இந்தியாவில்
வெளிநாட்டு
முதலீடு
I.
அயல்நாட்டின்
நேரடி முதலீடு
1. அயல்
நாட்டுக்
குழுமம் ஒன்று
இந்தியாவில்
எவ்வகையான
தொழில்களை
தொடங்கி
நடத்தலாம்?
இந்தியாவில்
தொழில்
தொடங்கி
நடத்தத்
திட்டமிடும்
ஒருவர் அயல்
நாட்டுக்
குழுமத்திற்குக்
கீழ்க்கண்ட
வாய்ப்புகள்
உள்ளன
-
இந்தியக்
குழுமங்கள்
சட்டம் 1956இன்
கீழ்
இணைக்கப்பட்ட
பதிவு
செய்யப்பட்ட
ஓர்
அமைப்பில்
ஒரு
குழுமத்தைக்
கீழ்க்கண்டவாறு
பதிவு செய்து
தொழில்
தொடங்கலாம்.
2.
இணைக்கப்படாத
அமைப்பாக
கீழ்க்கண்டவாறு
செயல்படலாம்.
-
தொடர்பு
அலுவலகம்
-
திட்ட
அலுவலகம்
-
கிளை
அலுவலகம்
மேலே
குறிப்பிட்ட
அலுவலகங்கள்
அன்னியச்
செலாவணி
மேலாண்மை
அமைப்பு
அனுமதித்தபடி
தங்கள்
நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம்.
(கிளை அலுவலகம்
பிற
பகுதிகளில்
மேற்கொள்ளும்
வணிக
நடவடிக்கைகளுக்காக
ஏற்படுத்தப்பட்ட
அமைப்பு)
நெறிமுறைகள்
2000
2. ஒரு
அயல்நாட்டுக்
குழுமம்
எவ்வகையில்
இந்தியாவில்
முதலீடு
செய்கிறது?
இந்தியக்
குழுமங்கள்,
அயல் நாட்டைச்
சார்ந்த
இணைப்பாளர்கள்
(அ)
முதலீட்டாளர்கள்
ஆகியோருக்கு
எவ்வாறு
பங்குகளை
வெளியிடுகிறது?
அது தொடர்பான
வழிமுறைகள்
யாவை?
தானியங்கு
முறை வழி
-
தொழிற்சாலை
உரிமம்
பெற்று
செய்ய
வேண்டிய
நடவடிக்கைகள்
மற்றும்
பொருள்
வகைப்பாடு
-
வெளிநாட்டு
இணைப்பாளர்
நிதி
தொடர்பான /
தொழில்
நுட்ப
ரீதியான
இணைப்புச்
செயல்பாட்டில்
ஏற்கெனவே
ஈடுபட்டு அதே
துறையில்
புதிய
செயல்முறையில்
இறங்கும்போது
-
கணிசமான
பங்குகளைப்
பெற்று ஒரு
நிதியுதவி
செய்யும்
நிறுவனத்தின்
மேலாண்மைப்
பொறுப்பை
தன்வசப்படுத்தக்கூடிய
நிலையில்
இப்போது
செயல்பட்டுக்
கொண்டிருக்கும்
ஓர் இந்தியக்
குழுமத்தின்
பங்குகளைப்
பெற
எடுக்கப்படும்
புதிய
செயல்முறை
இந்தியப்
பத்திரங்கள்
மற்றும்
செலாவணி
வாரிய
நெறிமுறைகளின்
(1997) கவனத்தை
ஈர்ப்பதாக
அமைந்தால்,
-
வெளிநாட்டு
நேரடி
முதலீடு (FDI)
அனுமதிக்கப்படாத
துறைகள் (sectors)
அறிவுறுத்தப்பட்ட
துறைக்
கொள்கைகள் /உச்சவரம்புக்கு
மீறிய எல்லா
புதிய
செயல்முறைகளும்
அரசாங்க
முறைவழி
FEMA வின்
கீழ் இந்திய
ரிசர்வ்
வங்கியின்
பொது அனுமதி
வெளிநாட்டு
முதலீட்டு
வாரியம் (FIPB)
செல்வழி மூலம்
ஒப்புதலைப்பெற்ற
இந்தியக்
குழுமங்களுக்கு
வெளியேயிருந்து
பணம்
செலுத்தப்படுவது
குறித்தோ
அல்லது
வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்குப்
பங்குகள்
வழங்குவது
குறித்தோ
கூடுதலாக
எவ்வித
அனுமதியையும்
இந்திய
ரிசர்வ்
வங்கியிடமிருந்து
பெற வேண்டிய
அவசியமில்லை.
குழுமங்கள்
குறிப்பிட்ட
மண்டல இந்திய
ரிசர்வ் வங்கி
அலுவலகத்தில்
வெளியேயிருந்து
பணம்
பெறப்பட்டதை,
பெறப்பட்ட
நாளிலிருந்து
30
நாட்களுக்குள்
அறிவிக்க
வேண்டும். அதே
போன்று
பங்குகள்
வழங்கிய
நாளிலிருந்து
30
நாட்களுக்குள்
வெளிநாட்டு
முதலீட்டாளர்
அல்லது
வெளிநாடு வாழ்
இந்தியருக்கு
பங்கு
வழங்கியதையும்
அறிவிக்க
வேண்டும்.
3)
தானியங்கு
மற்றும்
அரசாங்க
முறைவழியின்
கீழ் எத்தகைய
இந்திய
அரசாங்கத்
துறைகளில்
வெளிநாட்டு
நேரடி முதலீடு
(FDI)
அனுமதிக்கப்படுவதில்லை?
கீழ்க்கண்ட
தானியங்கு
அரசாங்க
முறைவழிகளில்
வெளிநாட்டு
நேரடி முதலீடு
(FDI)
அனுமதிக்கப்படுவதில்லை.
சில்லறை
வணிகம்
-
அணுசக்தி
அணுத்திறன்
-
பரிசுச்
சீட்டு
வணிகம்
-
சூதாட்டமும்
பந்தயங்களும்
-
வீட்டு
வசதி மற்றும்
காலிமனையிட
வணிகம்
-
வேளாண்மை
(மலர்ச்செடி
வளர்ப்பு,
விற்பனை,
தோட்டக்கலை,
விதை
மேம்பாடு,
விலங்குகள்
கவனிப்பு,
மீன்வளர்ப்பு,
காய் கறி
பயிரிடல்,
காளான்
பயிரிடல்
போன்ற வேளாண்
மற்றும் அது
சார்ந்த
அரசாங்கத்
துறையின்கீழ்
கட்டுத்
திட்டங்களுக்குரிய
நிபந்தனைகளையும்
சேவைகளையும்
அளிக்கும்
செயல்பாடுகள்
நீங்கலாக
தேயிலை
அல்லாத இதர
பண்ணைகள்)
4.
அரசாங்க
இசைவோடு
தானியங்கு
முறைவழியின்கீழ்
முதலீடு
செய்த பிறகு
என்னசெய்ய
வேண்டும்?
-
இருபடியிலான
அறிவிப்பு
வழிமுறை
இந்நோக்கத்துக்காக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
.
-
முதலீட்டிற்கான
பணம்
பெறறபின்,
வெளிநாடு
முதலீட்டாளரிடமிருந்து
பணம் பெற்ற 30
நாட்களுக்குள்
இந்தியக்
குழுமத்தின்
பதிவு
அலுவலகம்,
எந்த இந்திய
ரிசர்வ்
வங்கியின்
அலுவலகத்தின்
ஆளுகைக்கு
உட்பட்டதோ
அந்த
அலுவலகத்திற்கு
ஓர் அறிக்கை
அனுப்ப
வேண்டும்.
அவ்வறிக்கையில்
கீழ்க்கண்ட
விவரங்கள்
இடம் பெற
வேண்டும்.
