Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 13/07/2002

வங்கியியல் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பற்றிய கேள்வி-பதில்

இந்திய ரிசர்வ் வங்கிமைய அலுவலகம்

வங்கியியல் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பற்றிய கேள்வி-பதில்

வங்கிகளின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத்துறை

 

பொருளடக்கம்

I. உள்நாட்டு வைப்புத் தொகை

II. குடியிருப்போர் அல்லாத இந்தியர் வைப்புத் தொகை

III.  கடன்கள்

IV. பங்குகள்/கடனீட்டுப் பத்திரங்கள் மீதான கடன்கள்

V. நன்கொடைகள்

VI. நில மனையிடக் கடன்

VII. சேவைக் கட்டணங்கள்

 

 

I. உள்நாட்டு வைப்புத் தொகை

1. வங்கிகள் வட்டியில்லா வைப்புத் தொகைகளை ஏற்கலாமா?

 நடப்புக் கணக்கு தவிர, வேறு வட்டியில்லா வைப்புத்தொகைகளை ஏற்க இயலாது.

 

2. வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கு மூன்று மாதமத்திற்கு ஒருமுறை வட்டி வழங்கலாமா?

 வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு மூன்று மாத அடிப்படையிலோ அல்லது நீண்டகால அடிப்படையிலோ வட்டி வழங்கலாம்.

3. வங்கிகள் குறித்தகால வைப்புத் தொகைகளுக்கு மாதாமாதம் வட்டி வழங்கலாமா?

 காலாண்டிற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிலும் வட்டி வழங்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்குவதானால், காலாண்டு வட்டியில் தள்ளுபடி செய்து வழங்கலாம்.

4. வங்கிகள் குறித்தகால வைப்புமுறையில் ஒட்டு மொத்தம் ரூ 15 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகைக்கு வேறுபட்ட வீதத்தில் வட்டி வழங்கலாமா?

 ஓரு வைப்புத்தொகைக் கணக்கில் ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருந்தால் வேறுபட்ட விகிதத்தில் வட்டி வழங்கலாம். பல வைப்புத்தொகை கணக்குகளின் ஒட்டு மொத்தம் ரூ.15 லட்சமும் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால் அவ்வாறு வழங்க இயலாது.

5. வைப்புநிதி திரட்டுவதற்கு வங்கிகள் தரகு தரலாமா?

 வங்கிகள் தனி நபர்களையோ, கம்பெனிகளையோ அல்லது சங்கங்களையோ, வைப்புநிதி திரட்டுவதற்கோ அல்லது வைப்புநிதி சார்ந்த திட்டங்கள் விற்பனை செய்வதற்கோ நியமிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சம்பளம், சன்மானம், தரகு என்று வழங்குவதும் தடை செய்யப்பட்ட செயல்கள் ஆகும். ஆனால் சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு-வீடாகச் சென்று வைப்புநிதி திரட்ட நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டும் தரகு தரலாம்.

 

6.  குறித்தகால வைப்புக் கணக்கு முதிர்வடைவதற்கு முன்னதாகவே வங்கிகள் அவற்றைத் திருப்பிக் கொடுக்கலாமா?

 வைப்புநிதி என்பது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான ஒப்பந்ததின் அடிப்படையில் திட்டவட்டமான காலக்கெடுவுக்குள் அமைவது. முதிர்வடையும் தேதிக்கு முன்னதாகவே வங்கிகளின் வசதிக்கேற்ப அதைத் திருப்பித் தர முடியாது. வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படியே முதிர்வு காலத்திற்கு முன் அதைத் திருப்பித்தர முடியும்.

 

7. குறித்தகால வைப்புத் தொகையை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே திருப்பித்தர முடியாது என வங்கிகள் மறுக்கலாமா?

 தொகையின் அளவு எவ்வளவானாலும் பொதுவாக, வங்கிகள், தனிநபரகள், இந்து கூட்டுக் குடும்பம் (HUF) ஆகியோரின் குறித்தகால வைப்புத்தொகையை முதிர்வுநிலைக்கு முன்னர் திருப்பித்தருவதை மறுக்க இயலாது. ஆனால் பெரிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பெருந்தொகை வைப்புத்தொகையை முதிர்வு நாளுக்கு முன்னதாகவே திருப்பி தரமுடியாது என்று வங்கிகள் கூறலாம். வங்கிகள் முன்னதாகவே, அதாவது வைப்புக் கணக்கைத் தொடங்கும் போதே, முதிர்வுக்கு முன் அந்த வைப்புத்தொகையைத் திருப்பித் தர இயலாது என்று கூற வேண்டும்.

8. முதிர்வடைவதற்கு முன்னதாகவே   திரும்பப்பெறப்படும் வைப்புத்தொகைக்கு தண்டத்தொகை விதிக்கலாமா?

 வைப்புத் தொகைகள் முதிர்வடைவதற்கு முன்னதாக திரும்பப் பெறப்படும்போது விதிக்கப்படும் தண்ட வட்டி வீதத்தை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

9. வங்கி விடுமுறை நாட்கள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில், வைப்புத்தொகை முதிர்வடைந்தால், எவ்வாறு எப்போது வங்கிகள் வட்டி வழங்கவேண்டும்?

 வைப்புத் தொகை முடியும் நாளுக்கும், வைப்புத் தொகைக்கான வட்டியை வழங்கும் நாளுக்கும் இடையே வங்கி விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள் குறுக்கிட்டால்ஒப்பந்தப்படியான வட்டி வீதத்தை, வங்கி அக்காலத்திற்கும் சேர்த்து வட்டி வழங்க வேண்டும்.

10. இறந்துபோன வங்கி ஊழியரது மைனர் குழந்தை அல்லது குழந்தைகள் பெயரில் உள்ள வைப்புத் தொகைக்கு வங்கி ஊழிர்களுக்குரிய சலுகையான கூடுதல் வட்டி வழங்கலாமா?

 இல்லை. வங்கி ஊழியர், வங்கிப் பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி பெற அவர்கள்  குழந்தைகள் எவருக்கும் (மைனர் குழந்தைகள் உட்பட) தகுதி இல்லை.

11. வயது வராத குழந்தைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தொகையை குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் சேர்த்து கூட்டு வைப்புத் தொகைக் கணக்கு தொடங்கினால் வங்கி ஊழியருக்கு வழங்கக்கூடிய கூடுதல் வட்டியை அக்கணக்கிற்கு வழங்கலாமா?

 முடியாது. காரணம் அப்பணம் வயது வராத குழந்தைக்குச் சொந்தமானது. வங்கி ஊழியர் யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே கூடுதல் வட்டி வழங்க இயலாது.

