இந்தியாவுக்கு
வெளியே
தங்கியுள்ள
ஒருவர்
அசையாச்
சொத்தினை
இந்தியாவில்
பெறுதலும்
அதனை
மாற்றுதலும்
அந்நியச்
செலாவணித்துறை/அந்நிய
முதலீட்டுப்
பிரிவு
அடிக்கடி
கேட்கப்படும்
வினாக்கள் (அ
கே வி)
இந்தியாவுக்கு
வெளியே
தங்கியுள்ள
ஒருவர்
அசையாச்
சொத்தினை
இந்தியாவில்
பெறுதலும்
அதனை
மாற்றுதலும்
அந்நியச்
செலாவணிச்சட்டம்,
1999இல் உள்
ஏற்பாடுகளின்படி
இந்தியாவுக்கு
வெளியே
தங்கியுள்ள
ஒருவர்
அசையாச்
சொத்தினை
இந்தியாவில்
பெறுதலும்
அதனை
மாற்றுதலும்
பற்றிய
பல்வேறு
நடைமுறைகளைப்
பற்றித்
தெரிவிக்கும்
வகையில்,
தொடர்புடைய
அனைவரது
தகவலுக்காகவும்
ஒரு அகேவி(FAQ)
தொகுப்பு
தயாரிக்கப்
பட்டுள்ளது.
வெளிநாடு வாழ்
இந்தியர்,
இந்திய
வம்சாவளியினர்
வெளிநாட்டவர்,
(PIO), இந்திய
வம்சாவளி
அல்லாத
வெளிநாட்டவர்,
இந்தியாவில்
வாழும்
இந்தியக்
குடிமகன்
அல்லாதவர்
ஆகியோர்
இந்தியாவில்
அசையாச்
சொத்துக்களை
பெறுதலும்
மாற்றுதலும்
பற்றிய
பரவலான
நடைமுறைகளை
இந்த அகேவி(FAQ)
உள்ளடக்க இது
முயல்கிறது.
இந்த அ.கே.வி.
ஒருவேளை வேறு
ஏதேனும்
பிரச்சனைகள்
தீர்க்கப்பட
வேண்டியிருந்தால்
தலைமைப் பொது
மேலாளர்,
இந்திய
ரிசர்வ் வங்கி,
அந்நிய
முதலீட்டுப்
பிரிவு,
மத்திய
அலுவலகம்,
மும்பை 400001 என்ற
முகவரிக்குத்
தொடர்பு
கொள்ளலாம்.
இந்த
அகேவி(FAQ)
பின்வரும்
தலைப்புகளை
உள்ளடக்கியது.
1. இந்திய
ரிசர்வ்
வங்கியால்
வெளியிடப்பட்ட
விதிமுறைகள்
அறிவுறுத்தல்கள்
2. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
வாங்குவதன்
மூலம்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினைப்
பெறுதல்.
3. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
உள்ள ஒருவர்
நன்கொடையாக
இந்தியாவில்
அசையாத்
சொத்தினை
அடைதல்.
4. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
உள்ள ஒருவர்
பரம்பரை
உரிமையாக
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
அடைதல்.
5. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
விற்றலின்
மூலம்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
மாற்றதல்.
6. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
நன்கொடையாக
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
மாற்றுதல்.
7. இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
தங்குமிடம்/
வணிகச்
சொத்து
ஆகியவற்றை
அடகுவைப்பதன்
மூலம்
மாற்றுதல்.
8. வெளிநாடு
வாழ்
இந்தியர்/இந்திய
வம்சாவளி
வெளிநாட்டினர்
தங்குமிடம்/வணிகச்
சொத்து
வாங்கும்போது
பணம்
செலுத்தும்
முறை.
9. வெளிநாடு
வாழ்
இந்தியர் /
இந்திய
வம்சாவளி
வெளிநாட்டினர்
தங்களால்
வாங்கப்பட்ட
தங்குமிடம்/வணிகச்
சொத்து
விற்கும்
போது அந்தப்
பணத்தைத்
தாங்கள்
வாழும்
நாட்டுக்குக்
கொண்டு
செல்லும்முறை.
10. வெளிநாடு
வாழ்
இந்தியர் /
இந்திய
வம்சாவளி
வெளிநாட்டினர்
நன்
கொடையாகப்
பெற்ற
தங்குமிடம்/வணிகச்
சொத்து
விற்கும்
போது பணம்
செலுத்ததல்.
11. இந்தியாவுக்கு
வெளியில்
வாழ்பவர்
பரம்பரை
உரிமையாகப்
பெற்ற
அசையாச்
சொத்னை
விற்ற
பணத்தினைச்
செலுத்துதல்.
12. இந்தியாவில்
அனுமதிக்கப்பட்ட
ஒரு செயலைச்
செய்வதற்காக
அசையாச்
சொத்தினைப்
பெறுதல்.
13. அயல்நாட்டுத்தூதரகங்கள்
/ அரசியல்
வல்லுநர்கள்
/ தலைமைத்
தூதர்கள்
போன்றோர்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினைப்
பெறுதல் /
மாற்றுதல்.
14. மற்ற
நடைமுறைகள்.
I.
இந்திய
ரிசர்வ்
வங்கியால்
வெளியிடப்பட்ட
விதிமுறைகள்
/ அறிவுறுத்தல்கள்
கே.1.
இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
இந்தியாவில்
அசையாச்
சொத்துக்களைப்
பெறுதலும்,
மாற்றுதலும்
பற்றிய
இந்திய
ரிசர்வ் வங்கி
வெளியிட்ட
விதிமுறைகள் /
அறிவுறுத்தல்களை
எங்கே காணலாம்?
இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
இந்தியாவில்
அசையாச்
சொத்துகளைப்
பெறுதலும்
மாற்றுதலும்
பற்றிய
விதிமுறைகள்
இந்திய
ரிசர்வ் வங்கி
(RBI) அறிவிக்கை
எண் FEMA 21/2000 RB நாள்
மே 3, 2000
திருத்தப்பட்ட
அறிவிக்கை எண்.
FEMA 64/2000 RB நாள் ஜுன் 29,
2002, அறிவிக்கை
எண் FEMA 65/2000 RB நாள்
ஜுன் 29,2002,
அறிவிக்கை எண்
FEMA 93/2000 RB நாள் ஜுன்
6,2003, மேலும் A.
சுற்றிக்கைகள்
வடிவில்
வெளியிடப்பட்ட
தொடர்புடைய
கலந்து
உரையாடல்கள்
(DIR தொடர்கள்)
ஆகியவற்றில்
உள்ளன. இவை
இந்திய
ரிசர்வ் வங்கி
(RBI) யின்
இணையதளம் www.fema.rbi.org.in
இல் காணலாம்.
II.
இந்தியாவுக்கு
வெளியில்
தங்கியுள்ள
ஒருவர்
வாங்குவதன்
மூலம்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
அடைதல்.
கே.2.
நடைமுறையிலுள்ள
அந்நியச்
செலாவணி
விதிமுறைகளின்
கீழ்
இந்தியாவில்
அசையாச்
சொத்துகளை
வாங்குவதற்கு
யாருக்கு பொது
அனுமதி உள்ளது?
இந்தியாவுக்கு
வெளியில்
வாழ்கிற
இந்தியக் குடி
மகனுக்கு (NRI)
அல்லது
வெளிநாட்டில்
வாழ்கிற
இந்திய
வம்சாவளியினருக்கு
தங்குமிடம் /
வணிகச் சொத்து
வாங்குவதற்கு
மட்டும் பொது
அனுமதி உள்ளது.