-
வெளிநாட்டு
முதலீட்டாளரின்
பெயர், முகவரி
-
தொகை
கிடைத்த நாள்,
அதன் ரூபாய்
மதிப்பு
-
தொகை பெற
நடவடிக்கை
எடுத்த
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரின்
பெயரும்
முகவரியும்
-
அரசாங்க
இசைவு பெற்ற
விபரங்கள் (ஏதும்
இருப்பின்)
-
பங்குகள்
வழங்கிய
நாளிலிருந்து
30
நாட்களுக்குள்
FC-GPR
படிவத்துடன்
கீழ்க்கண்ட
ஆவணங்களைச்
சேர்த்து
அம்மணடல
இந்திய
ரிசர்வ்
வங்கி (RBI)அலுவலகத்துக்கு
அனுப்ப
வேண்டும்.
-
இந்தியாவுக்கு
வெளியே
வாழும்
நபர்களிடமிருந்து
முதலீட்டைப்
பெற்றுக்
கொண்டதற்கான
சான்றிதழை
அக்குழுமத்தின்
செயலர்
அளிக்க
வேண்டும்.
அதில் அவர்
சான்றளிக்க
வேண்டியவை.
-
குழுமங்கள்
சட்டம் 1956 இல்
கண்ட
விதிமுறைகள்
யாவும்
நடைமுறைப்
படுத்தப்
பட்டுள்ளன.
-
ஒப்புதல்
அளித்தபோது
அரசாங்கம்
வரையறைகள்
மற்றும்
நிபந்தனைகள்
விதித்திருந்தால்
அவற்றை
நடைமுறைப்படுத்திய
விபரம்
-
இத்தகைய
நெறிமுறைகளுக்குட்பட்ட
பங்குகள்
வழங்க
குழுமத்திற்குத்
தகுதி உண்டு
-
செலுத்த
வேண்டிய
தொகைக்கான
ஒப்புச்சீட்டு
தொடர்பான
எல்லா அசல்
சான்றிதழ்களும்
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரால்
வழங்கப்
பட்டுள்ளன
எனும்
விவரம்
5.
இப்போதுள்ள
பங்குகளை
இந்தியாவில்
வாழ்வோரிடமிருந்து
வெளிநாட்டில்
வாழ்வோருக்கும்
வெளிநாட்டில்
வாழ்வோரிடமிருந்து
இந்தியாவில்
வாழ்வோருக்கும்
மாற்றித்
தருவதற்கான
வழிகாட்டு
நெறிமுறைகள்
யாவை?
ெளிநாட்டில்
வாழ்வோர்
இந்தியாவில்
வாழ்வோருக்கு
மாற்றித்
தருதல்
அ. விற்பனை
மூலம் மாறுதல்
வெளிநாடுவாழ்
இந்தியர்
ஒருவர்
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
தடையேதுமின்றி
பங்குகள்,
நாணயமாக்க
வல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
அவருக்கு
விற்பதன்
மூலம்
மாற்றித்தர
கீழ்க்கண்ட
வழிமுறைகள்
பின்பற்றப்பட
வேண்டும்:
-
இந்தியாவிற்கு
வெளியே
வாழும்
எவரும் (வெளிநாடு
வாழ்
இந்தியர்
அல்லாதார்
அல்லது கடல்
கடந்த ஒரு
கூட்டுரிமை
நிறுவனம்)
பங்குகள்,
நாணயமாக
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
வெளிநாடு
வாழ்வோருக்கு
விற்பனை
செய்வதன்
மூலம்
மாற்றித்
தரலாம்.
இச்செயல்பாட்டிற்கான
ஒரு நிபந்தனை
அவ்வகையில்
பெற்றுக்
கொள்பவர் (அ)
மாற்றித்
தரப்பட்டவர்
இந்தியாவில்
ஏற்கெனவே இது
தொடர்பாக
துணிவான
முயற்சியில்
ஈடுபடாதவராகவும்
இந்தத்
துறையில்
இந்தியாவில்
செயல் உரிமை
வரையறை
செய்லகளில்
தொடர்பற்றதாகவும்
இருக்க
வேண்டும்.
-
ஒரு
வெளிநாடு
வாழ்
இந்தியர்
விற்பனை
மூலம்
தன்னிடமுள்ள
பங்குகளை
நாணயமாக
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
பிறிதொரு
வெளிநாடு
வாழ்
இந்தியருக்கு
மட்டுமே
வழங்கலாம்.
-
FEMA
நெறிமுறை
அறிவுறுத்தல்களுக்கேற்ப
அங்கீகரிக்கப்பட்ட
பங்கு
மாற்றக்
கணக்கின்
பதிவு செய்து
கொண்ட தரகர்
மூலமாக
இந்தியாவிற்கு
வெளியே
வாழும்
எவரும்
பங்குகள் /
மாற்ற வல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றைப்
பெற்றிருந்தால்
அவற்றை
விற்பனை
செய்யலாம்.
-
வெளிநாடு
வாழ்
இந்தியர்
ஒருவர்
அல்லது
கடல்கடந்த
கூட்டுரிமையுடைய
நிறுவனம்
விற்பனை
மூலம்
பங்குகளை ஒரு
வெளிநாடு
வாழ்
இந்தியருக்கு
மாற்றித்
தரலாம்.
ஆ. பரிசாகத்
தருவதன் மூலம்
மாறுதல்
வெளிநாட்டில்
வாழும் ஒருவர்
தடையின்றி
பங்குகள் /
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
பரிசுப்பொருளாகத்
தருவதன் மூலம்
மாற்றித்
தருவது
தொடர்பான
வழிமுறைகள்:
-
இந்தியாவிற்கு
வெளியே
வாழும்
எவரும் (வெளிநாடு
வாழ்
இந்தியர்
அல்லாதார்
அல்லது
கடல்கடந்த
ஒரு
கூட்டுரிமை
நிறுவனம்)
பங்குகள்
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
இந்தியா
அல்லாத
வேறிட வாழ்
நபர்களுக்கு
பரிசாகக்
கொடுப்பதன்
மூலம்
மாற்றித்
தரலாம்.
இச்செயல்பாட்டிற்கான
ஒரு நிபந்தனை,
அவ்வாறு
பெற்றுக்
கொள்பவர்
அல்லது
மாற்றித்
தரப்பட்டவர்
இந்தியாவில்
ஏற்கெனவே இது
தொடர்பாக
துணிவான
முயற்சியில்
ஈடுபடாதவராகவும்
இந்தத்
துறையில்
இந்தியாவில்
செயல் உரிமை
வரையறை
செயல்களில்
தொடர்பற்றவராகவும்
இருக்க
வேண்டும்.
-
ஒரு
வெளிநாடுவாழ்
இந்தியர்
தன்னிடமுள்ள
பங்குகளை,
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
பரிசாகக்
கொடுப்பதன்
மூலம்
பிறிதொரு
வெளிநாடு
வாழ்
இந்தியருக்கு
மட்டுமே
வழங்கலாம்.
-
இந்தியாவுக்கு
வெளியே
வாழும் எந்த
நபரும்
பங்குகள்,
மாற்றவல்ல
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றைப்
பரிசாகக்
கொடுப்பதன்
மூலம்
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்கு
அவற்றை
மாற்றிக்
கொள்ளும்
உரிமை உண்டு.
இந்தியாவில்
வாழ்வோர்
வெளிநாட்டில்
வாழ்வோருக்கு
மாற்றித்
தருதல்.
