
மன்றக்குழு
ஒப்புதல்
வழங்கியதன்
சான்றளிக்கப்பட்ட
உண்மை நகல்,
திரும்பப்பெறும்
தொகைக்குரிய
ஒப்புதலுடன்
சேர்த்து.
4.
வாங்குபவரிடமிருந்து
வாங்குவதற்குக்
கொடுக்கப்பட்ட
இசைவு கடிதம்
5.
வெளிநாட்டில்
உள்ள JV யாக
இருந்தால்
முதலீட்டைத்
திரும்பப்
பெறுவதற்கு
இசைவு
அளிக்கும்
பங்குதாரர்களின்
கடிதம்
6. JV/WOS இன்
பங்குகளின்
மதிப்பு
பற்றிய
மதிப்பீட்டுச
சான்றிதழ்.
7. JV/WOS
இடமிருந்து
இந்திய
நபருக்கு
பாக்கித்தொகை
எதுவும்
நிகழ்நிலுவையில்
இல்லை அல்லது
பாக்கியுள்ள
தொகை பற்றிய
விவரம்
ஆகியவற்றைப்
பற்றி
பட்டயக்
கணக்காளரின்
சான்றிதழ்.
கே.41.
இந்தியாவில்
வாழும்
தனிநபர்
ரிசர்வ்
வங்கியின்,
முன்அனுமதி
இல்லாமல்
வெளிநாட்டுப்
பங்குப்பத்திரங்களைப்
பெறவோ, விற்கவோ
முடியுமா?
பின்வரும்
வழிகளில்
இந்தியாவில்
வாழும்
தனிநபர்
வெளிநாட்டுப்
பங்குப்பத்திரங்களை
விற்கவோ / பெறவோ
முடியும்.
1)
வெளிநாட்டில்
உள்ள
ஒருவரிடமிருந்து
நன்கொடையாக
2)
இந்தியாவுக்கு
வெளியில்
அமைக்கப்பட்ட
குழுமம்
இந்தியாவிலிருந்து
பணம் எதுவும்
செலுத்தத்
தேவையில்லாத
வகையில், 'வேலைபார்ப்போருக்குரிய
பணமில்லா
பங்கு
விருப்பத்
திட்டத்தின்’
கீழ் ESOP
வழங்கும்
போது,
3) 51
விழுக்காட்டுக்குக்
குறையாமல்
வெளிநாட்டுச்
சரியொப்புப்
பங்குவைத்துள்ள
ஒரு இந்திய
குழுமம்
அல்லது
வெளிநாட்டுக்
குழுமத்தின்
கிளை
அலுவலகம்,
அல்லது
வெளிநாட்டுக்
குழுமத்தின்
இந்தியாவிலுள்ள
சார்பு
அலுவலகம்
ஆகியவற்றின்
இயக்குநர்
அல்லது
பணியாளர்களுக்கு
வழங்கப்படும்
ESOP வழியாக.
4)
இந்தியவில்
வாழும்
அல்லது
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவரிடமிருந்து
பரம்பரை
உரிமையாக
5) அன்னியச்
செலாவணி
மேலாண்மை (அன்னியப்
பணக்கணக்கு)
விதிகள், 2000இன்படி
பராமரிக்கப்படும்
இந்தியாவில்
வாழ்வோரின்
அன்னியப்
பணக்கணக்கிலிருந்து
வெளிநாட்டுப்
பத்திரங்களை
வாங்குதல்
வழியாக
6) முன்னரே
அவர்கள்
வைத்துள்ள
வெளிநாட்டுப்
பத்திரங்களுக்குரிய
ஆதாயப் பங்கு
/ உரிமைப்
பங்குகள்
வழியாக
7)
இந்தியாவிலுள்ள
அங்கீகரிக்கப்பட்ட
பங்குச்
சந்தையினால்
பட்டியலிடப்பட்ட
இந்தியக்
குழுமத்தில்
முதலீட்டு
ஆண்டின்
ஜனவரி முதல்
நாளன்று
குறைந்தபட்சம்
10 விழுக்காடு
பங்கினைப்
பெற்றுள்ள,
பட்டியலிடப்பட்ட
வெளிநாட்டுக்
குழுமங்களின்
பங்குகள்
வழியாக.