கே.3.
இந்திய
வம்சாவளியினர்
என்பவர் யார்?
இந்தியாவில்
அசையாச்
சொத்தினைப்
பெறுவதற்கு
அல்லது
மாற்றுவதற்கு
இந்திய
வம்சாவளியினர்
(PIO) எனப்படுபவர்
(பாகிஸ்தான்,
பங்களாதேஷ்,
இலங்கை,
ஆப்கானிஸ்தரன்,
சைனா, நேபாளம்,
பூட்டான்
ஆகிய
நாடுகளில்
குடிமகனாக
அல்லாதவர்). 1.
எப்போதாவது
இந்திய கடவுச்
சீட்டினைக்(Pass
Port)
கொண்டிருந்திருக்க
வேண்டும். 2.
அல்லது
அவருடைய தந்தை
அல்லது
பாட்டனார்
இந்திய
அரசியல்
சட்டத்தின்
படியோ அல்லது
குடிமக்கள்
சட்டம் 1955 (57 - 1955)
இன்படியோ
இந்தியக்
குடிமகனாக
இருக்கவேண்டும்.
கே.4. பொது
அனுமதியின்
கீழ்
தங்குமிடம் /
வணிகச்
சொத்தினை
வாங்கிய ஒரு
வெளிநாடு வாழ்
இந்தியர் (NRI)
இந்திய
வம்சாவளியினர்
(PIO) இந்திய
ரிசர்வ்
வங்கியிடம்
ஆவணங்கள்
எதனையும்
சமர்ப்பிக்க
வேண்டுமா?
பொது
அனுமதியின்
கீழ்
தங்குமிடம் /
வணிகச்
சொத்தினை
வாங்கிய NRI/PIO
ரிசர்வ்
வங்கியிடம்
எந்த
ஆவணத்தையும்
அளிக்கவேண்டிய
தேவை இல்லை.
கே.5. பொது
அனுமதியின்
கீழ் ஒரு
தங்குமிடம் -
வணிகச் சொத்து
இத்தனை தான்
வாங்க
வேண்டும்
என்று வரையறை
ஏதும் உள்ளதா?
NRI/PIO
தங்குமிடம் -
வணிகச் சொத்து
வாங்குவதில்
எண்ணிக்கை
வரையறை
ஏதுமில்லை.
கே.6. NRI/PIO
வாங்கிய
தங்குமிடம் -
வணிகச்
சொத்தில்
இந்திய
வம்சாவளி
அல்லாத ஒரு
வெளிநாட்டினரின்
பெயரை
இரண்டாவது
உரிமையாளராகச்
சேர்க்க
முடியுமா?
முடியாது.
கே.7.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
இந்திய
வம்சாவளி
அல்லாத
வெளிநாட்டினர்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
வாங்குவதன்
மூலம்
பெறமுடியுமா?
முடியாது.
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டம், 1999
பிரிவு 2 (Z)
இன்படி
மாற்றுதல்
என்பது மற்றவை
அல்லாமல்
வாங்குவதையும்
குறிக்கும்.
எனவே
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
வாங்குவதன்மூலம்
அசையாச்
சொத்தினைப்
பெறமுடியாது.
கே.8.
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டவர்
தங்குமிடத்தினைக்
குத்தகைக்குப்
பெறமுடியுமா?
முடியும்.
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
ஒருவர் (பாகிஸ்தான்,
பங்காளதேஷ்,
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
சீனா, ஈரான்,
நேபாளம்,
பூடான் ஆகிய
நாட்டின்
குடிமகன்களையும்
சேர்த்து)
தங்குமிடத்தை
மட்டும் ஐந்து
வருடங்களுக்கு
உட்பட்ட
குத்தகைக்குப்
பெற முடியும்.
அதற்கு அவர்/அவள்
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன்
அனுமதியைப்
பெற
வேண்டியதில்லை.
கே.9.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
(அதாவது NRI
அல்லது PIO
அல்லது
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்)
வேளாண் நிலம்/தோட்டச்சொத்து/
பண்ணை வீடு
ஆகியவற்றை
வாங்குவதன்
மூலம் பெற
முடியுமா?
முடியாது.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழ்பவர்
இந்தியாவில்
விவசாய நிலம்/தோட்டச்
சொத்து/பண்ணை
வீடு
ஆகியவற்றை
வாங்குவதன்
மூலம் பெற
முடியாது.
III.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவர்
நன்கொடையாக
இந்தியாவில்
அசையாச் சொத்தினைப்
பெறுதல்.
கே.10.
இந்திய
வம்சாவளி
வெளிநாட்டினர்/வெளிநாட்டில்
வாழும் ஒரு
இந்தியர்
நன்கொடையின்
மூலம்
இந்தியாவில்
தங்குமிடம்/
வணிகச்சொத்தினை
பொது
அனுமதியின்கீழ்
பெறமுடியுமா?
முடியும்.
பொது
அனுமதியின்
கீழ் NRI / PIO
ஆகியோர்
தங்குமிடம் -
வணிகச் சொத்து
ஆகியவற்றினை
இந்தியாவில்
வாழும்
ஒருவரிடமிருந்தோ
அல்லது NRI / PIO
விடமிருந்தோ
நன்கொடை மூலம்
பெறமுடியும்.
கே.11.
வெளிநாட்டில்
வாழும்
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
நன்கொடையின்
மூலமாக
இந்தியாவில்
தங்குமிடம் -
வணிகச் சொத்து
பெறமுடியுமா?
முடியாது.
அந்நியச்
செலாவணிச்சட்டம்,
1999 பிரிவு 2(ZE)
ன்கீழ் ‘மாற்றுதல்’
என்பது
மற்றவற்றினுடன்
நன்கொடையையும்
உள்ளடக்கியது.
எனவே
வெளிநாட்டில்
வாழும்
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
இந்தியாவில்
தங்குதிடம் -
வணிகச் சொத்து
ஆகியவற்றை
நன்கொடையின்
மூலமாகப்
பெறமுடியாது.
கே.12.
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
(அதாவது NRI
அல்லது PIO
அல்லது
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டவர்)
நன்கொடையாக
வேளாண் நிலம் -
தோட்டச்
சொத்து -
பண்ணைவீடு
ஆகியவற்றைப்
பெற முடியுமா?
முடியாது.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
விவசாய நிலம் -
தோட்டச்
சொத்து - பண்ணை
வீடு
ஆகியவற்றை
நன்கொடையாகப்
பெறமுடியாது.
IV
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
பரம்பரை
உரிமையின்
மூலம் அசையாச்
சொத்தினைப்
பெறுதல்.
கே.13.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
(அதாவது NRI
அல்லது PIO
அல்லது
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்)
இந்தியாவில்
வாழும்
ஒருவரிடமிருந்து
பரம்பரை
உரிமையின்படி
பெற்ற அசையாச்
சொத்தினை
வைத்திருக்க
முடியுமா?
முடியும்.
அந்நியச்
செலாவணிச்
சட்டம், 1999
பிரிவு 6(5) ன்
கீழ்
இந்தியாவில்
வாழும்
ஒருவரிடமிருந்து
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
பரம்பரை
உரிமையின்படி
பெற்ற அசையாச்
சொத்தினை
வைத்திருக்கலாம்.