 

12. வேறு வைப்புத் தொகைகளுக்கு வங்கி வேறுபட்ட வட்டி வீதம் வழங்கலாமா?

 வங்கிகள் சிறப்பு வைப்புத்தொகைச் செயல் திட்டங்களில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வைப்புகளில், வைப்புகளின் தொகை அளவு எதுவானாலும் வழக்கமாக வழங்கப்படும் வட்டியை விட கூடுதலான வட்டியை வழங்கலாம்.

 

13. வங்கிகள் அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்டங்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாமா?

 அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்ட நடவடிக்கைகள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்க இயலாது. ஆனால் சில அரசாங்க நிறுவனங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். கீழ்க் கண்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்குவன.

1) வங்கிகளில் கடன் உதவி பெறும் முதன்மைக் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள்

2) கதர் மற்றும் கிராமத் தொழில் குழுமங்கள்

3) வேளாண் பொருட்கள் அங்காடிக் குழுக்கள்

4) 1860ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அதனையொத்த நடைமுறையில் இருக்கும் மாநில அல்லது யூனியன் பிரதேசச் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்

5) கம்பெனிகள், கம்பெனிகள் சட்டம், 1956இன் 25ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசிடமிருந்து அல்லது இந்தியக் கம்பெனிகள் சட்டம் 1913இல் காணப்படும் பிரிவுகளின் அடிப்படையில், உரிமங்கள் பெற்றுலிமிடெட்’/ தனியார் லிமிடெட் என்னும் சொற்களைக் கொண்டிராத எல்லாக் கம்பெனிகளும்

6) மேலே சொல்லப்பட்ட முதல் பிரிவில் அடங்காத 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் கீழ் வரி விலக்களிப்பட்ட எல்லா நிறுவனங்களும்

7) மத்திய மாநில அரசாங்கங்களில் பல்வேறு செயல் திட்டங்கள்/ செயல்முறைகள் ஆகியவற்றை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்டு நிதியோ, மானியமோ வழங்கப்பட்டு, சேமிப்புக் கணக்குத் தொடங்க மத்திய மாநில அரசாங்கங்களின் அனுமதி பெற்ற எல்லா மத்திய மாநிலத் துறைகள், அமைப்புகள் மற்றும் முகமைகள்.

8) ஊரகப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாடு (DWCRA)

9) உறுப்பினர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுய உதவிக் குழுக்கள் (SHGs)

10) உழவர்கள் கூட்டுக் குழுக்கள், விகாஸ் வாலன்டீர் வாஹினி (VVV)

14. இறந்துபோன முதலீட்டாளர் பெயரில் உள்ள வைப்பிற்கு எந்த வீதத்தில் வட்டி வழங்கப்படும்?

() இறந்த ஒரு நபரின் பெயரில் அல்லது இருவர் பெயரில் அல்லது அதற்கு மேற்பட்ட பல பெயர்களில் வைப்புக் கணக்கு இருந்து அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், முதிர்வடைந்த வைப்புக்குரிய வட்டியை எவ்வகையில் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அந்தந்த வங்கிக்கு உண்டு. வங்கிகளின் மன்றக்குழு இது தொடர்பாக வெளிப்படையாக வகுத்துள்ள கொள்கையின் அடிப்படையில் வங்கிகள் முடிவெடுக்க வேண்டும்.

() இறந்து போன தனிநபர் அல்லது தனிநபர் வணிக நிறுவனம் பெயரில் உள்ள நடப்புக்கணக்கிலுள்ள நிலுவைத் தொகைக்கு இருப்பிற்கு வட்டி வழங்கும் வீதம் கீழ் வருமாறு:

1983 மே முதல் தேதி, அல்லது வைப்பாளர் இறந்த தேதி, இதில் எது பிந்தியதோ அந்த நாளிலிருந்து உரியவருக்குப் பணம் பட்டுவாடா செய்யும் தேதிவரைக்கும் சேமிப்புக்கணக்குக்குரிய வட்டி வீத அடிப்படையில் வட்டி வழங்க வேண்டும். எனினும் NRE வைப்புத் தொகையைப் பொருத்தவரை கேட்புரிமை உள்ளவர்கள் உள்நாட்டவர்கள் எனில் முதிர்வடைந்த வைப்புத் தொகை உள்நாட்டு வைப்புத்தொகையாக கருதப்படும். அதன் அடிப்படையில் வட்டி வழங்கப்படும்.

 

15. காலம் கடந்த வைப்புத்தொகைகளைப் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் யாவை?

 காலம் கடந்த வைப்புத்தொகைகளைப் புதுப்பித்தல் தொடர்பான முடிவுகள் யாவற்றையும், அந்தந்த வங்கிகளே அவர்களது மன்றக் குழுவால் ஒப்புதலளிக்கப்பட்ட வெளிப்படையான கொள்கை அடிப்படையில் வகுத்துக் கொள்ள வேண்டும். வைப்புக் கணக்குகளைத் தொடங்கு முன்னரே அது தொடர்பான நிபந்தனைகள் ஒப்பந்த விதிமுறைகள் வட்டிவீதம் புதுப்பித்தல் ஆகியன வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். தன்விருப்புரிமைக்கு இடம் தராதவகையிலும் வேறுபாடுகாட்டாததாகவும் அது அமையவேண்டும்.

 

II. குடியிருப்போர் அல்லாத இந்தியருக்கான (NRI) வைப்புக் கணக்குகள்

 

16. FCNR(B) வைப்புத்தொகைகளை ஈடு வைத்து பெற்ற கடன்களை அந்நிய நாணயத்தில் திருப்பிச் செலுத்தினால் சலுகை வட்டி வீதம் அனுமதிக்கப்படுமா?

FCNR(B) வைப்புத்தொகைகளை ஈடு வைத்துபெற்ற கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியை முடிவு செய்ய வங்கிகளுக்கு உரிமை உண்டு. கடனைத் திருப்பிச் செலுத்துவது ரூபாய் அல்லது அந்நிய நாணயம் எதுவாக இருந்தாலும் முதன்மைக் கடன் வழங்கு வட்டிவீத அளவைக்குறியீட்டை (BPLR) ஒப்பிடாமலேயே வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம்.

 

17. FCNR(B)ன் கீழ் வங்கிகள் தொடர் (ரிக்கரிங்) வைப்புக் கணக்குகளை அனுமதிக்கலாமா?

 இத்திட்டத்தின் கீழ் தொடர் வைப்புக் கணக்கை அனுமதிக்க இயலாது.