அ) விற்பனை
மூலம்
மாற்றித்
தரும்
நெறிமுறை
அறிக்கை 10இன்கீழ்
பொது அனுமதி
வழங்குதல்
குறித்த மே 3, 2000
நாளிட்ட FEMA 20/2000
இந்திய
ரிசர்வ் வங்கி
அறிக்கை
நெறிமுறை 10
இன்படியான
பொது அனுமதித்
துறை
வரையறைக்குட்பட்ட
தனியருக்கு,
முறைவழி
வெளிநாட்டு
நேரடி முதலீடு
(FDI)
அடிப்படையில்
செயல்படும்
ஒரு இந்தியக்
குழுமத்தின்
பங்கு /
மாற்றத்தகு
கடனீட்டுப்பத்திரம்
ஆகியவற்றை
இந்தியாவில்
வாழ்வோர்
இந்தியாவுக்கு
வெளியே
வாழ்பவருக்கு
விற்பனை
செய்வதன்
மூலம்
மாற்றித்
தரலாம்.
அதற்கான
வழிமுறை
பின்வருமாறு:
-
பங்குகள்
அல்லது
மாற்றத்தகு
கடனீட்டுப்
பத்திரங்கள்
யாவற்றையும்
மாற்றித்தருவதற்கான
ஒரு
புதுமுயற்சியை
மேற்கொள்ள
திட்டமிட்டுள்ள
ஓர் இந்தியக்
குழுமம், நிதி
உதவி
தொடர்பான
சேவைகளில்
தன்னை
ஈடுபடுத்திக்
கொள்ளலாகாது
(நிதி உதவிச்
சேவை என்பது
வங்கிச் சேவை,
இந்திய
ரிசர்வ்
வங்கி
நெறிமுறைப்படுத்தும்
வங்கி
அல்லாத
குழுமங்கள்,
காப்பீடு
அமைப்புகள்,
காப்பீடு
நெறிமுறைப்படுத்தல்
மற்றும்
மேம்பாட்டு
ஆணையங்கள்,
ஏனைய
நிதிசார்ந்த
நெறிமுறை
அமைப்புகளால்
முறைப்படுத்தப்படும்
குழுமங்கள்)
-
கணிசமான
பங்குகளைக்
கையகப்படுத்தல்
உடைமையை
மாற்றிப்பெறல்
நெறிமுறைகளுக்கு
1997(SEBI)
உள்ளடங்கிய
விதிமுறைகளின்
நோக்கெல்லைக்குள்
பங்கு
மாற்றம்
அடங்காது;
மற்றும்
-
இந்திய
ரிசர்வ்
வங்கி
அவ்வப்போது
சுட்டிக்
காட்டுவதற்கேற்ப
தொடர்புடைய
நபர்கள்,
பங்கு
மாற்றம்
தொடர்பாக
விலைமுடிவு
செய்வதற்கான
வழிகாட்டு
வழிமுறைகள்
ஆவணபராமரிப்பு
அறிக்கை
அளித்தல்
ஆகிய தேவைகளை
நிறைவேற்ற
வேண்டும்.
ஆ.
பரிசாகத்தருவதுமூலம்
பங்கு மாற்றம்
இந்தியாவில்
வாழும் ஒருவர்
இந்தியாவிற்கு
வெளியே வாழும்
ஒருவருக்கு
பங்குகளை
கீழ்க்கண்டவாறு
மாற்றித்
தரலாம்.
-
இந்தியாவில்
வாழும்
ஒருவர்
வெளிநாட்டில்
வாழும்
ஒருவருக்கு
பரிசாக எந்த
பங்குறுதிச்
சான்றினை
மாற்றித்தர
முயற்சி
மேற்கொண்டாலும்
(முன்னாள் OCBS
தவிர) மத்திய
அயல்நாட்டு
செலாவணி
அலுவலகத்திற்கு
கீழ்க்கண்ட
தகவல்களுடன்
மனுச் செய்ய
வேண்டும்.
-
மாற்றிக்
கொடுப்பவர்
மற்றும்
மாற்றிப்
பெறமுனைபவர்
ஆகியோரது
பெயரும்
முகவரியும்
-
மாற்றிக்கொடுப்பவருக்கும்
பெறுபவருக்கும்
உள்ள
உறவுமுறை
-
பரிசு
கொடுப்பதன்
காரணம்
6.
இதுபோன்று
இந்தியாவில்
வாழ்வோரிடமிருந்து
வெளிநாட்டில்
வாழ்வோருக்கு
மாற்றித்தரும்
வாய்ப்பு
மேற்குறிப்பிட்ட
வழிமுறைகளுக்குள்
அமையாதபோது
என்ன செய்வது?
மாறுதல்
மேற்குறிப்பிட்ட
வழிமுறைகளால்
இயலாது எனும்
நிலையில்
அவர்களிருவருள்
ஒருவர் இ.ரி.வ (RBI)
க்கு
விண்ணப்பித்து
மாறுதலுக்கு
அனுமதி
கோரலாம்.
அதற்குக்
கீழ்கண்ட
தகவல்களை
அனுப்ப
வேண்டும்.
-
FIPB இசைவு
நகல்
-
மாற்றித்தருபவர்
மற்றும்
மாற்றிப்பெறுபவர்
ஆகியோரது
ஒப்புதல்
கடிதத்தில்
பங்குகளின்
எண்ணிக்கை
பணம் பெறும்
குழுமத்தின்
பெயர்,
இம்மாறுதல்
என்ன
விலையில்
முடிவு
செய்யப்பட்டு,
செயலாக்கப்படுகிறது
போன்ற
விபரங்களும்
அடங்க
வேண்டும்.
-
இந்திய
முதலீடுபெறும்
குழுமத்தின்
மாறுதலுக்கு
உட்பட்ட
பங்குகளைக்
கொண்டிருக்கும்
முறையின்
இப்போதைய
மற்றும்
மாற்றத்திற்குப்
பிறகு
நிலவிய
சூழலையும்,
இந்தியாவில்
வாழ்வோர்,
வெளிநாட்டில்
வாழ்வோர்
ஆகியோரின்
நிகரமதிப்பு
மூலதனப்
பங்கேற்பு
நிலையினையும்
விளக்குவதாக
அமைய
வேண்டும்.
-
இந்திய
ரிசர்வ்
வங்கி இசைவு
நகல்கள்,
வெளிநாடு
வாழ்வோரின்
பங்கு
எண்ணிக்கை
நிலையையும்
சான்றளிக்கும்
(FC-GPR)ஐ பெற்றுக்
கொண்டதற்கான
நகல்கள்.
-
விற்பவர்களும்
பெற்றுக்
கொண்டவர்களும்
(வெளிநாடு
வாழ்
இந்தியர்கள்)
NRI/OCB எனில்
அவர்கள்
வைத்திருக்கும்
மாற்றுவதற்குரிய
/ மாற்ற
இயலாத
பங்குகளின்
விபரங்களைச்
சான்றளிக்கும்
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
இசைவு
நகல்கள்
-
இந்தியப்
பங்குச்
சான்றிதழ்
செலாவணி
வாரியத்திடம்
(SEBI) அளித்த
திறந்த நிலை
முன்வைப்பு
ஆவணங்கள்
வெளிநாடு
வாழ்பவரின்
கையகப்படுத்தப்பட்ட
பங்குகளை இ ப
செ வா(SEBI)
நெறிமுறைப்படி
உடைமை
மாற்றிப்
பெறும்
நடைமுறை
செயல்பட
விருந்தால்
-
பட்டய
கணக்காளரிடமிருந்து
நேர்மையான
மதிப்பீட்டுச்
சான்றிதழ்
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
வழிமுறைப்படி
பங்குகளின்
மதிப்பீடு
குறிப்பிட
வேண்டும்.
-
பட்டியலிடப்படாத
பங்குகளைப்
பொறுத்தவரை
முந்தைய
முதலீட்டு
வெளியீடுகளுக்கான
கட்டுப்பாட்டாளர்
அணுகுமுறைப்படி
பங்குகளின்
நேர்மையான
மதிப்பு
முடிவு
செய்யப்படுகிறது.
-
பட்டியலிடப்பட
பங்குகளின்
விலை
தொடர்பாக
கீழ்வரும்
வழிமுறையில்
முடிவு
செய்யப்படுகிறது.