கே.14.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
(அதாவது NRI / PIO
அல்லது
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்)
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவரிடமிருந்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்று
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
வைத்திருக்க
முடியுமா?
பரம்பரை
உரிமையின்
வாயிலாக
அத்தகைய
சொத்தினை
அளிப்பவர்
அந்தச்
சொத்தினைப்
பெற்றபோது FEMA
விதிமுறைகளின்
கீழ் உள்ள
அந்நியச்
செலாவணிச்
சட்டத்தின்படி
அதனைப்
பெற்றிருந்தார்
எனில்,
இதற்காக
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
அனுமதியைப்
பெற்ற பிறகு
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
பரம்பரை
உரிமையின்
வளியாகப்
பெற்ற எந்த
அசையாச்
சொத்தினையும்
வைத்திருக்க
முடியும்.
V.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவர்
விற்பதன்
மூலம்
அசையாச்
சொத்தினை
மாற்றுதல்.
கே.15.
பொது
அனுமதியில்
உள்ளபடி ஒரு NRI
தன்னுடைய
தங்குமிடம்/
வணிகச்
சொத்தினை
விற்பதன்
மூலம்
யாருக்கு
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
NRI
இந்தியாவிலுள்ள
தன்னுடைய
தங்குமிடம்/வணிகச்
சொத்தினை
இந்தியாவில்
வாழ்பவருக்கு
அல்லது NRI க்கு
அல்லது PIO
க்கு
விற்பதன்மூலம்
மாற்றுதல்
செய்யமுடியும்.
கே.16.
பொது
அனுமதியில்
உள்ளபடி ஒரு PIO,
விற்பதன்
மூலம்
யாருக்கு
தன்னுடைய
தங்குமிடம்/வணிகச்
சொத்தினை
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
PIO தன்னுடைய
இந்தியாவில்
உள்ள
தங்குமிடம் -
அசையாச்
சொத்தினை ஒரு
இந்தியாவில்
வாழ்பவருக்கே
விற்பதன்மூலம்
மாற்றுதல்
செய்ய
முடியும்.
கே.17. ஒரு
PIO தன்னுடைய
தங்குமிடம்/அசையாச்
சொத்தினை
விற்பதன்மூலம்
ஒரு NRI அல்லது PIO
வுக்கு
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
முடியாது.
தங்குமிடம் -
அசையாச்
சொத்தினை
விற்பதன்மூலம்
ஒரு NRI அல்லது PIO
வுக்கு
மாற்றுதல்
செய்ய ரிசர்வ்
வங்கியின்,
முன்
அனுமதியைக்
கேட்க
வேண்டும்.
கே.18.
இந்திய வம்சா
வளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
இந்தியாவில்
வாழ்ந்தாலும்,
இந்தியாவுக்கு
வெளியில்
வாழ்ந்தாலும்,
ரிசர்வ்
வங்கியிடம்
சிறப்பு
அனுமதியுடன்
பெற்ற
தங்குமிடச்
சொத்தினை
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
அல்லது
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவருக்கு
விற்பதன்
மூலம்
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
முடியாது.
ஒரு
வெளிநாட்டினர்
அல்லது
இந்திய வம்சா
வளியினர்
அல்லாதவர்
இந்தியாவில்
வாழ்ந்தாலும்
இந்தியாவுக்கு
வெளியில்
வாழ்ந்தாலும்,
ரிசர்வ்
வங்கியிடம்
சிறப்பு
அனுமதியுடன்
பெற்ற
தங்குமிடச்
சொத்தினை
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
அல்லது
வெளியில்
வாழும்
ஒருவருக்கு
விற்பதன்
மூலம்
மாற்றுதல்
செய்வதற்கு
ரிசர்வ்
வங்கியின்
முன்
அனுமதியைக்
கேட்க
வேண்டும்.
கே.19.
உள்ள பொது
அனுமதியின்படி
NRI/PIO தனது வேளாண்
நிலம்/ தோட்டச்
சொத்து/பண்ணைவீடு
ஆகியவற்றை
விற்பதன்மூலம்
யாருக்கு
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
உள்ள பொது
அனுமதியின்படி
NRI / PIO தனது
இந்தியாவிலுள்ள
விவசாய நிலம் -
தோட்டச்
சொத்து - பண்ணை
வீடு
ஆகியவற்றை
இந்தியாவிலுள்ள
ஒரு இந்தியக்
குடிமகனுக்கு,
விற்பதன்
மூலம்
மாற்றுதல்
செய்ய
முடியும்.
கே.20.
இந்திய வம்சா
வளியினர்
அல்லாத
வெளிநாடு வாழ்
வெளிநாட்டினர்
தன்னால்
பெறப்பட்ட
தனது வேளாண்
நிலம் –
தோட்டச்
சொத்து - பண்ணை
வீடு
ஆகியவற்றை
விற்பதன்
மூலம் மாறுதல்
செய்ய
முடியுமா?
இந்திய
வம்சா
வளியினர்
அல்லாத
வெளிநாடு வாழ்
வெளிநாட்டினர்
ஒருவர் வேளாண்
நிலம் -
தோட்டச்சொத்து
- பண்ணைவீடு
ஆகியவற்றை,
விற்பதன்
மூலம் மாறுதல்
செய்வதற்கு,
ரிசர்வ்
வங்கியிடம்,
முன்கூட்டியே
ஒப்புதல்
பெறவேண்டும்.
VI. வெளிநாட்டில்
வாழும்
ஒருவர்
இந்தியாவிலுள்ள
அசையாச்
சொத்தினை
நன்கொடை
மூலம்
மாற்றுதல்.
கே.21.
உள்ள பொது
அனுமதியின்
படி, NRI/PIO தனது
குடியிருப்பு
/ வணிகச்
சொத்து
ஆகியவற்றை
நன்கொடையாக
மாறுதல்
செய்யலாமா?
உள்ள பொது
அனுமதியின்படி
NRI/PIO
இந்தியாவிலுள்ள
தங்குதிடம் -
வணிகச் சொத்து
ஆகியவற்றை
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
அல்லது NRIக்கு
அல்லது PIOவுக்கு
நன்கொடையாக
வழங்குதன்
மூலம், மாறுதல்
செய்தல்
முடியும்.
கே.22.
உள்ள பொது
அனுமதியின்படி
NRI/PIO தனது விவசாய
நிலம் - தோட்டச்
சொத்து -
பண்ணைவீடு
ஆகியவற்றை
யாருக்கு
நன்கொடையாக
மாற்றுதல்
செய்ய
முடியும்?
உள்ள பொது
அனுமதியின்படி
NRI/PIO தனது விவசாய
நிலம் /
தோட்டச்சொத்து
/பண்ணைவீடு
ஆகியவற்றை
நன்கொடையாக
அளிப்பதன்
மூலம், ஒரு
இந்தியக்குடி
மகனுக்கு
மாற்றுதல்
செய்ய
முடியும்.
கே.23.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்,
தன்னால்
பெறப்பட்ட
இந்தியாவிலுள்ள
வேளாண் நிலம் -
தோட்டச்சொத்து
- பண்ணை வீடு
ஆகியவற்றை
நன்கொடையின்
மூலம்
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
முடியாது.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
இந்திய
வம்சாவளியனர்
அல்லாத
வெளிநாட்டினர்
இந்தியாவில்
உள்ள தன்னால்
பெறப்பட்ட
வேளாண் நிலம் -
தோட்டச்சொத்து
- பண்ணை வீடு
ஆகியவற்றை,
நன்கொடையின்
மூலம்
மாற்றுதல்
செய்ய, ரிசர்வ்
வங்கியின்
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டும்.
