Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - Department of Currency Management
 

பண நிர்வாகத் துறை (DCM)

 

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம 1934இன் படி முக்கியப் பணியாகிய பண நிர்வாகப் பொறுப்பை இத்துறை ஏற்றுள்ளது. ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விநியோகித்தல் மேலும் புழக்கத்திலிருக்கும் புழங்க தகுதியற்ற ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுதல் ஆகியன பண நிர்வாகத்தின் முக்கியமான பணிகள். ரிசர்வ் வங்கியின் 18 அலுவலகங்கள் மற்றும் விரிவானமுறையில் இணைக்கப்பட்ட 4195 பணக் கருவூலங்கள், 488 சிறிய கருவூலங்கள், மேலும் வங்கிகள் மூலம் நிர்வகிக்கப்படும் 3562 சிறு நாணய கிடங்குகள் மற்றும் அரசு கருவூலங்கள் மூலம் இப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

நிர்வாக அமைப்பு

பண நிர்வாகத்துறை முதன்மை பொது மேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்டிருக்கிறது. இத்துறை திட்டமிடும் பிரிவு, ஆதார நிர்வாகம் மற்றும் கருவூல பரிமாற்ற பிரிவு, ரூபாய் நோட்டு தரம் பிரித்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவு, ரூபாய் நோட்டு மாற்றப் பிரிவு, ரூபாய் நோட்டு கருவூலப் பிரிவு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு, ஆய்வு தொடர்செயல் பிரிவு, ஒன்றிணைக்கும் மற்றும் முன்னேற்றப் பிரிவு, பணியாளர் பிரிவு, நிர்வாகப் பிரிவு, கள்ள ரூபாய் நோட்டு விழிப்புக் குழு பிரிவு, மற்றும் அருங்காட்சிப் பிரிவு ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

ரூபாய் நோட்டு அச்சிடும் அச்சகங்களிலிருந்து, இத்துறை ரூபாய் நோட்டுகளை பெறுகிறது. அச்சகங்களில் இரண்டு இந்திய அரசுக்கு சொந்தமானவை. இரண்டு ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை. முழுதும் சொந்தமான துணை நிறுவனம் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடடின் மூலம் இவ்வச்சகங்கள் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை. அரசுக்குச் சொந்தமான அச்சங்கள் நாசிக்கிலும் (மேற்கிந்தியா) மற்றும் தேவாஸிலும் (மத்திய இந்தியா) உள்ளது. மற்ற இரண்டு அச்சகங்கள் மைசூரிலும் (தென்னிந்தியா) மற்றும் சல்போனிலும் (கிழக்கிந்தியா) உள்ளது. நாணயங்கள், அரசுக்கு சொந்தமான 4 நாணய சாலைகளில் அடிக்கப்படுகிறது. மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் நோய்டா ஆகிய இடங்களில் நாணய சாலைகள் அமைந்துள்ளது.

பணிகள்

கொள்கை மற்றும் செயல்பாடு தொடர்பான கீழ்காணும் பணிகளில் இத்துறை ஈடுபட்டிருக்கிறது.

  • ரூபாய் நோட்டுகளை வடிவமைத்தல்

  • ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களின் தேவைகளை முன்னறிதல்

  • நாடெங்கும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை தடங்கலின்றி விநியோகித்தல் மேலும் புழங்க தகுதியற்ற ரூபாய் நோட்டுகள் மற்றும் நடப்பில் புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் ஆகியவற்றை புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுதல் இவற்றை உறுதிசெய்தல்.

  • ரூபாய் நோட்டுகளின் முழுமையை உறுதிசெய்தல்.

  • இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை மதிப்பின்படி திரும்பக் கொடுக்கும் விதிகளை செயல்படுத்தல்.

  • வழங்கல் அலுவலகங்களின் பணி ஒழுங்கு / நடைமுறை ஆகியவற்றை மறுசீராய்வு / பொருந்துமுறை செய்தல், இவைகளைத் தொடர்ந்த முறையில் செயல்படுத்தல்

  •  பண சம்பந்தமான விஷயங்களின் செய்திகளைப் பொதுமக்களுக்கு பரப்புதல்

 இத்துறை, மேலும், நாணயவியல் அருங்காட்சியகத்தை மும்பையில் அமைப்பதற்கான வங்கியின் முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது. இதன் முன்னோடியாக மெய்யாய்க் கொள்ளத்தக்க ஒரு நாணயவியல் அருங்காட்சியத்தை ரிசர்வ் வங்கியின் (www.museum.rbi.org.in) இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

நாணயவியல் அருங்காட்சியகம்

தற்கால நாணயங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:

முதன்மை பொது மேலாளர்
நாணய மேலாண்மை துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மத்திய அலுவலக கட்டிடம்
31வது தளம், சாஹித் பகத்சிங்க் சாலை
போர்ட்
மும்பை-400 001
தொலைபேசி : 022-22660005
நகலனுப்பி எண் : 022-22662442

 

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்