-
ஆறுமாத
காலத்துக்கு
வாராந்தர
உச்ச /
மிகக்குறைந்த
பங்கு
மதிப்புக்
குறியீட்டின்
சராசரி
அல்லது மு க
வ அ (FIPB) க்கு
விண்ணப்பித்த
தகவல்களுடன்
மனுச் செய்ய
வேண்டும்.
7. இந்தியாவிலுள்ள
முதலீட்டடையும்
அதன் மூலம்
பெறப்பட்ட
லாபத்தையும்
வாழும்
நாட்டுக்கு
திரும்ப
எடுத்து
செல்ல
முடியுமா?
வெளிநாடு
வாழ்
இந்தியர்கள்,
குறிப்பாக
திரும்ப
எடுத்துச்
செல்ல செயல்
திட்டத்தின்
கீழ் முதலீடு
செய்யாத
நிலையில்
வெளிநாட்டு
முதலீடுகள்
யாவற்றையும்
தடையின்றி
திரும்ப
எடுத்துச்செல்லலாம்.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர் மூலம்
வெளிமுதலீடுகளுக்கு
அறிவிக்கப்பட்ட
ஆதாயப்
பங்கினை
தடையின்றி
அனுப்பலாம்.
8.
ஏற்கனவே உள்ள
குழுமங்களுக்கு
பங்குகள்
வெளியீடு
மற்றும்
மதிப்பீடு
குறித்த
வழிகாட்டு
நெறிகள் யாவை?
முன்னுரிமை
அடிப்படையில்
பங்குகளின்
ஒதுக்கீடு 1956
குழுமங்கள்
சட்டப்படி
அமையவேண்டும்.
பொது வரைநிலை
குழுமங்களை
பொருத்தவரை
இதற்கான
சிறப்புத்தீர்மானம்
நிறைவேற்றப்
படவேண்டும்.
பட்டியலிடப்பட்ட
குழுமங்களைப்
பொருத்தவரை
இந்திய
ரிசர்வ் வங்கி
(RBI), இந்திய
பங்குச்சான்றிதழ்
பரிமாற்ற
வாரியம் (SEBI)
ஆகியவற்றின்
வெளியீட்டு
விலை
கீழ்கண்டவாறு
இருக்க
வேண்டும்.
அ.
குறிப்பிட்ட
தேதிக்கு
முற்பட்ட ஆறு
மாத காலத்தில்
பங்குமாற்றுக்
களத்தில்
தொடர்புடைய
பங்குகளின்
குறியீட்டின்
படியான
வாராந்திர
உச்ச/
மிகக்குறைன்த
இறுதி
விலைகளின்
சராசரி
அல்லதுஆ
குறிப்பிட்ட
நாளுக்கு
முற்பட்ட
இரண்டு வார
காலத்தில்
பங்கு
மாற்றுக்களத்தில்,
தொடர்புடைய
ப்ங்குகளின்
குறியீட்டின்
அடிப்படையில்
வாராந்திர
உச்ச/மிக
குறைந்த இறுதி
விலைகளின்
சராசரி
இ.
பட்டியிலிட்ப்படாத
குழுமங்களைப்
பொருத்தவரை
பங்குகளின்
நியாயமான
மதிப்பு,
இந்திய
முதலீடு
கட்டுப்பாட்டாளரின்
வழிகாட்டுதல்களுக்கு
ஏற்ப முடிவு
செய்யப்படுகிறது.
9. ADRs/GDRs
வழங்குவதில்
இந்திய
குழுமங்கள்
கடைப்பிடிக்க
வேண்டிய
நெறிமுறைகள்
யாவை?
ADRs/GDRs
ஆகியவற்றை
வழங்குவதன்மூலம்,
இந்திய
குழுமங்கள்
பன்னாட்டுச்
சந்தையில்
முதலீடுகளைப்பெற
அனுமதிக்கப்படுகின்றன.
ஒரு குழுமம்
அயல் நாட்டு
நாணயமாக
மாற்றவல்ல
பத்திரங்கள்
மற்றும்
சாதாரண
பங்குகள்
முதலீட்டும்
பற்றுசீட்டுச்
செயல் முறை
மூலம்
வழங்கும்
செயல்
திட்டத்தின்
படியும் இதன்
பிறகு
வெளியான
இந்திய
அரசாங்க நிதி
அமைச்சகத்தின்
நெறி செய்
வழிமுறைகளையும்,
ADRs/GDRs வழங்கும்
தகுதி
படைத்திருந்தால்
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன்
அனுமதியின்றியே
ADRs/GDRs வழங்கலாம். ADRs/GDRs
வழங்கிய பிறகு
அந்தக்
குழுமம்
இந்திய
ரிசர்வ் வங்கி
எண். FEMA 20/RBI May 2000
நாளிட்ட
பிற்சேர்க்கையில்
காணப்படும்
இந்திய
ரிசர்வ் வங்கி
குறிப்பிட்ட
படிவத்தில்
ஒரு விவர
அறிக்கை
அனுப்ப
வேண்டும்.
அதோடு குழுமம்
காலாண்டு
விவர அறிக்கை
ஒன்றையும் (மேற்
சொன்ன நெறி
முறை
விதிகளின் படி)
பிற்சேர்க்கையில்
குறிப்பிட்ட
வடிவத்தில்
அனுப்ப
வேண்டும்.
ADR/GDR வழங்கல்
வழி
கிடைக்கப்பெறும்
வருமானத்தை
இறுதியாகப்
பயன்படுத்துவதில்
நிலம் வீடுமனை
வணிகம்,
பங்குச் சந்தை
ஆகியவற்றில்
ஈடுபடுத்தக்
கூடாது
என்பதன்றி
வேறு
தடையில்லை.
10.
முன்மொழியப்பட்ட/ஏற்பாடு
செயயப்பட்ட ADR/GDR
இருவழி சரிசம
மாற்று ADR/GDR
என்பது என்ன?
முன்மொழியப்பட்ட/ஏற்பாடு
செயயப்பட்ட ADR/GDR :
ஓர் இந்திய
குழுமம் கடல்
கடந்த ஓர்
ஒப்படைப்புப்
பொருள்
ஏற்பாடுடன்
சேர்ந்து
முதன்மை
மேலாளர்
ஒருவரால்
முடிவுசெய்யப்பட்ட
விலையில்
பங்குதாரர்களின்
பங்கின்மேல்
ADR/GDR
வெளியீட்டினை
முன்மொழியலாம்.
நவம்பர் 23, 2000
நாளிட்ட (A.P. DIR
தொடர்
வெளியீடு) எண்
52 மூலம்
செயல்முறை
வழிகாட்டு
நெறிகள்
வழங்கப்பட்டுள்ளன.
இருவழி
சரிசம அளவு
மாற்றக்
கூடிய செயல்
திட்டம் :
வரையறுக்கப்பட்ட
செயல்
திட்டதில்
இந்தியாவில்
பதிவு செய்த
ஒரு தரகர்
இந்தியாவுக்கு
வெளியே வாழும்
ஒருவருக்கு ADRs/GDRs
ஆக
மாற்றுவதற்காக
இந்தியாவின்
பங்குகளை
வாங்கலாம்.
அதற்கான
செயல்முறை
வழிகாட்டு
நெறிகள்
பிப்ரவரி 13, 2002
நாளிட்ட (A.P. DIR
தொடர்
வெளியீடு)
சுற்றறிக்கை
எண் 21இல்
கூறப்பட்டுள்ளன.
இச்செயல்
திட்டம்
எவ்வளவு
பங்குகளை
வேண்டுமானாலும்
வாங்கி அவற்றை
ADRs/GDRs ஆக மாற்றம்
செய்ய மட்டும்
வழிவகை
செய்கிறது.
அதன்
எண்ணிக்கை
ஒப்படைக்கப்பட்ட
ADRs/GDRs
வழிபெறப்பட்ட
பங்குகளுக்குச்
சமமாக அல்லது
குறைவானதாக
இருக்க
வேண்டும்.