VII. இந்தியாவில்
உள்ள
தங்குமிடம் /வணிகச்சொத்தினை
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
அடகு வைப்பதன்
மூலம்
மாற்றுதல்
கே.24. NRI/PIO
தன்னுடைய
தங்குமிடம் -
வணிகச்
சொத்தினை ஒரு
அங்கீகரிக்கப்பட்ட
முகவர் -
வீட்டுவசதி
நிறுவனம்
இவற்றிடம்,
அடகுவைப்பதன்
மூலம்,
மாற்றுதல்
செய்யலாமா?
செய்யலாம்.
கே.25. NRI/PIO தன்னுடைய
இந்தியாவிலுள்ள
தங்குமிடம் -
வணிகச்
சொத்தினை
வெளிநாட்டிலுள்ள
ஒருவருக்கு
அடகு வைப்பதன்
மூலம்
மாற்றுதல்
செய்யலாமா?
முடியாது.
அவர் ரிசர்வ்
வங்கியின்,
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டும்.
கே.26.
இந்தியாவில்
வாழும் அல்லது
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
இந்திய வம்சா
வளியல்லாத ஒரு
வெளிநாட்டவர்,
ரிசர்வ் வங்கி
அனுமதியுடன்
பெறப்பட்ட,
தங்குமிடம் -
வணிகச்
சொத்தினை அடகு
வைப்பதன்
மூலம்,
இந்தியாவில்
உள்ளவருக்கு
அல்லது
வெளிநாட்டினருக்கு
மாற்றுதல்
செய்யலாமா?
முடியாது.
அவர் ரிசர்வ்
வங்கியிடம்,
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டும்.
ஆனால்
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
இந்தியாவில்
கிளை
அலுவலகத்தையோ
அல்லது மற்ற
வணிக இடத்தையோ
FERA/FEMA
சட்டங்களுக்கு
அடங்கிய
நடவடிக்கைகளை
மேற்கொள்ள
அமைத்திருந்தால்
தான் வாங்கிய
அசையாச்
சொத்தினை பொது
அனுமதியின்கீழ்
அத்தகைய
சொத்தினை
அங்கீகரிக்கப்பட்ட
முகவருக்கு
தான் வாங்கிய
கடனுக்கு
பிணையாக
கொடுக்கலாம்.
VIII. வெளிநாடு
வாழ் இந்தியர்/வெளிநாட்டில்
வாழ் இந்திய
வம்சா வளியினர்
இந்தியாவில்
தங்குமிடம்/வணிகச்
சொத்து
வாங்குவதற்குப்
பணம்
செலுத்தும்
முறை.
கே.27.
உள்ள பொது
அனுமதியில்
இந்தியாவில்
தங்குமிடம் -
வணிகச் சொத்து
வாங்குவதற்கு
வெளிநாடு வாழ்
இந்தியர்/வெளிநாட்டில்
வாழ் இந்திய
வம்சாவளியினர்
எந்த வகையில்
பணம் செலுத்த
வேண்டும்?
உள்ள பொது
அனுமதியின்படி
வெளிநாடு வாழ்
இந்தியர்/வெளிநாட்டில்
வாழ் இந்திய
வம்சா
வளியினர்
தங்குமிடம்/வணிகச்
சொத்தினை
வாங்குவதற்கு
இந்தியாவுக்கு
சாதாரண
வங்கிக்
கணக்குகளின்
வளி அல்லது
அவருடைய NRE/ FCNR(B)/ NRO
கணக்குகளின்
வளி பணம்
செலுத்தலாம்.
இந்தியாவுக்கு
வெளியில்
அதற்காக பணம்
செலுத்த
இயலாது.
கே.28.
தங்குமிடம்/வணிகச்
சொத்து
ஆகியவற்றை
வாங்குவதில்
வீட்டு வசதி
முகமைகளால்
விண்ணப்பத்துக்குரிய
பணம்
திரும்பத்
தருதல் /
அச்சாரம்
திரும்பத்
தருதல் /
வாங்குவதற்காகத்
தரப்படும்
சலுகை /
அடுக்குமாடிக்
குடியிருப்பு/
வீட்டுமனை
ஒதுக்கீடு
செய்யப்படாத
போது/முன்பதிவு
நீக்கம்
செய்யப்பட்டபோது,
தங்குமிடம் -
வணிகச் சொத்து
ஆகியவற்றை
வாங்கும்
வாணிகத்
தொடர்பில்
விற்பவர்
வட்டியுடன்
திரும்பத்
தரும் தொகை
எதுவும்
இருப்பின் அது
(உரிய வருமான
வரிப்பிடித்தத்துக்குப்பின்
உள்ள நிகர தொகை)
ஆகியவற்றை NRE
கணக்கில்
செலுத்த
முடியமா?
முடியும்.
தொடக்கத்தில்
பணம்
செலுத்துதல்
NRE/FCNR(B) கணக்கில்
பற்று
வைக்கப்படும்
வகையிலோ
அல்லது
உட்புறப் பணம்
செலுத்தும்முறையிலோ
செய்யப்பட்டிருப்பின்
அவ்வாறு
செய்யலாம்.
இதற்காக
ரிசர்வ்
வங்கியின்
அனுமதி தேவை
இல்லை.
இதற்கென
அங்கீகரிக்கப்பட்ட
முகவரை
அவர்கள்
நேரடியாக
அணுகலாம். (தயவு
செய்து காண்க.
A.P.(DIR தொடர்)
சுற்றறிக்கை
எண்.46 நாள்
நவம்பர் 12, 2002.
கே.29. NRI/PIO
இந்தியாவில்
அடுக்கு
மாடிக்குடியிருப்பு
அல்லது
வீட்டினைத்
தனது சொந்த
உபயோகத்திற்குப்
பெறுவதற்காக
அங்கீகரிக்கப்பட்ட
வணிக
முகவரிடம்
கடன்
வாங்குவதற்கு,
தனது NRE
வைப்புத்தொகைக்
கணக்கு/FCNR(B)
கணக்கு
ஆகியவற்றில்
உள்ள நிதியை
பிணையமாகப்
பயன்படுத்தலாமா?
சில
விதிமுறைகளுக்கும்
நிபந்தனைகளுக்கும்
உட்பட்டு,
பயன்படுத்தலாம்.
(தயவுசெய்து
மார்ச்சு 3, 2000
நாளிட்ட
அறிக்கை எண். FEMA
5/2000 RBI யின்
பட்டியல் 1,
பட்டியல் 2ஐ
நோக்கவும்).
கே.30.
தங்குமிடக்
குடியிருப்பு
வாங்குவதற்காக
/
பழுதுபார்ப்பதற்காக/
தங்குமிடக்
குடியிருப்பினை
மேம்படுத்துவதற்காக/புதுப்பிக்க
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடம்
அல்லது தேசிய
வீட்டு வசதி
வங்கியால்
அங்கீகரிக்கப்பட்ட
நிதியுதவி
நிறுவனத்திடம்
ஒரு NRI/PIO வீட்டு
வசதிக் கடனை
ரூபாயில்
பெற்றுக்கொள்ள
முடியுமா?
