Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> ECS - Display
Note : To obtain an aligned printout please download the (91.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 14/06/2007

மின் அணுத் தீர்வு முறை - வரவு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மின் அணுத் தீர்வு முறை - வரவு

 

(1) மின் அணுத் தீர்வு (வரவு) முறை என்றாலென்ன?

இது ஒரு கொடுப்பு முறை. நிறைய பேருக்குக் கொடுக்க வேண்டிய (வட்டி, பங்குத் தீர்வு போன்றவை) பெரிய நிறுவனங்கள் காகிதக் காசோலைகள் போன்றவற்றை அச்சிட்டு வழங்காமல், மின் அணு மூலம் எளிதாக, துரிதமாகத், துல்லியமாக தங்களது வாடிக்கையாளர்கள் / முதலீட்டாலர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முறையே மின் அணுத் தீர்வு (வரவு) முறை எனப்படும்.

 

(2) தற்போது நடைமுறையிலுள்ள முறை என்ன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன?

அடிக்கடி செய்யப்பட வேண்டிய மொத்த கொடுப்புகள் எண்ணிக்கையில் ஏராளமாக இருக்கும் வட்டி / பங்குத் தீர்வு காசோலைகள் / ஆணைகள் ஏராளம் அச்சிடப்பட்டு (விலை உயர்ந்த காந்தமை காசோலைகளில்), தபாலில் (அநேகம் கூடுதல் செலவாகும் பதிவுத் தபாலில்) அனுப்பப்படும். பின்னர் நிறுவனத்தின் வங்கியும், வாடிக்கையாளர்களின் வங்கிகளும் தங்கள் தங்கள் கணக்குகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இதில் உண்டாகும் இன்னல்கள்:

  • அச்சிடுதல், அனுப்புதல், கணக்குகளைச் சரிபார்த்து பொருத்துதல் போன்ற நிர்வாகச் செலவுகள் கூடுதலாகும்.

  • காசோலைப் பரிவர்த்தனையில் ஏராளமான காசோலைகளை ஒரே சமயத்தில் நுழைத்து நடைமுறைச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு

  • போக்குவரத்தில் காசோலைகள் தொலைதல், மோசடியாகப் பணம் பெறல்

  • வாடிக்கையாளரும் காசோலைகள் வந்ததா இல்லையா என்று வரவு வைக்க அதைச் செலுத்த வேண்டும்.

  • நிறைய காசோலை போன்ற உப்கரணங்கள் இல்லாததால், பிழை ஏற்பட பெரும் வாய்ப்பு, அலுப்பூட்டும் பணி, பரிவர்த்தனையில் சிரமங்கள் என்று பல இன்னல்கள்

(3) மின் அணுத் தீர்வு எங்கனம் வேலை செய்கிறது?

படி 1: நிறைய வாடிக்கையாளர்கள் / முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பெரிய நிறுவனம் (உப்யோகிப்பாளர்) கொடுப்பின் விபரங்களை காந்த ஊடகத்தில் (நாடா அல்லது குறுந்தகடு) பதிவு செய்து தன்னுடைய வங்கிக்கு (முன்வரும் வங்கி) கொடுக்க வேண்டும்.

படி 2: முன்வரும் வங்கி அந்த விபரங்களை உள்ளூர் காசோலையப் பரிவர்த்தனை மையத்தில் சமர்ப்பிக்கும் (15 இடங்களில் ரிசர்வ் வங்கியும் 31 இடங்களில் ஸ்டேட் வங்கியும்). முன்வரும் வங்கியின் கணக்கைக் கழித்து சேருமிடம் வங்கிகளின் கணக்கை வரவு வைக்கவும் மையத்திற்கு அதிகாரம் வழங்கி உரிய கடிதம் முன்வரும் வங்கி கொடுக்கும். முதலீட்டாளர்கள் / வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் சேருமிடம் வங்கி எனப்படும் (பயன் பெறுபவர்).

படி 3: முன்வரும் வங்கி கொடுக்கும் இந்த அதிகாரத்தினால் மையம், விபரங்களைப் பரிசீலனை செய்து வங்கிகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தயாரிக்கும்.

படி 4: சேருமிடம் வங்கிகளின் கிளைகள் வாரியாக வரவுகள், பயன் பெறுவோர் கணக்கு விபரங்கள் ஆகியவற்றை சேவைக் கிளைகளுக்குக் கொடுக்கும்.