அப்பங்குகள்
உண்மையில்
சந்தையில்
விற்கப்பட்டவை.
அவ்வகையில்
அது ஒரு
வரையறுக்கப்பட்ட
இருவழி சரிசம
மாற்றக்கூடிய
முறையாகும்.
இதில்
உள்நாட்டுச்
சந்தையிலிருந்து
புதிதாகப்
பங்குகள்
கொள்முதல்
செய்வதற்கான
தடையில்லா
வாய்ப்பு
வெளிநாடு வாழ்
முதலீட்டாளர்களால்
சந்தையில்
விற்பனை
செய்யப்பட்ட,
மறுமாற்றம்
செய்யப்பட்ட
பங்குகளின்
எண்ணிக்கை
அளவில்
குறைக்கப்படுதிறது.
ADR/GDR உள்நாட்டுச்
சந்தையில்,
பங்குகள் குறை
மதிப்பில்
விலைப்புள்ளி
கொடுக்கப்படும்போது,
முதலீட்டாளர்கள்
ADRs/GDRs ஆகியவற்றை
அதற்கான
பங்குகளாக
மாற்றம்
செய்து
உள்நாட்டுச்
சந்தையில்
விற்பனை
செய்யும்போது
இலாபம்
ஈட்டலாம். ADRs/GDRs
ஆகியவை
மிகைமதிப்போடு
விலைப்புள்ளி
கொடுக்கப்படும்
சூழ்நிலையில்
எதிர்மறையான
சரிசம அளவு
மாற்றக்கூடிய
தேவை ஏற்படும்.
அதாவது ADRs/GDRs ஆக
மறுமாற்றம்
செய்வதற்காக
உள்நாட்டுச்
சந்தையில்
பங்குகள்
கொள்முதல்
செய்யப்படும்.
இச்செயல்
திட்டம் SEBIயின்
கீழ் பங்குச்
சான்றிதழ்களின்
காவலர்கள்
மற்றும்
பங்குதரகர்களின்
மூலம்
இயக்கப்படுதிறது.
11.
இந்தியக்
குழுமங்கள் (FCCBS)
வெளி நாணய
மாற்றுதலுக்கான
பத்திரங்கள் (வெ.நா.மா.ப)
வழங்க
முடியுமா?
வெளிநாணய
மாற்றுதலுக்கான
பத்திரங்கள்
மற்றும்
பொதுமுறையான
பங்குகள் (முதலீட்டு
பற்றுச்
சீட்டு
செயல்முறை
செயல்திட்டத்தின்
(1993)
அடிப்படையில்
வெ.நா.மா.ப.களை (FCCBS)
கடல்கடந்த
சந்தையில்
இந்தியக்
குழுமங்களால்
வழங்க
முடியும்.
மே 3, 2000
நாளிட்ட
அவ்வப்போது
மாறுதலுக்குட்பட்ட
RBIயின்
அறிவிக்கை எண்
FEMA 3/2000-RBஇல் உள்ள
வெளிப்புற
வணிகமுறை
கடன்பெறல்
அறிவுரை
நெறிகளுக்கு
ஏற்ப வெ.நா.மா.ப.
(FCCB) வெளியீடு
அமைய வேண்டும்.
12. நான்,
முன்னுரிமைப்
பங்குகள்
மூலம் முதலீடு
செய்ய
முடியுமா?
அத்தகைய
முதலீட்டுக்கான
நெறிமுறைகள்
யாவை?
முன்னுரிமைப்
பங்குகள்
மூலம் முதலீடு
செய்யும்
வெளிநாட்டு
முதலீடு வெளி
நாட்டின்
நேரடி
முதலீடாகக்
கருதப்படுகிறது.
அதற்கான
முன்மொழிதல்
தானியங்கு
செயல்வழி (அ) அ.மு.மே.வா.வின்
(FIPB) மூலம்
நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முன்னுரிமைப்
பங்குகளில்
செய்யப்படும்
வெளிமுதலீடு,
பங்கு
முதலீடாக
ஏற்கப்பட்டு
வெளிநாட்டு
வணிகமுறைக்
கடன்வாங்கல் (வெ.க.வா.)
(ECB) அறிவுறுத்து
நெறிமுறைகள்
(Cap)
ஏற்பாட்டுக்கு
முன்னுரிமைப்
பங்குகள்
அப்பாற்பட்டது.
முன்னுரிமைப்
பங்குகள்,
மாற்றும்
வாய்ப்புடன்
இருக்கும்போது
அவை
வெளிநாட்டு
நேரடி
பங்குகளாக
கருதப்பட்டு
அத்தகைய
உச்சவரம்பிற்குள்
இருக்கவேண்டும்.
(பிரிக்கப்பட்ட
துறைகளுக்கான
வெளிநாட்டு
நேரடி
பங்குகளில்
உச்சவரம்பு
இருப்பின்)
முன்னுரிமை
பங்குகளுக்கு
மாற்றம்
வாய்ப்பு
இல்லாவிடில்
அவை
வெளிநாட்டு
நேரடி
பங்கிற்கான
உச்சவரம்பிற்கு
உட்படாது.
13.
பங்குகளை
முழுமொத்தத்தொகைக்
கட்டணம் (பங்குவீத
உரிமை)
வெளிநாட்டு
வணிகமுறைக்
கடன்கள்
ஆகியவற்றின்
அடிப்படையில்
வழங்கலாமா?
முழுத்தொகைக்
கட்டணம்,
பங்குவீத
உரிமை,
வெளிநாட்டு
நாணயமாக்கு
வணிகமுறைக்
கடன்கள்
ஆகியவற்றின்
மீது பங்குகள்
வழங்கலாம்.
அச்செயல்பாடு
எல்லா
வரிப்பொறுப்புகளையும்
குறியிட்ட
துறையின்
வழிகாட்டு
நெறிமுறைகளையும்
பின்பற்ற
வேண்டும்.
14.
தானியங்கு
முறைவழி,
அரசாங்க
முறைவழி
ஆகியவற்றின்
அடிப்படையில்
பங்குகள்
வழங்கும்
செயல் தவிர இ.ரி.வ.
3-5-2000 நாளிட்ட
அறிவிக்கை எண்
FEMA 20 இன் கீழ் வேறு
பொதுவான
அனுமதிகள்
யாவை?
இந்தியக்
குழுமங்கள் ESOPஇன்
கீழ் தங்கள்
பணியாளர்களுக்கு
அல்லது
வெளிநாட்டில்
சேர்ந்து
செய்யும்
கூட்டு
வியாபார
நிறுவனங்கள்
அல்லது
வெளிநாட்டில்
முழுமையாகச்
சொந்தப்
பொறுப்பில்
துனை
நிறுவனங்கள்
இவற்றின்
வெளிநாட்டுவாழ்
பணியாளர்கள்
ஆகியோருக்கு,
நேரடியாகவோ
அல்லது
நற்செயல்
புரியும் ஓர்
அமைப்பின்
மூலமாகவோ
பங்களிப்பாக,
நிறுவனத்தின்
மொத்த
முதலீட்டில் 5%க்கு
மிகாமல்
வழங்கலாம்.
-
இந்தியக்குழுமங்களின்
சேர்ப்பு (அ)
பிரிப்பு (அ)
ஓருங்கிணப்பு
நடவடிக்கைகளைத்
தொடர்ந்து
வெளிநாட்டில்
வாழ்வோர்
பங்குகளை
வழங்குதலும்
கையகப்படுத்துதலும்.
-
ஓர்
இந்தியக்
குழுமம்
இந்தியாவுக்கு
வெளியில்
வாழும் ஒரு
நபருக்கு
உரிமை
அடிப்படையிலான
பங்குகள்,
முன்னுரிமைப்
பங்குகள்,
கடனீட்டுப்
பத்திரங்கள்
ஆகியவற்றை
வழங்குதல்
-
15.
