Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - புகார்கள் - வங்கிகள் மீது
 

 

குறிப்பு: சரியான முறையில் பிரின்ட் செய்ய, உங்கள் கணினியில் இந்த பதிப்பை   பதிவிறக்கம் செய்து பொறுத்தமான மென் பொருளை உபயோகித்து பிரின்ட் செய்யவும்.

தேதி : டிசம்பர் 26, 2005

வங்கிய குறைதீர்ப்பு ஆணையம் (ஆம்புட்ஸ்மன்) திட்டத்தின் செயற்பரப்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படுத்துகிறது.  நேர்மையான வங்கி நெறியும் இதில் சேர்க்கப்படுகிறது.

தனிப்பட்ட வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நேர்மையான தொழில் நெறியைக் கடைப்பிடிக்காதது, வாடிக்கையாளருக்கு முன்னறிவிப்புச் செய்யாமல் சேவைக் கட்டணத்தை அமல்படுத்துதல், வங்கியின் விற்பனை முகவர்கள் ஏற்றுக் கொண்ட சேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகள், கடன்  அட்டை (கிரெடிட் கார்டு) தொடர்பான புகார்கள் போன்ற புதிய பகுதிகளை உள்ளடக்குவதற்காக திருத்தப்பட்ட வங்கிய குறைதீர்ப்பு ஆணையம் (ஆம்புட்ஸ்மன்) திட்டத்தின் இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.  2006ஆம் வருடம் ஜன்வரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திருத்தப்பட்ட திட்டம் இந்தியாவில் செயல்படும் அனைத்து வணிக வங்கிகள், வட்டார கிராமப்புற வங்கிகள் மற்றும் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் நிலைக்கூட்டுறவு வங்கிகள் ஆகிய வங்கிகளுக்குப் பொருந்தும்.

இந்த திருத்தப்பட்ட திட்டம் திறமையாகச் செயல்படுவதற்காகக் தேவைப்படும் நிதி ஆதாரங்களும் மனிதவளமும் இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்படும்.  திருத்தப்பட்ட வங்கிய குறைதீர்ப்பு ஆணையத்தின் கீழ் புகார் செய்ய விரும்புவர்கள் இணையதளம் உள்ளிட்ட எந்த வடிவத்திலும் புகார் செய்யலாம்.  வங்கிய குறைதீர்ப்புக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்புவோர் இந்திய ரிசர்வ் வங்கியிடம் முறையிடலாம்.

 

வங்கிகளின் சேவையில் ஏற்படும் தாமதம், வங்கிகளின் விற்பனை முகவர்களால் உறுதி செய்யப்பட்டு வங்கியால் நிறைவேற்றப்படாத வாக்குறிதிகள், சேவைக்கட்டணம், கடன் அட்டை தொடர்பான பொதுவான புகார்களைச்சீர்ப்படுத்த இந்தத் திட்டத்தின்  மூலம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிய மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் நாணயங்களைப்பெற்றுக் கொள்வதற்காக வங்கிகள் கட்டணம் வசூலித்தல், சிறிய மதிப்புள்ள நோட்டுகள்  மற்றும் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தல், கொடுக்கப்பட்ட காசோலைகளுக்குப் பணம் தர மறுப்பது அல்லது அளவற்ற தாமதத்தை உண்டாக்குவது, விற்பனைச் சீட்டுக்கான பணம் தர மறுப்பது அல்லது அளவற்ற தாமதத்தை உண்டாக்குவது போன்ற குறைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் இப்போது புகார் செய்ய இயலும்.

 

வங்கிய சேவைகளின் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் புகார்களை விரைவாகவும் குறைந்த செலவிலும் தீர்த்துக் கொள்வதற்காக வங்கிய குறைதீர்க்கும் குழு திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியால் 1995 இல் ஏற்படுத்தப்பட்டது.  வட்டார கிராப்புற வங்கிகளை இதில் சேர்ப்பதற்காகவும், வங்கிகளுக்கு எதிராக வங்கிய குறைதீர்க்கும் குழு வழங்கிய தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவும் இந்தத் திட்டம் 2002இல் திருத்தப்பட்டது.   வங்கிய குறைதீர்க்கும் குழுவின் அலுவலகங்கள் தற்போது 15 மையங்களில் உள்ளன.

 

வாடிக்கையாளர்களுக்கு உரிய நடவடிக்கைகளை வங்கிகள் நடைமுறைப்படுத்துவதற்காக மற்றும் விரிவான  மற்றும் நேர்மையான வங்கி நெறிமுறைகளை வங்கிகள் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக் சார்பற்ற வாரியம் ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்க உள்ளது.  இந்த வாரியம் இந்திய வங்கிய விதிகள் மற்றும் மதிப்பு வாரியம் என அறியப்படும்.

 

இந்திய ரிசர்வ் வங்கியின்  ஆளுநர். டாக்டர். ஒய்.வி.ரெட்டி 2005 வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட 2005-2006 ஆண்டுக்கான கொள்கை அறிக்கையில் இந்த வாரியம் பற்றிய அறிவிப்பு உள்ளது.

அல்பனா கில்லாவாலா

தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கைக் குறிப்பு : 2005-2006/783

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்