 

18. NRE/FCNR(B) வைப்புகளுக்கு வட்டி நிர்ணயிப்பது யார் ?

NRE/FCNR(B) வைப்புக் கணக்குகளுக்குரிய வட்டியை முடிவு செய்யும் அதிகாரத்தை வங்கி மன்றக் குழு இயக்குநர்கள் வங்கியின் சொத்து கடன் மேலாண்மைக் (Asset Liability Committee) குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பிற்குட்ப்பட்டு வழங்க அதிகாரமுண்டு.

 

19. NRE/FCNR(B) வைப்புத் தொகைகளுக்கு வேறுபட்ட வட்டி வீதம் விதிக்க அனுமதி உண்டா?

 உண்டு. 15 இலட்சம் மற்றும் அதற்குக் கூடுதலான தொகைக்குமான உள்நாட்டு வைப்புகளுக்கு, அறிவுறுத்தப் பட்ட உச்ச வரம்பிற்கு மிகாமல் வட்டி வழங்குவது போன்றே, NRE வைப்புத்தொகைகளுக்கும் வேறுபட்ட வட்டி வழங்க வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன. FCNR(B) வைப்புகளைப் பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட உச்சவரம்பிற்கேற்ப, வேறுபட்ட வட்டிவீதத்திற்கு குறைந்தபட்சத் தொகை எந்தெந்த நாணயத்திற்கு எவ்வளவு என முடிவு செய்யும் அதிகாரம் தற்போது வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

20. மறுமுதலீட்டு வைப்புக் கணக்கு என்பது யாது?

 வைப்புத்தொகைக்கு குறிப்பிட்ட காலத்தில் வட்டித் தொகை வழங்காமல் அவ்வட்டிக் தொகையையும் வைப்புக் கணக்கிலேயே மறுமுதலீடு செய்யும் முறை இது. அவ்வாறு சேர்ந்த தொகையை முதிர்வு நாளில் அசலுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்ளலாம். இச் செயல்முறை உள்நாட்டு வைப்புக்கணக்குகளுக்கும் பொருந்தும்.

 

21 FCNR(B) வைப்புக் கணக்கு முதிர்வு நாளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டாலும் முதிர்வு நாளிலிருந்தே புதுப்பிக்கப்பட்டதாக செயலாக்கம் செய்யலாமா ?

 வங்கி தன் தனி உரிமையின் அடிப்படையில் காலம் கடந்த FCNR(B) வைப்புக் கணக்கைப் புதுப்பிக்கலாம் அல்லது அத்தொகையின் ஒரு பகுதியை மட்டும் புதுப்பிக்கலாம். முதிர்வடையும் நாளிலிருந்து புதுப்பிக்கும் நாள் உட்பட்ட (இரு தினங்களும் சேர்க்கப்பட வேண்டும்) தாமதம் ஏற்பட்ட காலக்கெடு 14 நாட்களுக்கு மிகாதிருந்தால், புதுப்பிக்கப்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டிவீதம் முதிர்வடையும் நாள்வரை, அனுமதிக்கப்பட்ட ஏற்புடைய வட்டிவீதம் அல்லது வைப்புத்தொகை செலுத்துவோர் புதுப்பிக்கக்கோரிய நாள் வரையிலான வட்டிவீதம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். காலங்கடந்த வைப்புக் கணக்கின் கால அளவு 14 நாட்களுக்குக் கூடுதல் எனில் எந்த தேதியில் புதுப்பித்தல் கோரப்படுகிறதோ அந்தத் தேதியிலிருந்து நடைமுறையிலுள்ள வட்டிவீதப்படி வைப்புக்கணக்கு புதுப்பிக்கப்படும். காலதாமதத்தொகை முழுவதையுமோ அல்லது பகுதியையோ FCNR(B)ன் கீழ் புதுவைப்புக்கணக்காக செலுத்தினால், வங்கிகள் அந்தத்தொகைக்கு தாமதமான காலத்திற்கு அதனைப் புதுக்கணக்காகக் கருதி வட்டி வழங்கலாம். புதுப்பிக்கப் பட்ட பிறகு அத்திட்டத்தில் குறிப்பிட்ட குறைந்த பட்ச காலத்திற்கு முன்னதாக அத்தொகை திரும்பப் பெறப்பட்டால் தாமதகாலத்திற்கு அளித்த வட்டியைத் திரும்பிப் பெற வங்கிகளுக்கு உரிமை உண்டு.

22. FCNR(B)ன் கீழ் ரூபாயாகக் கடன் பெறுவோருக்கு பொருந்தக் கூடிய வட்டி வீதக் கட்டு திட்டங்கள் அந்நிய நாணயக்கடன் பெறுவோருக்குப் பொருந்துமா?

 பொருந்தாது. அந்நிய நாணயக்கடன் தொடர்பான வட்டிவீதக் கட்டு திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணித்துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப நடைமுறைப்படுத்தப் படுவதால் ரூபாய்க் கடனுக்குப் பொருந்தும் வட்டிவீதம் அந்நிய நாணயக் கடனுக்குப் பொருந்தாது.

 

23. FCNR(B) வைப்புத தொகைகளுக்கு எச்சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட வட்டி வீதத்தைக் காட்டிலும் கூடுதலான வட்டி வீதம் வழங்கலாம்?

 கீழ்க்கண்ட நபர்களின் பெயர்களில் வைப்புக் கணக்கு இருந்தால்:

() வங்கிப் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற ஊழியர் தனிப்பட்ட முறையில் அல்லது தனது குடும்பத்தாருடன் கணக்கு துவங்க நினைக்கும்போது

() இறந்துபோன வங்கிப் பணியாளரது அல்லது ஓய்வுபெற்ற பணியாளரது துணைவர் / துணைவி FCNR(B) வைப்புக் கணக்கிற்கு அறிவிக்கப்படும் மொத்த உச்சவரம்பு விதிமுறைகள் மீறப்படாத சூழ்நிலையில் வங்கி அதன் தனி உரிமையைப் பயன்படுத்தி நடைமுறையிலிருக்கும் வட்டி வீதத்தைக் காட்டிலும் ஒரு விழுக்காடு கூடுதல் வட்டி ஓர் ஆண்டுக்கு கீழ்க் கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கலாம்.

1) வைப்புத்தொகையாளர் அல்லது வைப்புத் தொகையாளர்கள் குடியிருப்போர் அல்லாத இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியினராக இருந்தால்

2) வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட்ட பணம் அல்லது காலத்துக்குக் காலம் செலுத்தப்படும் பணம் பிரிவு () மற்றும் () வில் குறிப்பிட்டமுறையில் அந்த வைப்புத் தொகையாளருக்கு உரியது என்ற உறுதிமொழியை வங்கி அந்த வைப்புத் தொகையாளரிடம் பெறவேண்டும்.

