Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (99.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 29/04/2009
புதிய (நிக்கல்-செப்பு) 5 ரூபாய் நாணயங்கள் - கருப் பொருள் "அசோகா தூண்"

ஏப்ரல் 29, 2009

புதிய (நிக்கல்-செப்பு) 5 ரூபாய் நாணயங்கள் - கருப் பொருள் "அசோகா தூண்"

இந்திய அரசு பின் வரும் கருத்தில் வெளியிடும் புதிய நிக்கல்-பித்தளை 5 ரூபாய் நாணயங்களை.  இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. 

"அசோகா தூண்"

வடிவம் / வெளிப்புற விட்டம்

எடை

விளிம்புப் பற்களின் எண்ணிக்கை

உலோக விகிதம்

நிக்கல்-பித்தளை

வட்டம்.
23 மிமீ.

6 கிராம்

100

செப்பு            75%
துத்தநாகம்    20%
நிக்கல்               5%

வடிவம்:

முன்புறம்:  நாணயத்தின் இந்தப் பக்கம் அசோகா தூணின் "சிங்க முகமும்" அதற்குக் கீழ் ‘சத்யமேவ ஜயதே’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புறத்தில் ‘பாரத்’ என்று இந்தியிலும் வலது மேற்புறத்தில் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.   நாணயத்தைச் சுற்றி 52 முத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

பின்புறம்:  நாணயத்தின் இந்தப் பக்கத்தின் மையப் பகுதியில் மதிப்பு இலக்கம் ‘5’ என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.  இதன் கீழ்புறத்தில் ‘ரூபாய்’ என்று ஆங்கிலத்திலும் ஆண்டு சர்வதேச எண்ணிலும் எழுதப்பட்டிருக்கும்.  மேற்புறத்தில் ‘ருபயே’ என்று இந்தியிலும் அதன் இடப்பக்க மற்றும் வலப்பக்க விளிம்புகளில் இலையுடன் தாமரைப் பூங்கொத்து வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.  நாணயத்தைச் சுற்றி 52 முத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

விளிம்புப் பற்கள்:  நாணயத்தின் விளிம்பில் ரம்பப் பற்கள் போன்ற அமைப்பு எண்ணிக்கையில் நூறு இருக்கும்.

1906ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது. 

 

அஜித் பிரசாத்
 மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2008-2009/1793

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்