இந்தியக்
குழுமம் ஒன்று
வழங்கும்
பட்டியலில்
இடம்பெறாத
பங்குகளில்
நான் முதலீடு
செய்யலாமா?
செய்யலாம்:
இ.ரி.வ. இந்திய
அரசாங்கம்
வெளியிட்ட
விதிமுறைகள்,
நெறிசெய்
அறிவுரைகளின்
அடிப்படையில்
பட்டியலில்
இடம்பெறாத
இந்தியக்
குழுமங்களின்
பங்குகளில்
முதலீடு
செய்யலாம்.
16.
வெளிநாட்டவர்
ஒருவர் கூட்டு
வணிகம் (தனியுரிமையுடைய
வணிகம்
ஆகியவற்றை
இந்தியாவில்
தொடங்கலாமா?
முடியாது.
இந்தியாவில்
அயல் நாடு வாழ்
இந்தியரும் (PIO)
மட்டுமே
கூட்டு வணிகம்
/ தனி உரிமை
வணிகம்
ஆகியவற்றை
இந்தியாவில்
தொடங்கலாம்.
அவர்களுக்கும்
முதலீடு
செய்யும்
அனுமதி
அத்தொகையை
திரும்ப
வெளிநாட்டுக்கு
மாற்ற இயலாது
என்னும்
அடிப்படையில்
தான்
வழங்கப்படும்.
17.
இந்தியக்
குழுமம் குறை
மதிப்பீடு
முறையில்
வழங்கிய
உரிமைப்பங்குகளில்
நான் முதலீடு
செய்யலாமா?
இந்திய
ரிசர்வ் வங்கி
குறை
மதிப்பில்
வெளியிடும்
உரிமை
பங்குகளில்
முதலீடு
செய்தற்கு
அவ்விதத்
தடையும்
விதிக்கவில்லை.
அதற்கான
நிபந்தனை
அவ்வாறு
வழங்கப்பட்ட
உரிமைப்
பங்குகளை
இந்தியாவில்
வாழ்வோருக்கும்
வெளிநாட்டில்
வாழ்வோருக்கும்
ஒரே விலையில்
வழங்க
வேண்டும்.
II – வெளிநாட்டுத்
தொழில்நுட்ப
உடனுழைப்பு
1.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
தானியங்கு
வழிமுறையின்
மூலம்
வெளிநாட்டுத்
தொழில்நுட்ப
மாற்றுதலுக்குரிய
பணப்பட்டுவாடா
அளவுகோல்கள்
யாவை?
பங்குரிமைத்
தொகை எவ்வாறு
கணக்கிடப்பட
வேண்டும்?
கீழ்க்கண்ட
எல்லைகளுக்குட்பட்டு
தானியங்கு
முறையின்
வழியே
இந்தியக்
கம்பெனிகள்
வெளிநாட்டுத்
தொழில்நுட்ப
உடனுழைப்புக்கும்
பணம்பட்டுவாடா
செய்ய
அனுமதிக்கப்படுகின்றன:
-
மொத்தத்
தொகையாகப்
பணப்பட்டுவாடா
2 மில்லியன்
அமெரிக்க
டாலருக்கு
மிகாமல்
-
பங்குரிமைத்
தொகையின்
கால அளவில்
கட்டுப்பாடு
எதுவுமில்லாமல்
உள்நாட்டு
விற்பனையில்
5 விழுக்காடு,
ஏற்றுமதியில்
8 விழுக்காடு
இவற்றிற்கு
மிகாமல்
-
பங்குரிமைத்தொகை
வரிபிடித்தம்போக
வழக்கிலுள்ள
நிபந்தனைகளுக்கு
உட்பட்டு
கணக்கிடப்படுகிறது.
-
உள்ளடங்கிய
பொருட்களின்
வழக்கிலுள்ள
வாங்கும்
விலையையும்,
இறக்குமதி
செய்யப்பட்ட
உள்ளடங்கிய
பொருட்களின்
தரையிறங்கும்போதுள்ள
விலையையும்
கழித்துக்கொண்டு,
வாங்கிய இடம்
எவ்வாறு
இருப்பினும்,
கப்பல்
கட்டணம்,
காப்பீடு,
சுங்கவரி
இவற்றைக்
கணக்கில்
கொள்ளாமலும்,
உற்பத்திப்
பொருளைத்
தொழிற்சாலையிலுருந்து
வாங்கும்
நிலையிலும்
பங்குரிமைத்
தொகை
கணக்கிடப்படுகிறது.
இத்தகைய
ஒப்பந்தங்களின்
வழி
பங்குரிமைத்
தொகையைச்
செலுத்துவதற்கு
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்க்ளுக்கு
இந்திய
ரிசர்வ் வங்கி
அதிகாரங்களை
வழங்கியுள்ளது.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
வட்டார
அலுவலகங்களில்
ஒப்பந்தங்களைப்
பதிவு செய்து
கொள்ள
வேண்டும்
என்னும் தேவை
நீக்கப்பட்டு
விட்டது.
2. தொழில்நுட்ப
மாற்றுதலுக்கு
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
தானியங்கு
முறைவழி
இல்லையெனில்
என்ன செய்ய
வேண்டும்?
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
தானியங்குமுறை
வழியின்
அளவுகோல்களுக்குப்
பொருந்தாத
புதுத்திட்டங்கள்
இந்திய அரசின்
வணிக
அமைச்சகத்தின்
தொழில்
கொள்கையும்
முன்னேற்றமும்
என்னும்
துறையிடம்
அனுமதி
பெறவேண்டும்.
III வணிக
இணைப்புக்
கழக
முதலீடுகள்
1.
வெளிநாட்டு
நிறுவன
முதலீட்டாளர்கள்
(வெ.நி.மு) (FII)
வணிக இணப்புக்
கழகங்களில்
முதலீடு
செய்வது
தொடர்பான விதி
முறைகள் எவை?
-
வெளிநாட்டு
நிறுவன
முதலீட்டாளர்களின்
(வெ.நி.மு)
முதலீடு SEBIயின்
வெ.நி.மு.
விதிகள் 1995,
மற்றும் மே 3, 2000
நாளிட்ட FEMA
அறிக்கை எண் 20இல்
விதி 5(2)
ஆகியவற்றின்
கீழ்
ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
சொத்து
மேலாண்மை
நிறுவனங்கள்,
ஓய்வூதிய
நிதிகள்,
பரஸ்பர
நிதிகள்,
முதலீட்டுப்பொறுப்பு
நிறுவனங்கள (நியமன
நிறுவனங்கள்,
இணைக்கப்பட்ட/நிறுவன
இணைப்புக்
கழக
முதலீட்டு
மேலாளர்கள்
மற்றும்
அவர்களது
பொறுப்பாண்மை
அதிகாரம்
உடையவர்கள்),
பல்கலைக்
கழக நிதிகள்,
அறக்கட்டளை
நிறுவனங்கள்,
அறநோக்குப்
பொறுப்புக்
கழகங்கள்
மற்றும்
அறநோக்குச்
சங்கங்கள்
ஆகியோர்
இணைப்புக்
கழக
முதலீட்டார்களில்
அடங்குவர்
-
வெளிநாட்டு
நிறுவன
முதலீட்டாளர்கள்
பதிவுசெய்துகொள்வதற்குரிய
இணப்புப்
புள்ளியாக SEBI
செயல்படுகிறது.
SEBIயில் பதிவு
செய்து
கொண்ட
வெளிநாட்டு
நிறுவன
முதலீட்டாளர்கள்
வணிக
இணைப்புக்
கழக
முதலீடுகளில்
முதலீடு
செய்ய இ.ரி.வ.
பொது அனுமதி
வழங்கியுள்ளது.