சில
விதிமுறைகளுக்கும்
நிபந்தனைகளுக்கும்
உட்பட்டு
பெற்றுக்
கொள்ள
முடியும்.
அத்தகைய
கடன்களை
சாதாரண வங்கி
வளிமுறைகளில்
உட்புறப் பணம்
செலுத்துதல்
அல்லது
அவருடைய NRE/ FCNR(B) /NRO
கணக்கில்
பற்று
எழுதுதல்
அல்லது அந்தச்
சொத்தினை
வாடகைக்கு
விட்டுப்
பெறப்படும்
வாடகை
வருவாயின்
மூலம்
திருப்பிச்
செலுத்தலாம்.
அத்தகைய கடனை
கடன்
வாங்கியவரின்
உறவினர்களாலும்
அவருடைய
கணக்கில்
செலுத்துவதன்
மூலமும்
திரும்பச்
செலுத்தலாம். (எண்.
FEMA 1/2000 மார்ச்சு 3, 2000
நாளிட்டது,
ஏப்ரல் 20, 2003
தேதியிட்டது
A.P.(DIR தொடர்)
சுற்றறிக்கை
எண் 95, A.P.(DIR தொடர்)
சுற்றறிக்கை
எண் 94, மே 25, 2005
தேதியிட்டது
ஆகியவற்றைத்
தயவுசெய்து
பார்க்கவும்.
கே.31.
வெளிநாடு வாழ்
இந்தியர்,
இந்தியாவில்
உள்ள அவரை
பணியில்
வைத்திருப்பவரிடமிருந்து
வீட்டுக் கடனை
ரூபாயில்
வாங்கலாமா?
சில
விதிமுறைகளுக்கும்
நிபந்தனைகளுக்கும்
உட்பட்டு
வாங்கலாம். (மார்ச்சு
3, 2000 நாளிட்ட எண்
FEMA 4/2000.RB
அறிவிக்கையின்
விதிமுறை 8A,
அக்டோபர் 10, 2003
நாளிட்ட A.P.(DIR
தொடர்)
சுற்றறிக்கை
எண் 27
ஆகியவற்றை
தயவுசெய்து
பார்க்கவும்.)
IX.
NRI/PIO
வால்
வாங்கப்பட்ட
தங்குமிடம் -
வணிகச் சொத்து
ஆகியவற்றினை
விற்றுக்
கிடைக்கும்
பணத்தினை
அவர்கள்
வாழும் நாட்டினுக்குள்
கொண்டு
செல்லுதல்.
கே.32. NRI/PIO
சாதாரண வங்கி
வளிமுறைகளின்
வளியே
உட்புறப் பணம்
செலுத்துதலின்
மூலம் அல்லது
தன்னுடைய NRE/ FCNR(B)
கணக்கில்
பற்றெழுதுவதன்
மூலம் பெற்ற
தங்குமிடம்/வணிகக்
சொத்தினை
விற்றுக்
கிடைக்கும்
பணத்தினைத்
தான் வாழும்
நாட்டுக்குக்
கொண்டு
செல்லமுடியுமா?
ஆம் எனில்
அதிகபட்சத்
தொகை எவ்வளவு?
NRI/PIO
இந்தியாவிலுள்ள
சாதாரண வங்கி
வளிமுறைகளில்
உட்புறப்பணம்
செலுத்துதல்
அல்லது தனது NRE/
FCNR(B) கணக்கில்
பற்று
வைப்பதன்
மூலம் தனது
தங்குமிடம்/வணிகச்
சொத்தினை
விற்றுக்கிடைக்கும்
பணத்தினை, தான்
வாழும்
நாட்டுக்குக்
கொண்டு
செல்லலாம்.
எடுத்துச்
செல்லும்பணம்
அந்தச்
சொத்தினைப்
பெறுவதற்குச்
செலுத்தப்பட்ட
பணத்தினை விட
அதிகமாக
இருக்கக்
கூடாது. (அ)
சாதாரண வங்கி
வழிமுறைகளின்
வழி
உட்புறப்பணம்
செலுத்துதல்
அல்லது FCNR(B)
கணக்கில்
பற்றின் மூலம்
அல்லது (ஆ)
செலுத்தப்பட்ட
தொகைக்கு NRE
கணக்கில்
பற்று
வைக்கப்பட்டு
சமமாக உள்ள
அந்நியப் பணம்.
அந்தச்
சொத்து 10
ஆண்டுகள்
அவரிடம்
இருந்து
பின்னர்
விற்கப்பட்டால்,
அந்த அசையாச்
சொத்தினை
விற்ற பணம்
உட்பட
அவருடைய NRO
கணக்கில்
உள்ள
செலுத்தத்
தகுதியுள்ள
தொகையில்
இருந்து அவர்
வருடத்திற்கு
ஒரு மில்லியன்
அமெரிக்க
டாலர் வரை
அனுப்பலாம்.
அந்தச் சொத்து
10
வருடத்துக்குக்
குறைந்த
காலத்திற்குத்
தான் அவரிடம்
இருந்தது
எனில் அதனை
விற்றுக்கிடைக்கும்
பணம், குறையும்
காலத்துக்கு
NRO கணக்கில் (சேமிப்பு,
குறித்தகால
வைப்புத்தொகை)
அல்லது வேறு
ஏதேனும் உரிய
முதலீடு, அந்த
முதலீடு
குறிப்பிட்ட
அசையாச்
சொத்தினை
விற்ற
பணத்திலிருந்து
தான்
செய்யப்பட்டது
என்பதை உறுதி
செய்யும்
பட்சத்தில்
பணம்
செலுத்தலாம் (விளக்கத்துக்கு
மே 3, 2000 நாளிட்ட FEMA 13
REG.4 (3) இன்
திருத்தப்பட்ட
வடிவத்தினைக்
காண்க).
கே.33.
தங்குமிட
வசதிக்கென
வெளிநாடுவாழ்
இந்தியரால்
வாங்கப்பட்ட
ரூபாய்க்கடன்
உட்புறப் பணம்
செலுத்துதல்
அல்லது NRE/ FCNR(B)
கணக்கில்
பற்றெழுதுதல்
மூலம்
திருப்பிச்
செலுத்தப்பட்டால்
அந்தச்
சொத்தினை
விற்றுக்கிடைத்த
தொகையினை அவர்
வாழும்
நாட்டுக்குக்
கொண்டு செல்ல
முடியுமா?
முடியும்
அந்நியப்
பணத்தில்
கடனைத்
திரும்பச்
செலுத்துதல்
தங்குமிடத்தினை
வாங்குவதற்காக
அந்நியப்
பணத்தினைப்
பெற்றதற்கு
ஈடாகக்
கருதப்படுகிறது.
கே.34.
உட்புறப் பணம்
செலுத்துதல்
NRE/FCNR(B)
கணக்குகளில்
பற்றெழுதுதல்
ஆகியவற்றின்
மூலம்
வாங்கப்பட்ட
தங்குமிடம் -
வணிகச்சொத்து
ஆகியவற்றை
விற்பதற்கு
வரையறை காலம்
ஏதும் உண்டா?
அத்தகைய
சொத்தினை
விற்பதற்கு
வரையறை காலம்
எதுவும்
கிடையாது.
கே.35. NRI/PIO
தனது
தங்குமிடச்
சொத்துகளை
விற்று அந்தப்
பணத்தைத் தான்
வாழும்
நாட்டுக்கு
கொண்டு
செல்வதில்
இத்தனை
சொத்துக்கள்
என்ற
எண்ணிக்கை
வரையறை உள்ளதா?