8) 8இல்
குறிப்பிட்டுள்ளபடி
குழுமங்களால்
வழங்கப்படும்
மதிப்பிடப்பட்ட
கடன்
பத்திரங்களின்
வழியாக.
கே. 42.
இந்திய
குழுமங்கள்
நேரடி முதலீடு
அல்லாத வேறு
வழிகளில்
வெளிநாட்டில்
முதலீடு
செய்யலாமா?
செய்யலாம்.
முதலீட்டு
ஆண்டின் ஜனவரி
முதல் நாளன்று
இந்தியாவிலுள்ள
அங்கீகரிக்கப்பட்ட
பங்குச்
சந்தையின்
பட்டியலிலுள்ள
இந்தியக்
குழுமத்தில்
குறைந்த
பட்சம் 10
விழுக்காடு
பங்கினைப்
பெற்றுள்ள,
அங்கீகரிக்கப்பட்ட
பங்குச்
சந்தையின்
பட்டியலிலுள்ள
வெளிநாட்டுக்
குழுமங்களில்
இந்திய,
பட்டியலிடப்பட்ட
குழுமங்கள்
தங்கள் நிகர
மதிப்பில் 25
விழுக்காடு
வரை முதலீடு
செய்யலாம்
அல்லது அதே
குழுமங்களால்
வழங்கப்படும்
மதிப்பிடப்பட்ட
கடன்
பத்திரங்கள்
வழியாக
முதலீடு
செய்யலாம்.
இருப்பினும்
அந்த 10
விழுக்காடு
முதலீட்டுப்
பங்குகள்
நேரடி
முதலீட்டுப்
பங்காக
இருக்க
வேண்டும். துணை
நிறுவனம்
மூலமானதாகவோ
அல்லது SPV
மூலமானதாகவோ
இருக்கக்
கூடாது.
கே. 43.
ஒருவர்
வெளிநாட்டுக்
குழுமம்
ஒன்றினை
வாங்குவதற்கு
வேறு
வழிவகைகள்
உள்ளனவா?
உள்ளன.
முதலீடுகள் AP (DIR
தொடர்)
சுற்றறிக்கை
எண் 64, பிப்ரவரி
4, 2000 இன்படி
பொருத்தமாக
இருக்கும்
எனில்
இந்தியாவில்
தங்கியுள்ள
தனிநபர்கள்
வெளிநாட்டுப்
பங்குகளில்
ஆண்டுக்கு 25,000
அமெரிக்க
டாலர் வரை
முதலீடு
செய்யலாம்.
கேள்வி 41 இன்
பதிலில் 8 பகுதி
இதற்குப்
பொருந்தாது.
அன்னியச்
செலாவணி
வெளிச்
செல்லுதல்
இருக்குமானால்,
சொல்லப்பட்ட
சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்ட
தேவைகளைத்
தெரிவித்து
இந்தியக்
குழுமங்கள்
வெளிநாடுகளில்
அமைத்துள்ள JV/WOS
களின்
பங்குகளில்
கூட அத்தகைய
முதலீட்டைச்
செய்யலாம்.
கே. 44.
இயக்குநர்
என்ற முறையில்
இந்தியாவில்
தங்கியுள்ள
ஒருவர்
வெளிநாட்டுக்
குழுமத்தின்
பங்குகளைப்
பெற முடியுமா?
அத்தகைய
பங்குகள்
குழுமத்தின்
செலுத்தப்பட்ட
பங்குகளில் 1
விழுக்காட்டுக்கு
மிகாமலும்,
அத்தகைய
பங்குகளில்
செலுத்தப்படும்
தொகை ஒரு
காலண்டர்
ஆண்டில் 20,000
அமெரிக்க
டாலருக்கு
மிகாமலும்
இருக்குமானால்
இயக்குநர்
பதவியில்
இருப்பதற்குத்
தகுதி பெறத்
தேவையான
குறைந்த
எண்ணிக்கையிலான
பங்குகளை
இந்தியாவில்
தனிநபர்
பெறுவதற்கு
ரிசர்வ் வங்கி
பொது அனுமதி
அளித்துள்ளது.