-
எல்லா
வெளிநாட்டு
நிறுவன
முதலீட்டாளர்களின்
முதலீடுகளும்
அவர்களுடைய
துணைக்
கணக்குகளையும்
சேர்த்து
அவர்கள் ஒரு
இந்திய
நிறுவனத்தின்
செலுத்தப்பட்ட
மூலதனத்தில்
24
விழுக்காட்டுக்கும்
அதிகமாக
வாங்கக்கூடாது.
இந்திய
நிறுவனங்கள்
தங்கள்
இயக்குநர்கள்
குழுவில் ஒரு
தீர்மானத்தை
நிறைவேற்றி
அதனைத்
தொடர்ந்து,
அதன்படி
பொதுக்குழுவில்
ஒரு
சிறப்புத்
தீர்மானத்தினை
நிறைவேற்றி
மேலே
குறிப்பிட்ட
24
விழுக்காட்டை
பிரிவுக்குரிய
வரையறையாகவும்
/
சட்டப்படியான
உச்ச வரம்பு
நிலைக்கு
மாற்ற
முடியும்.
2.
வெளிநாட்டின்
துணிகர மூலதன
முதலீட்டுக்குரிய
விதிமுறைகள்
யாவை?
SEBIயில் பதிவு
செய்துள்ள ஒரு
வெளிநாட்டு
துணிகர மூலதன
முதலீட்டாளர்
இந்திய
துணிகர மூலதன
முதலீட்டு
பொறுப்பேற்பு
நிறுவனத்திடம்
ஒரு துணிகர
முதலீட்டு
நிதியில்,
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
அட்டவனை 6
அறிவிப்பு எண்
FEMA 20/2000 இல் 3.5 2000
நாளிட்ட,
அவ்வப்போது
திருத்ததுக்குரிய,
சிறப்பித்துக்
குறிப்பிடப்படும்
விதிகளுக்கும்
நிபந்தனைகளுக்கும்
உட்பட்டும்,
அதில்
குறிப்பிடப்பட்டுள்ள
முறையிலும்
முதலீடு
செய்யலாம்.
3.
வெளிநாடு வாழ்
இந்தியர்கள்/இந்திய
வம்சாவழியினர்
வணிக (NRI/PIO)
இணைப்புக்
கழகங்களில்
முதலீடு
செய்வதற்குரிய
விதிமுறைகள்
யாவை?
-
வணிக
இணைப்புக்
கழக
முதலீட்டுத்
திட்டத்தின்
கீழ்
வெளிநாடுவாழ்
இந்தியர்களும்,
இந்திய
வம்சாவழியினரும்
இந்திய
நிறுமங்களின்
பங்குகளையும்
கடனுறுதிப்
பத்திரங்களையும்
பங்குப்
பரிமாற்றச்
சந்தையில்
வாங்கலாம்/விற்கலாம்.
இதற்கு
வெளிநாடுவாழ்
இந்தியர்/இந்திய
வம்சாவழியினர்
வணிக
இணைப்புக்
கழக
முதலீட்டுத்
திட்டத்தினைச்
செயல்படுத்துவதற்கென
நியமிக்கப்பட்டுள்ள
ஒரு
வங்கியின்
கிளையில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
எல்லா
வாங்குதல்/விற்றல்
பரிமாற்றங்களும்
அந்த வங்கிக்
கிளையின்
வழியாகவே
நடைபெற
வேண்டும்.
-
ஒரு
வெளிநாடு
வாழ்
இந்தியர்/இந்திய
வம்சாவழியினர்
ஓரு இந்திய
நிறுமத்தின்
செலுத்தப்பட்ட
மூலதனப்
பங்குகளில் 5
விழுக்காடு
வரை பங்குகளை
வாங்கலாம்.
எல்லா
வெளிநாடு
வாழ்
இந்தியர்கள்/இந்திய
வம்சாவழியினர்கள்
சேர்ந்து ஒரு
நிறுமத்தின்
10 விழுக்காடு
மதிப்புக்கு
மேல்
பங்குகளை
வாஙக
முடியாது. (அந்த
இந்திய
நிறுமம்
பொதுக்
குழுத்தீர்மானத்தின்
மூலம் இந்த
எல்லையை 24
விழுக்கட்டுக்கு
அதிகரிக்க
முடியும்).
-
வாழும்
நாட்டுக்குத்
திரும்ப
கொண்டு
செல்லத்தக்க,
முதலீடுகளை
விற்பதனால்
கிடைக்கும்
தொகை
வெளிநாடுவாழ்
இந்தியர்/இந்தி
வம்சாவழியினரின்
NRE/NRO
கணக்குகளிலும்,
வாழும்
நாட்டுக்குக்
கொண்டுசெல்ல
முடியாத,
முதலீடுகளை
விற்பதனால்
கிடைக்கும்
தொகை NRO
கணக்குகளில்
மட்டுமே
செலுத்தப்பட
வேண்டும்.
-
பங்குகள்
விற்ற
தொகைக்கு
உரிய வரி
செலுத்தப்பட
வேண்டும்.
IV கிளை/திட்டம்/தொடர்பு
அலுவலங்கள்
தொடங்குவதற்கு
உரிய
செயல்முறைகள்
1.
வெளிநாட்டு
நிறுமங்கள்
எவ்வாறு கிளை/திட்டம்/தொடர்பு
நிறுவனங்களைத்
தொடங்க
முடியும்?
வெளிநாட்டு
நிறுமங்கள் இ
ரி வ யிடம்
அனுமதிபெற்ற
பிறகு தொடர்பு/கிளை
நிறுவனங்களை
இந்தியாவில்
தொடங்க
முடியும்.
வெளிநாட்டு
நிறுமங்கள்
இந்தியாவில்
திட்ட
அலுவலகங்களை
இந்தியாவில்
தொடங்குவதற்கு
சில
நிபந்தனைகளுக்கு
உட்பட்ட பொது
அனுமதியை
வழங்கியுள்ளது.
2.
தொடர்பு
அலுவலகம்/பிரதிநிதி
அலுவலகம்
தொடங்குவதற்கு
ரிசர்வ்
வங்கியின்
ஒப்புதல் பெற
பின்பற்றப்பட்டவேண்டிய
செயல்முறை
யாது?
-
ஒரு
தொடர்பு
அலுவலகம்
தொடர்புச்
செயல்பாடுகளை
மட்டுமே
செய்யமுடியும்;
அதாவது
வெளிநாட்டிலுள்ள
தலைமை
அலுவலகத்துக்கும்
இந்தியாவில்
உள்ள
நபர்களுக்கும்
ஒரு தகவல்
பரிமாற்று
வழிமூலமாக
அது
செயல்படலாம்.
இந்தியாவில்
எந்த வணிகச்
செயல்பாட்டினையும்
செய்வதற்கோ
வருவாய்
ஈட்டுவதற்கோ
அதற்கு
அனுமதியில்லை.
அந்த
அலுவலகத்தின்
செலவினங்கள்
அனைத்தும்
வெளிநாட்டிலுள்ள
தலைமை
அலுவலகத்தினால்
அந்நியச்
செலாவணியி
பணம்
அனுப்புதல்
வழியாகவே
நடைபெற
வேண்டும்.
எனவே அந்த
அலுவலகத்தின்
பணி, சந்தை
வாய்ப்புகள்
பற்றிய
தகவல்களைச்
சேகரித்தல்,
நிறுமத்தினைப்
பற்றியும்,
அந்த
நிறுமத்தின்
உற்பத்திப்பொருட்களை
பற்றியும்,
இந்திய
வாடிக்கையாளர்களுக்கு
தெரிவிப்பது
என்ற
எல்லைகளுக்குட்பட்டது.