உள்ளது.
தங்குமிடச்
சொத்துகளை
விற்றுப் பணம்
எடுத்துச்
செய்வது
இரண்டு
சொத்துக்கு
மேல் இருக்கக்
கூடாது.
X
NRI/PIO
ஆல்
நன்கொடையாகப்
பெறப்பட்ட
தங்குமிடம்
/ வணிகச்
சொத்து
ஆகியவற்றை
விற்ற பணம் அனுப்பும்
முறை
கே.36. NRI/PIOவால்
நன்கொடையாகப்
பெறப்பட்ட
தங்குமிடம்/வணிகச்
சொத்து
ஆகியவற்றை
விற்ற பணம்
எந்தக்
கணக்கில்
செலுத்தப்பட
வேண்டும்?
NRI/PIOவால்
நன்கொடையாகப்
பெறப்பட்ட
தங்குமிடம்/வணிகச்
சொத்து
ஆகியவற்றை
விற்ற பணம் NRI
கணக்கில்
மட்டுமே
செலுத்தப்பட
வேண்டும்.
XI.
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும்
ஒருவர்
பரம்பரை
உரிமையாகப்
பெற்ற
அசையாச்
சொத்தினை
விற்ற
பணத்தைச்
செலுத்துதல்.
கே.37.
இந்தியாவில்
வாழும்
ஒருவரிடமிருந்து
NRI/PIO
நன்கொடையாகப்
பெற்ற அசையாச்
சொத்தினை
விற்று
கிடைத்ததை
வெளிநாட்டிற்கு
அனுப்ப
முடியுமா?
முடியும்.
அந்தச் சொத்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்றது
என்பதற்குரிய
ஆவணம், வருமான
வரி
அலுவலகத்திலிருந்து
வரி
செலுத்திய
சான்றிதழ்/தடையின்மைச்
சான்றிதழ்
ஆகியவற்றை
பணம்
செலுத்தப்படும்
அங்கீகரிக்கப்பெற்ற
முகவருக்கு
சமர்ப்பித்து,
ஆண்டுக்கு ஒரு
மில்லியன்
அமெரிக்க
டாலர் வரை அனுப்பலாம்.
இருப்பினும்
PIO பாகிஸ்தான்,
பங்களாதேஷ்
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
சீனா
ஆகியவற்றுள்
ஏதாவதொரு
நாட்டின்
குடிமகன்
எனில் அவர்
அந்தச் சொத்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்றது
என்பதற்குரிய
சான்று,
வருமான வரி
அலுவலகத்திடமிருந்து
பெற்ற வரி
செலுத்திய
சான்று/தடையின்மைச்
சான்றிதழ்
ஆகிய ஆவணச்
சான்றுகளைச்
சமர்ப்பித்து
ரிசர்வ்
வங்கியிடமிருந்து,
முன்
ஒப்புதலைப்
பெற வேண்டும்.
நேபாளம்,
பூட்டான்
ஆகிய
நாடுகளின்
குடிமகனுக்கு
இந்தப் பணம்
செலுத்தும்
வசதி கிடையாது.
(மே 3, 2000 நாளிட்ட
எண், FEMA 13 / RB - 2000
விதிமுறை 4(3)ஐ
தயவு செய்து
காண்க.
கே.38.
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாடு வாழ்
வெளிநாட்டவர்
இந்தியாவில்
வாழும்
ஒருவரிடமிருந்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்ற,
இந்தியாவில்
உள்ள, அசையாச்
சொத்தினை
விற்றுக்
கிடைத்த
பணத்தை
வெளிநாட்டுக்கு
எடுத்துச்
செல்லமுடியுமா?
முடியும்.
பணம்
செலுத்துவதற்குரிய
அங்கீகரிக்கப்பட்ட
முகவருக்கு
பரம்பரை
உரிமையாகச்
சொத்து
பெறப்பட்டது
என்பதற்குரிய
ஆவணச்சான்று,
வருமான வரி
அலுவலகத்திடமிருந்து
பெற்ற
வரிசெலுத்திய
சான்றிதழ்/தடையின்மைச்
சான்றிதழ்
ஆகியவற்றைச்
சமர்ப்பித்து
ஆண்டுக்கு ஒரு
மில்லியன்
அமெரிக்க
டாலர் வரை
எடுத்துச்
செல்ல
முடியும்.
எனினும் அந்த
PIO பாகிஸ்தான்,
வங்கதேசம்,
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
சீனா அல்லது
ஈரான் ஆகிய
ஏதாவது ஒரு
நாட்டின்
குடிமகன்
எனில் அவர்
ரிசர்வ்
வங்கியிடம்,
பரம்பரை
உரிமையாகப்
பெற்ற சொத்து
என்பதற்குரிய
ஆவணச்
சான்றிதழ்,
வரிசெலுத்திய
சான்றிதழ்/
வருமான வரி
அலுவலகத்திடமிருந்து
தடையின்மைச்
சான்றிதழ்
ஆகியவற்றைச்
சமர்ப்பித்து,
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டும்.
நேபாளம்,
பூட்டான்
ஆகிய நாட்டின்
குடிமக்களுக்கு
இந்தச் சலுகை
கிடையாது. (மே 3,
2000 நாளிட்ட எண்
FEMA 13/RB
அறிக்கையின்விதிமுறை
4(2) 11 ஐ தயவுசெய்து
காண்க.)
கே.39.
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
(NRI அல்லது
PIO அல்லது
இந்திய வம்சா
வளி அல்லாத
வெளிநாடு வாழ்
வெளிநாட்டவர்)
வெளிநாட்டில்
வாழும்
ஒருவரிடமிருந்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்ற
இந்தியாவில்
உள்ள அசையாச்
சொத்தினை
விற்றுக்கிடைத்த
பணத்தினை அவர்
அல்லது அவரது
வாரிசு
அவர்கள்
வாழும்
வெளிநாட்டுக்கு
எடுத்துச்
செல்ல
முடியுமா?
முடியாது.
அவர் அந்தச்
சொத்து
பரம்பரை
உரிமையாகப்
பெற்றது
என்பதற்குரிய
ஆவணச் சான்று,
வரிசெலுத்திய
சான்றிதழ்/
வருமான வரி
அலுவலகத்திடமிருந்து
தடையின்மைச்
சான்றிதழ்
ஆகியவற்றைச்
சமர்ப்பித்து
ரிசர்வ்
வங்கியிடமிருந்து
முன்
ஒப்புதலைப்
பெற வேண்டும்.
XII.
அனுமதிக்கப்பட்ட
ஒரு செயலைச்
செய்வதற்கு
இந்தியாவில்
அசையாச்
சொத்தினைப்
பெறுதல்.
கே.40.
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
FERA/FEMA
விதிமுறைகளின்படி
தன்னுடைய
இணைப்பு
அலுவலகத்தினை
நிறுவியிருந்தால்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
வாங்க
முடியுமா?
முடியாது.
கே.41.
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
FERA/FEMA
விதிமுறைகளின்படி
இந்தியாவில்
தன்னுடைய கிளை
அலுவலகத்தினை
அல்லது வணிக
அமைப்பினை
இந்தியாவில்
நிறுவியிருந்தால்
அசையாச்
சொத்தினை
வாங்கமுடியுமா?
