Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (118.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/12/2003

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்களின் குடியிருப்புத் தகுதி மாற்றியமைக்கப்பட்ட நிலைப்பாடு

 

டிசம்பர் 8,2003

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்களின்

குடியிருப்புத் தகுதி மாற்றியமைக்கப்பட்ட நிலைப்பாடு

            வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களிடமிருந்து தங்களை FEMA  அடிப்படையில் வேற்றிடம் வாழ் இந்தியர்களாகப் பாவிக்க வேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.  அம் மாணவர்களின் விவாதத்தின் கருப்பொருள், மாணவர்களாகிய அவர்கள் உண்மையில் இந்தியாவிலுள்ள தங்கள் பெற்றோரின் பண உதவியைப் பெரும்பாலும் பெறுவதில்லை அவர்களது பெறும்பாலான செலவினங்களுக்கு பெற்றோர் உதவுவதில்லை.  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் பணி செய்வதோடு நிதிப் பரிமாற்றங்களையும் மேற்கொள்வதால் அவர்களது குடியிருப்புத் தகுதி குறித்த வரையரையை மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.

 

            FEMA அடிப்படையில் இந்தியாவில் வாழ்வோர் என்பதற்கான இலக்கணத்தைக் கருத்திச்கொண்டு அயல்நாட்டில் படிக்கும் மாணவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட இயலாது; ஆனால் அவர்கள் படிப்பு நிமித்தம் அங்கு தங்கும் காலத்தை உறுதியாகத் கூற இயலாத நிலையையும் ஏற்றுக் கொண்டு FEMA நோக்கில் அவர்களையும் வேற்றிடம் வாழ் இந்தியராகக் கருதலாம் என முடிவு செய்யப்பட்டது.  அந்நிலையில் மாணவர்கள் எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து பணம் பெறுவதைக் கீழ்க்கண்டவாறு அனுமதிக்கலாம் (i) அவர்களது படிப்பு தொடர்பாக அளிக்கப்படும் தொகையையும் சேர்த்து அவர்களது பராமரிப்பிற்காக தனது-உறுதிமொழியின் அடிப்படையில் தனது நெருங்கிய உறவினர்களிடமிருந்து ஆண்டுக்கு யூஎஸ் டாலர் 100000 வரை பெறலாம் (ii) இந்தியாவில் ad  உடன் அவர்களது கணக்கிலிருந்து  யூஎஸ் டாலர் 100000 வரை (iii) FEMA அடிப்படையில் வேற்றிடம் வாழ்வோருக்குக் கொடுக்கப்படும் எல்லா வசதிகளும்    (iv)  மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர கடன்களா அவர்கள் (இந்தியாவில் வாழ்வோரக இருந்து)  பெற்றிருந்தால் அவை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

 

                மாணவர்களுக்குக் கல்விக் கடமையைத் தொடர்வதற்காக வழங்கப்படும் அந்நியச் செலாவணி வழங்களை பயன்படுத்துவதை இந்நெறிமுறைக் கட்டளைகள் குறைக்கமாட்டா.

செய்தி வெளியீடு  2003-2004/710

அஜித் பிரசாத்

மேலாளர்

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்