-
இந்தியாவில்
தொடர்பு
அலுவலங்களைத்
தொடங்க
விரும்பும்
நிறுமங்கள்
இந்திய
ரிசர்வ்
வங்கி,
மத்திய
அலுவலகம்
மும்பையின்
அந்நியச்
செலாவணித்துறையின்
வெளிநாட்டு
முதலீட்டுப்பிரிவிடம்
FNC-1
விண்ணப்பத்தில்
அதில்
குறிப்பிடப்பட்டுள்ள
ஆவணங்களை
இணைத்து
விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பம் www.rbi.org.in
என்னும்
இணையதள
முகவரியில்
உள்ளது.
-
அத்தகைய
அலுவலகங்களை
அமைப்பதற்குத்
தொடக்கத்தில்
3 ஆண்டு
காலத்துக்கு
அனுமதிக்கப்படுகிறது.
எந்த வட்டார
அலுவலகத்தின்
பொறுப்பெல்லைக்குள்
அந்த
அலுவலகம்
உள்ளதோ அந்த
அலுவலகத்தினால்
அந்தக் கால
எல்லையை
அவ்வவ்போது
நீட்டிக்க
முடியும்.
தொடர்பு/பிரதிநிதி
அலுவலகங்கள்
ஒரு பட்டயக்
கணக்காளர்
மூலம்
தொடர்புடைய
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
வட்டார
அலுவலகத்திற்கு
அந்த தொடர்பு
அலுவலகம்
இந்திய
ரிசர்வ்
வங்கியால்
அனுமதிக்கப்பட்ட
செயல்பாடுகளை
மட்டுமே
செய்து
வருகிறது
என்னும்
செயல்பாட்டுச்
சான்றிதழைச்
சமர்ப்பிக்க
வேண்டும்.
3. திட்ட
அலுவலகத்தினை
தொடங்குவதற்குரிய
செயல்முறை
யாது?
இந்திய
நிறுவனங்கள்
வெளிநாட்டு
நிறுமங்களுக்கு
இந்தியாவில்
செயல்
திட்டங்களை
வழங்குகின்றன.
இந்திய
நிறுமத்திடமிருந்து
ஒரு செயல்
திட்டத்துக்குரிய
ஒப்பந்தத்தினைப்
பெற்றிருந்தால்
அந்த
வெளிநாட்டு
நிறுமத்துக்கு
இந்திய
ரிசர்வ் வங்கி
எண் FEMA 95/2003-RB ஜூலை 2, 2003
நாளிட்ட
அறிவிப்பில்
திட்ட
அலுவலகம்/அலுவலகங்கள்
தொடங்குவதற்கு
பொது அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
அந்த அனுமதி
பின்வரும்
நிபந்தனைகளுக்கு
உட்பட்டது.
-
அந்தத்
திட்டத்துக்கு
வெளிநாட்டிலிருந்து
நேரடியாக
பணம
அனுப்புதல்
வழியாக
நிதியளிக்கப்பட
வேண்டும்
அல்லது
-
அந்தத்
திட்டம்
இருவழி
அல்லது
பல்வழி
பன்னாட்டு
நிதி
முகமையால்
நிதியளிக்கப்பட்டிருக்க
வேண்டும்
அல்லது
-
அந்தத்
திட்டம்
அதற்குரிய
அதிகார
அலுவலரால்
ஒப்புதல்
அளிக்கப்பட்டிருக்க
வேண்டும்.
-
ஒப்பந்தம்
வழங்கும்
இந்தியாவில்
உள்ள ஒரு
நிறுமம்
அல்லது
அமைப்பு
இந்தியாவில்
உள்ள பொது
நிதிநிறுவனத்தினால்
அல்லது
வங்கியால்
அந்தத்
திட்டத்துக்கு
குறித்த
பருவ காலக்
கடன்
வழங்கப்பட்டிருக்க
வேண்டும்.
-
இருப்பினும்,
மேலே
குறிப்பிட்ட
தேவைகள்
நிறைவு
செய்யப்படவில்லையெனில்,
அல்லது மூல
அமைப்பு
பாகிஸ்தான்,
பங்கலாதேஷ்,
இலங்கை,
ஆப்கானிஸ்தான்,
ஈரான் அல்லது
சீனாவில்
அமைந்துள்ளதெனில்,
அவற்றின்
விண்ணப்பங்கள்
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
மத்திய
அலுவலகம்
மும்பையின்
அந்நியச்
செலாவணி
அலுவலதத்துக்கு
ஒப்புதல்
பெற
அனுப்பப்பட
வேண்டும்.
4. கிளை
அலுவலகத்தை
அமைப்பதற்குரிய
செயல்முறை
யாது?
வெளிநாட்டில்
உள்ள, உற்பத்தி
மற்றும்
வணிகச்
செயல்பாடுகளில்
ஈடுபடும்
நிறுமங்களுக்கு
இந்தியாவில்
பின்வரும்
நோக்கங்களுக்காக
கிளை
அலுவலகங்களை
அமைப்பதற்கு
ரிசர்வ் வங்கி
அனுமதி
அளிக்கிறது.
-
தாய்
நிறுமத்துக்கு/மற்ற
வெளிநாட்டு
நிறுமங்களுக்கு
பல்வேறு
செயல்களில்
பிரதிநிதியாக
இருப்பதற்கு
:
எடுத்துக்காட்டு
இந்தியாவில்
வாங்கும்/விற்கும்
முகவர்களாக
இருப்பதற்கு.
-
தாய்
நிறுவனம்
ஈடுபட்டுள்ள
ஆய்வினை
மேற்கொள்வதற்கு
-
ஏற்றுமதி
இறக்குமதிச்
செயல்களை
மேற்கொள்வதற்கும்,
மொத்த அளவில்
வணிகம்
செய்வதற்கும்
-
இந்திய
நிறுமங்களுக்கும்
வெளிநாட்டு
நிறுமங்களுக்கும்
இடையில்
இயன்ற
தொழில்நுட்ப,
நிதி
கூட்டிணைப்பினை
மேம்படுத்துவதற்கு
-
தொழில்
தொடர்பான,
மற்றும்
ஆலோசணைச்
சேவைகளை
வழங்குவதற்கு
-
இந்தியாவில்
தகவல் தொழில்
நுட்பச்
சேவையை
வழங்குவதற்கும்
மென்பொருள்
மேம்பாட்டுக்கும்
-
ஒரு கிளை
அலுவலகம்
உற்பத்தியையோ
அல்லது
பொருள்
செய்முறைச்
செயல்பாடுகளையோ
நேரடியாகவோ/மறைமுகமாகவோ
செய்ய
அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் கிளை
அலுவலகங்கள்
எந்த
வகையிலும்
சில்லரை
வணிகத்தில்
ஈடுபடுவதும்
அனுமதிக்கப்படுவதில்லை.
கிளை
அலுவலகங்கள்
ஆண்டுதோறும்
மத்திய
அலுவலகத்தில்
உள்ள
அந்நியச்
செலாவணித்
துறைக்கு
பட்டயக்
கணக்காளரிடம்
செயல்பாட்டுச்
சான்றிதழைப்
பெற்று
சமர்ப்பிக்க
வேண்டும்.
ஆண்டுதோறும்
பெறப்படும்
இலாபத்தினை
அனுப்ப
அங்கீகரிக்கப்பட்ட
முகவரிடம்
கிளை
அலுவலகங்கள்
தேவைப்படும்
ஆவணங்களைச்
சமர்ப்பிக்க
வேண்டும்.
-
கிளை
அலுவலகங்களை
அமைப்பதற்குரிய
அனுமதியை
ரிசர்வ்
வங்கி
வழங்குகிறது.
விண்ணப்பிக்கும்
நிறுமத்தின்
கடந்தகாலச்
செயல்பாட்டு
வழி, நிதி
நிலைமை,
இந்தியாவில்
அந்நிறுமம்
கொண்டுள்ள
வணிக உறவுகள்
ஆகியவற்றை
விண்ணப்பத்தைப்
பரிசீலிக்கும்போது
ரிசர்வ்
வங்கி
கருத்தில்
கொள்கிறது.
|