அது
இன்றியமையாததாகவோ
அல்லது
அத்தகைய
நடவடிக்கைக்கு
தேவைப்படும்
எனில் அது
தொடர்பான
எல்லா
சட்டங்கள்,
விதிமுறைகள்,
செயல் நெறிகள்
அல்லது ஆணைகள்
அனைத்தையும்
பின்பற்றினால்
வாங்க
முடியும். அதனை
வாங்குவதற்குரிய
விலையை உரிய
வங்கி
வழிமுறைகளின்படி
உட்புறப் பணம்
செலுத்துதலின்படி
செலுத்தப்பட
வேண்டும்.
அந்த வணிகச்
சொத்து/தங்குமிடச்
சொத்தினைப்
பெற்ற 90
நாட்களுக்குள்
IPI படிவத்தினை
நிறைவு செய்து
ரிசர்வ்
வங்கிக்கு
உறுதிமொழி
அளிக்கவேண்டும்.
கே.42.
கேள்வி எண் 41
இல்
சொல்லப்பட்டபடி
வாங்கப்பட்ட
சொத்தினை ஒரு
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடம்
கடன்
வாங்குவதற்குப்
பாதுகாப்பாக
அடமானம்
வைக்க
முடியுமா?
முடியும்.
இந்திய
ரிசர்வ் வங்கி
அத்தகைய
அடமானத்துக்குப்
பொது அனுமதி
வழங்கியுள்ளது.
கே.43.
அவர்
வியாபாரத்தை
முடித்துக்கொண்டால்
அந்தச்
சொத்தினை
விற்ற
பணத்தினைத்
தான் வாழும்
நாட்டுக்குக்
கொண்டு செல்ல
முடியுமா?
முடியும்.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
ஒப்புதலுடன்
செய்யலாம்.
XIII.
வெளிநாட்டுத்
தூதரகங்கள்/அரச
தந்திரிகள்/வெளிநாட்டுப்
பேராளர்
தலைவர்கள்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினைப்
பெறுதல்.
கே.44.
வெளிநாட்டுத்
தூதரகங்கள்/அரச
தந்திரிகள்/வெளிநாட்டுத்
தூதரக
தலைவர்கள்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
வாங்கவோ
விற்கவோ
முடியுமா?
முடியும்.
உள்ள பொது
அனுமதியின்படி
வெளிநாட்டுத்
தூதரகங்கள்/அரசியல்
தந்திரிகள்/வெளிநாட்டுத்
தூதரகத்
தலைவர்கள்
இந்தியாவில்
விவசாய நிலம்/தோட்டச்
சொத்து/பண்ணை
வீடு
ஆகியவற்றைத்
தவிர வேறு
அசையாச்
சொத்தினை
வாங்க
முடியும்.
அத்தகைய
சொத்துகளை
வாங்க/விற்க
இந்திய அரசின்
வெளி
விவகாரத்துறை
அமைச்சரகத்திடமிருந்து,
முன்னரே
தடையின்மைச்
சான்றிதழைப்
பெற்று வாங்க/விற்க
முடியும்.
அத்தகைய
சொத்துக்கான
மதிப்பினை
சாதாரண
வங்கிகணக்கு
வளியாக
உள்முக பணவரவு
மூலம்
செலுத்தலாம்.
XIV.
மற்ற விவகாரங்கள்
கே.45. NRI/PIO
தன்னுடைய
அந்நிய
நாட்டுப்
பணத்திலிருந்து/ரூபாய்
நிதியிலிருந்து
வாங்கிய
தங்குமிடம்/வணிகச்
சொத்து
ஆகியவற்றை
அவற்றுக்கு
உடனடித் தேவை
இல்லை எனில்
வாடகைக்கு
விடலாமா?
விடலாம்.
பெறப்படும்
வாடகை
நிகழ்கால
வருமானம்
என்பதால் அதனை
NRI/PIO கணக்குகளில்
வரவுவைத்துக்
கொள்ளலாம்
அல்லது
வெளிநாட்டிற்கு
அனுப்பலாம்.
கே.46. NRI
இந்தியாவில்
தங்குயிருக்கும்போது
பெற்ற
தங்குமிடம்/வணிகச்
சொத்து/விவசாய
நிலம்/தோட்டச்சொத்து/
பண்ணைவீடு
ஆகிய
அசையாச்சொத்துகளை
தொடர்ந்து
வைத்திருக்க
முடியுமா?
அல்லது அந்த
அசையாச்
சொத்தினை,
மாற்றுதல்
செய்யமுடியுமா?
அதனை விற்ற
பணத்தினை
எந்தக்
கணக்கில்
செலுத்த
வேண்டும்?
முடியும். NRI
இந்தியாவில்
தங்கியிருக்கும்போது
பெற்ற அசையாச்
சொத்தினை
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டம், 1999இன்
பிரிவு 6(5)இன்படி
தொடர்ந்து
வைத்திருக்கலாம்.
உள்ள பொது
அனுமதியின்படி
அவர் அந்த
விவசாய நிலம்/தோட்டச்
சொத்து/
பண்ணைவீடு
ஆகிய அசையாச்
சொத்துகளை
இந்தியாவில்
தங்கியுள்ள
இந்தியக்
குடிமகனுக்கு
விற்கலாம்
அல்லது
நன்கொடையாக
வழங்கலாம்.
அல்லது
தங்குமிடம்/வணிகச்சொத்து
ஆகியவற்றை
இந்தியாவில்
தங்கியுள்ளவர்
அல்லது NRI/PIO
விற்கலாம்
அல்லது
நன்கொடையாக
வழங்கலாம்.
விற்ற
பணத்தினை NRO
கணக்கில்
செலுத்த
வேண்டும்.
கே.47. PIO
இந்தியாவில்
தங்கியிருக்கும்போது
பெற்ற
தங்குமிடம்/
வணிகச் சொத்து
வேளாண் நிலம்/தோட்டச்
சொத்து/பண்ணை
வீடு ஆகிய
அசையாச்
சொத்துக்களை
தொடர்ந்து
வைத்திருக்கலாமா?
அல்லது
மாற்றுதல்
செய்யலாமா?
விற்ற
பணத்தினை
எந்தக்
கணக்கில்
செலுத்த
வேண்டும் ?
வைத்திருக்கலாம்.
PIO இந்தியாவில்
தங்கியிருக்கும்போது
பெற்ற அசையாச்
சொத்தினை
அந்நியச்
செலாவணிச்
சட்டம் 1999
பிரிவு 6(5)இன்படி
தொடர்ந்து
வைத்திருக்கலாம்.
உள்ள பொது
அனுமதியின்படி
இந்தியாவில்
தங்கியிருக்கும்
இந்தியக்
குடிமகனுக்கு
விவசாய நிலம்/தோட்டச்
சொத்து/பண்ணைவீடு
ஆகியவற்றை
விற்கலாம்
அல்லது
நன்கொடையாக
வழங்கலாம்.
இந்தியாவில்
தங்கியுள்ள
ஒருவருக்கோ
அல்லது NRI/PIO
வுக்கு
விற்கலாம்
அல்லது
நன்கொடையாக
வழங்கலாம்.
இருப்பினும்
PIO பாகிஸ்தான்,
பங்களாதேஷ்,
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
சீனா, ஈரான்,
நேப்பாளம்,
பூட்டான்
ஆகிய
நாடுகளின்
குடிமகனாக
இருந்தால்
அந்தச்
சொத்தினை
மாற்றுதல்
செய்வதற்கு
ரிசர்வ்
வங்கியின்
முன்
ஒப்புதலைப்
பெறவேண்டும்.