 விளக்கம்:

 குடும்பம் என்பது வங்கிப் பணியாளர்/ஓய்வுபெற்ற ஊழியரது  துணைவர் / துணைவி, அவரது குழந்தைகள், பெற்றோர், உடன் பிறந்த ஆண்கள், பெண்கள் ஆகியோர் வங்கி ஊழியர்/ஓய்வுபெற்ற ஊழியர் ஆகியோரைச் சார்ந்து வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். சட்டப்படி பிரிக்கப்பட்ட கணவன் / மனைவி இதில் சேர்க்கப்படமாடார்கள்.

 

24. NRE/FCNR(B) வைப்புக் கணக்குடையோர் இறந்துவிட்டால் சட்டப்படியான அவரது வாரிசுகளுக்கு குறிப்பிட்ட குறைந்தபட்சக் காலக்கெடு முடிவடையும் முன்னரே பணத்தைத் திருப்பிப் பெறும்போது வட்டி ஏதும் வழங்கவேண்டுமா?

 தற்போதைய நடைமுறை விதிப்படி NRE/FCNR(B)க்கு அக்குறைந்த காலம் ஓராண்டாகும்.

 

25. முதிர்வு நாளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படும் நாளுக்கும் இடையே சனி, ஞாயிறு, ஏனைய விடுமுறைநாட்கள் குறுக்கிட்டால் அந்நாட்களுக்கு NRE/ FCNR(B) வைப்புத்தொகைகளுக்கு வட்டி வழங்கவேண்டுமா?

 ஆம். முதலீட்டாளருக்கு எவ்வித நட்டமும் ஏற்படலாகாது என்பதால் பட்டுவாடா நாள், சனி, ஞாயிறு தவிர வங்கிப்பணி நடவாத விடுமுறைகள், விடுமுறை நாள் ஆகிய நாட்களில் அமையுமானால் NRE/ FCNR(B) வைப்புக் கணக்குகளின், தொடக்க கால ஒப்பந்தப்படி அந்த இடைப்பட்ட காலத்திற்கும் வட்டி வழங்க வங்கிகள் அனுமதிக்கப்படுகினறன.

III கடன்

 

26. கடனுக்கான வட்டி வீதத்தை வரையறுப்பதில்வங்கிகளின் தன்னுரிமைஎனச் சொல்வதின் பொருள் யாது?

 வங்கிகள், வழங்கும் கடன் வரம்பு ரூ 2 இலட்சத்திற்கு மிகுமானால், தங்கள் வங்கிகளின் மன்றக்குழு அனுமதியோடு முதன்மைக் கடன்வழங்கு வட்டிவீத அளவுக் குறியீட்டை (BPLR) முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவை. இதனையே தன்னுரிமை எனக் குறிப்பிடுகிறோம். வங்கிகள் BPLR ஐ அறிவிப்பதுடன் அதனை அனைத்து கிளைகளுக்கும் பொருந்தச் செய்யவேண்டும். வங்கிகள் தங்கள் சொத்து-கடன்மேலாண்மை குழுவிற்கு (ALCO) அதிகாரம் அளித்து வைப்புக்கணக்குகளுக்கும் கடன்களுக்குமென வட்டிவீதத்தை முடிவு செய்யும்படி பணிக்கலாம். அத்தகைய முடிவுகளை உடனடியாக தங்கள் மன்றக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும். அத்தோடு வங்கிகள் ALCO மற்றும் மன்றக் குழுவின் ஒப்புதலோடு BPLR ஐ அதிகபட்ச வகையில் அறிவிக்கவேண்டும்.

27. (1) இதில் இடை நிலை முகமைகள் எவை? (2) வீடுகட்ட நிதிவழங்குவதில் இடைநிலை முகமை எவை?

 இடைநிலை முகமைகள் குறித்த விளக்கமான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

(1) நலிந்த பிரிவினருக்குக் கடன் வழங்கும் அரசு நிறுவனங்கள் @

(2) வேளாண் இடுபொருள் உபகரணங்கள் விநியோகிப்போர்கள்

(3) பெருமளவு மாநில அரசு நிதியுதவி நிறுவனங்கள் (SFCS), மாநில அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் வழங்கும் கடன்கள், நலிந்த பிரிவினருக்கு நிதி உதவி செய்வன

(4) தேசிய சிறுதொழில் கழகம் (NSIC)

(5) கதர் மற்றும் கிராமியத் தொழில் ஆணையம் (KNC)

(6) அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான பிரிவுகளுக்கு நிதி உதவி செய்யும் முகமைகள்

(7) வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டு கழகம் (KNC)

(8) தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) யால் மறுநிதி வழங்க அஙகீகரிக்கப்பட்ட வீட்டுவசதி நிதி நிறுவனங்கள்

(9) தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக அரசால் நிறுவப்பட்ட நிறுவனங்கள். இந்நிறுவனங்களுக்கு இடுபொருட்களை வாங்கவும் விற்கவும் மற்றும் இந்நிறுவனங்களால் பயன்பெருவோரின் உற்பத்திப் பொருட்களை சந்தையில் விற்கும் செயலில் ஈடுபட்டுள்ளவை.

(10) சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவி செய்யும் சிறு கடன் உதவி நிறுவனங்கள் / அரசாங்கமல்லாத அமைப்புகள் (NGO)

@ முன்னுரிமை பெறும் பிரிவில் நலிந்த பிரிவினர் என்பது கீழ்க்கண்டோரைக் குறிக்கும்

(i) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, நடுத்தர உழவர்கள்/குடியானவர்கள். நிலமற்ற வேளாண் பாட்டாளிகள் குத்தகைதாரர்கள், விளைச்சலில் பங்குபெறுவோர்

(ii) தங்கள் தொழில்முன்னேற்றத்திற்கு ஒரு நபருக்கு ரூ 25000க்கு மேலாக கடனுதவி தேவைப்படாத, கிராமிய குடிசைத்தொழில் பாட்டாளிகள்.

(iii) சிறு நடுத்தர உழவர்கள் விளைச்சலில் பங்கு பெறுவோர் வேளாண் மற்றும் வேளாண்துறை சாராத பாட்டாளிகள், ஊரகக் கைவினைஞர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்கள் போன்றோர் இதன்வழி பயனடைபவர்கள், அவர்களது குடும்ப வருமானம் ஓராண்டிற்கு ரூ10000க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

(iv) பட்டியலினத்தவர் / பழங்குடி மக்கள்

(v) நகர்ப்புறம் அல்லது ஓரளவு நகர்ப்புற பகுதியில் வாழும் பயனடையக் கூடிய நபர்களின் குடும்ப வருமானம் ஓராண்டுக்கு எல்லா ஆதாரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தம் ரூ7200க்கு மிகாமலும், ஊரகப்பகுதியெனில் ரூ6400க்கு மிகாமலும் இருக்கவேண்டும். அவர்கள் சொந்த நிலம் உடையவர்களாக இருக்கலாகாது. நிலம் இருப்பின் அதன் அளவு நன்செய் எனில் ஒரு ஏக்கர் புன் செய் எனில் 2.5 ஏக்கரும் உடையவராய் இருக்கலாம். (இந்நிபந்தனை பட்டியலினத்தாருக்கும், பட்டியலினப் பழங்குடியினருக்கும்பொருந்தாது).

