Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 24/05/2010

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (ACU) அ கே வி

1.ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியம் ACU என்பது என்ன?

பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிஃபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் (ESCAP) முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் ஆசிய ஒன்றியம் அமைக்கப்பட்டது. பங்குபெறும் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதும் அந்நியச் செலாவணி இருப்புகளையும் மாற்றுக்கட்டணங்களையும் சிக்கனமாக பயன்படுத்தவும் பரஸ்பர அடிப்படையில் பரிவர்த்தனைகளை ஏற்படுத்தவும் ஒர் தீர்வு ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

2. ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத் (ACU) தின் உறுப்பினர்கள் யார்?

ஈரான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை மியான்மார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும், பணம் சார் ஆணையுரிமங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

3. ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியம் தொடர்பான வழிகாட்டு உத்தரவுகள்  எங்குள்ளன?.

2010 பிப்ரவரி 17 தேதியிட்ட AR(DIR Series) சுற்றறிக்கை எண் 35ல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட விரிவான நடைமுறை உத்தரவுகள் உள்ளன.

4. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் நடவடிக்கைகளை எவ்வாறு கையாளுகிறார்கள்?

சாதாரணமாக அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளில் கடைபிடிக்கப்படும் அதேபாணியில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் வகை 1ன் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தினால் கையாளப்படுகின்றன.

5. ACUவின் நடவடிக்கைகளில் தீர்வுக்குரிய அடிப்படை அலகு எது?

ஆசிய பண அலகு என்பது ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் கணக்குக்குரிய பொது அலகாகும். அது ACU டாலர் மற்றும் ACU யூரோ என்ற மதிப்பிலக்கங்களில் ஒரு அமெரிக்க டாலருக்கும், ஒரு யூரோவுக்கும்  முறையே ஈடானதாகும். பணம் செலுத்தும் அனைத்துச் செயல்முறைகளிலும், ஆசிய பண அலகே இலக்க மதிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய செயல்முறைகளின் தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், ACU டாலர் கணக்குகளின் வழிச் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படலாம்.

6. நடவடிக்கைகளின் தீர்வுக்குரிய செயல்முறைகள் எவை?

i. முடிந்த அளவுக்கு பேரளவிலான நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், பங்குபெறும் நாடுகளில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளின் வழியேயும், அதேபோன்று பிறநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளின் வழியேயும் நேரடியாகத் தீர்வுசெய்து கொள்ளப்படுகின்றன. அவற்றில் இரண்டு வகையிலும் எஞ்சியவை மட்டுமே, தொடர்புடைய நாடுகளின் மத்திய வங்கிகளால் தீர்வு செய்யப்படவேண்டும்.

ii. அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் அந்நியச் செலாவணிக் நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும் அதே முறைகளிலேயே, மற்ற வர்த்தக மற்றும் இதர தகுதிவாய்ந்த நடவடிக்கைகளைத் தீர்வு செய்ய அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வகை-I அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பாகிஸ்தான் உள்பட எல்லா உறுப்பு நாடுகளிலும் ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதலின்றி, எல்லா வங்கிகளின் பெயரிலும் ஆசிய பண அலகு டாலர் கணக்கினைத் தொடங்க முடியுமா?

முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பாகிஸ்தான் உள்பட எல்லா நாடுகளிலும் எல்லா வங்கிகளின் பெயரிலும் ரிசர்வ் வங்கியின், முன் ஒப்புதலின்றி ஆசிய பண அலகு டாலர் கணக்கினைத் தொடங்க இயலும்.

8. ஆசிய பண அலகு மூலம் தீர்வுக்குரிய இயங்குமுறை எது?

ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களையும்/யூரோக்களையும் பெறுகிறது மற்றும் அளிக்கிறது.  இது நோஸ்ட்ரோ/வோஸ்ட்ரோ கணக்குகளில் பிரதிபலிக்கிறது.  விரிவான செயல்முறை விளக்கங்கள் AP (Dir வரிசை) சுற்றறிக்கை எண் 35, 17.2.2010 மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

9. ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் மூலம் தீர்வு செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எவை?

அனைத்து அனுமதிக்கப்பட்ட நடப்புகணக்கு பரிவர்த்தனைகள் ஏற்றுமதி/ இறக்குமதி பரிவர்த்தனைகள் உட்பட ACU அங்கத்தினராக உள்ள நாடுகள் இடையே வேறுபட்ட அளிப்பு முறைகள் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் மூலம் தீர்வு செய்வதற்கு ஏற்றவை

10. ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் மூலம் தீர்வு செய்வதற்குத் தகுதியில்லாத பணம் செலுத்துதல்கள் எவை?

ACU வின் மூலம் தீர்வு செய்வதற்குத் தகுதியில்லாத பணம் செலுத்துதல்கள் பின்வருவன.

அ) நேபாளம், இந்தியா மற்றும் பூட்டான், இந்தியா ஆகியவற்றுக்கிடையேயும் நிகழும் பணம் செலுத்துதல்கள்.  விதிவிலக்காக நேபாள ராஷ்டிர வங்கியினால் அந்நியச் செலாவணியில் பணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட, நேபாளத்தில் வாழும் இறக்குமதியாளருக்கு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குப் பணம் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பணம் செலுத்துதல் ACU வின் இயங்கு நெறிப்படி தீர்வு செய்யப்படலாம்.

ஆ) பன்னாட்டுப் பணம் சார் நிதியத்தால் விளக்கப்பட்டபடி நடப்பு நடவடிக்கைகள் தொடர்பான பண அளிப்புகள் அல்லாதவை (ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியம் மூலம் தீர்வுக்கு  பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் செலுத்துதல்கள் தவிர).

11) உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு இடையே ஏற்படும் அனைத்து தகுதியுள்ள பரிவர்த்தனைகளை  ACU மூலமாகத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமா?

ஆம். எனினும் மியான்மருடனான வர்த்தக பரிவர்த்தனைகள் ACU முறைமையோடு சுதந்திரமாக மாற்றக்கூடிய கரன்சியிலும் செய்யப்படும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்