கே 45.
இந்தியாவில்
தங்கியுள்ள
தனிநபர் தான்
வைத்துள்ள
பங்குகளின்
உரிமைப்பங்கு
வெளியீட்டில்
தொகை
வாங்கலாமா?
ஆம். அவர்
வைத்துள்ள
பங்குகள்
சட்டத்துக்குப்
பொருந்தும்
வகையில்
வைத்துள்ளார்
எனில்
இந்தியாவுக்கு
வெளியில்
உள்ள குழுமம்
வெளியிடும்
உரிமைப்பங்குகளின்
வழியாக
இந்தியாவில்,
தங்கியுள்ள
ஒருவர்
வெளிநாட்டுப்
பங்குகளைப்
பெறலாம்.
கே. 46.
மென்பொருள்
துறையில்
ஈடுபட்டுள்ள
ஒரு இந்திய
குழுமத்தில்
பணிசெய்வோர் /
இயக்குநர்கள்
அவர்களுடைய
வெளிநாட்டிலுள்ள
JV/WOS இன்
பங்குகளைப்
பெறுவதற்கு
ஏதாவது
விதிகளில்
சலுகை உள்ளதா?
ஆம்.
மென்பொருள்
துறையில்
ஈடுபட்டுள்ள
ஒரு இந்திய
தொழில்
மேம்பாட்டுக்
குழுமத்தின்
பணிசெய்வோர் /
இயக்குநர்களின்
விண்ணப்பித்தலின்பேரில்
கீழ்க்காணும்
நிபந்தனைகளுடன்
ரிசர்வ் வங்கி,
வெளிநாட்டிலுள்ள
JV/WOS இன்
பங்குகளைப்
பெறுவதற்கு
அனுமதிக்கிறது.
1. ஒரு
பணியாளர்,
பங்குகளை
வாங்க
தரப்படும்
தொகை, 5
காலண்டர்
ஆண்டுத்
தொகுப்பில்
10,000 அமெரிக்க
டாலரோ அல்லது
அதற்கு
சமமான
தொகைக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
2. அந்த JV/WOS ன்
செலுத்தப்பட்ட
முதலீட்டின்
மதிப்பில் 5
விழுக்காட்டுக்கு
மிகாமல்
அந்தக்
குழுமத்தின்
பணியாளர்கள்
/ நிறுவனர்கள்
ஆகியோர்
பெறும்
பங்குகளின்
மதிப்பு
இருக்கும்
போது
3. பங்குகள்
ஒதுக்கப்பட்ட
பிறகு, அந்த
இந்திய
தொழில்மேம்பாட்டுக்
குழுமம்
வைத்துள்ள
பங்குகளின்
விழுக்காடு
அதனுடைய
பணியாளர்களுக்கு
ஒதுக்கியுள்ள
பங்குகளையும்
சேர்த்து,
பங்குகளை
ஒதுக்குவதற்கு
முன் அந்தக்
குழுமம்
வைத்திருந்த
பங்குகளின்
விழுக்காட்டுக்குக்
குறையாமல்
இருக்குமானால்
மேலும்,
மென்பொருள்
துறைகளில்
ஈடுபட்டுள்ள
இந்தியக்
குழுமத்தின்
இந்தியாவில்
குடியிருக்கும்
பணிபுரிவோர், (பணிசெய்யும்
இயக்குநர்களையும்
சேர்த்து)
அவர்கள்
வாங்கும்
பங்குகளின்
மதிப்பு ஒரு 5
காலண்டர்
ஆண்டுத்
தொகுப்பில் 50,000
அமெரிக்க
டாலர்கள்
அல்லது அதற்கு
சமமான
தொகைக்கு
மிகாமல்
இருக்கும்
பட்சத்தில் ADR/GDR
இணைந்த பங்கு
விருப்பத்திட்டத்தின்
கீழ்
வெளிநாட்டுப்
பத்திரங்களை
வாங்குவதற்குக்
விண்ணப்பித்தால்
அதனை ரிசர்வ்
வங்கி
அனுமதிக்கும்.
|