(vi) சுத்திகரிப்பாளர் விடுதலை மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயனடைவோர் (SLRS)

(vii) ஊரக ஏழைமக்கள் கடன்பெற உதவும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்.

 

28. வங்கிகள் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட BPLR வட்டி வீதத்தைக் கருத்தில் கொள்ளாது வேறு வட்டிவீதத்தை செயல்படுத்த இயலுமா?

 ஆம், BPLR வட்டி வீதத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் அளவுக்குறியீட்டை அடிப்படையாக ஏற்காமல் வேறு வட்டி வீதத்தை வங்கிகள் முடிவு செய்ய உரிமை பெற்றவை. கீழ்க்கண்ட கடன்களுக்கு அது பொருந்தும்.

I () நுகர்வோருக்கான நீடித்து உழைக்கக் கூடியவைகளை வாங்கக் கடன் உதவி () தனிப்பட்டவர்களுக்கு அவர்களது பங்குப் பத்திரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் மீது கடன்கள் () ஏனைய முன்னுரிமையில்லாப் பிரிவின் தனிப்பட்டோர் கடன் () வைப்புக் கணக்கு/கள் கடன் பெறுவோர்/கள் வைப்புக் கணக்கு கடன்பெறுபவர் அல்லது கடன் பெறுபவர்கள் பெயர்/பெயர்களிலோ அல்லது கடன் பெறுபவர் வேறு ஒரு நபரோடு இணைந்து அவர்கள் பெயர்களிலோ இருந்தால் வங்கிகளில் உள்நாட்டு/NRE/FNCR(B) வைப்புக் கணக்கின்மேல் கடனோ அல்லது இருப்பிற்குமேலாக பணம் பெறும் வசதி () இறுதியாகப் பயனடைவோர் மற்றும் முகவைகள் உள்ளீடு செய்வதற்கு, ஆதரவளிப்பவர்களாக இருக்கும் நிலையில் அத்தகையோருக்குக் கடன் வழங்கும் (வீட்டு வசதி நிதி உதவி தவிர) இடைநிலை முகமைகளுக்கு நிதி உதவி அளித்தல் () இறுதியாக பயனடைவோருக்கு வீட்டுவசதி நிதி உதவி வழங்கும் இடைநிலை முகமைகளுக்கு வீட்டுவசதிக் கடன் அளித்தல் () பில்களுக்குக் தள்ளுபடி போக பணம் வழங்கல் () குறிப்பிட்ட வரவு கட்டுக்கோப்பிற்கு உள்ளடங்கி பொருட்களின் மீது வழங்கப்படும் கடன்/பணமாகக் கடன்/ இருப்பிற்கு மீறிய பண அளிப்பு.

II

 

 குறித்தகாலக் கடன் வழங்கு நிறுவனங்களின் வட்டி- மறுநிதி உதவித்திட்டங்களின் கீழ் அடங்கும் எல்லாக் கடன்களும் BPLR.. அளவுக்குறியீட்டின் அடிப்படையை மீறி வங்கிகள் மறு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களின் (ஒப்பந்த வரையறை) அறிவுறுத்தலுக்கேற்ப வட்டி வீதத்தை மாற்றி அமைக்க உரிமை பெற்றவை.

29. வங்கிகள் பல்வேறு முதன்மைக் கடன் வழங்கு வட்டிவீத அளவுக்குறியீடுகளை (BPLR) மேற்கொள்வது முறையாகுமா?

 ஆகாது. கால அளவு அல்லது எதிர்பாரா விளைவை எதிர்கொள்வதற்கான கட்டணம் போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு BPLR அடிப்படையில்தான் கடன் வழங்கு வட்டிவீதம் முடிவு செய்யப்படுகிறது. எனவே பல்வேறு BPLR தேவையில்லை.

30. செயல்திட்டங்களுக்கு கடன் உதவி செய்வதன்றி ஏனைய நோக்கங்களுக்கு கடன் உதவி செய்யும்போது மாறுதலற்ற வட்டிவீதக்கடன்கள் அளிக்கலாமா?

 சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழுவின் (ALM) வழிகாட்டலின் அடிப்படையில் வங்கிகள் மாறுதலற்ற வீதத்திலோ அல்லது மாறுதலுக்குரிய வீதத்திலோ கடன்களை வழங்க உரிமை பெற்றவை.

31. தற்போதைய கடன்களுக்குத் திருத்தியமைக்கப்பட்ட BPLR முறை ஏற்புடையதா?

 ஏற்புடையதே. மாறுதலற்ற வட்டிவீதக் கடன்கள் நீங்கலாகக் குறிப்பிட்ட காலக் கடன் உட்பட எல்லாக்கடன்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தும் ஆணைக்கிணங்க ஏற்புடைய வட்டி வீதத்தை விதிக்க வங்கிகளுக்கு உரிமையுண்டு. வங்கிகள் கடன் ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட வாக்கியத்தைத் தவறாமல் சேர்த்து கடன் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைக்கும் வட்டி வீதத்திற்கேற்ப கடன் பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி வீதம் செயல்முறைப்படுத்தப்படும்.”

 

32. ரூ. 2 இலட்சத்திற்குக் கூடுதலான கடன்களுக்கு வங்கிகள் BPLR வுக்குக் குறைவாக வட்டிவீதத்தை வசூலிக்கலாமா?

 ஆம். தற்போது ரூ.2 இலட்சத்திற்குக் குறைவான கடன்களுக்கு BPLRக்கு மிகாமல் வட்டி வசூலிக்கவேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ரூ. 2 இலட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு BPLRக்கு ஏற்புடைய பரவலான வழிகாட்டலுக்கேற்ப வட்டி வீதத்தை முடிவு செய்ய வங்கிகள் உரிமை பெற்றவை. பன்னாட்டுச் செயல்முறைகளை கவனத்தில் கொண்டு, வணிகமுறை வங்கிகளுக்கு வட்டி வீதத்தை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளத் தேவையான செயல்முறை நெகிழ்வுப் போக்கை மேற்கொள்ள அந்தந்த வங்கி ஒப்புதல் அளித்த வெளிப்படையான நடுநிலைதவறாக் கொள்கையின் அடிப்படையில், பொது நிறுவனங்கள் உட்பட ஏற்றுமதியாளர்களுக்கும் ஏனைய நம்பிக்கைக்குரிய கடன் பெறுவோருக்கும் வங்கிகள் BPLRக்குக் குறைவான வட்டி வீதத்தில் கடன் வழங்கலாம்.

