Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - Department of Government and Bank Accounts
 

அரசு மற்றும் வங்கிக் கணக்குத் துறை (DGBA)

முக்கியமான  பாரம்பரியம் மிக்க மைய வங்கிப் பணிகளான அரசின் வங்கி, வங்கிகளின் வங்கி, மத்திய மாநில அரசுகளின்  பொதுக்கடன் நிர்வாகம் போன்ற பணிகளுக்குப் பொறுப்பு ஏற்கிறது இத்துறை.  ரிசர்வ் வங்கியின் உள்கணக்குகளையும், வார, வருடாந்திர கணக்கு அறிக்கை தயாரித்தலையும் இத்துறை மேற்கொள்கிறது. 

     1934 இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் படியும், மாநில அரசுகளுடனான  ஒப்பந்தங்கள்படியும் பொதுக்கடன் உள்ளிட்ட வங்கிப்பணிகளை இந்த அரசுகளுக்காக ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.  ரிசர்வ் வங்கி கிளைகளில் பொதுக் கணக்குத்துறை, வைப்புக்கணக்குத் துறை, பொதுக் கடன் அலுவலகம் ஆகிய மூன்று துறைகள்  இப்பணியைச் செய்கின்றன. 

அமைப்பு முறை :

மைய அலுவலகத்தில் அரசு மற்றும் கணக்குகள் துறை நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 (அ) வங்கிக்கணக்குப்பிரிவு

  • ரிசர்வ் வங்கியின்  உள் கணக்குகளை நிர்வகித்தல், வார வருடாந்திர கணக்கு அறிக்கை, லாப நட்ட கணக்கறிக்கை, நிதி நிலை அறிக்கைகள் இந்திய ரிசர்வ் வங்கிச்சட்டத்தின் கீழும், பொதுவான  ஒழுங்கு முறைகளின்  கீழும் தயாரித்தல்,

  • வைப்புக்கணக்குத் துறைகளை மேற்பார்வையிடுதல், கண்காணித்தல்.

 (ஆ) மத்திய கடன் பிரிவு :

  • மத்திய மாநில அரசுகளின் பொதுக்கடன்களை நிர்வகித்தல்

  • ரிசர்வ் வங்கிக்கிளைகளில் உள்ள 15 பொதுக்கடன் அலுவலகங்களை மேற்பார்வையிடுதல்

  • துயர்நீக்கப்பத்திரங்கள், சிறப்பு வைப்புத்திட்டம், பொதுமக்களுக்கான வருங்கால வைப்பு நிதி போன்றவைகளை நிர்வகித்து, கண்காணித்து அரசுகளுக்கு உதவுதல்

  • மத்திய மாநில அரசுகளின் பொதுக் கடன் சம்பந்தமான மையக்கணக்குகளை நிர்வகித்தல்.

 (இ) அரசுக் கணக்குப் பிரிவு :

  • கிளைகளில் உள்ள பொதுக் கடன் அலுவலகங்களையும் நாகபுரியிலுள்ள மத்தியக் கணக்குப்பிரிவையும் மேற்பார்வையிடுதல்.

  • மத்திய மாநில அரசுகளின் கணக்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைப் பரிசீலித்தல், அவ்வப்போது புதுப்பித்தல், நடைமுறைகளை அமல்படுத்துதல்

  • அரசின் பணிகளுக்கேற்ப வங்கிச் சேவைகளை அளித்தல்.

 (ஈ) நாகபுரியிலுள்ள மத்தியக்கணக்குப் பிரிவு :

  • மத்திய மாநில அரசுகளின் முதன்மைக் கணக்குகளை நிர்வகித்தல்.

  • வழிவகைக் கடன்களை   (Ways and Means Advances) மத்திய மாநில அரசுகளுக்கு வழங்குதல்

  • அரசுகளின் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்தல்

  • ரிசர்வ் வங்கியின் பணம் அனுப்பு முறையின்  (RFS)  கீழ் மத்திய மாநில அரசுகளின் கொடுபட வேண்டியவைகளைக் கொடுப்பது.

 

நிதி அமைச்சகத்துடன் உறவு:

 அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் துறை மத்திய நிதி அமைச்சகத்துடன்  கீழே கண்டவைகளுக்காகத் தொடர்பு வைத்துக் கொண்டு செயலாற்றுகிறது.

  1. மத்திய அரசின்  பொதுக் கடன் கணக்குகளின் மொத்தத்தை நிர்வகித்து சரிபார்த்து அளித்தல்.

  2. பத்திரங்களை வெளியிட்டு நிர்வகிப்பதற்கான தரகுத்தொகையை கேட்டல்.

  3. அரசுக் கடன் பத்திரங்களை அரசுடன் கலந்து வெளியிடல், நிர்வகித்தல், முதிர்வுத் தேதியில் முதிர்வு தொகையை வழங்குதல்.

  4. தனி முதலீட்டாளர்கள் பங்களிக்கும் அரசுப்பத்திரங்கள் (துயர் நீக்கு பத்திரங்கள், தங்கப்பத்திரங்கள் முதலியவை) பற்றி ஆலோசனை வழங்குதல்.

  5. பொதுக்கடன் சம்பந்தமாக உள்ள அனைத்து விபரங்கள் பற்றியும், விதிகள் பற்றியும் அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.

  வாடிக்கையாளர் சேவை :

     ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்களின்  ஓய்வூதியம் வழங்குதல் சம்பந்தமான  அறிவுரைகளை வழங்குதல், ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைகளைத் தீர்த்து வைத்தல் ஆகியவற்றை இத்துறை செய்கிறது.

 

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்