வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது |
ஏப்ரல் 10, 2018
வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின், வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஆஷ்லிப் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
IX / 437, மட்டக்கல் பில்டிங்ஸ்
கடப்பரா
மன்னார் அஞ்சல்
கேரளா 689621 |
B-16.00080 |
ஜுன் 01, 2000 |
மார்ச் 20, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2688
| |