33. வங்கி கூட்டிணைப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் தலைமை வங்கி வழங்கும் வீதத்திற்கு ஓப்ப வங்கிகள் அவர்கள் வெளியிடும் BPLRக்கு குறைவான வட்டிவீதத்தை வசூலிக்க அனுமதி உண்டா?

 இல்லை. வங்கி கூட்டிணைப்பு ஏற்பாட்டின்படி வங்கிகள் ஓரே தன்மையான வட்டிவீதத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு உறுப்பு வங்கியும் BPLRன்படி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கடன் வழங்கு எல்லைக்குட்பட்ட அளவிற்கு வட்டிவீதத்தை வசூலிக்கவேண்டும்.

34. அபராத / தண்ட வட்டிவீதம் எப்படி இருக்கவேண்டும்?

 அக்டோபர் 10 2000 முதல் வங்கிகள் தங்கள் இயக்குநர்கள் குழு ஒப்புதலோடு தண்ட வட்டிவீதம் தொடர்பாக சுதந்தரமாக வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றலாம் என்றும் முன்னுரிமைப் பிரிவுகளில் ரூ.2,500க்கு குறைவாக இருப்பின் அக்கடன்களுக்கு எவ்விதத் தண்டவட்டியும் விதிக்கலாகாது. கடனைத்திருப்பி அடைக்கத் தவறியவர்களுக்கும் நிறுவன நிதி. நிலமை குறித்த விபர அறிவிப்புப் பட்டியல் அனுப்பாதோர் போன்றோர்க்கும் தண்ட வட்டி விதிக்கலாம். ஆயினும் வெளிப்படையான கொள்கை, நியாயத்தன்மை கடன் அடைப்புக்கான ஊக்கத்தொகை, வாடிக்கையாளரின் நியாயமான சங்கடங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு தண்டவட்டிக் கொள்கை செயல்படுத்தப் படவேண்டும்.

35. அக்டோபர் 18, 1994 முதல் ரூ. 2 இலட்சத்திற்கு மேலான கடன் தொகைகளுக்கான வட்டி வீதம் முன்பிருந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல என அறிவிக்கப்பட்டதன் விளைவாக முன்னுரிமை வகை நிறுவனக் கடன்களுக்கு DICGC பொறுப்பு நிதிக்கட்டணத்தை வங்கிகள் வழங்கவேண்டுமா?

DICGC பொறுப்புறுதிக் கட்டணத்தைப் பொருத்தவரை நலிவுற்ற பிரிவுனர்களுக்கு வழங்கிய கடனைத் தவிர ஏனைய ரூ. 25000 க்கும் அதிகமாக கடனாகப் பெற்ற வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பொறுப்புறுதிக் கட்டணத்தை ஏற்கவோ அல்லது கடன் பெறுபவர் கட்டவேண்டுமெனக் கூறவோ வங்கிகள் விருப்புரிமை பெற்றவை. ரூ. 25000 வரையிலான, நலிந்த பிரிவினருக்கான கடன்கள் உட்பட எல்லாக் கடன்களுக்கும் DICGC பொறுப்புறுதிக் கட்டணத்திற்கும் வங்கிகளே பொறுப்பேற்க வேண்டும்.

36. கடன்களுக்கான வட்டியை மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என வெவ்வேறு காலஅளவில் கட்டவேண்டுமென அறிவிக்கும் முடிவை வங்கிகள் எடுக்கலாமா?

 ஏப்ரல் 1 2002 முதல் வேளாண் கடன் தவிர ஏனைய கடன்களுக்கு மாதந்திர அடிப்படையில் வங்கிகள் வட்டி வசூலித்து வருகின்றன. (குறுகிய காலக்கடன், அது தொடர்பான செயல்பாடுகள் உட்பட) இந்நிலையே தொடர்கிறது.

37. வங்கி ஊழியர்கள் அல்லது கூட்டுறவுக்கடன் வழங்கு சங்க ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கும் கடன்களுக்கு என்ன வட்டி வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 வங்கிகளின் வட்டிவீதம் குறித்த செயல்முறைக் கட்டணங்கள் பட்டியல், வங்கி தன் ஊழியர்களுக்கு வழங்கும் கடன்கள் பிற வசதிகள் ஏனைய நிதிசார் நலன்கள், புதுப்பித்தல் ஆகியவற்றிற்குப் பொருந்தாது. கூட்டுறவுக் கடன் வசதி சங்கங்கள் வங்கி ஊழியர்களால் தொடங்கப்பட்டு வங்கி ஊழியர்களுக்கு கடன் வசதி செய்யும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டிவீதம் குறித்த செயல்முறைக் கட்டணங்கள் பொருந்தாது.

 

IV பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் மீது கடன் வழங்கல்

38. வங்கிகள் பங்குகள் கடனீட்டுப் பத்திரங்களின் அடிப்படையில் பொறுப்பாண்மை அமைப்புகள் (டிரஸ்டஸ்) மற்றும் அறக்கட்டளைகளுக்கு (எண்டோவ்மெண்ட்) கடன் வழங்கலாமா?

 வழங்க முடியாது.

39. வங்கிகள் ஒரு வங்கிக் குழுமத்தின் பங்குகளின் அடிப்படையில் அக்குழும இயக்குநர்களுக்குக் கடன் வழங்கலாமா?

 வழங்க முடியாது.

40. முதலீட்டுச் சந்தையில் வங்கிகளின் பங்கேற்றலுக்கு உச்சவரம்பு ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா?