விற்ற பணம் NRO
கணக்கில்
செலுத்தப்பட
வேண்டும்.
கே.48.
கேள்விகள் 46,47இல்
குறிப்பிடப்பட்ட
அசையாச்
சொத்துகளை
விற்றுப்பெற்று
NRI/PIO வின் NRO
கணக்கில்
செலுத்தப்பட்ட
பணத்தினை
வெளிநாட்டிற்கு
அனுப்பலாமா?
அந்த
அசையாச்
சொத்தினை அவர்
10
ஆண்டுகளுக்குக்
குறையாத
காலத்துக்கு
அவர்
வைத்திருந்தார்
எனில்
செலுத்தலாம்.
கே.49.
அந்த அசையாச்
சொத்தினை அவர்
10 ஆண்டுக்குக்
குறைவான காலம்
தான்
வைத்திருந்தார்
எனில் என்ன
செய்வது?
ரூபாய்
நிதியிலிருந்து
வாங்கப்பட்ட
அத்தகைய
சொத்து பத்து
ஆண்டுகளுக்குக்
குறைவான
காலத்துக்கே
வைத்திருந்து
விற்கப்பட்டதெனில்,
அதனை விற்றுக்
கிடைத்த பணம்
குறைவான
காலத்துக்கு
NRO கணக்கில் (சேமிப்பு
தவணை
வைப்புநிதி)
அல்லது
ஏதேனும்
தகுதியான
முதலீட்டில்,
அந்தப் பணம்
அந்த அசையாச்
சொத்தினை
விற்றதிலிருந்து
கிடைத்ததுதான்,
என்று
அறியப்படுமேயானால்
அறியத்தக்க
வகையில்
செலுத்தலாம்.
கே.50.
முன்னர்
இருந்த FERA
வின்படி
வெளிநாட்டில்
அல்லது
இந்தியாவில்
தங்கியுள்ள
இந்திய
வம்சாவளியினர்
அல்லாத
வெளிநாட்டினர்
ரிசர்வ்
வங்கியின்
சிறப்பு
அனுமதியுடன்
இந்தியாவில்
தங்குமிடச்
சொத்தினை
வாங்கியிருந்து,
1999 FEMA பிரிவு 6(5)
இன்படி
அவர்கள்
அந்தச்
சொத்தினை
தொடர்ந்து
வைத்திருக்கும்பட்சத்தில்
அவர்கள்
அந்தச்
சொத்தினை
மாற்றுதல்
செய்ய
முடியுமா?
ரிசர்வ்
வங்கியின்
முன்
ஒப்புதலைப்
பெற்று
மட்டுமே
செய்யமுடியும்.
கே.51.
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
அந்நியச்
செலாவணி
மேலாண்மை
விதிமுறைகள்
2000 (அசையாச்
சொத்தினை
இந்தியாவில்
வாங்குதலும்
மாற்றுதலும்)
பொருந்துமா?
இந்தியாவில்
தங்கியுள்ள
பாகிஸ்தான்,
பங்களாதேஷ்,
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
சீனா, ஈரான்,
நேபாளம்,
பூட்டான்
ஆகிய நாட்டின்
குடிமகன்களுக்கு
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டம் (அசையாச்
சொத்தினை
வாங்குதலும்
மாற்றுதலும்)
விதிமுறைகள்
2000 பொருந்தும்.
கே.52.
இந்தியாவில்
வாழும் ஒருவர்,
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
எவ்வாறு
வரையறுக்கப்
பெற்றுள்ளார்
என்பது எங்கே
தெளிவாகச்
சொல்லப்
பட்டிருக்கின்றன?
FEMA, 1999 இன் 52
பிரிவு 2(V)
யிலும், பிரிவு
2(W) விலும்
முறையே
இந்தியாவில்
வாழும் ஒருவர்,
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒருவர்
ஆகியோர்
பற்றிய
விதிகள்
தெளிவாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன.
கே.53.
இந்தியாவில்
வாழும் ஒருவர்
என்பதன்
பொருள் என்ன?
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டத்தின்
பார்வையில்,
வேலை
வாய்ப்பினை
ஏற்பதற்காக,
அல்லது
வணிகத்துக்காக,
அல்லது
வாழ்க்கைத்
தொழிலுக்காக,
அல்லது
எவ்வளவு காலம்
என்று
உறுதியாகச்
சொல்ல
முடியாத
அளவுக்குத்
தங்கியிருக்கும்
விருப்பத்தினைத்
தெரிவிக்கும்
வேறு ஏதோ ஒரு
காரணத்துக்காக,
இந்தியாவில்
தங்கியுள்ள
ஒருவர்,
முந்தைய நிதி
ஆண்டில் (ஏப்ரல்,
மார்ச்) 182
நாட்களுக்கு
மேல்
தங்கியிருந்தால்,
அவர்
இந்தியாவில்
வாழும் ஒருவர்
என்று பொருள்.
வேறு
சொற்களில்
சொல்வதெனில்,
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டத்தின்படி
ஒருவர் ‘இந்தியாவில்
வாழ்பவர்’
என்று
கருதப்பட
வேண்டுமெனில்,
தங்கியுள்ள
காலம் பற்றிய
நிபந்தனைகளை
நிறைவு
செய்வதுடன் (முந்தைய
நிதி
ஆண்டுக்காலத்தில்
182 நாட்களுக்கு
மேல்), காரணம்/நோக்கம்
பற்றிய
நிபந்தனைகளுக்கு
ஒத்துப்போவதாக
இருக்க
வேண்டும்.
கே.54.
அசையாச்
சொத்தினை
இந்தியாவில்
பெறுவதற்கு
ஒருவரின்
வசித்தல்
நிலையினை
ரிசர்வ் வங்கி
தீர்மானிக்கிறதா?
இல்லை.
அந்நியச்
செலாவணி
மேலாண்மைச்
சட்டத்தின் (FEMA)
படி, வசித்தல்
நிலை,
சட்டத்தின்
செயல்பாடுகளினால்
தீர்மானிக்கப்
படுகிறது.
அதிகாரம்
உடைய எந்த
ஒருவரால்
கேட்கப்பட்டாலும்
அவருடைய/அவளுடைய
வசித்தல்
நிலையை
நிரூபிக்க
வேண்டியது,
அந்தத் தனி
நபரின்
பொறுப்பாகும்.
கே.55. ஒரு
வெளிநாட்டவர்
FEMA 1999 பிரிவு (V) (i)B
விதிகளின்படி
இந்தியாவில்
வாழ்பவர்
எனில், அவர்
இந்தியாவில்
அசையாச்
சொத்தினை
வாங்குவதற்கு
ரிசர்வ்
வங்கியின்
ஒப்புதலைப்
பெறவேண்டுமா?
தேவையில்லை.
FEMA வின்
பார்வையில்
அவர் ரிசர்வ்
வங்கியின்
ஒப்புதலைப்
பெறத்
தேவையில்லை.
இருப்பினும்
தொடர்புடைய
மாநில அரசு
போன்ற பிற
அதிகாரம்
உடையவர்கள்
குறிப்பிட்ட
விதிமுறைகளின்படி
ஒப்புதல்
எதுவும்
தேவைப்படும்
எனில் அவரால்/அவளால்
அது
பெறப்படத்தான்
வேண்டும். |