படி 5: சேவைக் கிளை அவற்றை வாங்கி சம்பந்தப்பட்ட தனது வங்கிக் கிளைகளுக்குச் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு வைக்க அனுப்பும். குறிப்பிட்ட தேதியில் பயன்பெறுபவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

 

(4) பெரிய நிறுவனங்களுக்கு இம்முறை எங்கனம் உதவுகிறது?

  • அச்சிடலும் அனுப்பலும் இல்லாததால் ஏற்படும் குறைவான நிர்வாகச் செலவு

  • அனுப்புதலில் தொலைதலும் மோசடி பயன்பாடும் இல்லதிருத்தல்

  • நடவடிக்கைகளை ஒப்பிட்டுச் சரிசெய்தல் தானாகவே செயலாகிவிடுவதால், உபயோகிப்பாளர் நிறுவனம் முன்வரும் வங்கி மூலம் விபரங்களை மின் அணுக் கோப்பைப் பெறுகிறது. தொகைகள் வழங்கப்பட்ட தேதி, வங்கியின் ஒப்புதல் ஆகியவை இந்த விவரங்களில் அடங்கும்

  • குறிப்பிட்ட ஒரு தேதியில் மொத்தப் பணமும் அளிக்கப்படுவதால் பண நிர்வாகம் எளிதாகிறது

  • நல்ல வாடிக்கையாளர் / முதலீட்டாளர் சேவை உறுதியாகிறது

  • உலதத்தரம் வாய்ந்த பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் / முதலீட்டாளர்களுக்கு வழங்குவது போல் தரமான வழங்குதலை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது.

 

(5) பயன்பெறும் வாடிக்கையாளருக்கு என்ன நன்மைகள்?

  • குறிப்பிட்ட தேதியில் பணவரவு

  • சிரமமே இல்லாத வரவு காசோலை உபகரணங்களைச் செலுத்த வங்கிக்கு வரவேண்டிய அவசியமில்லாமல் வரவு

  • காசோலை உபகரணங்கள் அனுப்பதலில் தொலையாமல் இருத்தலும் மோசடிப் பயன்படுத்தல் இல்லமலிருத்தல்

(6) முதலீட்டாளர் / வாடிக்கையாளர் என்று யாரால் தன் கணக்கு வரவு வைக்கப்பட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வார்?

உபயோகிக்கும் நிறுவனம் எவ்வளவு தொகை என்று தங்கள் வாடிக்கையாளர் / முதலீட்டாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பது அவர்களது பொறுப்பு. வரவு கணக்குகளில் வைக்கப்பட்ட பின் பயன்பெறும் வாடிக்கையாளர் / முதலீட்டாளர் கணக்கில் புத்தகத்தில் ECS என்று எழுதி நிறுவனத்தின் பெயரையும் எழுதி வரவுத் தொகை குறிப்பிடப் பட்டிருக்கும்.

 

(7) இந்த வசதி தற்போது எங்கெல்லாம் உள்ளது?

ரிசர்வ்வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

பாரத ஸ்டேட் வங்கி நிர்வகிக்கும் இடங்கள் இந்தூர் ஸ்டேட் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

1

அகமதாபாத்

1

பரோடா

1

இந்தூர்

2

பங்களூரு

2

டெஹ்ராடுன்

யூனியன் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

3

புவனேஸ்வர்

3

நாசிக்

1

பூனா

4

கொல்கத்தா

4

பனாஜி

2

சேலம்

5

சண்டிகார்

5

சூரத்

ஆந்திரா வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

6

சென்னை

6

திருச்சி

1

விசாகப்பட்டினம்

7

குவகாத்தி

பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

கார்ப்பரேஷன் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

8

ஹைதராபாத்

1

அலகாபாத்

1

மங்களூர்

9

ஜெய்பூர்

2

ஆக்ரா

பரோடா வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

10

கான்பூர்

3

ஜலந்தர்

1

கோயம்புத்தூர்

11

மும்பை

4

வாரனாசி

2

ராஜ்காட்

12

நாகபுரி

5

மைசூர்

திருவாங்கூர் ஸ்டேட் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

13

புதுதில்லி

6

லூதியானா

1

கொச்சி / எர்ணாகுளம்

14

பாட்னா

7

கொல்கபூர்

சென்ட்ரல் வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

15

திருவனந்தபுரம்

8

லக்னோ

1

போபால்

   

9

ஒளரங்காபாத்

கனரா வங்கி நிர்வகிக்கும் இடங்கள்

     

ஒரியன்ட்டல் பாங்கு ஆப் காமர்ஸ் நிர்வகிக்கும் இடங்கள்

1

மதுரை

   

1

அமிர்தசரஸ்

   

 

(8) எவ்வகை நிறுவனங்கள் இம்முறையில் அதிகமாகப் பயன்பெறுகின்றன?

ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் / பயன்பெறுவோர்களுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டிய தொகையின் மொத்தம் பெரிய அளவில் வழங்கக்கூடிய பெரிய நிறுவனங்கள் இதனால் பயனடைகின்றன.

 

(9) பெரிய அளவு என்றாலென்ன? குறைந்த அளவு எண்ணிக்கை நடவடிக்கைகளில் உண்டா?

அப்படி ஏதும் குறைந்த அளவு எண்ணிக்கை என்று நடவடிக்கைகளில் கிடையாது.

 

(10) தனிநபருக்கான நட்வடிக்கையில் வழங்கப்படும் தொகைக்கு ஏதேனும் வரையறை உண்டா?

இல்லை. தனி நபருக்கான நடவடிக்கையில் எந்தவித மதிப்பு-வரையறையும் கிடையாது.

 

(11) ஒரு நிறுவனம் 10 இடங்களில் கொடுக்க வேண்டியிருந்தால் 10 இடங்களிலுள்ள பரிவர்த்தனை மையங்களிலும் கொடுக்க வேண்டுமா?

பல இடங்களில் கொடுக்க வேண்டியிருந்தாலும், ஒரு இடத்தில் உரிய ஆவணங்களைச் செலுத்தினால் போதும். மின் அணுத்த் தீர்வை (வரவு)க்கு இது பொருந்தும்.

 

(12) நிறுவனங்களின் கொடுப்பை இம்முறையில் செய்திட செயல் / சேவை கட்டணங்கள் உண்டா? அதிகச் செலவாகுமா?

2007 மார்ச் 31 தேதி முடிய கட்டணத்தை விலக்கி ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு இலவசமாகவே இச்சேவையை வழங்குகிறது. ஆயின் வங்கிகள் தங்கள் உள்ளகக் கொள்கை வாயிலாக அப்படிக் கட்டணம் வகுக்கலாம்.

 

(13) முதலீட்டாளர்கள் / பயன்பெறுவோர் சேருமிடம் வங்கி / கிளைகளுக்குக் கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா?

சேருமிடம் வங்கியின் கிளைகள், முதலீட்டாளர்கள் / வாடிக்கையாளர்கள் / பயன் பெறுவோர் கணக்கில் வரவு வைக்க எக்கட்டணமும் வசூலிக்க மாட்டார்கள்.

 

(14) முதலீட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது அவசியமா?

ஆம். இதற்காக மாதிரி ஒப்புதல் கடிதம் தயாரிக்கப் பட்திருக்கிறது. இது ஒரு பெரிய வேலை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருமுறை விபரங்கள் சேகரிக்கப்பட்டு பட்டியலிட்ட பிறகு, இது சுலபமாகிவிடுகிறது. இந்தியப் பத்திர பங்குப் பரிவர்த்தனை குழுமத்தின் வழிகாட்டுதல்களில், முதலீட்டாளர் தனது வங்கிக் கணக்கு விபரங்களை விண்ணப்பங்களில் தெரிவிக்கிறார். அவர்கள் அளிக்கும் கணக்கு எண், வங்கி / கிளை பெயர் வட்டி / பங்குவீத ஆணை / காசோலைகளில் அச்சிடப்படுகிறது. இந்த நிலையில் ஒப்புதல் பெறுவது என்பது இவ்வளவு தொல்லைகளைத் தராது.

 

(15) எப்படி எப்போது நிறுவனங்கள் மின் அணுத் தீர்வு (வரவு) முறையில் சேர வேண்டும்?

அடிக்கடி கொடுபட வேண்டியவை அதிக அளவில் ஒரு நிறுவனத்திற்கு இருக்குமானால், பயன்பெறுவோரில் அநேகம் பேர் நான்கு பெரிய நகரங்களில் வசிக்கிறார்கள் என்றால், மின் அணுத் தீர்வு (வரவு) முறையில் சேரும் தருணம் இப்போதே!.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்