 மூலதனச்சந்தை நடவடிக்கைகளில் பண அளிப்புள்ள மற்றும் பண அளிப்பு இல்லாத வகைகளில் கீழ்க்கண்ட வகையான நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடலாம். பங்குகளில்(Equity) நேரடி முதலீடு, வேறுவகைக்கு மாற்றவல்ல பத்திரங்கள் (Convertible bonds), கடனீட்டுப்பத்திரங்கள் (Debentures) மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில் நேரடி முதலீடு, பொதுமக்களுக்கான துவக்கநிலை பங்குகள் அளிப்பில் (IPO) முதலீடு செய்ய விழைவோருக்கு, பங்குகளின் பேரில் கடனளித்தல், முதலீட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் இவற்றில் முதலீடு செய்வோருக்கு மற்றும் புரோக்கர்களுக்கு பிணைப்பொருட்களுடன் கூடிய மற்றும் பிணைப்பொருளற்ற கடன் வழங்குதல், அவர்களின் இத்தகு நிதி நடவடிக்கைகளுக்கு கடனுறுதி அளித்தல் ஆகிய வகைகளில் மூலதனச்சந்தை நடவடிக்கைகளில் வங்கிகள் பங்கேற்கலாம். இவ்வகையில் அமையும் நடவடிக்கைகளின் மொத்த தொகையானது கடந்த மார்ச் 31 முடிய உள்ள நிதியாண்டின் மொத்தக்கடன் தொகையில் (வணிக ஆவணங்கள் உட்பட) 5%ற்கு அதிகமாக இருக்கக்கூடாது. இக்குறிப்பிட்ட வரம்பிற்குள் அமையும் இத்தொகையானது வங்கியின் நிகரமதிப்பில் (Networth) 20% ற்கு அதிகமாக இருத்தல் கூடாது. இவ்வாறு மூலதனச்சந்தை நடவடிக்கையில் வங்கியின் பங்கேற்புத்தொகையை கணக்கிடும்போது, பங்குச்சந்தை முதலீட்டு பங்குகளின் கொலள்விலையையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.

41. வங்கிகள் தம்வசமில்லாப் பங்குகளின் விற்பனையை (Shortsales) மேற்கொள்ளலாமா?

 வங்கிகள் இத்தகைய விற்பனையை மேற்கொள்ளக் கூடாது.

42. எவ்வகையான பில்களுக்கு வங்கிகள் தள்ளுபடி  செய்யக்கூடாது?

 மின் விசைக்கட்டணங்கள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், தவணை முறைக் கொள்முதல், குத்தகை வாடகைத் தவணைகள், பத்திரங்கள் விற்பனை, இதுபோன்ற இன்னபிற நிதிசார் கடனுதவிகள் ஆகியவற்றின் பில்களுக்கு தள்ளுபடி செய்யக்கூடாது.

43. நிதிசாராக் குழுமங்களின் குறிப்பிட்ட காலவைப்புக்கணக்குகளில் வங்கிள் முதலீடு செய்யலாமா?

 வங்கிகளல்லாத நிதி சாராக் குழுமங்களில் வங்கிகள் முதலீடு செய்வது அவர்களது பொதுவைப்புச் செயல்திட்டத்தில் தடை செய்யப்படவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குழுமங்களில் வங்கிகள் பொதுவைப்புச் செயல்திட்டத்தின்கீழ் முதலீடு செய்யும்போது,  இந்நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ஆகியவற்றின் அறிவுறுத்தல்படி சமர்ப்பிக்கப்படும் இருப்பு நிலை அறிக்கைகளில் முதலீட்டுக்கடன்கள் என வகைப்படுத்திக் குறிப்பிடவேண்டும்.

44. வங்கிகள் பொதுத்துறை நிறுவன அமைப்புகளின் (PSU) பங்கு அளிப்புக் கடிதங்களை விலைக்கு வாங்கலாமா?

 வங்கிகள் பொதுத்துறை நிறுவனப் பங்கு அளிப்புக் கடிதங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கொள்முதல் செய்யலாம்

 (1) வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றம் தவிர ஏனைய நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை மற்றும் பதிவு செய்து கொண்ட தரகர் மூலம் மட்டுமே செய்யப்படவேண்டும்  

 (2) பத்திரங்களை வாங்கும்போது வங்கி அப்பங்குரிமைப் பத்திரம் குறித்த வில்லங்கமில்லா உடைமையுரிமையையும் பங்குரிமைப் பத்திரச் சந்தையில் அதனை விற்பனை செய்ய முடியும் என்பதனையும் உறுதி செய்யவேண்டும்

 (3) வங்கி, அதன் மன்றக்குழுவின் ( Board இன்) ஒப்புதலோடு அத்தகைய பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான அலுவலக வழிகாட்டும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

45. பங்குகள், கடனீட்டுப்பத்திரங்கள், பத்திரங்கள் ஆகியவற்றின் பேரில் கடன் வழங்குவதற்குப் பின்பற்றப்படும் மதிப்பீட்டு முறை என்ன?

 பங்குகள் கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் ஆகியவற்றை வங்கிகள் ஈடாக ஏற்கும்போது அப்போதைய சந்தைவிலை நிலவரப்படி பங்குகளின் மதிப்பைக் கணக்கிட வேண்டும்.

46. வங்கிகள் குழுமங்களுக்கு இடைப்படுகால உதவிக் கடன் (Bridge Loan) வழங்கலாமா?

 வழங்கலாம். வங்கிகள், குழுமங்களுக்கு ஓராண்டு காலத்திற்கு மிகாமல் இடைப்படு கால உதவிக் கடன்களை வழங்கலாம். எதிர்பார்க்கும் பங்கு வரவுகள் (Equity Flows), பங்குகளாக மாற்ற இயலா கடனீட்டுப் பத்திரங்களின்வழி எதிர்பார்க்கும் வருமானம், வெளியேயிருந்து வணிகமுறையில் கடன்வாங்கல், உலகளாவிய வைப்புமுறை வரவுகள், வெளிநாட்டிலிருந்து நேரடி முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இச்செயல்பாடு நிகழவேண்டும்கடன் பெறும் குழுமம் மேற்குறிப்பிட்ட நிதி ஆதாரங்களைப் பெறத்  திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பதில் வங்கி திருப்தி அடைந்திருக்கவேண்டும். மூலதனச் சந்தையில் வங்கிகள் பங்கேற்க விதித்துள்ள உச்சவரம்பான மொத்தக் கடனில் 5% என்பது இந்த இடைப்பட்ட கால உதவிக் கடன்களையும் உள்ளடக்கியே இருக்கவேண்டும்.

47. பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள் பொதுத்துறை நிறுவனப் பத்திரவடிவில்லா பத்திரங்கள் ஆகியவற்றைப் பிணையாக வைத்துக் கடன் பெறும் தனிநபர்களின் கடனுக்கான உச்சவரம்பு என்ன?

 பங்குகள் கடனீட்டுப் பத்திரங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் பத்திரங்கள் ஆகியவற்றைப் பிணையாக வைத்து கடன் பெறும் தனி நபர்களுக்கு மேற்குறிப்பிட்டவை ஆவணங்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.10 இலட்சமும், வடிவில்லா பத்திர நிலையிலிருந்தால் ரூ.20 இலட்சமும் கடன் வழங்கலாம். வங்கி ஒரு தனிநபருக்கு IPO வில் முதலீடு செய்ய அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம் கடன் வழங்கலாம். குழுமங்கள் இதரகுழுமங்களின் IPO வில் முதலீடு செய்ய க்கடன் வழங்கலாகாது. ஊழியர்களுக்கு அவர்களது குழுமங்களின் பங்குகளை வாங்கப் பணியாளர் சங்கப் பங்கு விருப்பத் திட்டத்தின்(ESOP ன்) கீழ் பங்குகளின் கொள்முதல் விலையில் 90 விழுக்காடு தொகைஅல்லது ரூ.20 இலட்சம், இதில் எது குறைவோ அதனை வழங்கலாம்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தனி நபர்களுக்கு IPO வில் பங்கேற்கக் கடன் கொடுக்கக் கூடாது. அத்தகைய செயல்களுக்காக வங்கிகள் கொடுக்கும் கடன்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அளிக்கப்படும் கடன்களுல் அடங்கும்.

48. ஆவணவடிவிலான / பத்திரவடிவில்லா நிலையிலுள்ள பங்குகளுக்கு கடனளிக்கும்போது ஒதுக்க அளவு எவ்வளவு?

 பங்குகளின் மேல் வழங்கப்படும் எல்லா கடன்களுக்கும் மற்றும்  உறுதிச்சான்றிதழ்களுக்கும்  ஒதுக்க அளவு வேறுபாடின்றி 50 விழுக்காடாகப் பின்பற்றப்படுகிறது. இந்த 50 விழுக்காடு ஒதுக்க அளவில் குறைந்த பட்சம் 25 விழுக்காடு முதலீட்டுச் சந்தை செயலாக்கத்திற்காக வங்கியால் வழங்கப்படும் சான்றுறிதிக்காக பராமரிக்கப்பட வேண்டும்.

V நன்கொடை

49. வங்கிகள் நன்கொடை வழங்கலாமா?

 இலாபம் ஈட்டும் வங்கிகள் முந்திய ஆண்டில் வெளியிட்ட இலாபத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு விழுக்காடு அளவு நன்கொடை வழங்கலாம். ஆனால், பிரதம மந்திரியின் துயர் தீர்ப்புக்கான நிதி, இந்திய வங்கிகள் சங்கம், தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம், அந்நியச் செலாவணி வணிகர்கள் சங்கம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் போன்றவைகளுக்கு நன்கொடை வழங்குவது மேற்குறிப்பிட்ட உச்ச வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வரம்புவரை அத்தொகை பயன்படுத்தப்படாமலிருந்தால், அதனை அடுத்த ஆண்டிற்குப்  பயன் படுத்த முடியாது.

50. நட்டப்படும் வங்கிகள் நன்கொடை வழங்கலாமா?

 நட்டப்படும் வங்கிகள், ஒரு நிதியாண்டில் ரூ. 5 இலட்சம் வரை நன்கொடை வழங்கலாம்.

51. அந்நிய நாட்டிலுள்ள இந்திய வங்கிக் கிளைகள் வெளிநாட்டில் நன்கொடை வழங்கலாமா?

 வழங்கலாம். இந்த வங்கிக் கிளைகளும் முந்திய ஆண்டு வெளியிட்ட வருவாயில் ஒரு விழுக்காடு அளவிற்கு வெளிநாடுகளில் நன்கொடை வழங்கலாம்.

VI.  நிலமனையிடக் கடன்கள்

 

52. அலுவலகம் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பிற்காக குத்தகை, மற்றும் வாடகை அடிப்படையில் வணிக வங்கிகள் தேவையான இடத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடும் விதிகள் மற்றும் வழிமுறைகள் யாவை?

1. வங்கிகளின் இயக்குநர்களின் மன்றக்குழுக்கள் இது தொடர்பான கொள்கையை வகுத்து தலைநகர், நகர்ப்புற, ஓரளவு நகர்ப்புற நாட்டுப்புறப் பகுதிகள் என எல்லாப் பகுதிகளிலும் தேவையான இடத்தை குத்தகை/வாடகை அடிப்படையில் வங்கிக்காக தேடிப்பெற, தேவையான செயலாக்கத்திற்காக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவேண்டும். இவ்வழிகாட்டு நெறிமுறைகள் வங்கிக் கட்டமைப்பின் பல்வேறு படிநிலைகளுக்கும் அதிகாரம் வழங்குதலையும் அறிவுறுத்த வேண்டும். நாட்டுப்புறம் நீங்கலாக நிலமனையிடத்தைத் திருப்பிக் கொடுத்தல் அல்து வேறு இடத்தைத் தேர்வு செய்தல் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அலுவலக மூத்த நிருவாகிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

2. வங்கியின் அலுவலகத்திற்கு குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் நிலமனை வழங்கும் நிலக்கிழார்களுக்கு கடன் வழங்குவது. தொடர்பாக இயக்குநர்கள் வாரியம் சிறப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும். முதன்மைக்கடன் வழங்கு அளவுக் குறியீடு முறையில் ரூ.2 இலட்சத்திற்குக் கூடுதலான தொகைக்கான வட்டிவீதத்தில் நிலக்கிழாரகளுடன் வட்டிவீதத்தை முடிவு செய்ய வேண்டும். வட்டிவீதம் தனி வட்டி அல்லது கூட்டுவட்டியாக இருக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள், BPLR இத்தகைய வட்டி வீதத்திற்கும் பொருந்தும்.

3. நிலக்கிழார்களின் துயர் துடைக்கப்பொருத்தமான விரைந்து செயல்படும் ஏற்பாடு ஒன்றினை வங்கி வழங்கவேண்டும்.

4. பொதுத்துறை வங்கிகள், வங்கிகளுக்கு இடமளித்த நிலக்கிழார்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கிய கடன், வாடகை (அதற்கான வட்டி மற்றும் ரூ. 25 இலட்சத்திற்கு மேலான வைப்பு உட்பட) தொடர்பான விபரங்களை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.) நடைமுறையில் பின்பற்றப்படும் அரசாங்க அறிவுறுத்தலுக்கு ஏற்ப தெரிவிக்க வேண்டும். இது தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாது.

 

VII சேவைக் கட்டணம்

 

53. வங்கிகள் விதிக்கக்கூடிய சேவைக் கட்டணத்தின்மீது உச்சவரம்பு ஏதுமுண்டா?

 இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கிகள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான சேவைக் கட்டணத்தை அறிவுறுத்தும் நடைமுறைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். செப்டம்பர் 1999 முதல், வங்கிகள், தங்கள் இயக்குநர்கள் மன்றக்குழு ஒப்புதலோடு, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உரிமை வழங்கியுள்ளது.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்